நீங்கள் அனைவரும் ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபன கண்ணோட்டத்தில் ஸாதனையின் மகத்துவத்தை தெரிந்து கொண்டு, உங்களுடன் கூட ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபனத்திற்காக பாடுபடும் மற்றவர்களிடமும் இதைப்பற்றி கூற வேண்டும் என்பதற்காக இக்கட்டுரையில் ஸாதனை பற்றிய மகத்துவம் விளக்கப்பட உள்ளன.
எவ்வளவு மனிதர்கள் உள்ளனரோ அவ்வளவு இயல்புகள்,
எவ்வளவு இயல்புகள் உள்ளனவோ அவ்வளவு ஸாதனை வழிகள்!
இந்த ஆன்மீக சித்தாந்தப்படி உங்களில் சிலர் தனிப்பட்ட ஸாதனையாக பூஜை-அர்ச்சனை, நாம ஸ்மரணம், த்யான-தாரணம், யோகாசனம், யக்ஞம், தீர்த்த க்ஷேத்ரம் செல்லுதல் போன்றவற்றில் சிலவற்றை செய்யலாம். உங்களில் குருபிராப்தி அடைந்த சிலர் உங்களின் குருவின் வழிகாட்டுதலின்படி ஸமஷ்டி ஸாதனையாக ஸனாதன தர்ம பிரசாரம், சமூக சேவை, தேச விழிப்புணர்வு மற்றும் தர்ம பாதுகாப்பு ஆகிய காரியங்களை செய்து வரலாம். உங்களில் சிலர் ஸாதனை செய்யாமலும் இருக்கலாம் அல்லது பாரத மாதாவை தெய்வமாக மதித்து அந்த காரியத்தில் ஸமர்ப்பண பாவத்தோடு ஈடுபடும் கர்மயோகிகளாகவும் இருக்கலாம்.
வாழ்க்கையில் ஸாதனையின் மகத்துவம்
1.பிறப்பு-இறப்பு சக்கர சுழற்சியிலிருந்து விடுபட ஸாதனை அவசியம்!
ஹிந்து தர்மத்தில் கர்மபல சித்தாந்தம் மற்றும் மறுபிறவி சித்தாந்தம் ஆகிய இரு சித்தாந்தங்கள் சொல்லப்பட்டுள்ளன.
கர்மபல சித்தாந்தம்
கர்மபல சித்தாந்தப்படி நாம் பண்ணிய கர்மாக்களின் பலனை நாம் அனுபவித்தே ஆக வேண்டும். நல்ல கர்மாக்களை செய்தால் புண்ணிய பலன் கிடைக்கிறது, தீய கர்மாக்களை செய்தால் பாவ பலன் கிடைக்கிறது. புண்ணிய மற்றும் பாவ கர்மாக்களின் பலன்களை இந்த பிறவியிலேயே அனுபவிக்க வேண்டும் என்பது அல்ல, அவற்றை வரக்கூடிய பிறவிகளிலும் அனுபவிக்க வேண்டி உள்ளது. சாதாரணமாக போன பிறவியில் நாம் என்ன கர்மாக்களை செய்தோமோ அவற்றின் பலன்களை இப்பிறவியில் அனுபவிக்கின்றோம். இவ்வாறு அனுபவிப்பதையே நாம் பிராரப்த கர்மா என்கிறோம். இதை உலக வழக்கில் ‘விதி’ என்கிறோம்.
ஸாதனை செய்யும் மனிதருக்கு இறப்பிற்கு பின்னர் நல்ல கதி கிடைக்கிறது. நல்ல ஸாதனை செய்திருந்தால், பிராரப்த கர்மா நஷ்டமடைந்து பிறப்பு-இறப்பு சக்கர சுழற்சியிலிருந்து விடுதலை கிடைக்கிறது. அதாவது இறப்பிற்கு பின் மறுபடியும் பூமியில் பிறக்க வேண்டியதில்லை. அதாவது ஸ்வர்க்க லோகத்திற்கு அப்பாற்பட்டுள்ள மஹர், ஜன, தபஸ் மற்றும் ஸத்ய லோகங்களில் இருந்து கொண்டே ஸாதனை செய்து இறைவனை அடைய முடியும்.
மறுபிறவி சித்தாந்தம்
இதன்படி ஆன்மீக முன்னேற்றம் அடையும்வரை இந்த ஆத்மா பல்வேறு வித விதமான உடல்களை எடுத்துக் கொண்டு பிறப்பு எடுக்க வேண்டி உள்ளது. ஸாதனை செய்யாமல் வெறும் நல்ல காரியங்களை செய்பவருக்கு புண்ணிய கர்மா கிடைக்கிறது. அப்படிப்பட்டவருக்கு இறப்பிற்கு பின்னர் ஸ்வர்க்கத்தில் இடம் கிடைக்கிறது. புண்ணிய பலன் தீரும் வரை அங்கே இருக்க முடிகிறது; பிறகு முற்பிறவியின் பிராரப்த கர்மாவை அனுபவிப்பதற்கு பூமியில் பிறக்க வேண்டி உள்ளது. பாவ கர்மா அதிகமாக செய்துள்ள ஒருவருக்கு ஆன்மீக வீழ்ச்சி ஏற்பட்டு இறப்பிற்கு பின்னர் சிறிது காலம் மனிதப் பிறவி கிடைப்பதில்லை, மாறாக பூச்சி, எறும்பு, நாய், மரம் போன்ற 84 லக்ஷம் கீழ் நிலை பிறவிகளில் பிறப்பு எடுக்க வேண்டி உள்ளது.
