‘ஞானிகளின் ராஜா குருமஹராஜ் ஆகும்’, என ஸந்த் துகாராம் மகாராஜ் கூறியுள்ளார். குரு என்பவர் சாக்ஷாத் ஞான கிடங்காக இருப்பவர். என்னுடைய குரு ஸந்த் பக்தராஜ் மகாராஜ் அவர்களுடன் இருக்கும்போது நான் அவரிடம் ஆன்மீகம் சம்பந்தமாக பல கேள்விகளை அவ்வப்பொழுது கேட்டு ஞானம் பெறுவேன். பிறகு குரு மறைந்த பின்பும் அவரின் அருளால் எனக்கு பல விதங்களில் ஞானம் கிடைத்து வருகிறது. இதன் முக்கிய காரணம் என்னவென்றால், ‘என்னிடம் குருவானவர் ‘ஆன்மீக ஆர்வம்’ என்ற குணத்தை விழிப்படைய செய்துள்ளார்’ என்பதே ஆகும். இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் குருவானவர் மாயை சம்பந்தமான விஷயங்களைப் பற்றிய ஆர்வத்தை எதிர்பார்ப்பதில்லை மாறாக ஆன்மீக ஆர்வமே அவர் எதிர்பார்ப்பது, அதை என்னிடம் அவரே விழித்தெழ செய்தார்.
1. நூல்களை எழுதுதல்
1அ. நூல்களை எழுத ஆரம்பித்தல்
‘ஸந்த் பக்தராஜ் மகாராஜ் அவர்களின் நல்வாக்கு ஒன்று, ‘ஆன்மீகத்தில் ஆர்வமுள்ளரே ஞானத்திற்கு அதிகாரி.’ ஆன்மீக ஆர்வத்தால் நான் அவரிடம் பல கேள்விகள் கேட்பேன். அவரின் பதில்களால் எனக்கு ஆன்மீகத்தின் பல விஷயங்கள் தெரிய வந்துள்ளன. பிறகு ஸாதானையின் மூலமாக ஆனந்த நிலையை அனுபவிக்க ஆரம்பித்தவுடன் ஒரு நாள் நான் அவரிடம் கூறினேன், ‘இனி நான் உங்களிடம் ஒரு கேள்வியும் கேட்க மாட்டேன்’. அப்பொழுது அவர் என்னை மிகவும் கோவித்துக் கொண்டார். அவரின் இந்த கோவத்தால்தான் இன்றுவரை என்னிடம் ஆன்மீக ஆர்வம் விழிப்படைந்த நிலையில் உள்ளது. ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ‘ஏன் மற்றும் எவ்வாறு’ என்ற கேள்வி என் மனதில் எழும். அந்தக் கேள்விகளுக்கான விடைகள் எனக்கு கிடைக்கும்படியான வசதியை அவரே செய்துள்ளார். இன்றுவரை என்னுடைய ஒவ்வொரு கேள்விக்குண்டான பதில் ஸனாதனின் 5-6 ஞானம் கிடைக்கும் ஸாதகர்கள் மூலம் சூட்சுமத்தில் உடனே கிடைத்து வருகிறது. ஞானம் கிடைக்கும் ஸாதகர்கள் தினமும் என்னுடைய 7-8 கேள்விகளுக்கு பதிலளித்து வருகின்றனர். இந்த ஸாதகர்களின் மூலமாக ஆன்மீகத்தில் பல்வேறு விஷயங்களைப் பற்றி ‘முன்பும் இல்லை, இனியும் இல்லை’ என்ற அளவிற்கு பரந்த ஆன்மீக சாஸ்திர ஞானம் ஒவ்வொரு நாளும் பக்கம் பக்கமாக கிடைத்து வருகின்றது.
