வரக்கூடிய பயங்கர ஆபத்துக் காலத்தை கடந்து சென்றிட பல்வேறு வழிகளில் இன்றே தயாராகுங்கள் !

‘வருடம் 2000 முதல் ‘காலமஹிமைப்படி விரைவில் ஆபத்துக் காலம் வரும்’ என்பதை ஸாதகர்கள் அறிவார்கள்; ஆனால் இன்று ஆபத்துக் காலம் அருகில் வந்து நம் கதவைத் தட்டுகிறது. பயங்கர ஆபத்துக் காலம் ஆரம்பமாக இன்னும் சில மாதங்களே உள்ளன. வருடம் 2019 –க்கு பிறகு சிறிது சிறிதாக மூன்றாவது உலக யுத்தம் ஆரம்பிக்கப் போவதாக பல நாடி ஜோதிடர்களும் தொலை நோக்குடைய ஸாது ஸந்த்களும் (மகான்கள்) கூறியுள்ளனர். முதலில் மகாயுத்தம் மானசீக நிலையில் நடக்கும்; காரணம் எந்த இரு நாடுகளுக்கும் இடையே நடக்கும் மகாயுத்தம் முதலில் மானசீக நிலையிலேயே நடக்கும்; உதா. கொரியா-அமெரிக்கா போராட்டம், சீன-அமெரிக்க போராட்டம். வரும் 2-3 வருடங்களில் மகாயுத்தம் பௌதிக நிலையில் நடக்கும். அப்பொழுது ‘காய்ந்த புல்லுடன் ஈர புல்லும் எரிந்தது’ என்ற சித்தாந்தப்படி சமூகத்திலுள்ள நல்லவர்களும் ஸாதகர்களும் கூட ஆபத்துக் கால அழிவை சந்திக்க வேண்டி இருக்கும்.

ஆபத்துக் காலத்தில் புயல், பூகம்பம் போன்றவற்றால் மின்சாரம் தடைபடலாம். பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் பற்றாக்குறையால் வாகன வசதிகள் கிடைக்காமல் போகலாம். அதனால் சமையல் காஸ், உண்ணும், பருகும் உணவுப் பொருட்கள் ஆகியவை பல மாதங்கள் கிடைக்காமல் போகலாம். கிடைத்தாலும் ரேஷன் முறையிலேயே கிடைக்கலாம். ஆபத்துக் காலத்தில் டாக்டர், வைத்தியர், மருந்துகள், மருத்துவமனைகள் ஆகியவை கிடைப்பது மிகவும் கடினமாகும். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு ஆபத்துக் காலத்தை கடந்து செல்வதற்கு எல்லோரும் உடல், மனம், குடும்பம், பணம், ஆன்மீகம் ஆகிய நிலைகளில் முன் தயார் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இது சம்பந்தமான சர்வ சாதாரண விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றின்படி எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு செயல்பாட்டில் கொண்டு வர முயற்சிப்போம்.

 

1. ஆபத்துக் கால கண்ணோட்டத்தில்
உடல் ரீதியாக செய்ய வேண்டிய காரியங்கள்

1 அ. மனிதனால் மற்றும் இயற்கையால் உண்டாகும்
ஆபத்துகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ள இதை செய்யுங்கள்!

1 அ 1. வரக்கூடிய மூன்றாவது உலக யுத்தத்தில் உபயோகப்படுத்தப் படும் அணுகுண்டு கதிர் வீச்சுகளால் உயிர்சேதம் ஏற்படுவதைத் தடுக்க தினமும் அக்னிஹோத்ரம் செய்யுங்கள்!

ஸனாதன் வெளியிட்டுள்ள நூலைப் படிக்கலாம்.

1 அ 2. குடும்பத்தில் ஒருவராவது ‘முதலுதவி’ பயிற்சி பெற வேண்டும்!

‘ஹிந்து ஜனஜாக்ருதி சமிதி’ காரியகர்த்தாக்கள் பல இடங்களில் இலவச ‘முதலுதவி பயிற்சி வகுப்பு’ நடத்துகின்றனர். இந்த பயிற்சி பெற்று பயன் பெறுங்கள்.