2.மனிதன் மறுபடியும் மறுபடியும் பிறவி எடுப்பதன் காரணம்!
மனிதன் இரு காரணங்களால் திரும்பத் திரும்ப பிறவி எடுக்கிறான். முதல் காரணம் பிராரப்த கர்மாவை முடிப்பதற்காக மற்றும் இரண்டாவது காரணம் மோக்ஷம் அடைவதற்காக ஸாதனை செய்து பிறப்பு-இறப்பு சக்கர சுழற்சியிலிருந்து விடுபடுவது ஆகும். கலியுகத்தில் பிராரப்த கர்மாவின் (விதிக்கப்பட்ட) விகிதாசாரம் 65 சதவிகிதம் ஆகும். மற்றும் க்ரியமாண் கர்மாவின் (நம்முடைய கட்டுப்பாட்டில் உள்ள) விகிதாசாரம் 35 சதவிகிதம் ஆகும். நீங்கள் எந்த ஆனந்த ஸ்வரூபமான பரபிரம்மத்திலிருந்து உருவானீர்களோ அதனிடம் திரும்ப செல்லும் ஆசை ஒவ்வொருவரிடமும் சிறிதளவோ அல்லது பெரிதளவோ உள்ளது. ‘இதற்கு என்ன செய்ய வேண்டும்?’ என்பதை தெரிந்து கொள்வோம்.
சுக-துக்கத்தின் காரணம் மற்றும்
துக்க நிவாரணத்தின் உண்மையான வழி
சுக-துக்கம் உடலால், மனதால், ஆன்மீக காரணங்களால் ஏற்படுகின்றன. அவற்றின் சில உதாரணங்களை இங்கு பார்க்கலாம்.
1.உடல் : நோய்வாய்ப்படும்போது உடலுக்கு துக்கம் உண்டாகிறது
2.மனம் : யாராவது நம்மை ஏமாற்றி விட்டால் மனதிற்கு துக்கம் ஏற்படுகிறது.
3. ஆன்மிகம் : பலவித முயற்சிகள் எடுத்தும் பரீட்சையில் தேறாதது, கல்யாணம் ஆகாமல் இருப்பது போன்றவற்றால் துக்கம் ஏற்படுகின்றது.
சுகமும் உடலால், மனத்தால் மற்றும் ஆன்மீக காரணங்களால் ஏற்படுகின்றன; ஆனால் அவற்றை பற்றி நாம் யாரும் சிந்திப்பதில்லை. காரணம் அவற்றை பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. அதனால் நீங்கள் துக்கத்தின் காரணங்களைப் பற்றி சிந்தனை செய்து பாருங்கள்.
1. ‘துக்கத்திற்கான காரணம் புத்திக்கு அப்பாற்பட்டது அதாவது ஆன்மீக பரிமாணம் உடையது’ என்பதை புத்தி மூலமாக எவ்வாறு தெரிந்து கொள்வது?
கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு குறிப்புகளில் ஏதாவது ஒன்று பொருந்தியிருந்தால் பெரும்பாலும் துக்கம் ஆன்மீக காரணங்கள் மூலமாக ஏற்படுவதாக இருக்கும்.
அ. வெகுவாக முயற்சித்தும் எதிர்பார்த்த அளவு வெற்றி அடையாமல் இருப்பது
ஆ. ஒரே குடும்பத்தில் பலருக்கு கஷ்டங்கள் ஏற்படுதல், உதாரணத்திற்கு குடும்பத்திலுள்ள ஒரு குழந்தை மனநிலை சரியில்லாமல் இருத்தல், கல்யாணம் ஆன உடனேயே கணவன்-மனைவி பிரிந்து போதல், படிப்பு பாதியில் நின்று போதல், அழகான, நன்கு படித்து பதவியில் இருக்கும் பெண்ணிற்கு திருமணம் நடக்காமல் இருத்தல் போன்றவை. இவை பற்றிய கவலைகள் அந்த தாய்தந்தையரின் மனதில் தோன்றும். சுருக்கமாக, குடும்பத்திலுள்ள அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் துக்கத்தை அனுபவித்தல். இது போன்ற வேளைகளில் பெரும்பாலும் அதிருப்தி அடைந்த மூதாதையரின் சூட்சும தேஹங்களால் இது போன்ற கஷ்டங்கள் ஏற்படுகின்றன.
இவ்விஷயங்களின் மூலம் ஆன்மீக காரணங்களால் ஏற்படும் துக்கத்தை நிவர்த்தி செய்ய சரியான உபாயம் ஆன்மீக பயிற்சி செய்வது என்பது தெளிவாகிறது. ஸாதனையால் பிராரப்தம் நஷ்டமடைந்து, தீய சக்திகளால் ஏற்படும் கஷ்டங்கள் குறைந்து ஆன்மீக கஷ்டங்களிலிருந்து விடுபட முடிகிறது.
ஸாதனை
தர்மம் இவ்வாறு கூறுகிறது, மோக்ஷத்தை அடைவதன் மூலமே நாம் எடுத்த மனித பிறவி அர்த்தமுள்ளதாகிறது. மோக்ஷத்தை அடைவதற்கு தினமும் குறைந்த பட்சம் 2-3 மணி நேரம் மனத்தால் புத்தியால் என்ன முயற்சி எடுக்கப்படுகிறதோ அதுவே ‘ஸாதனை’ எனப்படும்.
