வரக்கூடிய ஆபத்துக் காலத்திற்கேற்ற ஸஞ்ஜீவனி : ஸனாதனின் நூல் தொகுப்பு!

பூஜ்ய ஸந்தீப் ஆலஷி

ஸந்த்-மகாத்மாக்கள், ஜோதிட விற்பன்னர்கள் ஆகியோரின் கூற்றுப்படி வரக் கூடிய காலம் ஆபத்துக் காலமாக இருப்பதால் இக்காலத்தில் சமூகம் பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டி இருக்கும். ஆபத்துக் காலத்தில் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதோடு கூட குடும்பத்தினர் மற்றும் தேச குடிமக்களைக் காப்பது பெரும் சவாலாக இருக்கும். இந்த சூழ்நிலையில் கீழே கூறப்பட்டுள்ளவை நிச்சயமாக நமக்கு பயன் தர வல்லது.

 

ஆபத்துக் காலத்தைக்
கடக்க உதவும் நூல் தொகுப்பு!

ஆபத்துக் காலத்தில் தகவல்தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் நோயாளிகள் ஆஸ்பத்திரிக்கு செல்வது, டாக்டர் அல்லது வைத்தியரை அணுகுவது, கடைகளில் மருந்துகள் வாங்குவது ஆகியவை மிகவும் கடினமாக இருக்கும். ஆபத்துக் காலத்தைக் கடக்க தயார் நிலையில் இருப்பதன் ஒரு அங்கமாக வரக்கூடிய ஆபத்துக் காலத்தில் ஸஞ்ஜீவனியாக விளங்கப் போகும் நூல் தொகுப்பு தயார் செய்யப்பட்டு உள்ளது. இன்று இவ்விஷயத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுதல், அதிலுள்ள சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளுதல் மற்றும் நூல் தொகுப்பிலுள்ள பல்வேறு உபசார வழிமுறைகளைக் கற்றுக் கொள்ளுதல் ஆகியவற்றின் மூலமாக பயங்கர ஆபத்துக் காலம் நிச்சயமாக சகித்துக் கொள்ளும்படியாக இருக்கும்!

நூல் தொகுப்பிலிருந்து கற்றுக் கொள்ளும் உபசார வழிமுறைகள் வெறும் ஆபத்துக் காலத்திற்கு மட்டுமல்ல, மாறாக எப்பொழுதுமே உதவக் கூடியது!

 

1. தீயணைப்பு, முதலுதவி மற்றும் ஆபத்துக்
கால உதவி பற்றி பயிற்சியளிக்கும் நூல்கள்

இன்று கிராமம் கிராமமாக ஆஸ்பத்திரிகள் உள்ளன. நகரங்களில் தீயணைப்பு யந்திரங்கள் கிடைக்கின்றன. அதனால் பலருக்கு தீயணைப்பு, முதலுதவி மற்றும் ஆபத்துக் கால உதவி பற்றி பயிற்சி எடுப்பது தேவையில்லை என நினைக்கின்றனர். வரக்கூடிய ஆபத்துக் காலத்தை கருத்தில் கொண்டு இந்த பயிற்சியை எடுத்துக் கொள்வது அவசியமாகிறது. அதன் மூலம் உங்களின் மற்றும் மற்றவர்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியும். இப்பொழுது இந்த பயிற்சியை வழங்கும் நூல்கள் கிடைக்கின்றன; ஸனாதன் நூல்களில் மிக சுலபமான வார்த்தைகளில் சாஸ்திர ஆதாரத்தைக் கொண்டு விளக்கப்பட்டுள்ளன.

 

2. பிந்துதாபன்-முறை,
ரிப்ளெக்ஸ்ஸாலாஜி மற்றும்
மர்மசிகிச்சை பற்றிய நூல்கள்

பிந்துதாபன்-முறை மற்றும் ரிப்ளெக்ஸ்ஸாலாஜி முறையில் உடலில் குறிப்பிட்ட புள்ளிகளில் அழுத்தம் கொடுக்கப் படுகிறது. அதன் மூலம் உடலில், சேதனா பிரவாஹத்தில் ஏற்படும் தடைகள் விலகி பல்வேறு உடல் மற்றும் மனோ வியாதிகளை சரி செய்ய முடிகிறது.