1 அ 2 அ. குடும்பத்தின் உபயோகத்திற்காக ‘முதலுதவிப் பெட்டி’ தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்!

வேதனையைக் குறைக்கும் மாத்திரைகள், மருந்துகள், பாண்ட்-எய்ட், ஆயின்மென்ட், ஜுரம், வாந்தி ஆகியவற்றிற்கான மருந்துகள் ஆகியவற்றை பெட்டியில் வைத்திருங்கள். இந்த பெட்டியை வீட்டில் சுலபமாக எடுக்கும் இடத்தில் வைக்கவும். முதலுதவிப் பெட்டியில் முடிந்தால் மாத்திரை ஸ்ட்ரிப்புகளை வைக்க வேண்டாம். ஏனென்றால் இதிலிருந்து எடுக்கும்போது ‘எக்ஸ்பைரி தேதி’ தெரியாமல் போக வாய்ப்பு உண்டு. அதனால் மாத்திரைகளை ஒரு சிறு டப்பாவில் போட்டு அதன் மேல் அதன் பெயர், எந்த வியாதிக்கு உபயோகமாகும், உற்பத்தி தேதி, காலாவதி தேதி ஆகிய முக்கிய விவரங்களை எழுதி ஒட்டி வைக்கவும்.

1 அ 3. குடும்பத்தில் ஒருவராவது ‘தீயணைக்கும் பயிற்சி’ பெறுவது அவசியம்!

ஸனாதன் இது பற்றி நூல் வெளியிட்டுள்ளது.

1 அ 4. குடும்பத்தில் ஒருவராவது ‘ஆபத்துக் கால உதவிப் பயிற்சி’ பெற வேண்டும்!

1 ஆ. உணவு, தண்ணீர் பற்றாக்குறை
ஏற்படாமல் இருக்க இதை செய்யுங்கள்!

1 ஆ 1. முழு தானியங்கள், கோதுமை போன்றவற்றை காய வைத்து வாயு புகாத பாட்டில்களில் சேர்த்து சேமித்து வைக்கவும் :அத்துடன் சுமார் 5 வருடங்களுக்கு வேண்டிய மற்ற பொருட்களான தீப்பெட்டி போன்றவற்றை சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்!
1ஆ 2. கிராமத்திலோ அல்லது வேறு இடங்களிலோ சொந்த நிலங்கள் இருந்தால் அதில் காய்கறி தோட்டங்கள், அரிசி, தானிய பயிர்கள் அல்லது கோசாலைகள் ஆகியவற்றை ஆரம்பிக்க ஏற்பாடு செய்யுங்கள்!
1 ஆ 3. வீட்டில் விறகடுப்பை தயார் செய்யுங்கள், அதில் சமையல் செய்யவும் பழகிக் கொள்ளுங்கள் அதே போல் சமையலுக்கு யந்திரங்களை (மிக்ஸி, கிரைண்டர்) உபயோகிப்பதற்கு பதிலாக ஆட்டுக்கல், அம்மி, குழவி ஆகியவற்றைப் பயன்படுத்தும் வழக்கத்தை ஏற்படுத்துங்கள்!

பழங்கால உபகரணங்களான ஆட்டுக்கல், அம்மி, குழவி, உலக்கை-உரல் போன்றவற்றை உபயோக்கிக்க ஆரம்பியுங்கள். அதன் மூலம் தினசரி வாழ்க்கை நடத்துவது கடினமாக இராது.

1 ஆ 4. சூரிய ஒளியில் இயங்கும் உபகரணங்களை வாங்குங்கள்!

சமையலுக்கு சூரிய ஒளியை பயன்படுத்த முடியும். அதற்கான யூனிட் மற்றும் உபகரணங்களை (உதா. சோலார் குக்கர்) வாங்கி வையுங்கள். அத்துடன் சூரிய ஒளியை உபயோகித்து வீட்டில் விளக்குகள் எரிவதற்கு , வெந்நீர் போடுவதற்கு ஏற்பாடு செய்யலாம்.

1 ஆ 5. வீட்டில் கிணறு இல்லையென்றால் அதற்கு ஏற்பாடு செய்யவும்!