மேலே குறிப்பிட்டுள்ளபடி ‘கேள்வி கேட்க மாட்டேன் என்பதற்கு குரு என்னை கோவித்துக் கொண்டார்’ என்பதால் பிறகு சில காலம் நான் அவரை கேள்விகள் எதுவும் கேட்காதிருந்தபோது மறுபடியும் என்னைக் கோவித்தார், ‘நீ என்ன பொய்யான கேள்விகளைக் கேட்கிறாய்? ஸாதனையை அதிகப்படுத்து, அப்பொழுது எல்லாக் கேள்விகளுக்கான விடைகள் தானே கிடைக்கும்.’ குருவின் ஒவ்வொரு வாக்கும் சிஷ்யனுக்கு ஏதாவது கற்றுக் கொடுக்கும். குரு இவ்வாறு என்னிடம் கோவித்துக் கொண்டதால் ஒரு விதத்தில் என் மனோலயம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் ‘குருக்ருபாயோகப்படியான ஸாதனையின் அங்கமாக உள்ள ஸமஷ்டி ஸாதனை மிகவும் மகத்துவம் வாய்ந்தது என்பதால் ஸமஷ்டிக்கு ஞானம் கிடைக்க வேண்டும்’ என்பதற்காக குருவானவர் என்னிடம் இன்றும் ஆன்மீக ஆர்வம் விழித்திருக்குமாறு செய்துள்ளார். அதன் பலனாக நான் பல்வேறு விஷயங்களைப் பற்றி ஞானம் கிடைக்கும் ஸாதகர்களிடம் கேள்விகள் கேட்டு வருகிறேன்.
1ஆ. நூல்களின் சிறப்பம்சம்
மற்றவரின் நூல்கள் மற்றும் மாதாந்திர பத்திரிக்கைகளில் வேதம், உபநிஷதம், புராணங்கள் போன்ற நூல்களிலுள்ள அந்தந்த விஷயங்கள் சம்பந்தமான தத்துவ தகவல்கள் சந்தர்ப்பத்துடன் கொடுக்கப்படும். உதா. நாமஜபத்தின் மகத்துவம், அஹம்பாவம் கூடாது போன்றவை. இதற்கு மாறாக ஸனாதனின் நூல்களில் என்னுடைய ஆன்மீக ஆர்வத்தால் ‘நாமஜபம் எப்பொழுதும், தொடர்ந்து ஆன்மீக உணர்வு பூர்வமாக நடப்பதற்கும் மற்றும் அஹம்பாவத்தைக் களையவும் என்ன செய்ய வேண்டும்’ போன்றவற்றின் செயல்முறைத் தகவல்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
1இ. நூல்களை எழுதுவதில் உள்ள விஸ்தீரணம்
என்னுடைய ஆன்மீக ஆர்வத்தால் ஞானம் கிடைக்கும் ஸாதகர்களின் மூலமாக பதில்கள் கிடைத்து வருகின்றன. அதனால் கடந்த வெறும் 15-20 வருடங்களில் ஆன்மீகம், ஸாதனை, தர்மம், ராஷ்ட்ரம் போன்ற பல்வேறு விஷயங்களில் அக்டோபர் 2018 வரை ஸனாதனின் 311 நூல்கள் மராட்டி, ஹிந்தி, குஜராத்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், பங்காலி, ஓடியா, அஸ்ஸாமி, குருமுகி ஆகிய 11 பாரதீய மற்றும் ஆங்கிலம், ஸர்பியன், ஜெர்மன், ஸ்பானிஷ், பிரெஞ்சு மற்றும் நேபாளி ஆகிய 6 அயல்நாட்டு மொழிகளிலும் கிடைக்கின்றன. 17 மொழிகளில் 74,57,000 பிரதிகள் இதுவரை வெளிவந்துள்ளன. இன்னும் 11,000-க்கும் அதிகமான விஷயங்களைப் பற்றி 8,000-க்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவர உள்ளன. இவ்வளவு விஷயங்கள் சேமித்து வைக்கப்பட்டதோடு தினமும் எழுதப்பட்டு வரும் பக்கங்கள் அதிகரித்துக் கொண்டே உள்ளன.
