குருக்ருபாயோகப்படியான ஸாதனையின் சித்தாந்தம்
எவ்வளவு மனிதர்களோ, அவ்வளவு இயல்புகள், அவ்வளவு ஸாதனை வழிகள்!
பூமியில் மக்கட்தொகை 700 கோடிக்கும் அதிகம்; அதாவது ஈச்வரனை அடைய 700 கோடிக்கும் அதிக வழிகள் உள்ளன. இந்த 700 கோடிக்கும் அதிகமான வழிகளில் எந்த இரு வழிகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவரின் உடல், மனம், விருப்பு-வெறுப்பு, குண-குறைகள், நம்பிக்கை-லக்ஷியங்கள், ஆசைகள்-வெறுப்புகள் ஆகியவை வேறு வேறானவை. ஒவ்வொருவரின் புத்தியும் மாறுபட்டவை. ஸஞ்சித்-ப்ராரப்த கர்மாக்களும் வேறானவை. ஒவ்வொருவரின் ப்ருத்வி, ஆப, தேஜ, வாயு, ஆகாய தத்துவங்களும் (மனிதன் பஞ்சபூதங்களால் ஆனவன்), ஸத்வ, ரஜ, தம ஆகிய முக்குணங்களும் வேறானவை. பெரும்பான்மையினர் வேறு வேறான இயல்புகளை, தகுதிகளைக் கொண்டிருப்பதால் பகவானை அடையும் வழிகளும் வேறு வேறாக உள்ளன. ஒருவரின் இயல்பு மற்றும் தகுதிக்கேற்ற ஸாதனை செய்யும்போது பகவானை விரைவில் அடைய முடிகிறது.
பலருக்கு ஸாதனையின் உள்ள தத்துவங்கள் தெரியாததால் தவறான ஸாதனையை செய்து தங்கள் ஆயுளை வீணாக்குகின்றனர். இதைத் தடுக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள தத்துவங்களை நன்கு புரிந்து கொண்டு ஸாதனை செய்வது அவசியமாகிறது.
விருப்பம் மற்றும் தகுதிக்கேற்ற ஸாதனை – தத்துவ எண் 1
ஸனாதன் ஸன்ஸ்தாவின் ஒவ்வொரு ஸாதகரும் இந்த தத்துவப்படி ஸாதனை செய்கின்றனர். உதாரணத்திற்கு, சில ஸாதகர்கள் ஸன்ஸ்தாவின் மூலம் வெளியிடப்படும் நூல்களை எழுதும் பணியில் ஈடுபடுகின்றனர். சிலர் சமூகத்தினரிடையே சென்று ஸத்ஸங்கங்கள், சொற்பொழிவுகள், பாலஸன்ஸ்கார் வகுப்புகள் ஆகியவற்றை நடத்துகின்றனர். சிலர் ஸனாதனின் ஆச்ரமத்தில் சமையலறைப் பிரிவு, துப்புரவுப் பிரிவு ஆகியவற்றில் ஸேவை செய்கின்றனர். வழி வேறாக இருந்தாலும் பெரும் பான்மையினரின் ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.