ஸ்தூலத்தைக் காட்டிலும் சூட்சுமம் சிறந்தது என்பதாலும் சூட்சுமத்தின் பலம் சைதன்ய நிலையில் அதாவது பகவானின் நிலையில் உள்ளது என்பதாலும் சூட்சுமத்தை அறிந்து நடந்து கொள்வதால் பகவானின் அருள் கிடைக்கிறது !
1. பகவான், மனிதனின் உலக மற்றும் ஆன்மீக
நலனுக்காக (இக, பர நலன்) அனைத்தையும் தந்துள்ளார்;
மனிதன் தன் புத்திக்கு தகுந்தபடி எதை தேர்ந்தெடுக்கிறானோ
அதற்கேற்றாற்போல் அவனுக்கு பலன் கிடைக்கிறது
‘டோக்லாமிலிருந்து பாரதம் தன் ராணுவத்தை திரும்பப் பெற்றுள்ளது; ஆனால் சீனா தன் ராணுவத்தை அங்கேயே நிறுத்தி வைத்துள்ளது’, என்ற குழப்பமான தகவலை பாரதம் மற்றும் சீனா ஆகிய இரு தேசங்களும் வெளியிடுகின்றன. எது உண்மை என்பது மக்களுக்கு தெரியவில்லை. உண்மையில் எல்லா நிகழ்வுகளும் பகவானாலேயே நடக்கின்றன. இரு தேசங்களையும் அவர் விழிப்படைய செய்துள்ளார். அகில உலகமும் அவருக்கு சொந்தமானதால் அவரே அனைத்தையும் நடத்துவிக்கிறார். அதனால் ஒவ்வொருவரும் ‘நாம் என்ன செய்ய வேண்டும்’ என்பதை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். பகவான், மனிதனுக்கு இகம், பரம் ஆகிய இரண்டிற்கும் நன்மை ஏற்பட எல்லாவற்றையும் வழங்கியுள்ளார்; ஆனால் மனிதன் தன் புத்தியின் நிலைக்கேற்ப எதைத் தேர்ந்தெடுக்கிறானோ அதற்கேற்றாற்போல் அவனுக்கு பலன் கிடைக்கிறது.
2. உலக விஷயங்களை உண்மை என நம்புவதால்
பகவானின் உதவி கிடைக்காமல் வஞ்சிக்கப் படுகிறோம்;
சூட்சுமத்தை அறிந்து நடந்து கொள்வதால் பகவானிடமிருந்து
அருளாகிய பலம் நமக்கு கிடைக்கிறது; காரணம் சூட்சும
பலம் என்பது பகவானிடமிருந்து கிடைக்கும் சைதன்யமாகும்
மனிதன் வெறும் உலக விஷயங்களையே சத்யம் என நம்புவதால் பகவானின் சைதன்யத்தின் (தெய்வீக சக்தி) உதவியை பெற தவறுகிறான்; அதனால் பலமற்றவனாக ஆகிறான். துரியோதனனிடத்தில் மிகப் பெரிய சேனையும் அதிபராக்கிரம சேனாதிபதி இருந்தும் கூட பகவானின் அருள் கிடைக்காததால் அவன் பலம் இழந்தான். மாறாக அர்ஜுனன் பகவானின் சேனையைக் காட்டிலும் பகவானையே தன் பக்கத்திற்கு தேர்ந்தெடுத்ததால் அவனின் திறன் அதிகரித்து அவனுக்கு வெற்றி கிடைத்தது. இருவரில் ஒருவர் ஸ்தூலத்தையும் மற்றொருவர் சூட்சுமத்தையும் தேர்ந்தெடுத்தனர். மனிதன் ஸ்தூலத்தையே உண்மை என நம்புகிறான்; ஆனால் யார் சூட்சும பாகத்தை அறிந்து அதன்படி நடக்கிறார்களோ அவர்களுக்கு வெற்றி கிடைக்கிறது. வெறும் ஸ்தூலத்திற்கு மகத்துவம் அளிப்பவருக்கு எதிரில் சேனையின் பலமே தெரிகிறது, ஆனால் சூட்சும பலம் சைதன்ய நிலையில் இயங்குவதால் அது கண்ணுக்குப் புலப்படுவதில்லை. அதனால் பார்க்க முடிவதில்லை; ஆனால் அதன் பரிணாமம் அமோகமானது. சாதாரணமாக அதைத் தோற்கடிக்க முயல்வது கடினமானதால் அதற்கு வெற்றி நிச்சயம்; இதையே பகவத் கீதையில்,
யத்ர யோகேச்வர: கிருஷ்ணோ யத்ர பார்த்தோ தனுர்தர: |
தத்ர ஸ்ரீர்விஜயோ பூதிர்த்ருவா நீதிர்மதிர்மம || 78 || – ஸ்ரீமத் பகவத்கீதை அத்யாயம் 18, ஸ்லோகம் 78
அர்த்தம் : எங்கு யோகேச்வரனான பகவான் ஸ்ரீகிருஷ்ணன் உள்ளானோ, எங்கு காண்டீபம் எனும் வில்லை ஏந்திய விஜயன் உள்ளானோ அங்கு ஸ்ரீ, விஜயம், விபூதி மற்றும் அசஞ்சல நீதி இருக்கும் என்பது என் கருத்தாகும்.
3. டோக்லாமில் தங்கி விட்ட சீனாவின் சேனையால்
ஆக்கிரமிப்பு நடக்கவில்லை, இதன் அர்த்தம் பாரதத்தின்
ஸந்த்-மகாத்மாக்களால் மற்றும் அவர்களின் அருளாசியால்
பகவானின் அருட்பார்வை பாரதீய சேனையிடம் இருப்பதால்
இப்பொழுது இந்த சங்கடம் தடுக்கப்பட்டுள்ளது.’
– பராத்பர குரு பரசுராம் பாண்டே, ஸநாதன் ஆஸ்ரமம், தேவத், பன்வேல். (10.10.2017)