1. ஸகாம (எதிர்பார்ப்புடன் செய்யப்படும்) ஸாதனை
மற்றும் நிஷ்காம (எதிர்பார்ப்பில்லாமல் செய்யப்படும்) ஸாதனை
ஸகாம ஸாதனை செய்வதால் நம் இச்சைகள் பூர்த்தியாகின்றன மற்றும் நிஷ்காம ஸாதனை செய்தால் ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட்டு இச்சைகளும் நிறைவேறும் வாய்ப்பு ஏற்படுகிறது. காரணம் ‘என்னுடைய நிஷ்காம பக்தனுடைய இச்சைகள் அனைத்தையும் நான் பூர்த்தி செய்கிறேன்’ என்பது பகவானின் வாக்கு. ஸகாம ஸாதனை செய்வதால் நாம் விரும்பியது கிடைக்கிறது; ஆனால் இறைவனை அடைய முடிவதில்லை. மனிதப் பிறவியின் நோக்கம் மோக்ஷத்தை அடைவது ஆகும். நிஷ்காம ஸாதனை செய்யும்போது மோக்ஷத்தை அடைவது சாத்தியமாகிறது.
2. ‘எவ்வளவு மனிதர்கள் உள்ளனரோ அவ்வளவு இயல்புகள், எவ்வளவு இயல்புகள் உள்ளனவோ அவ்வளவு ஸாதனை வழிகள்’ என்பது ஸாதனையின் சித்தாந்தமாகும் !
எந்த இரு மனிதர்களும் ஒன்று போல் இருப்பதில்லை. ஒவ்வொருவரின் உடல், மனம், விருப்பு-வெறுப்பு, குண-குறைகள், நம்பிக்கை-எதிர்பார்ப்புகள், ஆசைகள் ஆகிய எல்லாம் வெவ்வேறு ஆகும். ஒவ்வொருவரின் புத்தியும் வேறு. சஞ்சித, பிராரப்தம் வெவ்வேறு; ஒவ்வொருவரின் பூமி, நீர், நெருப்பு, வாயு மற்றும் ஆகாய தத்துவங்கள் (மனிதர்கள் பஞ்சபூதங்களால் ஆனவர்கள்) மற்றும் ஸத்வ, ரஜ, தம ஆகிய முக்குணங்களின் விகிதாசாரம் வெவ்வேறானவை. சுருக்கமாக ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு இயல்பு மற்றும் திறன் உடையவர்களாய் இருப்பதால் மோக்ஷத்திற்கு செல்லும் ஸாதனை வழிகளும் வெவ்வேறாக உள்ளன. உங்களின் இயல்பு மற்றும் திறனுக்கு ஏற்றவாறு ஸாதனை செய்வதால் விரைவில் மோக்ஷத்தை அடைய இயலும். அதனால் உங்களில் சிலர் கர்மயோகியாகவும், ஞானயோகியாகவும் அல்லது பக்தியோகியாகவும் இருக்கக் கூடும். அனைவரும் ஒரே ஸாதனை வழியை பின்பற்ற வேண்டும் என்பது இல்லை.
3. காலத்திற்கேற்ற ஸாதனை
காலத்திற்கேற்ற ஸாதனை செய்வதால் விரைவில் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுகிறது. ஸத்ய யுகத்தில் ஞானயோகப்படியான ஸாதனை சுலபமாக இருந்தது. எல்லோருக்கும் வேத-உபநிஷதங்களின் அர்த்தம் புரிந்திருந்தது. இன்று ஞானயோக ஸாதனை செய்வது மிகக் கடினம். காரணம் வேத-உபநிஷத–கீதை ஆகியவற்றின் அர்த்தங்களை புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் மனிதரிடையே இல்லை. த்ரேதா யுகத்தில் தவம் அதாவது தியான யோகம் ஸாதனை வழியாக இருந்தது. ரிஷிகள், முனிவர்கள் ஆயிரக்கணக்கான வருடங்கள் தவம் இயற்றினார். பகீரதன் கங்கையை பூமிக்கு கொண்டு வருவதற்காக 85 ஆயிரம் வருடங்கள் தவம் இயற்றினார். இன்று நமக்கு 1-2 நிமிடங்களுக்கு மனம் தியானத்தில் லயிக்கிறதா? இல்லைதானே! காரணம் கலியுகத்தில் ரஜ-தம தன்மையுடைய சிந்தனைகள் மிக அதிக அளவு உள்ளன. த்வாபர யுகத்தில் யக்ஞகர்மா, மூர்த்திபூஜை போன்ற கர்மகாண்டம் ஸாதனையாக இருந்தது. யக்னங்கள் மூலமாக தேவதைகளை திருப்திப்படுத்தி வேண்டியன கேட்டுப் பெறுவதற்குரிய காலமாக இருந்தது. இன்று யாகத்தில் ஸங்கல்பம் இல்லை; காரணம் ரிஷி, முனிவர்களைப் போன்ற யாகங்களை செய்யக்கூடிய ஸாத்வீக புரோஹிதர்கள் இன்று கிடைப்பதில்லை. இன்று உலக அமைதிக்காக பல யாகங்கள் நடக்கின்றன. ஆனால் உண்மையில் உலகில் அமைதி நிலவுகிறதா என்ன? இன்றைய கலியுகத்தின் ஸாதனை பக்தியோகமாகும். ‘கலியுகத்தில் பக்தி யோகமே சிறந்த சுலபமான வழியாகும்; என்று உலகுக்கு உணர்த்தவே வியாச பகவான் பாகவதத்தை இயற்றினார். கலியுகத்தில் பெரும்பான்மையான மகான்கள் பக்தியோகத்தை பின்பற்றியவர்களே. பக்தியோக ஸாதனையில் சாதாரண இயல்பான முயற்சியே நாம ஸ்மரணமாகும். ஸ்மரணம் என்பது நவவித பக்திகளில் ஒன்று. கலியுகத்திற்காக ‘யக்ஞானாம் ஜபயக்னோஸ்மி’, அதாவது ‘எல்லாவித யாகங்களில் நாமஜப யாகம் மிகச் சிறந்தது’ என்று ஸ்ரீகிருஷ்ணன் கீதையில் (அத்தியாயம் 1௦, ஸ்லோகம் 25) கூறியுள்ளான்.
