1. ஆத்மா மற்றும் அதன் ஸ்வரூபம்!
1 அ. ‘ஓம் நமோ ஜீ ஆத்யா | வேத ப்ரதிபாத்யா | ஜய ஜய ஸ்வஸம்வேத்யா | ஆத்மரூபா ||’ (தகவல் : பாவார்த்ததீபிகா/ஞானேஸ்வரி)
அர்த்தம் : நமக்குள் இருந்து கொண்டு ஆட்டிப் படைக்கும் சக்தி ரூபமாக காரியம் செய்யும் ஆதிசக்தியே நிரந்தரமானதுவும், சத்யமானதுவும், சைதன்யமும் ஆனந்தமும் நிறைந்ததுவும் ஆகும். அத்தகைய சக்தி ஒம்காரமேனும் ஸகுண (ஸத்வ, ரஜ, தம) ஸ்வரூபத்தில் வாணி மூலமாக (பரா, பச்யந்தி, மத்யமா மற்றும் வைகரி) காரியங்களை செய்கின்றது. ஓம்காரம் என்பது ‘அகார, உகார, மகார’ ஆகியவற்றின் மூலமாக ஸகுணத்திலும் அரை மாத்திரை மூலமாக வெளிப்படாத நிர்குணத்திலும் காரியங்களை நடத்துவிக்கிறது. இதை வேதமும் ஒப்புக் கொண்டுள்ளது. இப்பேற்பட்ட ஆதிசக்திக்கு நமஸ்காரங்கள்!
1 ஆ. ஆதிசக்தி ஸ்வயமாக செயல்பட வல்லது
என்பதால் கற்பனையாக மனதில் ஒரு எண்ணம்
எழுந்தவுடன் அதற்கு ஸ்வயமாக ஒரு கதி கிடைத்து
பின்பு இந்த்ரியங்கள் மூலமாக செயல்படுவதைக் காண முடிகிறது
இந்த ஆதிசக்தி எவ்வளவு சாதிக்க வல்லது என்றால் வெறும் கற்பனை மூலமாக மனதில் ஒரு காரியம் பற்றிய எண்ணம் எழுந்த பின் அதற்கு ஸ்வயமாக ஒரு கதி கிடைத்து பின்பு இந்த்ரியங்கள் மூலமாக நேரிடையாக காரியம் நடந்தேறுவதைப் பார்க்க முடிகிறது. இந்த ஆதிசக்தியே அண்ட சராசரங்களை வியாபித்துள்ளது. அதன் மூலமாகத்தான் இந்த படைப்புகள் அனைத்தும் ஏற்பட்டுள்ளன. அந்த ஆதிசக்தி மூலமாக வெளிப்பட்ட இந்த படைப்புகளின் காரியங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அதனால் இதற்கெல்லாம் மூல காரணமாக விளங்கும் அந்த சைதன்ய சக்தியை, அதாவது ஆதிசக்தியை புரிந்து கொள்வது மகத்துவம் நிறைந்ததாகும்.
1 இ. ஆத்மசக்தியே எல்லாக் காரியங்களையும் செய்தல்
‘இந்த ஆதிசக்தியே எங்கும் காரியங்களை செய்கிறது’ என்பதை மனதில் இருத்தி ஒவ்வொரு காரியத்தையும் செய்ய வேண்டும். கேட்கும்போது, பார்க்கும்போது, தொடும்போது, உணவு உண்ணும்போது, நடக்கும்போது, உறங்கும்போது, உள்மூச்சு வெளிமூச்சு வாங்கும்போது, இவை மட்டுமல்ல, கண்ணை சிமிட்டும்போது கூட காரியம் எவ்வாறு நடக்கிறது? அதை உன்னிப்பாக ஒருமைப்பாட்டுடன் கவனிக்கும்போது அதன் மகத்துவம், விலைமதிப்பற்ற தன்மை மற்றும் அருள் நமக்கு புரிய வரும். அதன் அருளைப் புரிந்து கொண்டால் அவற்றிடம் நமக்கு ஆத்மார்த்த உணர்வு ஏற்பட்டு ஆன்மீக உணர்வு விழிப்படைந்து ஆனந்தம் ஏற்படும் மற்றும் ஆத்மசக்தியின் தரிசனத்திற்காக மனம் தாபப்படும்.
