பித்ருபக்ஷம்


மூதாதையருக்கு திவச காரியம் செய்யாததால் அவர்கள் திருப்தி அடையாததாலும், அத்துடன் தீய சக்திகளின் கட்டுப்பாட்டின் கீழ் சென்று அவற்றிற்கு அடிமையாக இருப்பதாலும், தீய சக்திகள் மூதாதையரை உபயோகித்து குடும்பத்தினருக்கு கஷ்டங்கள் அளிக்கும் வாய்ப்பு உள்ளது. திவசம் செய்வதால் மூதாதையருக்கு பாதுகாப்பு கிடைக்கிறது; கதி கிடைத்து மேலே செல்ல முடிகிறது. பித்ருபக்ஷ காலத்தில் ஒரு நாள் மூதாதையருக்கு திவசம் செய்தால் அவர்கள் வருடம் முழுவதும் திருப்தியுடன் இருக்கிறார்கள்.

சர்வபித்ரு அமாவாசை

ஆவணி மாத அமாவாசையை ‘சர்வ பித்ரு அமாவாசை’ என்பர். அன்று அவரவர் குலத்தை சேர்ந்த அனைத்து மூதாதையருக்கும் ஸ்ரார்த்தம் செய்யப்படுகிறது. வருடத்தின் மற்ற திதிகளில் அல்லது மகாளய பட்ச மற்ற திதிகளில் ஸ்ரார்த்தம் செய்ய முடியவில்லை என்றாலும் அமாவாசை அன்று அவசியம் செய்வார்கள்.

 

பித்ருபக்ஷத்தில் தத்த நாமஜபம் செய்வதன் மகத்துவம்

தத்த நாமஜபத்தால் மூதாதையருக்கு நல்ல கதி கிடைக்கிறது; அதோடு கஷ்டத்திலிருந்து பாதுகாப்பு கவசம் ஏற்படுகிறது. அதனால் பித்ருபக்ஷ காலத்தில் தினமும் குறைந்தபட்சம் 72 மாலைகள் (6 மணி நேரம்) தத்த நாமஜபம் செய்ய வேண்டும்.

தகவல் : சனாதனின் ஆங்கில நூல் ‘பண்டிகைகள், தார்மீக விதிகள் மற்றும் விரதங்கள்’

Leave a Comment