நாமஜபம்
‘எந்த நாமஜபத்தை செய்வது?’ என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
1.இஷ்ட தெய்வத்தின் நாமஜபம்
பலர் தங்களுக்கு பிடித்தமான தெய்வத்தை இஷ்ட தெய்வம் என கருதுகின்றனர். அப்படி ஒருவருக்கு தன்னுடைய இஷ்ட தெய்வத்தின் நாமஜபத்தை செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் அவர் அதையே செய்யலாம். இன்னும் ஒருவர் முன்பே ஒரு நாமஜபத்தை செய்து வந்திருந்தால் மற்றும் அதன் மூலம் ஏதாவது அநுபூதி கிடைத்திருந்தால் அவர் அந்த நாமஜபத்தையே தொடர்ந்து செய்யலாம்.
2.குலதெய்வத்தின் நாமஜபம்
குலதெய்வம் என்பது குலதேவி அல்லது குலதேவனைக் குறிக்கும். ஒருவருக்கு எந்த குலதெய்வத்தின் உபாசனை தேவையாக உள்ளதோ அந்த குலத்திலேயே அவர் பிறப்பார். இறுதி மூச்சு உள்ளவரை ஒருவருடன் கூடவே வரும் பிராரப்த கர்மாவின் தீவிரம் குலதெய்வ நாமஜபத்தால் குறைகிறது. குலதெய்வ உபாசனையால் ஒருவரின் வாழ்க்கையில் குரு வருகிறார் மற்றும் அவரின் வழிகாட்டுதலின்படி உண்மையான அர்த்தத்தில் மனிதனுக்கு இறைவனை நோக்கிய பயணம் ஆரம்பமாகிறது. சத்ரபதி சிவாஜி மகாராஜ், தன்னுடைய குலதேவியான ஸ்ரீ பவானி தேவியின் உபாசனையை செய்து வந்தார். அதன் மூலம் அவருக்கு ஸமர்த்த ராமதாஸ் ஸ்வாமி குருவாக கிடைத்தார்.
குலதெய்வ நாமஜபத்தை செய்யும் வழி
நீங்கள் ஒருவரை பற்றி குறிப்பிடும்போது அவரின் பெயரை மட்டும் கூறாமல் அதற்கு முன்னால் ஸ்ரீ, திருமதி, மாமா போன்றவற்றை சேர்த்து உங்களின் மரியாதையை தெரிவித்து கொள்கிறீர்கள். அதுபோல நீங்கள் குலதெய்வத்தின் நாமஜபத்தை மரியாதையுடன் செய்ய வேண்டும். குலதெய்வத்தின் பெயருக்கு முன்னாள் ‘ஸ்ரீ’ சேர்த்து, பெயருக்கு பின்னால் விகுதி சேர்த்து பின்பு ‘நம:’ சேர்த்து கூற வேண்டும். உதா. குலதெய்வம் கணபதியாக இருந்தால் ‘ஸ்ரீ கணேசாய நம:’ , குலதெய்வம் பவானியாக இருந்தால், ‘ஸ்ரீ பவானி தேவ்யை நம:’ எனவும் கூற வேண்டும்.
3.குலதெய்வம் தெரியாவிட்டால் எந்த நாமஜபத்தை செய்ய வேண்டும்?
குலதெய்வம் யாரென்று தெரியாவிட்டால், குடும்பத்திலுள்ள வயதானவர்கள், தூரத்து சொந்தங்கள், அதே ஜாதிக்காரர்கள், கிராமத்தில் உள்ளவர்கள், புரோஹிதர்கள் ஆகியோர் மூலமாக குலதெய்வத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். குலதெய்வத்தின் பெயர் தெரியாவிட்டால், இஷ்டதெய்வத்தின் பெயர் அல்லது ‘ஸ்ரீ குலதேவதாயை நம:’ என்று நாமஜபம் செய்யவும். அது பூரணமான பின்பு குலதெய்வத்தின் பெயர் தெரிந்தவர் நம்மை சந்திப்பார். குலதெய்வ நாமஜபம் பூரணம் அடைந்த பிறகு குரு தானாகவே நம் வாழ்வில் வந்து குருமந்திரத்தை தந்தருளுவார். உங்களுக்கு சத்ரபதி சிவாஜி மகாராஜின் உதாரணம் தெரிந்திருக்கும். அவர் குலதெய்வத்தின் பக்தராக இருந்தார். எப்பொழுதும் ‘ஜகதம்ப, ஜகதம்ப’ என்ற நாமஜபத்தை செய்தார். பிறகு அவரின் வாழ்வில் ஸமர்த்த ராமதாஸ் ஸ்வாமி குரு ரூபத்தில் வந்தார்.