 

3. பிராணசக்தி ஓட்டம் பற்றிய நூல்

மனித ஸ்தூல தேஹத்திலுள்ள ரத்த ஓட்டம், சுவாச, செரிமான பாகங்கள் ஆகியவை சரியானபடி வேலை செய்வதற்கு சக்தி தேவைப்படுகிறது; அதை பிராணசக்தி (சேதனா) ஓட்டமே தருகிறது. அதன் ஓட்டத்தில் தடைகள் ஏற்பட்டால் உடலில் நோய் ஏற்படுகிறது. இத்தடைகளை நாமே கண்டுபிடித்து விலக்குவதற்கான நவீன உபாயங்கள் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் நோய்கள் குணமாக பஞ்ச தத்துவத்துடன் சம்பந்தப்பட்ட முத்ரா, நியாஸ் மற்றும் நாமஜபம் ஆகியவற்றையும் செய்ய வேண்டும்.

 

4. மனோவசிய வழிமுறை சம்பந்தமான நூல்

எவ்வளவு நபர்களிடம் அர்த்தமற்ற எண்ணங்கள், நம்பிக்கையின்மை, போதைப் பழக்கம் போன்ற மானசீக கஷ்டங்கள் உள்ளன. திக்குவாய், ஆஸ்துமா, பாலியல் நோய்கள் ஆகிய உடல் நோய்கள் பெரும்பாலும் மானசீக காரணங்களால் உண்டாகின்றன. இவற்றிற்கு மனோவசிய முறைப்படி வைத்தியம் செய்யும்போது சரியாகும் வாய்ப்புள்ளது.

 

5. மூலிகை செடிகளின் தோட்டம்

தாகம் எடுத்த பின் கிணறு தோண்டுவது பயனற்றது. வரக்கூடிய ஆபத்துக் காலத்தில் மருத்துவ மூலிகைகள் கிடைப்பதற்கு இப்பொழுதே இத்தகைய தோட்டங்களை வீட்டிற்கருகில் சுற்று வட்டாரத்தில் அமைப்பது அவசியமானது. அதேபோல் இவ்விஷயத்தை பலருக்கு தெரிவித்து அவர்களையும் இதில் ஈடுபடுத்துவது இன்றியமையாதது. அதற்காக ஸனாதன் ‘மருத்துவ மூலிகை செடிகளின் தோட்டத்தை நிர்மாணியுங்கள்!’ என்ற நூலை வெளியிட்டுள்ளது.

 

6. நோய் நிவாரணத்திற்கான
பல்வேறு வழிமுறைகளின் நூல் தொகுப்பு

இவற்றில் உடல் மற்றும் மனக் கஷ்டங்களுக்கான நிவாரண வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. வாசகர்களுக்கு ஒவ்வொரு வியாதியின் கஷ்டத்தின் நிவாரணத்திற்கு ஏற்ப வீட்டிலேயே செய்யக் கூடிய ஆயுர்வேத நிவாரணம், ஆசனங்கள், பிராணாயாமம், பிந்துதாபன் முறை, முத்ரா வழிமுறை, தெய்வங்களின் நாமஜபம், மந்திரோபசாரம் போன்ற நிவாரண முறைகள் சம்பந்தமாக ஒரே இடத்தில் தகவல்கள் உள்ளன என்பது இந்த நூல் தொகுப்பின் தனித்துவ சிறப்பாகும். இந்த நூல் தொகுப்பில் கூறியுள்ளபடி நிவாரண வழிமுறைகளை செய்தால் நோயுற்றவர் குணமாவார் மற்றும் அவர்களின் கஷ்டங்கள் சகித்துக் கொள்ளும்படியாக குறையும். இந்த நூல் தொகுப்பிலுள்ள சில நிவாரண முறைகளின் சிறு முன்னுரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

6 அ. சுலபமான வீட்டு ஆயுர்வேத வைத்தியம்

இதில் வீட்டிலும் வீட்டுக்கருகில் சுற்று வட்டாரத்திலும் கிடைக்கும் காய்கறிகள், தானியங்கள், மசாலாக்கள், பழங்கள், மருத்துவ செடிகள் ஆகியவற்றின் மூலம் வைத்தியம் செய்வது பற்றிய வழிகாட்டுதல் உள்ளது.

6 ஆ. புஷ்ப ஔஷதி (பூ மருத்துவம்)

இதில் ஆளுமை குறை மற்றும் மனோ வியாதிகளை குணப்படுத்தக்கூடிய மருத்துவ குணம் கொண்ட பூக்களைப் பற்றிய விவரங்கள் உள்ளன. இந்த மருந்துகள் ஹோமியோபதி மருந்துகளை ஒத்தது.