1 ஈ. குருக்ருபாயோகப்படி சாதனை செய்வதன் மகத்துவம்
இந்நிலை குருக்ருபாயோகப்படி சாதனை செய்வதன் மூலம் கிடைக்கிறது. அதேபோல் இந்நிலையில் ஒவ்வொரு கர்மாவையும் எதிர்ப்பார்ப்பில்லாமல் செய்து ஸாதகர் அதன் பலனை பகவானிடம் அர்ப்பணிக்கின்றனர். அந்த ஸாதகர்கள் தாமரை இலை தண்ணீரைப் போன்று இருந்து கொண்டு பாவங்களிலிருந்து விடுபடுகின்றனர்; பிறப்பு-இறப்பு சக்கர சுழற்சியிலிருந்தும் விடுபடுகின்றனர். (ஸ்ரீமத்பகவத்கீதை அத்தியாயம் 5, ஸ்லோகம் 8, 9, 10)
1 உ. சுய ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட
ஆத்மசக்தியோடு ஒன்றிணைவது மிகவும் அவசியம்!
சுய ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட ஆத்மசக்தியோடு ஒன்றிணைவது அவசியமாகிறது. நமக்குள் இருக்கும் ஆளுமை குறைகளைக் களைந்து அஹம்பாவத்தைக் குறைக்கும்போதே இதுபோல் ஆத்மசக்தியுடன் ஒன்றிணைய முடியும். இது போன்று ஆத்மசக்தியானது நம்முடைய நண்பனாகி நமக்கு பேருதவியை செய்கிறது. இதிலிருந்து ‘சாதனை எவ்வளவு மகத்துவம் நிறைந்தது!’ என்பது தெரிகிறது. குருவருளால் மட்டுமே இது சாத்தியமாகிறது.
1 ஊ. மனிதன் தன்னுடைய நண்பனும் பகைவனும் ஆவான்!
உத்தரேதாத்மனாத்மானம் நாத்மானமவஸாதயேத் |
ஆத்மைவ ஹ்யாத்மனோ பந்துராத்மைவ ரிபுராத்மன: || – ஸ்ரீமத்பகவத்கீதை அத்தியாயம் 6, ஸ்லோகம் 5
அர்த்தம் : நம்மை நாமே இந்த சம்சார சாகரத்திலிருந்து உயர்த்த வேண்டும், மாறாக அதோகதிக்கு தாழ விடக்கூடாது; காரணம் மனிதன் தனக்கு தானே நண்பன் மற்றும் தனக்கு தானே பகைவனும் ஆகிறான்.
பந்துராத்மாத்மனஸ்தஸ்ய யேனாத்மைவாத்மனா ஜித: |
அனாத்மனஸ்து சத்ருத்வே வர்தேதாத்மைவ சத்ருவத் || – ஸ்ரீமத்பகவத்கீதை அத்தியாயம் 6, ஸ்லோகம் 6
அர்த்தம் : எந்த ஜீவாத்மா மனம் மற்றும் இந்த்ரியங்களுடன் கூடிய உடலை ஜெயித்தவனோ அந்த ஜீவாத்மா தனக்கு தானே நண்பனாகிறான். யார் மனம் மற்றும் இந்த்ரியங்களுடன் கூடிய உடலை ஜெயிக்கவில்லையோ அவன் தனக்குத் தானே பகைவனாகிறான்.
2. ஸ்வயம் சூசனா தருவது (சுய
ஆலோசனை வழங்குவது) என்றால் என்ன?
2 அ. அர்த்தம்
ஸ்வயம் + சூசனா என்பதில் ஸ்வயம் என்பது ஆத்மா. ஆத்மார்த்தமாக செய்யப்படும் உரையாடலால் நடக்கும் ஆத்மநிவேதனம் என்பது தான் ஸ்வயம் சூசனா ஆகும்.
2 ஆ. ஸ்வயம் சூசனா தருவதன் மகத்துவம்
ஸ்வபாவ தோஷம் மற்றும் அஹம்பாவத்தைக் களைய ஆத்மசக்தியை சரணாகத உணர்வுடன் பிரார்த்தனை செய்து மற்றும் அதேபோல் எப்பொழுதும் சுய ஆலோசனை வழங்கும்போதுதான், ஆத்மசக்தி நம்முடைய இந்த்ரியங்களின் தவறான வழக்கங்களைக் களைந்து நல்ல வழியில் செல்ல உதவும் நல்ல வழக்கங்களை ஏற்படுத்துகின்றது. அதன் மூலம் நம்மிடமுள்ள ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவம் குறைந்து அந்தக்கரண சுத்தி ஏற்படுகிறது. அத்தகைய சுத்தமான அந்தக்கரணத்தால் தான் ஆத்மசக்தி வெளிப்பட்டு அதன் மூலமாக காரியங்கள் நடக்கின்றன. இக்காரியத்தால், அதாவது ஸாதனையால் நாம் பிறப்பு-இறப்பு சக்கர சுழற்சியிலிருந்து விடுபட இயலும்.