ஆபத்துக் காலத்தில் கார்ப்பரேஷன் தண்ணீர் கிடைக்காமல் போகலாம்; அப்பொழுது வீட்டிலுள்ள கிணற்று நீர் பயன்படும். அக்கம்பக்கத்தவர் ஒன்று சேர்ந்தும் பொதுக் கிணறு தோண்டிக் கொள்ளலாம்.

1 இ. வரக்கூடிய ஆபத்துக் காலத்தில் டாக்டர்,
வைத்தியர், மருந்துகள், ஆஸ்பத்திரிகள் ஆகிய
வசதிகள் கிடைக்காமல் போகலாம் என்பதைக் கருத்தில்
கொண்டு நோய் நிவாரண கண்ணோட்டத்தில் இதை செய்யவும்!

1 இ 1. மூலிகை செடிகளின் தோட்டம் போடவும், அத்துடன்
தேவைப்படும்போது அவற்றை உபயோகப்படுத்தவும் ஆரம்பிக்கவும்!

மூலிகை செடிகளை வீட்டு மாடிகளில், பால்கனிகளில், அத்துடன் கிராமத்தில் வீட்டை சுற்றியும் வளர்ப்பதற்கு ஏற்பாடு செய்யவும். (மூலிகை செடிகளின் தோட்டம் பற்றியும் அவற்றின் மூலம் பல்வேறு நோய்களுக்குரிய நிவாரணம் பற்றியும் ஸனாதனின் நூல்களான ‘இட வசதிக்கேற்றபடி மூலிகை செடிகளின் தோட்டம்’ மற்றும் ‘மூலிகை செடிகளின் தோட்டத்தை எவ்வாறு ஏற்படுத்துவது?’ ஆகியவற்றில் கொடுக்கப்பட்டுள்ளது. ஸனாதனின் ‘சுலபமான ஆயுர்வேத வீட்டு கைவைத்தியம்’ என்ற நூலும் விரைவில் வெளிவர உள்ளது.) அவசியத்திற்கேற்றபடி மூலிகை செடிகளை உபயோகிக்க ஆரம்பியுங்கள்.

1 இ 2. நோய் நிவாரணத்திற்கு ‘பிந்து தாபன் உபாயம்’,
‘பிராணசக்தி ஓட்ட உபாயம்’, ‘காலி பெட்டிகளின் உபாயம்’
மற்றும் ‘நாமஜப உபாயம்’ ஆகியவற்றைக் கற்றுக்
கொள்ளுங்கள் மற்றும் கற்றவற்றை உபயோகிக்கவும் ஆரம்பியுங்கள்!

இந்த உபாய வழிமுறை நூல்களை ஸனாதன் வெளியிட்டுள்ளது.!

1 இ 3. அருகிலுள்ள வைத்தியரை விசாரித்து ‘சில வருடங்களுக்கு கெடாமல்
இருக்கக்கூடிய, குடும்பத்தினருக்கு தேவையான ஆயுர்வேத மருந்துகளை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்’!

1 ஈ. மற்ற குறிப்புகள்

1 ஈ 1. நவீன வைத்தியம் மற்றும் மருந்துகள் மூலமாக செய்ய வேண்டிய
வைத்திய சிகிச்சைகளை உதா. கண் அறுவைசிகிச்சை, பற்களின் சிகிச்சை இப்பொழுதே செய்து கொள்ளுங்கள்!
1 ஈ 2. சுக சௌகரியங்களை (உதா. பிடித்தமான உணவு, குளிப்பதற்கு வெந்நீர்,
எப்பொழுது மின் விசிறி உபயோகம், ‘ஏசி’ போட்டால்தான் தூக்கம், சிறிது தூரம்
செல்வதற்கும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனத்தை உபயோகித்தல்) குறைப்பதற்கு சிறிது சிறிதாக பழகவும்!
1 ஈ 3. பாதகமான சூழ்நிலையிலும் உடல் ஆரோக்கியம் நன்றாக விளங்க
தினமும் உடற்பயிற்சி (உதா. சூர்யநமஸ்காரம், நடத்தல்), பிராணாயாமம், யோகாசனம் போன்றவற்றை செய்யவும்!

 

2. ஆபத்துக் கால கண்ணோட்டத்தில்
மானசீக நிலையில் செய்ய வேண்டிய தயார் நிலை

2 அ. உறவினர்களிடம் உணர்வு பூர்வமாக
பற்றுதல் வைக்காமல் இருக்க சுய ஆலோசனை கொடுங்கள்!