2. ஆன்மீக ஆர்வத்தால் மனோவியாதிகள் சம்பந்தமாக ஆய்வு செய்த மனோவசிய வழிமுறை
நான் ஒரு நவீன மருத்துவர். அச்சமயம் எனக்கு உடல் வியாதிகள் சம்பந்தமான காரணங்கள் மற்றும் நிவாரணங்கள் தெரிய வந்தன. மனோதத்துவத்தைப் பற்றி பயிற்சி பெறும்போது எனக்கு வெளிமனதைப் பற்றி தெரிய வந்தது. மனோதத்துவ மருத்துவ முறைப்படி முக்கியமாக நோயாளியின் கவலை, நம்பிக்கையின்மை ஆகியவற்றை நீக்க மாத்திரைகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் அதன் மூலம் ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவம் நீங்காததால் நோயாளியின் நோய் அவ்வாறே தொடர்கிறது. பிறகு நான் ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தை களைவதற்காக மனோவசிய முறைப்படி ஒரு தீர்வு கண்டேன். அந்த வழிமுறையை பின்பற்றியதால் எனக்கு ஆழ்மனதைப் பற்றி சிறிது தெரிய வந்தது. அதன் மூலம் வருடம் 1982-ல் ‘பாரதீய மருத்துவ மனோவசிய மற்றும் ஆராய்ச்சி ஸன்ஸ்தா’வை ஸ்தாபனம் செய்து பின்பு 5 வருடங்களுக்கு ‘பாரதீய வைத்திய மனோவசிய மற்றும் ஆராய்ச்சி பத்திரிக்கை’யை நடத்தினேன், அத்துடன் மனோவசிய சாஸ்திரம் மற்றும் மனோவசிய வழிமுறை பற்றி 6 நூல்கள் வெளியிட்டேன்.
3. ஆன்மீக ஆர்வத்தால்
ஆன்மீக உபாயங்கள் பற்றிய ஞானம் கிடைத்தல்
பின்பு ஸாதனை செய்ய ஆரம்பித்தவுடன் எனக்கு ‘நோய்க்கான காரணம் வெறும் உடல் மற்றும் மனோரீதியானது அன்று, ஆன்மீக ரீதியானது’, என்பது தெரிய வந்தது. அப்பொழுது எனக்கு ‘ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தைக் களைதல்’ பற்றிய மகத்துவம் புரிந்தது. காரணம் அவற்றைக் களைவதால் ஒருவருக்கு ஸாத்வீகத் தன்மை கிடைக்கிறது, ஸாத்வீகமாக மாறிய பின் பல மானசீக நோய்கள் தூர விலகுகின்றன. கஷ்டம் விலகவில்லை என்றால் அது ஆன்மீக காரணத்தால், அதாவது ‘குண்டலினி சக்கரங்களிலுள்ள தடைகளாலும் தீய சக்திகளின் பாதிப்பாலும் ஏற்படுகிறது என்பதும் அதற்கான ஒரே தீர்வு ஆன்மீக ஸாதனை செய்வது ஒன்றே என்பதும் தெரிய வந்தது. அதன் மூலம் 44 வயதில் ஸாதனைக்கு வந்ததன் மகத்துவமும் எனக்குப் புரிந்தது மற்றும் மனோவசிய வைத்தியம் செய்வதற்கு பதிலாக நான் முழுநேர சிஷ்யனாக குருவிடம் அடைக்கலம் புகுந்தேன்.
பின்பு ஸாதனை செய்தபின் எனக்கு தீய சக்திகளின் வகைகள், அவற்றின் காரியங்கள், மனித வாழ்க்கை மற்றும் சுற்றுப்புற சூழலில் அவற்றால் ஏற்படும் பரிணாமம், அவை மனிதர்களுக்கு கஷ்டங்களைக் கொடுப்பதற்கான காரணம் மற்றும் அந்த கஷ்டங்களின் லக்ஷணங்கள் ஆகியவற்றைப் பற்றி பயில முடிந்தது. தீய சக்திகளால் ஏற்படும் கஷ்டங்களுக்கான தீர்வாக என்னால் புதுப்புது ஆன்மீக உபாயங்களை கண்டறிய முடிந்தது. உதா. ஒன்றன்-பின்-ஒன்று என்பதாக இரு நாமஜபங்களை செய்தல், உடலில் குண்டலினி சக்கர ஸ்தானத்தில் தெய்வங்களின் ஸாத்வீக படங்களை மற்றும் நாமஜப படிவங்களை வைத்தல். மனிதர்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனோ வியாதிகள் அதோடு ஆன்மீக கஷ்டங்களுக்கான நிவாரணங்களுக்கு ஏற்ற பல்வேறு உபாயங்கள் எனக்குத் தெரிய வந்தது. உதா. காலி பெட்டிகளின் உபாயம், பிராணசக்தி (சேதனா) ஓட்ட உபாயம். இந்த உபாய வழிமுறைகளைப் பற்றி நூல்களும் வெளிவந்துள்ளன. இவையெல்லாம் என் ஆன்மீக ஆர்வத்தால் சாத்தியமாயிற்று.