4.குரு அளித்துள்ள நாமத்தின் ஜபம்
யாருக்கு குரு மந்திரம் கிடைத்துள்ளதோ அவர்கள் அந்த குரு மந்திரத்தை ஜபிக்க வேண்டும். நம் ஆன்மீக முன்னேற்றத்திற்கு எந்த நாமஜபத்தை செய்ய வேண்டும் என்பது நமக்குத் தெரியாது. அதை குருவே நமக்கு கூற முடியும். குரு மந்திரத்தில் வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல, அதிலுள்ள ஞானம், சைதன்யம் மற்றும் ஆசீர்வாதத்தால் விரைவில் முன்னேற்றம் ஏற்படுகிறது.
5.மூதாதையர் தரும் கஷ்டங்களிலிருந்து நிவாரணம் பெற தத்த நாமஜபம்
குலதெய்வ உபாசனை செய்வதோடு கூட ஒவ்வொருவரும் ‘அதிருப்தி அடைந்த மூதாதையரால் நமக்கு கஷ்டம் வரக் கூடாது’ என்பதற்காக ‘ஸ்ரீ குருதேவ தத்த’ என்ற நாமஜபத்தை தினமும் குறைந்தபட்சம் 1-2 மணி நேரமும் தீவிர கஷ்டம் இருந்தால் 4-6 மணி நேரமும் செய்ய வேண்டும்.
நாமஸாதனையாக ஒவ்வொரு ஹிந்துத்வவாதியும் ஒவ்வொரு நாளும் 3 மாலைகள் (ஒரு மாலை என்பது 108 முறை) இஷ்ட தெய்வம் அல்லது குலதெய்வத்தின் நாமஜபத்தையும் மற்றும் 3 மாலை ‘ஸ்ரீ குருதேவதத்த’ நாமஜபத்தையும் செய்ய வேண்டும். மீதியுள்ள நேரங்களில் காலத்திற்கேற்ற சாதனையாக ‘ஓம் ஓம் நமோ பகவதே வாஸுதேவாய ஓம் ஓம்’ என்ற நாமஜபத்தை செய்ய வேண்டும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணனே தர்மஸன்ஸ்தாபனத்தின் தெய்வம், ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபனம் என்பது தர்மஸன்ஸ்தாபன காரியமே. அதனால் இந்த காரியத்திற்கு தேவையான ஆன்மீக பலம் பெறுவதற்கு ஸ்ரீகிருஷ்ணனின் நாமஜபத்தை செய்வது மிகவும் அவசியமாகிறது.
இன்றைய ஹிந்துத்வவாதிகளின்
நிலை மற்றும் அதற்கான உபாயம்
1. தர்ம பயிற்சி இல்லாதது
பலர் ஹிந்து தர்மம் மற்றும் ஹிந்து ராஷ்ட்ர காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள், இருந்தாலும் ஸனாதன தர்மத்தைப் பற்றிய பயிற்சி இல்லாததால் ‘ஹிந்து தர்ம ஞானம் எத்தகைய பிரம்மாண்ட பொக்கிஷம் என்பதும் மற்ற மதங்கள் இதில் லக்ஷத்தில் ஒரு பங்கு அளவு ஞானம் கூட இல்லை’ என்பதும் அவர்களுக்குத் தெரிவதில்லை.
2. ஸாதனை செய்யாமல் இருப்பது
பலர் ஆன்மீக ஸாதனை செய்யாதிருப்பதால் ‘ஹிந்து தர்மம் எந்த அளவு உன்னத அனுபூதிகளை வழங்குகிறது மற்றும் இறுதியில் அத்வைத நிலைக்கே கொண்டு செல்கிறது’ என்பதும் அவர்களுக்கு தெரிவதில்லை.
3. ஹிந்து தர்மத்தின் மீது நன்றியுணர்வு இல்லாதது
உலக விஷயங்களில் யாராவது நமக்கு உதவி செய்தால் அவர் மீது நன்றியுணர்வு பாராட்டுகிறோம். ஹிந்து தர்மம் என்பது பிறப்பு-இறப்பு என்ற சக்கர சுழற்சியிலிருந்து விடுவிக்கிறது என்ற ஞானம் இல்லாதிருப்பதால் பலருக்கு ஹிந்து தர்மத்தில் பிறவி கிடைத்ததற்காக நன்றியுணர்வு ஏற்படாமல் உள்ளது.
4. ‘தான் பெரியவன்’ என்று உணர்வதற்காக
தர்ம ரக்ஷண காரியங்களில் ஈடுபடுதல்
சிலர் தங்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும், தேச அளவில் அரசியல் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தர்ம ரக்ஷண காரியங்களில் ஈடுபடுகின்றனர். உண்மையை சொல்லப் போனால், தர்மத்தை அதாவது ஈச்வரனை காப்பாற்றுவதற்கு யாரும் அவசியம் இல்லை. தர்மத்திற்கு தீங்கு விளைந்த பின்னர் பகவான், தானே அவதாரம் எடுத்து யாரையாவது கருவியாகக் கொண்டு காரியத்தை நடத்துவான். அதனால் நாம் இந்த காரியத்தில் ‘இது என் ஸாதனை’ என்ற உணர்வோடு பங்கெடுப்பது மிக அவசியம்.