வரக்கூடிய காலத்தில் குடும்பம், உறவினர், நண்பர்கள் போன்றவர்களின் விஷயத்தில் அவரவர் விதிப்படி நிகழ்ச்சிகள் நடக்கும் என்பதால் அவர்களிடம் உணர்வுபூர்வமாக பற்றுதல் வைப்பதை தவிருங்கள். அதற்கு தேவைப்பட்டால் சுய ஆலோசனை வழங்குங்கள்.

2 ஆ. குறைந்த அதிக காலத்திற்கு
குடும்பத்தினரின் பிரிவைத் தாங்கிக் கொள்வதற்கு தயாராகுங்கள்!

ஆபத்துக் கால கண்ணோட்டத்தில் குடும்ப நிலையில் செய்ய வேண்டிய தயார் நிலை

3. ஆபத்துக் கால கண்ணோட்டத்தில் குடும்ப நிலையில் செய்ய வேண்டிய தயார் நிலை

3 அ. ஆபத்துக் காலத்தில் முடிந்தவரை புது வீடு
அல்லது பிளாட் வாங்காமல் வாடகை வீட்டில் இருக்க முயற்சியுங்கள்!

ஆபத்துக் காலத்தில் பூகம்பம், நில நடுக்கம் போன்றவற்றால் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படக் கூடும். அதனால் புது வீடு அல்லது பிளாட்டை வாங்காதீர்கள்; வாடகை வீட்டில் அல்லது ப்ளாட்டில் இருக்க முயற்சியுங்கள்.
சில தவிர்க்க முடியாத காரணங்களால் வீடு/பிளாட் வாங்குவதற்கு தீர்மானித்தால் ‘எந்த இடம் பாதுகாப்பானது’ என்பதை சிந்தியுங்கள்.
பிளாட் வாங்க முடிவு செய்தால் முடிந்தவரை மூன்றாவது மாடிக்கு மேலே செல்லாமல் வாங்கவும். இதன் காரணம், பூகம்பம் போன்ற சேதங்கள் ஏற்படும்போது மூன்றாம் மாடி வரை உடனே கீழே ஓடி வருவது சுலபமாக இருக்கும்.
யாருடைய வீடாவது மூன்றாம் மாடிக்கும் மேலே இருந்தால் அவர்கள் வேறு இடத்தில் வாடகை வீடு கிடைக்குமா என விசாரிக்கலாம்.

3 ஆ. கிராமத்தில் உங்களின் வீடு
ஏதாவது இருந்தால் அதை பராமரித்து வைத்துக் கொள்ளுங்கள்!

வரக்கூடிய ஆபத்துக் காலத்தில் இயற்கை ஆபத்துகள், தீவிரவாதம் ஆகியவற்றால் பல நகரங்கள் நஷ்டமடையும். அப்பொழுது கிராமத்திற்கு சென்று வசிக்க நேரிடும். அதனால் யாருடைய வீடாவது கிராமத்தில் இருந்தால் அதை பராமரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

3 இ. வேலை-வியாபார நிமித்தமாக
வெளிநாடு சென்ற குடும்பத்தினரை முடிந்தால்
மறுபடியும் பாரதத்திற்கு திரும்பி வர சொல்லுங்கள் !

பாரதம் ஒரு புண்ய பூமியாகும். வரக்கூடிய ஆபத்துக் காலத்தில் பாரதத்தைக் காட்டிலும் மற்ற தேசங்களில் அதிக நாசம் ஏற்படக் கூடும்; காரணம் மேலை நாடுகளில் ரஜ-தம தன்மை மிக அதிக அளவில் உள்ளது. அதேபோல் மஹா யுத்தம் ஆரம்பித்த பிறகு வெளி நாட்டிலிருந்து மறுபடியும் பாரதத்திற்கு நல்ல முறையில் திரும்பி வருவது கடினமாக இருக்கும்.

