உறங்க முடியாமல் கஷ்டப்படும்போது கண்களைச் சூழ்ந்திருக்கும்  கருப்பு சக்தி படலத்தை அகற்ற முயற்சிக்கவும்

Article also available in :

‘இரவில் தூங்க முடியாமல் கஷ்டப்படும் பல ஸாதகர்களுக்கு நான் ஆன்மிக நிவாரணங்களை பரிந்துரைத்துள்ளேன். இதற்கான நிவாரணத்தை  கண்டறிய முயலும்போது, கண்களுக்குள்ளும், சுற்றிலும் இருக்கும் எதிர்மறை சக்திதான் முக்கிய  காரணம் என்பதை உணர்ந்தேன். இந்த எதிர்மறை சக்தியின் ஸ்தூல தன்மையால்தான், தூக்கம் வந்தாலும்  ஒருவரால் கண்களை மூட முடிவதில்லை. ஆன்மீக தீர்வின் மூலம் இந்த எதிர்மறை சக்தி அகற்றப்பட்டால்தான், ஒருவரால் நிம்மதியாக தூங்க முடியும். எனவே தூக்கமின்மை (இன்சோம்னியா) பிரச்சனையை எதிர்கொள்பவர்கள் பின்வரும் நிவாரணங்களை  பின்பற்ற வேண்டும்.

ஸத்குரு (டாக்டர்) முகுல் காட்கில்

1. கண்களுக்கு முன்னால் விரல்களை நகர்த்துவதன் மூலம் கண்களைத் தொந்தரவு செய்யும் தீயசக்திகளுக்கான ஆன்மீக தீர்வை கண்டுபிடிக்க இயலும். இது பிராணசக்தி ஓட்டத்திற்கான ஆன்மீக தீர்வுகளைக் கண்டறிய பயன்படுத்தும் அதே முறையை  போன்றதாகும் .

பிராணசக்தி ஓட்டத்தில் ஏற்படும்  தடைகளால் உண்டாகும் நோய்களுக்கான ஆன்மீக தீர்வுகளை கண்டுபிடிப்பது பற்றி இந்த கட்டுரையில் சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதை பற்றிய  விரிவான விளக்கத்திற்கு, பிராணசக்தி ஓட்ட அமைப்பின்  தடைகளால் ஏற்படும் நோய்களுக்கான ஆன்மீக தீர்வுகள் – என்ற ஸனாதனத்தின் புனித நூலைப்  படிக்கவும்.

2. கண்களுக்கு முன்னால் விரல்களை நகர்த்தும்போது கருப்பு சக்தி  படலம்  கண்களை  மறைத்து (சூழ்ந்து ) இருப்பதை போல  உணர்ந்தால், உங்கள் விரல்களால் விசிறி, கண்களைச் சூழ்ந்திருக்கும் கருப்பு சக்தி படலத்தை முதலில் அகற்றவும். அதை  எவ்வாறு அகற்றுவது என்று மேலே குறிப்பிடப்பட்ட புனித நூலில்  விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது

3. இப்போது கண்ணில் உள்ள தீய சக்தியை (எதிர் மறை   ஆற்றலை)  எவ்வாறு அகற்றுவது என்று பார்ப்போம் ?. தீய  சக்திகள்  காதுகளுக்கு நெருக்கமான புள்ளியிலிருந்து கண்ணுக்குள் நுழைந்து பின்னர் பரவுகிறது. தீய  சக்திகள் கண்களை விட்டு வெளியேறும் போதும் , அதே முறையைப் பின்பற்றும். எனவே கண்களின் முன்பக்கத்தை விட பக்கவாட்டில் இருந்து நிவாரணங்களை செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

4. ஸனாதனின் புனித நூலில்  பாயின்ட்  1ல்   குறிப்பிட்டுள்ளபடி , கண்களில் உள்ள தீயசக்தியை அகற்றும்   ஆன்மீக நிவாரணத்தை  கண்டறிய உங்கள் விரல் நுனியைப் பயன்படுத்தும் அதே முறையைப் பயன்படுத்தவும்