ஆன்மீக நிலையில் ஹிந்துத்வவாதியாக மாறுங்கள்
ஹிந்துத்வவாதிகளின் இன்றைய நிலையை குறிப்பிடுவதன் காரணம், மானசீக நிலையில் தர்மாபிமானத்தை வளர்த்துக் கொள்வதால் மானசீக நிலையிலேயே ஹிந்துத்வ பற்றுதல் தங்கி விடுகிறது. அதனால் தேசம் மற்றும் தர்மம் சம்பந்தமான காரியங்களில் தொடர்ந்து ஈடுபட முடிவதில்லை. உண்மையான ஹிந்துத்வவாதிகள் ஆன்மீக நிலையில் இயங்குவர். மானசீக நிலையில் உள்ள பெரிய ஹிந்துத்வவாதி ஸ்தாபனங்களால் ஹிந்துத்வத்திற்காக விசேஷமாக எதுவும் சாதிக்க முடியவில்லை என்பது கடந்த 90 வருடங்களில் தெளிவாக தெரிகிறது.
1. ஸாதனை செய்து உண்மையான தர்மாபிமானி ஆகுங்கள்!
ஸாதனை செய்வதால் ஹிந்து தர்மத்தினுடைய மிக சிறப்பான அனுபூதிகள் கிடைக்கின்றன; அப்பொழுதே உண்மையான தர்மாபிமானம் நிர்மாணமாகி சமூகம், தேசம் மற்றும் தர்மம் ஆகியவற்றின் நலனுக்காக முயற்சி செய்ய முடியும். ஸாதனையால் ஒருவர் தர்மப்பற்று உடையவராகிறார். தர்மப்பற்றுடைய ஒருவர் தானும் ஹிந்து தர்மத்திற்கு தீங்கு இழைக்க மாட்டார், மற்றவர் செய்யும் தீங்கைக் கண்டு பொறுத்துப் போகவும் மாட்டார். அதனால் தர்மரக்ஷணம் என்கிற காரியத்தை ஸாதனை செய்பவரே செய்ய முடியும்.
2. ஸாதனை செய்வதால் பாதகமான
சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க முடிகிறது!
ஸாதனை செய்து ஆத்மபலம் விழிப்படைவதால் ஒருவர், அழுத்தமற்ற ஆனந்தமான வாழ்க்கையை வாழ முடிகிறது. ஸாதனையால் இறைவனின் உதவி கிடைப்பதால் பாதகமான காலத்திலும் நம்பிக்கையின்மை ஏற்படுவதில்லை.
ஸாதனையால் கர்மபலன் மீது எதிர்பார்ப்பு இல்லாமல் காரியங்களை செய்ய முடிகிறது மற்றும் துக்கம் ஏற்படாது கர்மங்களிலிருந்து ஆனந்தமே கிடைக்கிறது. பலனை எதிர்பார்க்காமல் தர்மகாரியங்களை செய்வதால் அவை நிஷ்காம கர்மயோகம் ஆகின்றது. அதனால் ஆன்மீக முன்னேற்றமும் ஏற்படுகிறது.
3. சிறையில் தண்டனை
அனுபவித்த ஸனாதனின் ஸாதகர்களின் உதாரணம் !
மட்காவ் குண்டு வெடிப்பில் ஸனாதனின் சில ஸாதகர்களை காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்த நான்கு வருடங்களும் ஸனாதனின் ஸாதகர்கள், ஸ்திரமாக ஆனந்தமாக இருந்தனர். அவர்கள் துக்கத்தையோ மனச்சோர்வையோ அனுபவிக்கவில்லை. மாறாக சிறையிலும் அவர்கள் பண்டிகைகள்-உற்சவங்கள் ஆகியவற்றை கொண்டாடி ஹிந்து தர்மபிரசாரத்தை செய்தனர், அதேபோல் மதமாற்றத்தை தடுக்கும் காரியங்களையும் உற்சாகமாக செய்தனர்.
4. காவல்துறையினரின் மிரட்டலையும் அழுத்தத்தையும் பார்த்து எவ்வித பயமுமில்லாமல் ஸனாதனின் ஸாதகர்கள் பதிலளித்து வந்துள்ளனர்!
கடந்த 10 வருடங்களாக ஸனாதனின் பல ஸாதகர்களை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். பல இடங்களில் காவல்துறையினர் பல விதங்களில் ஸாதகர்களை துன்புறுத்தியுள்ளனர். காவல்நிலையத்தில் மணிக்கணக்காக உட்கார வைத்து அவர்களின் மீது மானசீக அழுத்தத்தை கொண்டு வர முயற்சித்துள்ளனர். சில இடங்களில் ஓரிரு ஸாதகர்களே உள்ளனர். அவர்களுக்கு ஆதரவு தருவதற்கு வேறு யாரும் அங்கு இல்லை. இவ்வளவு பாதகமான சூழ்நிலையிலும் ஸனாதனின் ஸாதகர்கள் மன உறுதி இழக்கவில்லை, காவல்துறையினரின் மிரட்டலைக் கண்டு பயந்து தர்ம பிரசார காரியத்தை விடவும் இல்லை. தொடர்ந்து ஸாதனை செய்வதால் கிடைக்கும் ஆத்மபலம், நாமஜபம் மற்றும் பிரார்த்தனை ஆகியவற்றின் ஆதாரத்தால் இவ்வளவு கடினமான சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக அவர்களால் வெளியே வர முடிகிறது.
ஸாதனை செய்வதால்
கிடைக்கும் சைதன்யத்தின் மகத்துவம்
அ. வாக்கில் சைதன்யம் இருந்தால் பேச்சின் மூலமாக நல்ல பரிணாமம் ஏற்படுகிறது.