 

4.ஆபத்துக் கால கண்ணோட்டத்தில்
பண விஷயத்தில் செய்து
கொள்ள வேண்டிய தயார் நிலை

இன்று பல வங்கிகளின் பண மோசடிகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதனால் அவரவரின் பணம் பத்திரமாக இருப்பதற்கு கீழே குறிப்பிட்டுள்ள வழியைப் பற்றி சிந்தியுங்கள். ‘You should not put all eggs in one basket (உள்ளர்த்தம் : ஒரே இடத்தில் முதலீடு செய்து பணத்தை இழப்பதற்கு பதிலாக பாதுகாப்பு கருதி எல்லா இடங்களிலும் முதலீடு செய்வது நல்லது)’ என்ற நிதி சாஸ்திர தத்துவப்படி முதலீடு செய்யவும்.

4 அ. பண முதலீடு செய்யும்போது
இவற்றை சற்று கவனத்தில் கொள்ளுங்கள்!

4 அ 1. அரசுடைமையாக்கப்பட்ட பல வங்கிகளில் பணத்தை பிரித்து முதலீடு செய்யவும்

‘ஏதாவது ஒரு வங்கி திவாலாகிப் போனாலும் எல்லாப் பணமும் போய் விட்டது’ என்ற நிலை வரக் கூடாது. அதற்கு உங்களுக்கு அருகிலுள்ள அரசுடைமையாக்கப்பட்ட பல வங்கிகளில் பணத்தை பிரித்து முதலீடு செய்யவும். அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் ஒவ்வொருவரின் முதலீட்டிற்கும் 1 லக்ஷம் வரை பணத்திற்கு உத்தரவாதம் உண்டு. அதனால் ஒவ்வொரு முதலீட்டிலும் 1 லக்ஷத்திற்கு மிகாமல் பணத்தைப் போட வேண்டும்.

4 அ 2. வங்கிக் கணக்கு பற்றி மனைவி, வளர்ந்த பிள்ளைகள் ஆகியோருக்கும் கற்றுத் தருதல்

வங்கியில் பணம் போடுதல், வங்கியிலிருந்து பணம் எடுத்தல் போன்ற குறைந்தபட்ச விஷயங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தினருக்கும் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.

4 அ 3. தங்கம்-வெள்ளி ஆகிய விலையுயர்ந்த பொருட்களில் முதலீடு செய்தல்

யாராவது முதலீடு என்ற கண்ணோட்டத்தில் தங்கம் வாங்க இருந்தால் அவர்கள் நகைகளாக வாங்குவதற்கு பதில் சொக்கத் தங்கமாக வாங்குவது நல்லது. அதன் மூலம் செய்கூலியும் கொடுக்க வேண்டி இராது. பின்னர் நிலைமை எப்படிப் போனாலும் இவைகளை உபயோகிக்க முடியும்.

4 அ 4. யாருக்கு முடியுமோ அவர்கள் தோட்டம் போடுவதற்கு ஏற்ற பூமியை வாங்கலாம்

ஒருவரால் பூமியை வாங்க முடியவில்லை என்றால் சிலர் ஒருங்கிணைந்து பூமியை வாங்கலாம். பூமியில் முதலீடு செய்வதால் இன்றோ நாளையோ நமக்குப் பலன் கிடைக்கும்.

4 ஆ. யார் ‘பங்கு சந்தை’ (ஷேர்ஸ்)யில் முதலீடு
செய்தார்களோ அவர்கள் வேறு உபாயத்தைப் பற்றி சிந்திக்கலாம்!

வீட்டில் கிணறு தோண்டுதல், சூரிய ஒளியை பயன்படுத்துதல் ஆகியவையும் ஒரு விதத்தில் முதலீடே!

 

5. ஏனைய குறிப்புகள்

5 அ. வீட்டிலுள்ள அனாவசிய பொருட்களைக் குறைக்க ஆரம்பியுங்கள்!

இதன் மூலம் ஆபத்துக் காலத்தில் குறைந்த பொருட்களே சேதம் அடையும் அத்துடன் ஸாதகர்களுக்கு பொருட்களின் மீதுள்ள பற்றுதலும் குறையும். ஆபத்துக் காலத்தில் உயிர் தப்புவது அதிக முக்கியம் என்பதால் ஒரே பெட்டி சாமானுடன் வெளியேற சித்தமாய் இருக்க வேண்டும்.

