உபவாசம், பூஜை மற்றும் கண்விழித்திருத்தல் ஆகியவை இவ்விரதத்தின் மூன்று அங்கங்களாகும்.
விரதத்தின் வழிமுறைகள்
மாசி கிருஷ்ண த்ரயோதசி அன்று ஒரு வேளை உணவு உட்கொள்ள வேண்டும். சதுர்த்தசி அன்று காலை விரத சங்கல்பம் எடுத்துக் கொள்ள வேண்டும். மாலை நதி அல்லது குளத்திற்கு சென்று சாச்திரபூர்வமான ஸ்நானம் செய்ய வேண்டும். விபூதி மற்றும் ருத்ராக்ஷத்தை அணிய வேண்டும். பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும். சிவனை தியானிக்க வேண்டும். பிறகு சோடசோபசார பூஜை செய்ய வேண்டும். மூதாதையரின் ஆத்மா சாந்தியடைய தர்ப்பணம் செய்ய வேண்டும். சிவனுக்கு 108 தாமரைகளை அல்லது வில்வ தளங்களை நாம உச்சாரணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். புஷ்பாஞ்சலி செய்து அர்க்கியம் விட வேண்டும். பூஜை முடிந்தபின் ஸ்தோத்திர பாராயணம், மூல மந்திர ஜபம் ஆகியவற்றை முடித்து பின் சிவனின் தலையில் உள்ள ஒரு புஷ்பத்தை எடுத்து நம் தலையில் வைத்துக் கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும்.
நந்தி கொம்புகளுக்கிடையே தரிசனம்
சிவலிங்கத்திடமிருந்து அதிக சக்தி வாய்ந்த அதிர்வலைகள் வெளிப்படுகின்றன. நந்தியின் கொம்புகளுக்கிடையே தரிசனம் செய்வதன் மூலம் இந்த அதிர்வலைகளை தாங்கிக் கொள்ள முடிகிறது.
தரிசன முறை
நந்தியின் வலதுபக்கம் நின்று இடது கையால் நந்தியின் விந்தகங்களை தொட்டு வலது கையின் கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல்களை நந்தியின் கொம்புகளில் வைத்து அந்த இடைவெளியில் சிவலிங்கத்தை தரிசிக்கவும்.
பிரதக்ஷிணம் செய்யும் வழிமுறை
சிவலிங்கத்தை பிரதக்ஷிணம் செய்யும்போது அபிஷேக நீர் விழும் இடம்வரை சென்று அதைத் தாண்டி செல்லாமல் மறுபடியும் வந்த வழியே திரும்பி பிரதக்ஷிணத்தை முடிக்க வேண்டும். லிங்கத்திலிருந்து நீர் விழும் இடத்தில், சக்தி ப்ரவாஹம் அதிகமாயுள்ளது. அதனால் சாதாரண பக்தனுக்கு கஷ்டம் ஏற்படுகிறது. இக்காரணத்தால் அர்த்த பிரதக்ஷிணம் அதாவது பாதி பிரதக்ஷிணம் செய்வது நல்லது.
சிவனின் நாமஜபம்
மகாசிவராத்திரியன்று சிவதத்துவம் ஆயிரம் மடங்கு அதிகமாக உள்ளதால் முழு பயனைப் பெற ‘ஓம் நம: சிவாய’ என்ற நாமஜபத்தை அதிகபட்ச அளவு செய்ய வேண்டும்.