திருஆடிப்பூரம்


திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழியை இயற்றிய ஆண்டாளின் திரு அவதார தினத்தை கொண்டாடுவதே திரு ஆடிப்பூரமாகும். விஷ்ணுசித்தர், ஆடிப்பூரத்தன்று பூமாதேவியின் அவதாரமான ஆண்டாளை துளசிவனத்தில் கண்டெடுத்தார். ஆண்டாள் சூடிக் கொடுத்த மலர்மாலையை ரங்கநாதன் உவந்து ஏற்றதால் சூடிக் கொடுத்த சுடர்கொடியானாள். 143 பாசுரங்களின் மூலமும் திருப்பாவை மூலமும் உன்னத பக்தியை உலகுக்கு வெளிப்படுத்தினாள். ஸ்ரீகிருஷ்ணனை எழுப்பும் திருப்பாவையில் அவனுக்கு அறிவுரை கூறும் குருவாகிறாள். இறுதியில் திருமணக் கோலத்துடன் ஸ்ரீரங்கமன்னாருடன் ஐக்கியமாகிறாள். ஆடிப்பூரம் 10 நாட்கள் உற்சவமாக ஸ்ரீவில்லிப்புத்தூரிலும் ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலிலும் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலிலும் கோலாகலமாய் கொண்டாடப்படுகிறது. 10-ம் நாள் அன்று ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கும் திருக்கல்யாணம் அதி விமரிசையாய் கொண்டாடப்படுகிறது. அன்று ஆண்டாளை பூஜிக்கும் மணமாகாத இளம் பெண்களுக்கு திருமணம் கூடி வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஹே ஆண்டாள் அம்மையே, உன்னைப் போன்ற அனன்ய பக்தியை எமக்கும் தந்தருள்வாய் !

Leave a Comment