ஆ. சைதன்யத்தால் உடலின் செயல்திறனும் அதிகரிக்கிறது.
ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபன
கண்ணோட்டத்தில் ஸாதனையின் அவசியம்
1. தர்மஸன்ஸ்தாபன காரியம் வெற்றிகரமாக நடப்பதற்கு உடல்
மற்றும் மனோபலத்துடன் கூட ஸாதனை பலமும் இருப்பது அவசியம்!
‘ஸாதனையின் பலன் மற்றும் ஸமர்த்த ராமதாச ஸ்வாமிகளின் வழிகாட்டுதலும் இருந்ததால் சத்ரபதி சிவாஜி மகாராஜ் அவர்களால் ஹிந்தவி ஸ்வராஜ்யத்தை வெற்றிகரமாக ஸ்தாபனம் செய்ய முடிந்தது. சுதந்திரத்திற்கு முன்னர் பல போராட்ட வீரர்களிடம் தீவிர தேசபக்தி இருந்தாலும் ஸாதனையின் பலம் இல்லாததால் அவர்களின் போராட்டம் வெற்றியடையவில்லை, அதோடு வீணாக அவர்களின் உயிர்கள் பலியானது.
ராஷ்ட்ரகுரு ஸமர்த்த ராமதாஸ் ஸ்வாமி தாஸபோதம் என்ற நூலில் இவ்வாறு எழுதியுள்ளார்,
ஸாமர்த்திய ஆஹே சல்வளீசே | ஜோ ஜோ கரீல த்யாசே |
பரந்து யேதே பகவந்தாசே | அதிஷ்டான் பாஹிஜே |
அர்த்தம் : போராட்டத்தை நடத்துவது நம் கைகளில் உள்ளது; ஆனால் காரியம் சரியாக நடப்பதற்கும் வெற்றி காண்பதற்கும் பகவானின் ஸங்கல்பம் மற்றும் ஸாதனை அவசியமாகிறது.
2. ஸாதனை செய்யாமல் ஹிந்து
ராஷ்ட்ரம் வந்து விடும் என்று நினைத்து விடாதீர்கள்!
பராக்கிரமம் மிக்க பாண்டவர்களும் கௌரவர்களை எதிர்த்து போரிடுவதற்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் உதவி தேவைப்பட்டது; ஸ்ரீகிருஷ்ணன் மற்றும் ஸாதனை இல்லாமல் ‘நாங்கள் ஹிந்து ராஷ்ட்ரம் அமைப்போம்’ எனக் கூறுவது எவ்வளவு நகைப்பிற்குரியது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
3. தீவிரவாதிகள் அவர்களின் மதத்தை தவறாது
பின்பற்றுவதால் அவர்களுக்கு அல்லாவின் ஆசீர்வாதம் இருக்கிறது
ஐந்து வேளை நமாஸ் படிப்பது, இஸ்லாமிய ஆடைகளை அபிமானத்துடன் அணிவது மற்றும் மதத்தின் ஆணை என்று ஜிஹாத்தில் ஈடுபடும் தீவிரவாதிகள் இஸ்லாமிய விதிகளை கடுமையாக கடைபிடிக்கின்றனர். அதனால் அவர்களுக்கு அல்லாவின் ஆசீர்வாதம் கிடைக்கிறது. நம்முடைய இதிஹாசப்படி அசுரர்களும் தீவிர ஸாதனை செய்து அவர்களின் ஸாதனையின் பலனாக தெய்வங்களின் ஆசீர்வாதத்தை பெற முடிந்தது. அதனால் ராவணன், ஹிரண்யகசிபு, பஸ்மாசுரன் போன்ற ராக்ஷசர்களும் கடுமையான தவம் இருந்து தெய்வங்களிடமிருந்து வரங்களை பெற்றுள்ளனர்.
அவர்களோடு ஒப்பிடும்போது ஹிந்துத்வவாதிகளாக இருப்பவர்களில் சிலர் தர்ம வழி நடப்பதில்லை. அதனால் அவர்களுக்கு இறைவனின் ஆசீர்வாதம் கிடைப்பதில்லை. ஒரு பெண்ணின் மீது காதல் கொண்டவன் கூட அவளை அடைய வேண்டும் என்பதற்காக அவள் எதிர்பார்ப்பின்படி எல்லாம் நடந்து கொள்கிறான். தேசம் மற்றும் தர்ம ரக்ஷண காரியம் வெறும் உடல், மனம் மற்றும் புத்தி நிலையில் ஆகக் கூடியது இல்லை, அதற்காக தர்மசக்தியின் பலம், அதாவது இறைவனின் ஆசீர்வாதம் அவசியம் ஆகும். அது ஸாதனையால் மட்டுமே கிடைக்கும்.
4. ஸ்ரீகிருஷ்ணனின் ஆசீர்வாதத்தால்
பாண்டவர்கள் வென்றது போல நாமும் வெற்றி கொள்வோம்
இன்று ஊழல் பேர்வழிகள், தீவிரவாதிகள் மற்றும் ஹிந்து விரோதிகளுடன் ஒப்பிடும்போது ஸாதனை செய்யும் தர்மாபிமானிகள் வெகு குறைவாகவே உள்ளனர். இருந்தாலும் கௌரவர்களுடன் ஒப்பிடும்போது பாண்டவர்கள் குறைவாக இருந்தாலும் ஸ்ரீகிருஷ்ணனின் ஆசீர்வாதத்தால் பாண்டவர்கள் வென்றதைப் போன்று நாமும் ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபனத்தை செய்ய முடியும் என்பதை உறுதியுடன் நம்புங்கள்!