5. கண்களுக்கான தீர்வு முறையை பஞ்சபூத தத்துவங்களுடன் தொடர்புடைய முத்திரைகளை பயன்படுத்தி அறியலாம் . அவைகள் முறையே நடுவிரல் – தேஜ தத்துவம்(அக்னி தத்துவம்), ஆள்காட்டி விரல் – வாயுதத்துவம், கட்டைவிரல் – ஆகாய  தத்துவம் ஆகும். அந்தந்த விரல் முத்திரையை பயன்படுத்தி கண்ணுக்கான தீர்வை கண்டறிந்தபின், இரு கைகளாலும் அந்தந்த கண்ணின் பக்கவாட்டில்  நியாஸ் (சக்தியின் பிரவாகத்தை ஒன்று சேர்ந்த விரல் நுனிகள் மூலம் ஒருமைப்படுத்தும் ஒரு சுய நிவாரண நுட்பம்) செய்யவும்.  இவ்வறாக  கண்டறியப்பட்ட நாமஜபம், ஆகாய தத்துவத்திற்கு அப்பாற்பட்டதாக இருந்தால், அதாவது சூன்ய, மஹா சூன்ய, நிர்குணம் அல்லது ஓம் என்ற நிலையில் இருந்தால்,  ஒரு  கையின் உள்ளங்கையை கண்களுக்கு முன்பாகவும், மற்றொரு கையின் உள்ளங்கையை வானத்தை நோக்கி, தொடையிலும்  வைக்கவும்.

6. கண்களுக்கு மேல் நியாஸ் செய்யும் போது, கண்களில் உள்ள தீய சக்தியை இரு கை முஷ்டிகளிலும் எடுத்து தூக்கி எறியவும் . இந்த வழிமுறையானது இத்தீர்வின் செயல்திறனை அதிகரிக்கும். இரு கண்களிலிருந்தும் தீய சக்தியை முஷ்டிகளில் எடுத்து கண்களின் பக்கவாட்டு முனையில் எறியவும்.

7. மேற்சொன்ன நிவாரணத்தால் கண்களிலிருந்து பாரம் நீங்கி   லேசாக நாம் உணர்ந்தவுடன் மீண்டும் அதே முறையை  பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு முறையும் கண்டறியப்படும்  நாமஜபமானது  முன்பை விட குறைந்த நிலையில் இருக்கும். உதாரணமாக  சூன்யத்திலிருந்து ஆகாஷ்தேவர், வாயுதேவர் மற்றும் இறுதியாக அக்னிதேவர் வரை.  இந்நிகழ்வின் போது கண்களில் உள்ள தீய  சக்திகள்  படிப்படியாக மூக்குக்கு அருகிலுள்ள பகுதியிலிருந்து காதுக்கு அருகிலுள்ள பகுதிவரை குறைகிறது என்பதை உணரலாம்.

8.முடிவாக கண்களில் உள்ள அனைத்து தீய சக்திகளும் அகற்ற பட்டவுடன், கண்கள் லேசாகவும், பிரகாசமாகவும்  இருக்கும்

அப்போது நீங்கள் கண்களுக்கான ஆன்மீக நிவாரணத்தைத் தேடுவதை நிறுத்திவிட்டு, நல்ல தூக்கத்திற்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்யலாம்.

– ஸத்குரு (டாக்டர்) முகுல் காட்கில், மகரிஷி ஆன்மீக பல்கலைகழகம், கோவா.

ஆன்மிக கஷ்டங்கள் : இதன் பொருள் ஒவ்வொருவருக்கும்  தனிப்பட்ட எதிர்மறை அதிர்வுகள் உள்ளன. ஒரு நபருக்கு எதிர்மறையான அதிர்வுகள், 50%-க்கு அதிகமாக இருந்தால், அது கடுமையானதாகவும் ,  30 – 49%-க்கு இடையே இருந்தால், அது மிதமானதாகவும் , 30%-க்கு குறைவாக இருந்தால், அது லேசானதாகவும்  கருதப்படுகிறது. இவை விதி, மறைந்த மூதாதையர்களால் ஏற்படும் துன்பங்கள் போன்ற பல்வேறு காரணங்களால்  ஏற்படுகின்றன. இதை மகான்கள் அல்லது  சூட்சும பரிமாணத்தை உணரக்கூடிய ஸாதகர்களால் மட்டுமே கண்டறிய முடியும்.

ஆதாரம் : தினசரி ஸனாதன் பிரபாத்

 

 

 

Leave a Comment