5 ஆ. அருகிலுள்ள காவல் நிலையம்,
தீயணைப்பு நிலையம் ஆகிய அத்தியாவசிய
சேவைகளின் தொலைபேசி எண்கள், முகவரி
ஆகியவற்றை ஒரு தனி டைரியில் குறிப்பெடுத்து வையுங்கள்!

ஆபத்துக் காலத்தில் உங்களின் மொபைலை சார்ஜ் செய்ய முடியாதபோது தொடர்பு கொள்ள முடியாமல் போகும். அதற்காக அருகிலுள்ள காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், ஆஸ்பத்திரி போன்ற அத்தியாவசிய சேவைகளின் தொலைபேசி எண் மற்றும் முகவரியை ஒரு தனி டைரியில் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் வேறு ஒருவரின் மொபைலின் மூலமாக தொடர்பு கொள்வது சுலபமாக இருக்கும்.

5 இ. ஆபத்துக் காலத்தில் வீட்டை
விட்டு சட்டென்று வெளியேற வேண்டிய சூழ்நிலை
ஏற்படலாம் என்பதால் அதற்கு முன்னேற்பாடாக ஒரு
சிறிய பெட்டியில் முக்கிய தஸ்தாவேஜுகள்
(உதா. ரேஷன் அட்டை, ஆதார் அட்டை,
வங்கி பாஸ்புக்) அனைத்தையும் பத்திரமாக வைக்கவும்!

5 ஈ. வீட்டின் பாதுகாப்பிற்காக நாய், பாலுக்காக பசு, மாட்டுவண்டிக்காக மாடு, பயணிக்க குதிரை ஆகியவற்றைப் பேணி வளர்க்கவும்!

இந்த பிராணிகளை எவ்வாறு பராமரிப்பது என்பது பற்றியும் கற்றுத் தெளியவும். உங்களிடம் சைக்கிள், சைக்கிள் ரிக்ஷா, மாட்டுவண்டி, குதிரைவண்டி போன்றவற்றில் ஒன்றோ அல்லது பலவோ இருத்தல் நலம். நாயால் கலவரத்தின்போது பாதுகாப்பு கிடைக்க உதவி கிடைக்கும், பசுவால் பால் கிடைக்கும் மற்றும் காளை, குதிரை போன்றவற்றால் நம்மால் பிரயாணம் செய்ய இயலும், நோயுற்றோரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லவும் முடியும்.

 

6. ஆபத்துக் கால கண்ணோட்டத்தில்
ஆன்மீக நிலையில் செய்ய வேண்டிய தயார் நிலை

6 அ. வரக்கூடிய பயங்கர ஆபத்துகளிலிருந்து
பாதுகாப்பு பெற ஸாதனை செய்வதும்
பகவானின் பக்தனாக மாறுவதும் அத்தியாவசியம்!

வரக்கூடிய ஆபத்துக் காலத்தை நல்ல முறையில் கடந்து செல்ல இந்த கட்டுரையில் கூறியபடி காரியங்களை செய்வது நல்லது. அதாவது நீங்கள் பிந்துதாபன் உபசார முறையை கற்றுத் தேறலாம்; குடும்பம் பசியால் வாடாமல் இருக்க உணவுப் பொருட்களை சேகரித்து வைக்கலாம். சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவின்போது ஆயிரக்கணக்கானவர் உயிரிழக்க நேரிடலாம். அப்பொழுது உயிர் பிழைத்தால் இந்த முன்னேற்பாடுகள் உதவி செய்யும்! இது போன்ற உயிரைப் பறிக்கும் ஆபத்துக்களிலிருந்து யார் நம்மைக் காப்பாற்ற முடியும் என்றால் பகவான் மட்டுமே!