6 இ. பிசியோதெரபி உடற்பயிற்சி, யோகாசனம்,
பந்த, பிராணாயாமம் மற்றும் சுத்திக்ரியா (ஷட்க்ரியா)

நவீன வாழ்க்கை முறையால் இன்று மக்களிடையே வியாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. 25-30 வயதுள்ள பல இளம் வாலிபர்கள், யுவதிகளும் கூட கழுத்து வலி, முதுகு வலி, தூக்கமின்மை போன்ற வியாதிகளால் பீடிக்கப்படுகின்றனர். இதன் மூலம் அலோபதி மருந்துகளின் பக்கவிளைவுகள் நம் கவனத்திற்கு வருகின்றன. இந்நிலையில் ஆயிர வருட பாரம்பரியமுள்ள யோக சாஸ்திரம் என்பது நமக்குக் கிடைத்த வரபிரஸாதமாகும். இதற்கான நூல் தொகுப்பில் உடல்ரீதியான, மனோரீதியான உளவியல் ரீதியான வியாதிகளுக்குரிய யோக நிவாரண வழிமுறைகளை (உதா. ஆசனம், பந்த, பிராணாயாமம், சுத்திக்ரியா) எவ்வாறு செய்ய வேண்டும் என்ற விளக்கங்கள் உள்ளன.

6ஈ. முத்ரா வழிமுறை

மனித உடல் பஞ்ச தத்துவங்களால் ஆனது. பஞ்ச தத்துவங்களில் ஏதாவது ஒரு தத்துவம் குறைவாக அல்லது அதிகமாக இருந்தால் அதனால் உடல்ரீதியான மனோரீதியான வியாதிகள் ஏற்படுகின்றன. கையிலுள்ள விரல்களை விசேஷ முறையில் வைத்து செய்யப்படும் முத்ராவால் நிவாரணம் பெற முடிகிறது.

6உ. தெய்வங்களின்
நாமஜபம் மற்றும் பீஜமந்திரம்,அத்துடன்
புராணங்களிலுள்ள வேதங்களிலுள்ள மந்திரங்கள்

ஷ மந்திரங்களின் ஆதாரத்தால் வாழ்க்கையின் கஷ்டங்களை தூர விரட்டுவது மற்றும் வியாதிகளுக்கு நிவாரணம் தருவது ஆகியவை புராதன காலத்திலிருந்தே ஹிந்து தர்மத்தில் உள்ள நிவாரண முறைகளாகும். இந்நூல் தொகுப்பில் உடல் மற்றும் மனோ கஷ்டங்களுக்கு நிவாரணமாக நாமஜபம் மற்றும் மந்திரஜபம் கொடுக்கப்பட்டுள்ளது; அத்துடன் நல்ல ஆரோக்கியம் கிடைப்பதற்கும் வருங்காலத்தில் வியாதிகள் ஏற்படாமல் இருக்கவும் மந்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

6ஊ. ஏனைய குணப்படுத்தும் வழிமுறைகள்

காந்த சிகிச்சை, ஸ்வமூத்ரோபசார், காலி பெட்டிகளின் உபாயம், பிரமிட் சிகிச்சை, ஜோதிட சாஸ்திரப்படி உபாயம், ரேகி போன்ற சிகிச்சை முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

 

7. அக்னிஹோத்ரம் பற்றிய நூல்

வரக்கூடிய மூன்றாம் உலகப்போரில் அணுகுண்டு வெடிப்பால் உண்டாகும் கதிர்வீச்சுக்களை செயலிழக்க செய்யக் கூடிய சுலபனான, குறைந்த காலத்திற்குள் செய்யக்கூடிய யக்ஞ விதியே அக்னிஹோத்ரமாகும்! ஸனாதனின் அக்னிஹோத்ர நூலின் மூலமாக அக்னிஹோத்ரத்தின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டு செய்தால் ஆபத்துக் காலத்தில் குடும்பத்தினரைக் காப்பாற்ற முடியும்.

பராத்பர குரு டாக்டர் ஜயந்த் ஆடவலே அவர்களின் வழிகாட்டுதலின் பயனைப் பெறுங்கள்!

வரக்கூடிய ஆபத்துக் கால சந்தர்ப்பத்தை உணர்ந்து மனித குல நலனுக்காக இத்தகைய ஆபத்துக் கால சஞ்ஜீவனியாக விளங்கப் போகும் நூல் தொகுப்பை வெளிக்கொணரும் காரியத்தை தூரப்பார்வை கொண்ட பராத்பர குரு டாக்டர் ஜயந்த் ஆடவலே போன்ற மகான்களால்தான் செய்ய முடியும்! இந்த உபாயங்களை ச்ரத்தையுடன் செய்தால் அதன் பலன் நிச்சயமாக கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை!