4. ஆன்மீக ஆர்வத்தால் பல்வேறு
விஷயங்களைப் பற்றிய ஞானம் கிடைத்தல்
அ. ‘தினப்பத்திரிக்கை’ ஆரம்பிப்பது சம்பந்தமாக எந்த முன் அனுபவமும் இல்லாதபோது என் ஆன்மீக ஆர்வத்தால் ஏப்ரல் 1998-ல் வாராந்திர ‘ஸனாதன் பிரபாத்’ பத்திரிக்கையும் ஏப்ரல் 1999-ல் தினசரி வாராந்திர ‘ஸனாதன் பிரபாத்’ பத்திரிக்கையும் ஆரம்பிக்கப்பட்டது. 19.4.2000 வரை நான் ‘துவக்குனர்-ஆசிரியர்’ என்ற பொறுப்பில் ‘ஸனாதன் பிரபாத்’ காரியங்களை மேற்பார்வையிட்டேன். பிறகு அது விரிவடைந்து இப்பொழுது ‘ஸனாதன் பிரபாத்’ மராட்டியில் நான்கு பதிப்புகளும், மராட்டி மற்றும் கன்னடத்தில் வாராந்திரமாகவும், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மாதம் இருமுறையும் மற்றும் குஜராத்தியில் மாதாந்திரமாகவும் வெளிவருகின்றன. SanatanPrabhat.org என்ற வலைதளமும் இப்பொழுது செயல்பாட்டில் உள்ளது.
ஆ. ஆன்மீக ஆர்வத்தால் ஞானயோகம், பக்தியோகம், கர்மயோகம் போன்ற ஆன்மீக விஷயங்களைப் பற்றிய ஞானத்துடன் கூட சித்திரக்கலை, சிற்பக்கலை, ஸங்கீதம், நாட்டியம் போன்ற பல்வேறு கலைகள் சம்பந்தமாகவும் அத்துடன் வாஸ்து சாஸ்திரம், மூலிகை செடிகளின் தோட்டம் போன்ற விஷயங்களைப் பற்றியும் ஞானம் கிடைத்து வருகிறது. ஸனாதனின் ஸாதக கலைஞர்கள் என்னுடைய வழிகாட்டுதல் மூலமாக படைத்துள்ள தெய்வ சித்திரங்களில் 28 முதல் 31.7 சதவிகிதமும், ஸ்ரீ கணேசமூர்த்தியில் 28.3 சதவிகிதமும் அந்தந்த தெய்வ தத்துவங்கள் நிரம்பி உள்ளன. (கலியுகத்தில் தெய்வ சித்திரம் மற்றும் மூர்த்தியில் அதிகபட்சம் 30 சதவிகிதமே அந்த தெய்வ தத்துவத்தை கொண்டு வர முடியும்.)
