மகர சங்கராந்தியின் மஹத்துவம்
இன்று சூர்யோதயத்திலிருந்து சூர்யாஸ்தமனம் வரை அதிக சைதன்யம் நிரம்பியுள்ளதால் இக்காலம் ஸாதனை செய்வதற்கு ஸாதகமாக உள்ளது. மகரசங்கராந்தியிலிருந்து ரதஸப்தமி வரை புண்ய காலமானதால் இக்காலத்தில் அளிக்கப்படும் தானம் அதிக பலனைத் தருகிறது. அதனால் இக்காலத்தில் தர்மப்ரசாரத்தில் ஈடுபடும் ஸன்ஸ்தாக்கள் மற்றும் மஹான்களுக்கு ஸத்பாத்ர தானம் அளிப்பது சிறந்தது.
சங்கராந்தியன்று என்ன பரிசு அளிப்பது? எவர்சில்வர் டப்பா, கிண்ணம் போன்ற மாயை சம்பந்தமான பொருட்களை பரிசளிப்பதற்கு பதில் தார்மீக நூல்கள், ஜபமாலை போன்ற உபாஸனைக்கு உகந்த பொருட்களை தானமளிக்கலாம்.
பொங்கல் நன்னாள்
உத்தராயண புண்ய காலத்தில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அறுவடைத் திருநாளான தை மாதம் முதல் நாள் புதுநெல்லால் பால்பொங்கல் செய்யப்பட்டு, சூரிய பகவானுக்குப் படைக்கப்படுகிறது. ஸாத்வீக அதிர்வலைகளை எள் அதிகமாக கிரஹிப்பதால் மகர சங்கராந்தியன்று, எள்ளுருண்டை வினியோகிப்பது, சிவன் கோவிலில் எள்ளெண்ணை தீபமேற்றுவது, பித்ரு ச்ரார்த்தம் செய்வது போன்றவை செய்யப்படுகின்றன. பொற்றாமரை குளத்தருகே ஹேம மகரிஷிக்கு பகவான் சாரங்கபாணியாக காட்சியளித்த தினம். சிவன் கல்யானைக்கு கரும்பு ஊட்டிய தினம். எழு காளைகளை அடக்கி நப்பின்னையை ஸ்ரீகிருஷ்ணன் கைத்தலம் பற்றிய தினம். இறைவனின் படைப்பிலுள்ள சூரியன், பசுக்கள், எருதுகள், பறவைகள் ஆகியவற்றை பூஜிக்கும் நன்னாள் இது. திருவள்ளுவர் தினத்தை காணும் பொங்கலாக கொண்டாடி அன்று நதிக்கரைகளில் கூட்டாஞ்சோறு உண்ணும் வழக்கம் உள்ளது. ‘புதியன புகுதலும் பழையன கழிதலும்’ பொங்கலின் சிறப்பம்சம்.