தர்மஸ்ய தத்வம் நிஹிதம் குஹாயாம் மஹாஜனோ யேன கத: ஸ பந்தா:

– யக்ஷப்ரசன, ஸ்லோகம் 117

அர்த்தம் : தர்மத்தின் தத்துவம் சாதாரண மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாதபடி ரஹஸ்யமாக விளங்குவதால் உன்னத புருஷர்கள் எந்த வழியில் சென்றனரோ அதைப் பின்பற்றுவது சிறந்தது.

உள்ளர்த்தம் : பராத்பர குரு பரம் பூஜ்ய டாக்டர் போன்ற உன்னத புருஷர் ஆபத்துக் காலத்தைக் கடப்பதற்குத் தந்துள்ள உபாயங்களை பின்பற்றினால் நமக்கு நலன்கள் ஏற்படும்.

ஆபத்துக் காலத்தைக் கடக்க உதவும்
விஷயங்களைப் பற்றி நன்குணர்ந்து ஸாதனையை
அதிகப்படுத்தி ஈச்வர ராஜ்யத்தை ஸ்தாபனம் செய்யுங்கள்!

அதிவ்ருஷ்டி அனாவ்ருஷ்டி: சலபா மூஷகா: சுக:
ஸ்வசக்ரம் பரசக்ரம் ஸ ஸப்தைதா ஈதய: ஸ்ம்ருதா:

– கௌசிகபத்ததி

அர்த்தம் : (ராஜ்யத்தை ஆள்பவர்கள் தர்மவழி பின்பற்றவில்லை என்றால் குடிமக்களும் தர்மவழி நடக்க மாட்டார்கள். குடிமக்கள் தர்மவழி பின்பற்றாததால்) வெள்ளம், வறட்சி, வெட்டுக்கிளிகள், எலிகள், கிளிகள் ஆகியவற்றால் தொந்தரவு, தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளுதல் மற்றும் எதிரிகளின் தாக்குதல் ஆகிய ஏழு விதங்களில் சங்கடங்கள் (ராஷ்டத்திற்கு) ஏற்படும்.

இதன் தாத்பர்யம், குடிமக்கள் மற்றும் ராஜா ஆகிய இருவருமே தர்மவழி நடப்பவர்களாக ஸாதனை செய்பவர்களாக இருத்தல் வேண்டும். அப்பொழுதே ஆபத்துக் காலத்தின் தீவிரம் குறையும் மற்றும் அதைத் தாங்கிக் கொள்ள இயலும்.

  1. முத்ரா உபாயம், மந்திரஜபம் போன்ற உபாயங்கள் சூட்சும நிலையில் நடக்கும் உபாயங்கள் ஆனதால் இவற்றின் மூலம் எதிர்பார்த்த பலனைப் பெற உபாயத்தை செய்பவரிடம் ச்ரத்தை, ஆன்மீக உணர்வு போன்ற தெய்வீக குணங்கள் இருத்தல் வேண்டும். அவை ஸாதானையின் மூலமாக நிர்மாணமாகும்.
  2. இன்றைய சமூகம் தர்மவழியினின்று நழுவி விட்டது. இதன் காரணமாக ராஷ்ட்ரத்திற்கும் தர்மத்திற்கும் பல சங்கடங்கள் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு சங்கடத்தையும் எதிர்கொள்வதற்கு பதிலாக சம்பூர்ண சமூகத்தினரை நீதிமான்களாக மாற்றக் கூடிய, அதாவது எல்லா சங்கடங்களையும் அடியுடன் வேரறுக்கக் கூடிய மற்றும் உலக நலனை கருத்தில் கொண்ட தர்மவழி நடக்கும் ஈச்வர ராஜ்யத்தை (ஹிந்து ராஷ்ட்ரம்) ஸ்தாபனம் செய்வது என்பதே இதற்குள்ள ஒரே வழியாகும். இதற்கு எல்லோரும் தர்மவழி மற்றும் நீதிவழி வழுவாத அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம் ஆகும்.

பிரார்த்தனை!

எல்லோரிடமும், வரக்கூடிய ஆபத்துக் காலத்தின் தீவிரத்தைப் பற்றிய புரிதல் ஏற்பட வேண்டும் மற்றும் ஸனாதனின் நூல் தொகுப்பின் பயனை அடைந்து ஆபத்துக் காலத்தைக் கடக்க செய்யும் ஆற்றலைப் பெற வேண்டும் என்றும் பராத்பர குரு டாக்டர் அவர்களின் சரணங்களில் பக்திபூர்வமாக பிராத்தனை செய்யப்படுகிறது!

– (பூஜ்ய) திரு ஸந்தீப் ஆலஷி, ஸனாதன் ஆஸ்ரமம், ராம்னாதி, கோவா. (23.3.2013)

Leave a Comment