5. ஆன்மீக ஆர்வத்தால் கிடைத்த
ஞானத்தின் மூலம் பல்வேறு விஷயங்களைப்
பற்றி விஞ்ஞான முறையில் ஆராய்ச்சி நடந்து ராஷ்ட்ரீய மற்றும் உலகளாவிய மாநாடுகளில்
ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன
‘ஹிந்து தர்மத்தில் நாமஜபம், யக்ஞம், உணவு, ஆடைகள், தலை அலங்காரம், ஸ்ரார்த்தம் போன்றவை மனிதர்களின் மீதும் சூழலின் மீதும் ஏற்படுத்தும் நல்ல பரிணாமம்’ என்பது பற்றி ஆயிரத்திற்கும் அதிகமான விஷயங்களைப் பற்றி ‘யு.டி.ஐ. (யுனிவர்சல் தெர்மோ ஸ்கானர்)’, ‘பிப் (பாலிகான்ட்ராஸ்ட் இன்டர்பியரன்ஸ் போட்டோகிராபி)’, ‘தெர்மல் இமேஜிங்’ போன்ற நவீன விஞ்ஞான உபகரணங்களைக் கொண்டும் தொழில்நுட்பத்தின் மூலமாகவும் ஆராய்ச்சி செய்து ராஷ்ட்ரீய மற்றும் உலகளாவிய மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 2016 முதல் நவம்பர் 2018 வரை 8 ராஷ்ட்ரீய மற்றும் 29 உலகளாவிய விஞ்ஞான மாநாடுகளில் இந்த ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவை எல்லாம் என் ஆன்மீக ஆர்வத்தால் சாத்தியமாயிற்று. நவீன விஞ்ஞானவாதிகள் மற்றும் புத்திவாதிகள் ஆகியோர் ஒவ்வொரு விஷயத்தையும் விஞ்ஞான ஆராய்ச்சி மூலம் யந்திரங்களின் மூலம் நிரூபித்தால்தான் சரி என நினைக்கின்றனர். இன்றைய காலத்தில் ரிஷி முனிவர்களின் அனுபவபூர்வமான வாக்கைக் காட்டிலும் நவீன விஞ்ஞான முறைப்படி நிரூபணம் ஆகும் ஞானத்தைத்தான் அனைவரும் நம்புகின்றனர். அதனால் இன்றைய தலைமுறை இதன் மூலமாக ஆன்மீகத்தை நோக்கி திரும்பி ஸாதனை செய்யக்கூடிய வாய்ப்பு அதிகரிக்கிறது.
6.ஆன்மீக ஆர்வத்தால் கற்பனைக்கும்
எட்டாத புத்திக்கு அப்பாற்பட்ட சம்பவங்களைப் புரிந்து கொள்ளவும் ஆய்வு செய்யவும் முடிகிறது
அ. ஸாதனையால் என்னுடைய உடல், நகங்கள் மற்றும் கேசம் ஆகியவற்றில் தெய்வீக மாறுதல்கள் ஏற்பட்டுள்ளதை உணர முடிந்தது. என்னுடைய அறையில் மற்றும் அறையிலுள்ள பொருட்களிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.
ஆ. ஸனாதனின் ராம்னாதி ஆஸ்ரமத்தின் வாஸ்து மற்றும் ஆச்ரமத்திலுள்ள பல பொருட்களின் மீது தீய சக்திகளின் தாக்குதலால் கஷ்டம் தரும், மற்றும் நல்ல சக்திகளால் பல தெய்வீக மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. இவை பஞ்சமஹாபூதங்களின் நிலையில் உள்ளன. பொருட்களில் துர்வாசனை ஏற்படுதல், அவற்றின் மாறியுள்ள நிறத்தைப் பார்க்க வேண்டாம் என தோன்றுதல், தொட வேண்டாம் என தோன்றுதல், கஷ்டம் தரும் நாதம் கேட்கப்படுதல், ஆகியவை கஷ்டம் தரும் மாற்றங்களின் சில உதாரணங்கள். பொருட்களில் சுகந்தம் வெளிப்படுதல், நிறம் மனதிற்கு ரம்மியமாகத் தெரிதல், அதைத் தொட வேண்டும் என்ற உணர்வு ஏற்படுதல், எக்காரணமும் இல்லாமல் தெய்வீக நாதம் கேட்கக் கிடைத்தல், பொருட்களின் மீது பிரதிபிம்பம் தெரிதல் ஆகியவை தெய்வீக மாற்றங்களின் சில உதாரணங்கள். இது போன்ற மாற்றமடைந்த 15,000 பொருட்கள் மற்றும் புகைப்படங்கள், 27,000-க்கும் அதிகமான ஒலிஒளி நாடாக்கள் தயாரிக்கும் அளவிற்கு படப்பிடிப்புகள் சேர்ந்துள்ளன.
மேலே கூறியுள்ள அனைத்தையும் ஆன்மீக ஆராய்ச்சி செய்து அவற்றின் காரணகாரியபாவத்தை ஆய்வு செய்ய வேண்டும். இவையெல்லாம் என்னிடமிருந்த ஆன்மீக ஆர்வத்தால் சாத்தியமாயுள்ளது. இவற்றால் ஆன்மீக உலகைப் பற்றி பயில்பவர்களுக்கும் ஆய்வு செய்பவர்களுக்கும் ஒரு புதிய பரிமாணம் திறந்து விடப்பட்டுள்ளது.