5. ரஜ-தம பிரதானமான தீவிரவாதிகள், தேச விரோதிகள் மற்றும் தர்மதுரோகிகளை எதிர்த்து வெற்றி கிடைப்பதற்கு ஹிந்துத்வவாதிகள், ரஜ-தம மிகுந்து இருப்பதைக் காட்டிலும் ஸாதனை செய்து ரஜ-ஸத்வ அல்லது ஸத்வ-ரஜ குணம் மிகுந்து இருப்பது அவசியம்!
ஒரு ஹிந்துத்வவாதியின் சந்தேகம், தீவிரவாதிகளை எதிர்ப்பதற்கு நாமும் ரஜ-தம குணமுடையவராக இருக்க வேண்டாமா, நாம் ஸாதனை செய்து ஸாத்வீகமாக மாறினால் அவர்களை எவ்வாறு எதிர்ப்பது?
யுத்த சாஸ்திரப்படி எதிரிகளைக் காட்டிலும் குணம், பராக்கிரமம் மற்றும் ஆயுதங்களில் அதிக பலம் பொருந்தியவரே வெற்றி பெறுவர். ரஜ-தம தன்மை மிகுந்த ஹிந்து விரோதிகளை எதிர்கொள்ள ரஜ-தம குணம் உதவிக்கு வராது. அதன் மூலம் வெற்றி கிடைக்காது. ரஜ-தம குணத்துடன் சண்டையிட அதைக் காட்டிலும் பலம் பொருந்திய ரஜ-ஸத்வ அல்லது ஸத்வ-ரஜ குணமே அவசியம். ஹிந்துத்வவாதிகள் இக்குணத்தை ஸாதனை செய்தே வளர்த்துக் கொள்ள முடியும். ஸாதனை செய்வதால் ஒருவர் ஸத்வ குணமுடையவராகிறார். ஹிந்து விரோதிகளை வெற்றி கொள்ள ஹிந்துத்வவாதிகள் ஸாதனை செய்வதன் அவசியம் என்ன என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
6. ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபன
காரியங்களை செய்பவர் ஜபம் செய்வதன் மகத்துவம்
அ. ‘நாமஜபத்தால் தெய்வீக சக்தியின் உதவி கிடைக்கிறது. அர்ஜுனன் உத்தம வில்வீரன் ஆவான். அத்துடன் அவனுக்கு ஸ்ரீகிருஷ்ணனிடம் பக்தியும் இருந்தது. அம்பை விடும்போது அவன் எப்பொழுதும் ஸ்ரீகிருஷ்ணனின் நாமஜபத்துடனேயே விடுவான். அதனால் அவனின் அம்பு தானே லக்ஷ்யவேதி (எதிரிகள் மூவுலகில் எங்கிருந்தாலும் சென்று தாக்கக்கூடியது) ஆனது. ஸ்ரீகிருஷ்ண நாமஜபத்தால் ஒவ்வொரு அம்பும் லக்ஷ்யவேதியாகும் சங்கல்பம் அர்ஜுனனின் மனதில் எழுந்தது.
ஆ. நாமஜபத்தால் ஒவ்வொரு கர்மாவும் அகர்ம கர்மாவாகிறது; அதாவது கர்மத்தினால் பாவ-புண்ணிய பலன் ஏற்படாது.
இதிலிருந்து ‘ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபன காரியங்களை செய்யும்போது நாமஜபம் செய்வது எவ்வளவு அவசியம்’, என்பது தெளிவாகிறது.
7. ஸாதனை செய்த பின் இறைவன் நம் மூலமாக
ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபன காரியங்களை செய்து முடிப்பான் !
‘ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபனத்திற்காக நான் எதுவும் செய்வேன்’ என்பது தவறான சிந்தனை ஆகும். காரணம் அது சுய இச்சையை அடிப்படையாக கொண்டது. அதில் அகம்பாவம் உள்ளது. எப்பொழுது நம்முடைய பிராரப்த கர்மாவை நம்மால் மாற்ற முடியவில்லையோ நம் இச்சையால் ஒரு இலையை கூட அசைக்க முடியாதோ அப்பொழுது ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபன காரியத்தை நம்மால் செய்ய முடியுமா? அக்காரியத்தை பகவானால்தான் செய்ய முடியும். நாம் காரியத்துடன் கூட ஸாதனை செய்யும்போது, தெய்வத்திடம் ச்ரத்தையை அதிகப்படுத்தும்போது இறைவன் படிப்படியாக வழிநடத்தி அவசியத்திற்கு ஏற்றவாறு சக்தி அளித்து நம் மூலமாக காரியங்களை நடத்துவிப்பான்’. – பராத்பர குரு டாக்டர் ஆடவலே (22.5.2018)
தர்மாபிமாநிகளுக்கு ஒரு விண்ணப்பம் என்னவென்றால் அவர்கள் ஸாதனை செய்ய வேண்டும். ஸாதனை செய்வதால் நம்முடைய தேச மற்றும் தர்ம காரியங்களுக்கு இறைவனின் ஆசீர்வாதம் கிடைக்கும் மற்றும் காரியங்களும் அதிக பலனளிக்கும் வகையில் நடக்கும். பிறப்பிலேயே உங்களிடம் உள்ள க்ஷாத்ர தேஜஸ் உடன் ஸாதனை செய்து கிடைக்கும் பிராம்ம தேஜஸ் இணையும்போது ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபனம் சுலபமாக நடக்கும்.