‘பகவானுக்கு நம்மைக் காக்க வேண்டும்’ எனத் தோன்ற வேண்டுமென்றால் நாம் ஸாதனை மற்றும் பக்தி செய்வது முக்கியம். எவ்வளவு பெரிய ஆபத்து வந்தாலும் பகவான் பக்தனை எப்பொழுதும் கைவிட மாட்டான் என்பதற்கு நம் கண் முன்னால் பக்த பிரஹ்லாதனின் உதாரணம் உள்ளது. ஸ்ரீகிருஷ்ணன் பகவத்கீதையில் ‘ந மே பக்த: பிரணஷ்யதி’ (அர்த்தம் : என் பக்தனுக்கு எப்பொழுதும் அழிவு நேராது) என்ற உறுதிமொழியை தன் பக்தர்களுக்கு அளித்துள்ளான். இதன் அர்த்தம் எந்த ஒரு ஆபத்திலிருந்தும் மீண்டு வர ஸாதனை செய்வதைத் தவிர வேறு உபாயம் இல்லை என்பதே.

6 அ 1. ஸாதகர்கள் ஆஸ்ரமத்தில் இருந்து கொண்டு முழு நேர ஸாதனை செய்வதற்கு மனதை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்!

சில ஸாதகர்கள், ஸாதனை செய்வதை விரோதிக்கும் அவர்களின் உறவினர்களிடம் இன்றுவரை பல வழிகளில் ஸாதனையின் மகத்துவத்தை புரிய வைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் உறவினர்கள் அவர்களின் மனம் போன போக்கிலேயே செல்கின்றனர். இன்று ஆபத்துக் காலம் ஆரம்பமாகப் போவதால் ஸாதகர்கள் அவர்களை லட்சியம் செய்யாமல் ஆஸ்ரமத்தில் இருந்து கொண்டு முழு நேர ஸாதனையில் ஈடுபட தங்களின் மனத்தை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்; ஏனென்றால் ஸாதனையில் ‘நீங்கள் மற்றும் ஈச்வரன்’ மட்டுமே. ஆபத்துக் காலத்தில் உறவினர், பணம் ஆகிய எதுவும் நம்மைக் காப்பாற்றாது என்பதால் ஸாதகர்கள் செய்யும் ஸாதனையே அவர்களைக் காப்பாற்றிக் கரை சேர்க்கும். அதனால் முழு நேர ஸாதகர்களாக உருமாற மனதை தயார்ப்படுத்துவதற்கு ‘அ 3’ வழிமுறைப்படி நிகழ்ச்சியை ஒத்திகை பார்ப்பது, நடுநடுவே ஆஸ்ரமத்திற்கு வந்து சேவை செய்வது ஆகியவற்றை செய்வது உதவும்.

6 அ 2. ஸாதனையை உண்மை உணர்வுடன் செய்யவும்!

‘ஸனாதன் பிரபாத்’ பத்திரிக்கை அவ்வப்பொழுது வெளியிடும் ஸாதனை சம்பந்தமான வழிகாட்டுதல்களை உடனுக்குடன் செயல்படுத்த முயற்சி செய்யுங்கள்.

6 அ 3. வ்யஷ்டி ஸாதனையை நெறிப்படுத்தவும்!

ஸாதகர்கள் தங்களின் வ்யஷ்டி ஸாதனையை சரியான முறையில் நெறிப்படுத்தி தனிப்பட்ட ஸாதனையை சரியானபடி செய்ய முயற்சிக்க வேண்டும்.

6 அ 4. தீய சக்திகளின் கஷ்டங்களிலிருந்து பாதுகாப்பு பெற ‘ஆன்மீக உபாய’த்தை தினசரி தொடர்ந்து உண்மையுடன் செய்ய வேண்டும் !

 

7. ‘ஆபத்துக் காலத்தை தாண்டி செல்லும்
கண்ணோட்டத்தில் மக்களிடம் விழிப்புணர்வை
ஏற்படுத்த வேண்டும்’, என்பதும் ஸாதனை ஆகும்!

வரக்கூடிய ஆபத்துக் காலத்தைப் பற்றி உறவினர் மற்றும் நண்பர்களிடம் கூறுவது, இந்த கட்டுரையை அலுவலகத்திலுள்ள சக ஊழியர்களிடம் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற வழிகளில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகிறது. இதை செய்வது என்பது சமூக கடனை கழிப்பதற்கு ஒப்பாகும். இதை செய்வதால் ஸாதனையும் நடக்கிறது.’

(பராத்பர் குரு) டாக்டர் ஆடவலே
(ஆபத்துக் காலத்தை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க உதவும் இந்தக் கட்டுரையை வாசகர்களும் ஸாதகர்களும் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.)

Leave a Comment