2 இ. தெரிந்து கொள்வதும் திருந்துவதும் மகத்துவம் வாய்ந்தது
திருமூலர் கூறியுள்ளார், ‘கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்’.
விளக்கம் : ஆத்ம உத்தாரணத்திற்கு, மேம்பாட்டிற்கு அவசியமான சத்தியத்தை உணராமல், தெரிந்து கொள்ளாமல், ஆத்மாவிற்கு தேவையே இல்லாத, அனாவசியமான ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தை எவ்வாறு அதிகப்படுத்துவது என்பது மட்டும் நமக்கு நன்றாக தெரிகிறது. இவ்வாறான காரியங்களே நம் மூலமாக நடக்கின்றன. அதனால் இன்று ஆயிரம் பிறவிகள் எடுத்த பின்பும் மறுபடியும் பிறப்பு-இறப்பு சக்கர சுழற்சியிலேயே மாட்டிக் கொண்டிருக்கிறோம். இந்த்ரியங்களை நல்ல வழியில் கொண்டு செல்வதற்கு குருவின் அருள் இல்லாமல் வேறு வழியே இல்லை. குருவே நம்மை இதிலிருந்து விடுவிக்க வல்லவர். அதற்கு குருவை சரணடைந்து அவரின் ஆணைப்படி அவர் வழிகாட்டியுள்ள ஸாதனையை செய்வது எவ்வளவு அவசியமானது என்பது தெளிவாகிறது.
2 ஈ. இந்த்ரியங்கள் மூலமாக நடக்கும் ஆத்மசக்தியின் காரியங்கள்
ஆத்மசக்தி இந்த்ரியங்கள் மூலமாக எவ்வாறு காரியங்களை செய்கிறது என்பதை கீழ்க்கண்ட உதாரணத்தின் மூலம் தெரிந்து கொள்வோம். இந்த்ரியங்கள் மூலமாக வெறும் உள்ளுணர்வு எழும்போது இந்த சக்தி உடனடியாக காரியத்தில் இறங்குகிறது என்பதைப் பார்க்க முடிகிறது. உதாரணத்திற்கு ஒருவருக்கு ‘தாகம் எடுக்கிறது’ என்ற உணர்வு ஏற்பட்டவுடன் இந்த்ரியம் (கை) மூலமாக தண்ணீர் எடுத்துக் குடித்து தாகத்தைத் தீர்த்துக் கொள்கிறார். ஆனால் இதில் ஆத்மசக்தி எவ்வாறு காரியத்தை நடத்துவிக்கிறது என்பதை உணர்வதில்லை. அதனால் இதன் மகத்துவம், உன்னதம் மற்றும் அருள் பற்றி நம்முள் ஆன்மீக உணர்வு விழிப்படைவதில்லை. ஆன்மீக உணர்வு எழாததால் பகவானுடன் தொடர்பு ஏற்படுவதில்லை மற்றும் ஸாதனையும் நடப்பதில்லை.
2 உ. ஆத்மசக்தியின் மகத்துவம்
குருக்ருபையால் ஸாதனை மூலமாக மனதில்
ஆழப்பதிந்து ஆன்மீக உணர்வு விழிப்படைந்து ஆனந்தம் மேலிடுகிறது
இந்த சக்தியின் உன்னதம், மகத்துவம், அதன் மேல் மனதிலுள்ள ஆன்மீக உணர்வு, அதன் அருள் ஆகியவை எப்பொழுது குருவருளால் மனதில் ஆழப் பதிகின்றதோ அப்பொழுது அதன் மகத்துவம் உணரப்பட்டு, ஆன்மீக உணர்வு விழிப்படைந்து ஆனந்தம் மேலிடுகிறது.
இதிலிருந்து ஸ்வயம் சூசனா வழங்குவது, அதாவது மனதிற்கு சுய ஆலோசனை வழங்குவது (ஆத்மாவுடன் தொடர்பு கொண்டு செய்யப்படும் ஆத்ம நிவேதனம்) எவ்வளவு மகத்துவம் வாய்ந்தது என்பது தெரிகிறது.
3. பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் இயற்றியுள்ள
சக்தி துதியில் சைதன்ய சக்திக்கு வழங்கப்பட்டுள்ள மகத்துவம்!
பராத்பர குரு டாக்டர் ஆடவலே கூறுகிறார், “ஹே ஆதிசக்தி, நீயே இந்த படைப்பிற்கெல்லாம் ஆதிசக்தியாக விளங்குவதால் நீயே இந்த உலகின் தாயாக விளங்குகிறாய். நீயே உற்பத்தி, ஸ்திதி மற்றும் லயத்தின் அதிபதி. உன்னுடைய இருப்பு இவ்வுலகிலுள்ள அசையும் மற்றும் அசையாப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்துள்ளது. இந்த அண்ட சராசரங்களின் காரியங்கள் அனைத்தையும் செய்யும் சக்தி நீயே. உன்னை விட்டால் வேறு யார் உளர் தாயே? உனக்குள் இருந்து கொண்டு இந்த பஞ்சமஹா பூதங்களும் தங்களின் காரியங்களை செய்கின்றன. பல்வேறு ரூபங்களாக நீயே வெளிப்படுகிறாய். உன்னுடைய சைதன்ய சக்தியால் உலக விவகாரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் காரியங்களை நடத்துவிக்கும் சக்தியும் நீயே.”
விளக்கம் : ஹே ஆதிசக்தியே, நீயே படைப்பிலுள்ள ஸத்வ, ரஜ, தம காரியங்களின் காரணமாகி அவற்றை நடத்துவிக்கின்றாய். நீயே சிருஷ்டியின் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் காரியங்களுக்காக பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேசன் ஆகியோரின் உதவியுடன் மகாசரஸ்வதி, மகாலக்ஷ்மி மற்றும் மகாகாளியாக உருவெடுத்து காரியங்களை செய்விக்கின்றாய். நீ பல்வேறு நாமங்களுடன் காரியங்களை செய்வதுடன் கூட மனித உடலில் குண்டலினி சக்தியாக உருவெடுத்தும் காரியம் செய்கிறாய். இந்த குண்டலினி சக்தி ரிஷி முனிவர்களின் உதவியுடன் விழிப்படைந்து அவர்களுக்கு பல்வேறு வழிகளில் உபாயங்களை வழங்கி அதன் மகத்துவத்தை ஒவ்வொருவரும் உணரும்படி செய்துள்ளது. ஸந்த் மகான்களுக்கு உன்னுடைய ரூப தரிசனம் கிடைத்துள்ளது. அவர்கள் உன்னுடைய மகாசக்தியை அனுபவபூர்வமாக உணர்ந்து உன்னுடைய மகோன்னதத்தை உலகறிய வர்ணித்துள்ளனர். இது போன்று உன்னுடைய சிருஷ்டி லீலா விநோதமானது ஜீவன்களுக்கு ஆனந்தத்தை வழங்குவதற்காக நடந்து வருகிறது. ஸாதகர்களுக்கு உன்னுடைய சைதன்யத்தின் ஆனந்தமய அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நீயே குரு மூலமாக ஸாதகர்களிடமுள்ள ரஜ-தம ஆவரணத்தை பல்வேறு ஸாதனை வழிகள் மூலமாக தூர விலக்குகிறாய்.
இது போன்று ‘இந்த சக்தியே காரியமனைத்தையும் செய்கிறது. நான் செய்வது ஒன்றுமில்லை’, என்ற ச்ரத்தை மனதில் வேரூன்றிய பின் ஆத்மநிவேதனமாக அந்த சக்தியிடம் அனைத்தையும் அர்ப்பணிக்கும்போது உடனே அந்த ஆத்மசக்தியானவள் நம்முடைய அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுகிறாள் என்பது உறுதி.
4. நன்றி
நம்முடைய பெரும் பாக்கியத்தால் இன்று பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் சுய ஆலோசனை சாதனையின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. இதற்காக அவரின் சரணங்களில் கோடி கோடி நன்றி கலந்த நமஸ்காரங்களை அர்ப்பணிகின்றோம்.’
– (பராத்பர குரு) பரசுராம் பாண்டே மகாராஜ், ஸனாதன் ஆஸ்ரமம், தேவத், பன்வேல். (26.2.2018)