7. ஆன்மீக ஆர்வத்தால் சூட்சும உலகம்
சம்பந்தமான புதிய தகவல்களை உலகுக்கு வழங்க முடிகிறது
ஸ்தூல பஞ்சஞானேந்த்ரியங்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவை ‘சூட்சுமம்’ ஆகும், ஆகையால் பஞ்சஞானேந்த்ரியங்கள், மனம் மற்றும் புத்தியை உபயோகிக்காமல் கிடைக்கும் ஞானம் ‘சூட்சும ஞானம்’ ஆகும். ஆன்மீகம் என்பது அதிகபட்சம் சூட்சுமம் சம்பந்தமான சாஸ்திரம் ஆகும். என்னிடமிருந்த ஆன்மீக ஆர்வத்தால் எனக்கு சூட்சும விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. அதனால் நான் சூட்சுமத்தில் பல்வேறு பிரயோகங்களை செய்ய கற்றுக் கொண்டேன். அதன் மூலம் சூட்சும உலகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. இதன் மூலமாக ஸாத்வீக ஆடைகள், உணவு, ஆபரணம், தார்மீக காரியங்கள் போன்றவை ஒருவரின் மீது ஏற்படுத்தும் நல்ல பரிணாமம் போன்று ஆயிரக்கணக்கான விஷயங்கள் சம்பந்தமாக சூட்சும நிலையில் செயல்பாட்டை காண்பிக்கும் 12,500-க்கும் அதிகமான பரிசோதனைகள் மற்றும் சித்திரங்கள் ஆகிய நவீன விஷயங்களை மனித குலத்திற்கு தர முடிந்துள்ளது.
8. பராத்பர குரு டாக்டருக்கு இறைவனிடமுள்ள நன்றியுணர்வு!
மேலே குறிப்பிட்ட தகவல்கள் மூலமாக ‘ஆன்மீகம்’ என்பது வ்யஷ்டி மற்றும் ஸமஷ்டி ஸாதனை விஷயத்தில் அதாவது ஈச்வரபிராப்தி சம்பந்தமான ஒரு சாஸ்திரம் என்பதும் அது அதி உன்னத சாஸ்திரம் என்பதும் தெரிய வருகிறது. ‘ஸந்த் ரஹீம் அவர்களின் ‘ஒன்று கிடைத்தால் அனைத்தும் கிடைத்தது’, அதாவது ‘ஒன்றை சாதிக்கும்போது எல்லாவற்றையும் சாதிக்க முடிகிறது’, என்ற நல்வாக்கை நான் தினமும் அனுபவபூர்வமாக உணர்கிறேன். என்னுடைய விஷயத்தில் ‘ஒன்றை சாதிப்பது’ என்பது ‘இறைவனின் ஆசீர்வாதம்’ மற்றும் ‘அனைத்தையும் சாதித்தல்’ என்பது பல்வேறு விஷயங்கள் சம்பந்தமாக சேவை செய்ய முடிதல் மற்றும் பல விஷயங்களைப் பற்றிய தகவல்கள் ஏதும் இல்லையென்றாலும் அவை சம்பந்தமாக ஸாதகர்களுக்கு வழிகாட்டுதல் வழங்க முடிதல் ஆகும். நான் ஸாதனை செய்வதால் எனக்கு இறைவனின் ஆசீர்வாதம் கிடைக்கிறது மற்றும் ஆன்மீக ஆர்வம் இருப்பதால் எது யோக்யமானதோ அது மனதில் தோன்றுகிறது. இதன் மூலம் ‘நான் அதிக காரியங்களை செய்தேன், எனக்கு அதிக பிரசித்தி கிடைக்கப் போகிறது’ என்ற அஹம்பாவ சிந்தனை துளியும் மனதில் எழ வாய்ப்பில்லை. இதற்காக நான் இறைவனின் சரணங்களில் அனந்த கோடி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’
– (பராத்பர குரு) டாக்டர் ஆடவலே