ஸனாதன் ஸன்ஸ்தாவின் ஸ்தாபகரான ஸச்சிதானந்த பரபிரம்ம (டாக்டர்) ஜெயந்த் ஆடவலே அவர்களின் குருபூர்ணிமா செய்தி! (2024)

Article also available in :

ஸச்சிதானந்த பரபிரம்ம (டாக்டர்) ஜெயந்த் ஆடவலே
ஸச்சிதானந்த பரபிரம்ம (டாக்டர்) ஜெயந்த் ஆடவலே

குரு தத்துவம் எதிர்பார்க்கும் காலத்திற்கேற்ற குருதக்ஷிணை, ஹிந்து தர்ம பணி மற்றும் ஹிந்து ராஷ்ட்ர பணிக்காக தியாகம் செய்வதே! ‘குருபூர்ணிமா என்பது குருவுக்கு நன்றி செலுத்தி குருகாரியங்களுக்காக தியாகம் செய்ய ஸங்கல்பம் எடுத்துக் கொள்ளும் நாளாகும். குருவின் பரந்து விரிந்த காரியம் ஹிந்து தர்மத்திற்கு சேவை செய்வதே. கால மகாத்மியப்படி தர்ம ஸமஸ்தாபனமே அதாவது ஹிந்து ராஷ்ட்ரத்தின் ஸ்தாபனமே குருவின் வியாபக பணியாகும். ஆன்மீகத்தில் உன்னத நிலையிலுள்ள பல மகான்கள் இப்பணியை செய்து வருகின்றனர். காலத்திற்கேற்றபடி குரு தத்துவம் எதிர்பார்க்கும் குரு தக்ஷிணை என்னவென்றால் குருபூர்ணிமா அன்று ஹிந்து தர்மத்திற்காகவும் ஹிந்து ராஷ்ட்ரத்திற்காகவும் உடல், மனம் மற்றும் செல்வத்தை தியாகம் செய்ய ஸங்கல்பம் எடுத்துக் கொள்ளுதல் ஆகும்.

தியாகம் செய்ய ஹிந்து தர்மம் கற்றுத் தருகிறது. அதாவது உடல், மனம், செல்வம் மற்றும் அனைத்தையும் தியாகம் செய்தாலொழிய ஆன்மீக முன்னேற்றம் ஏற்படாது. உடல் தியாகம் என்றால் தேச-தர்மத்திற்கு உடலால் சேவை செய்வது ஆகும். மனதின் தியாகம் என்றால் நாமஜபம் செய்தல் மற்றும் தேச-தர்ம பணிக்காக சிந்திப்பது, செல்வத்தின் தியாகம் என்றால் இப்பணிக்காக செல்வத்தை அர்ப்பணிப்பது. இது போன்ற படிப்படியான தியாகம் ஒரு நாள் எல்லாவற்றையும் தியாகம் செய்ய மனதை தயார்ப்படுத்துகிறது. இன்றைய உலகில் எல்லாவற்றையும் தியாகம் செய்வது என்றால் ஒருவரின் முழு வாழ்வையும் ஹிந்து தர்மம் மற்றும் ஹிந்து ராஷ்ட்ர பணிக்காக அர்ப்பணிப்பது. ஸ்ரீகுரு சரணங்களில் பிரார்த்தனை செய்கிறேன் – உண்மையான ஹிந்துக்கள், ஸாதகர்கள் மற்றும் சிஷ்யர்கள் அவரவர் தகுதிக்கேற்ப ஹிந்து தர்மத்திற்காக, ஹிந்து ராஷ்ட்ரத்திற்காக தியாகம் செய்யும் ஞானத்தைப் பெற்று ஆன்மீக முன்னேற்றம் அடையட்டும்!’

– ஸச்சிதானந்த பரபிரம்ம (டாக்டர்) ஜெயந்த் ஆடவலே, ஸ்தாபகர், ஸனாதன் ஸன்ஸ்தா.

Leave a Comment