பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் பிறப்பு ஆடி மாதம், அஷ்டமியில் ரோஹிணி நக்ஷத்திரத்தில் நடு இரவில் சந்திர வ்ருஷப ராசியில் நடந்தது. அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருந்து இரவு பன்னிரண்டு மணிக்கு கிருஷ்ணனின் பிறப்பை கொண்டாடுவார்கள். அதன் பின்பு பிரசாதத்தை உட்கொண்டு விரதத்தை முடிப்பர் அல்லது மறுநாள் காலை தஹிகலா பிரசாதத்தை உண்டு விரதத்தை முடிப்பர்.
‘ஸ்ரீகிருஷ்ண ஜன்மாஷ்டமி பூஜைவிதி (அர்த்தத்துடன்)’ இந்த வலைதள முகவரியிலிருந்து பதிவிறக்க முடியும். www.sanatan.org/mr/a/987.html

உறியடி சமயத்தில் நடக்கும் தவறான காரியங்களை தடுத்து நிறுத்துங்கள் !
ஸ்ரீகிருஷ்ணனின் பெயர் மற்றும் படம் பதிக்கப்பட்ட ‘டி-ஷர்ட்டுகளை’ அணியாதீர்கள் !
கோபாலர்கள் மீது தண்ணீரை அடிக்காதீர்கள்; குலால் வீசாதீர்கள் !
கர்ணகடூரமான சங்கீதம், அசிங்க அசைவுகள் கொண்ட நடனம், மது பானம் ஆகியவற்றை எதிர்த்து போராடுங்கள் !
மிக உயரமான தயிர் பானை மற்றும் சாஸ்திரத்திற்கு விரோதமான பெண் கோபாலர்களின் உறியடி ஆகியவற்றை தவிர்த்து விடுங்கள் !
ஹிந்துக்களே, உற்சவங்களில் நடக்கும் தவறான வழக்கங்களை தடுத்து நிறுத்துவதும் தர்ம வழி நடப்பதாகும் !