பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் ஒளி மிகுந்த சிந்தனை!
‘பாரதம் மற்றும் ஹிந்து சாம்ராஜ்யத்தை தவிர்த்து உலகிலுள்ள பல்வேறு நாடுகள் மற்றொரு நாட்டைத் தாக்கி தங்களின் வசப்படுத்திக் கொள்ள தங்களின் சைன்னியத்தை மற்றும் பண பலத்தை உபயோகித்துள்ளனர்; இன்றும் உபயோகித்து வருகின்றனர். இதற்கு மாறாக திரேதா மற்றும் த்வாபர யுகங்களில் பாரதம் உலகின் ஸகல ஸாமர்த்தியங்களும் பொருந்திய தேசமாக இருந்தாலும் மற்றொரு தேசத்தை ஒருபோதும் ஆக்கிரமிப்பு செய்ததில்லை! சில சமயங்களில் நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பு மற்றும் யுத்தமும் கூட ஸத்ய-அஸத்யத்திற்கு, அதாவது தர்ம அதர்மத்திற்கு இடையே நடந்த யுத்தமாக இருந்தது. அதிலும் ‘துஷ்டர்களை அழித்து குடிமக்களின் கஷ்டங்களை, துக்கங்களை, பயத்தைப் போக்கி அவற்றிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டும்’ என்பதே யுத்தத்தின் நோக்கமாக இருந்தது. திரேதா யுகத்தில் பிரபு ஸ்ரீராம், துஷ்டனான ராவணனை வதம் செய்த பிறகு சுவர்ண மயமான இலங்கையை வெற்றி கண்ட பின்பும் இலங்கையை தன் வசப்படுத்திக் கொள்ளவில்லை. மாறாக ராவணனின் தம்பியான விபீஷணனுக்கு பட்டம் சூட்டி அவரை சிம்ஹாசனத்தில் அமர்த்தினார். த்வாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணன் தீயவனான கம்சனை வதம் செய்த பிறகு அவனுடைய பிதாவான உக்ரசேனனை மறுபடியும் ராஜாவாக முடிசூட்டினார்.
பாரதம் மற்றும் ஹிந்து ஸாம்ராஜ்யங்கள் இன்னொரு தேசத்தை ஆக்கிரமிப்பு செய்யாததன் காரணங்கள் கீழ் வருமாறு.
1. ஹிந்து தர்மத்தின் ‘வசுதைவ குடும்பகம்’ (இப்பூமியிலுள்ள அனைவரும் ஏன் குடும்பத்தினர்) என்ற உயர்ந்த சிந்தனை!
2. ’14 வித்யாக்கள் மற்றும் 64 கலைகள் மூலமாக இறைவனை எவ்வாறு அடைவது’ என்ற ஞானத்தையுடைய ரிஷி முனிவர்கள் மற்றும் ஆச்சார்யர்கள் ஹிந்து சமூகத்தை வழிநடத்தி சென்றனர் மற்றும் அவர்கள் நடத்தி வந்த குருகுலத்தின் மூலமாக சமூகத்தினருக்கு கிடைத்த விலைமதிப்பற்ற ஞானம் !’
– பராத்பர குரு டாக்டர் ஆடவலே