குருவின் இருப்பிடத்தை விட்டு தன்னிடத்திற்கு செல்லும் சிஷ்யனுக்கு குரு தந்துள்ள ஆசீர்வாத ரூபமான மந்திரம்!
கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரம் சிஷ்யனை உத்தேசித்து ஆசீர்வாத ரூபமாக சொல்லப்படுவது ஆகும். சிஷ்யன் குருவின் வீட்டில் வசித்து வித்யாக்களை கற்றுக் கொண்ட பின்பு வீடு திரும்பும்போது குரு சிஷ்யனுக்கு தரும் ஆசீர்வாதம் மற்றும் செய்தி வசனம் ஆகும்.
மனஸ்த ஆப்யாயதாம் வாக்த ஆப்யாயதாம்
ப்ராணஸ்த ஆப்யாயதாம் சக்ஷுஸ்த ஆப்யாயதாம் |
யத்தே க்ரூரம் யதாஸ்திதம் தத்த ஆப்யாயதாம்
நிஷ்டயாயதாம் தத்தே சுத்யது சமஹோப்ய: |
ஓஷதே த்ராயஸ்வ ஸ்வதிதே மைனம் ஹிம்ஸி: ||
– யஜுர்வேதம், அத்யாயம் 6, கண்டிகா 15
அர்த்தம் : ஹே சிஷ்யா! நான் உனக்கு எந்த வித்யையை அளித்தேனோ, அதன் மூலமாக உன் மனம் உறுதி பெறட்டும், பிராணன் பலமுடையதாகட்டும், கண்களுக்கு சர்வோத்தமமான சூட்சும திருஷ்டி கிடைக்கட்டும், செவிகளால் அதி சூட்சும நாதத்தையும் மங்களமயமான செய்திகளையும் நீ கேட்பாயாக. எந்த விவகாரத்தால் மற்றவருக்கு கஷ்டம் ஏற்படுமோ அதிலிருந்து தூர விலகி இரு. உன்னுடைய ஒவ்வொரு விவகாரமும் தூய்மையானதாக இருக்கட்டும். மூலிகைகளை, தாவரங்களை காப்பாற்றுவாயாக! உன்னுடைய வித்யையை உபயோகித்து யாருக்கும் துன்பத்தை தராதே.
இந்த ஸ்லோகத்தின் மூலம் முன்பிருந்த குருகுல கல்விமுறையில் குரு, சிஷ்யனின் மீது எந்த அளவிற்கு அக்கறை செலுத்தினார் என்பது தெரிய வருகிறது. வெறும் வித்யையை கற்பிப்பது என்பது மட்டுமல்லாமல் சிஷ்யன் தானே சுயமாக செயல்பட வேண்டும் என்ற சிந்தனை குருவிடம் இருந்தது. சிஷ்யனின் அந்தக்கரணம் தூய்மையாக வேண்டும் என்பதற்காக குரு அவனின் ஸ்வபாவ தோஷ நிர்மூலன் மற்றும் அஹம் நிர்மூலனில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார். அவனின் அந்தக்கரணம் தூய்மையானால் அவனிடம் சைதன்யம் விழிப்படையும்; அந்த சைதன்யத்தின் மூலம் அவனது வ்யஷ்டி மற்றும் ஸமஷ்டி ஸாதனை நடக்க ஆரம்பித்து பிராம்மதேஜ் மற்றும் க்ஷாத்ரதேஜ் கிடைக்கப் பெறுவான். அவனது ஆத்மபலம் அதிகரிப்பதால் க்ருஹஸ்தாச்ரமம், வானப்ரஸ்தாச்ரமம் மற்றும் சன்னியாச்ரமம் என்ற அவனது வாழ்க்கைப் பயணம் முன்னேறுகிறது. அவன் மூலமாக தேச தர்ம காரியங்கள் செவ்வனே நடைபெறுகின்றன. இறுதியில் மோக்ஷமும் கிடைக்கிறது. ஏனென்றால் குருவின் இருப்பிடத்தை விட்டு வீடு திரும்பும்போது குருவின் வழிகாட்டுதலை ஆணையாக சிரமேற் கொண்டு அவன் செயல்படுவதால் எந்த தீய காரியங்களும் அவனால் நடப்பதில்லை. அவனுடைய ஜீவன் மற்றவருக்கு எந்த விதத்திலும் துன்பத்தை அளிக்காமல் உபயோகமாக உள்ளது. குருவானவர் மூலிகைகளிடம் தாவரங்களிடம் அவனுக்காக பிரார்த்தனை செய்கிறார், ஹே வனஸ்பதி, என் சிஷ்யனைக் காப்பாற்று, இதன் அர்த்தம் அவனின் சரீரம் மற்றும் அனைத்தும் உத்தமமாக இருக்க அவன் உன்னை அவ்வப்பொழுது உபயோகிக்கட்டும்!