ஹிந்து ராஷ்ட்ரத்தில் எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என்பதற்கு என்ன அத்தாட்சி?

ஹிந்து ராஷ்ட்ரத்தில் எல்லா பிரச்சனைகள் எப்படி தீர்க்கப்படும் என சிலருக்கு தோன்றலாம். இது போன்று சரித்திரத்தில் இதுவரை நடந்துள்ளதா? இதற்கு பதில் ஆம்! ஹிந்து தேசம் (ஹிந்தவி ஸ்வராஜ்யம்) என சத்ரபதி சிவாஜி மஹராஜ் அறிவித்தவுடன் இது போன்ற பிரச்சனைகள் உடனே தீர்க்கப்பட்டன.

 

சிவாஜி மஹராஜ் ஹிந்து ராஷ்ட்ரத்தை
ஸ்தாபித்தவுடன் எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டன!

இன்று போல், சிவாஜி மஹராஜ் பிறப்பதற்கு முன்பு ஹிந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருந்தது. ஜீஜாபாயின் (சிவாஜி மஹராஜின் தாய்) நாத்தனார் ஒரு முஸ்லிம் படைத்தலைவனால் கடத்தப்பட்டாள். கோவில்கள் உடைக்கப்பட்டன; பசு வதை எப்பொழுது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை. சிவாஜி மஹராஜ் ஹிந்து ராஷ்ட்ரத்தை ஸ்தாபித்தவுடன் கோவில்களை உடைப்பது உடனே நின்றது. அதோடு கோவில்கள் உடைக்கப்பட்டு அவ்விடத்தில் இருந்த மசூதிகள் மறுபடியும் கோவில்களாக புனருத்தாரணம் செய்யப்பட்டன. மௌனமாக கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்த பசுக்கள் ஆனந்தத்துடன் குரல் எழுப்பத் துவங்கின. எந்த கையெழுத்து போராட்டமும் நடக்கவில்லை, சிவாஜி மஹராஜ் தன் அமைச்சர் குழாமுடன் சேர்ந்து எந்த பசுவதை தடை சட்டமும் அமுல்படுத்தவில்லை. ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபனம் என்ற ஒன்றே ஹிந்து துரோகிகளை நடுங்கச் செய்தது!

இன்று நாம் எல்லோரும் விலைவாசி உயர்வால் அவதிக்குள்ளாகிறோம். சிவாஜி மஹராஜ் காலத்தில் விலைவாசி உயர்வால் மக்கள் கஷ்டப்பட்டனர் என்று எப்பொழுதாவது கேள்விப்பட்டிருக்கிறோமா? ஜய் ஜவான், ஜய் கிசான் (ராணுவ வீரனுக்கு வெற்றி, விவசாயிக்கு வெற்றி) என கோஷம் போடும் அரசியல்வாதிகள், ராணுவ வீரனும் விவசாயியும் ஒரு நாயைப் போன்று இறப்பதை தடுக்கவில்லை. ஒவ்வொரு விவசாயியின் உயிரை மட்டுமன்று, அவனின் விளைச்சலையும் விலைமதிப்பற்றதாக சிவாஜி மஹராஜ் கருதினார். விவசாயி உழைப்பால் விளைந்த ஒரு சிறு செடிக்கும் தீங்கு ஏற்படக் கூடாது என்பதே அவரின் ஆணையாக இருந்தது. விவசாயியைப் போன்று ஒவ்வொரு ராணுவ வீரனின் உயிரையும் விலைமதிப்பற்றதாக கருதினார். போரில் காயமடைந்த ராணுவ வீரனுக்கு உரிய மரியாதை செய்து பொன் பொருட்களை மானியமாக அள்ளி வழங்கினார். 2010 கார்கில் போரில் இறந்த ராணுவ வீரர்களின் விதவைகளுக்காக ஆதர்ஷ் குடியிருப்பு சங்கம் கட்டப்பட்டது; ஆனால் ஒரு விதவைக்குக் கூட இதில் ஒரு குடியிருப்பும் கிடைக்கவில்லை. எல்லா குடியிருப்புகளையும் ஊழல் பேர்வழிகள் அபகரித்துக் கொண்டனர். இதற்கு மாறாக சின்ஹகட் போரில் தாணாஜி இறந்தபோது சிவாஜி மஹராஜ் அவரின் குடும்பத்தினரை பார்த்துக் கொண்டதோடு தாணாஜியின் மகனின் கல்யாணத்தையும் தானே நடத்தி வைத்தார்.

 

வெளிநாட்டு பிரச்சனைகளும்
ஹிந்து ராஷ்ட்ரத்தில் தீர்த்து வைக்கப்படும்!

உள்நாட்டு பிரச்சனைகளைப் போலவே வெளிநாட்டு பிரச்சனைகளும் ஹிந்து ராஷ்ட்ரத்தில் தீர்த்து வைக்கப்படும். நம் தேசத்தை எதிர்நோக்கும் மிக முக்கிய வெளிநாட்டு பிரச்சனை பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான போர் அபாயம். இது போன்ற ஒரு பிரச்சனை சிவாஜி மஹராஜ் காலத்திலும் இருந்தது. சிவாஜி மஹராஜின் சிறிய ராஜாங்கத்தை விழுங்கி விட நினைத்தான், ஒளரங்கஜீப். ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபனம் மற்றும் சிவாஜி மஹராஜின் மிக பிரம்மாண்டமான முடிசூட்டு விழாவைப் பற்றிக் கேட்டவுடன் நடுநடுங்கிப் போனான். பிறகு, சிவாஜி மஹராஜின் காலம் வரை மஹாராஷ்ட்ராவை நெருங்கவும் பயந்தான். தென்னிந்தியாவைப் பற்றிய கேள்விக்கு இடமே இல்லை. ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபனமான பின்பு எந்த நாடும் நம்மோடு மோதுவதற்கு தயங்குவர்.

சுருக்கமாக, பாரதம் எதிர்கொள்ளும் எல்லா பிரச்சனைகளையும் ஆன்மீக பற்றுடைய ஆட்சியாளர்கள் தீர்த்து வைப்பர்; எல்லா குடிமக்களும் நன்நடத்தை மூலம் மகிழ்ச்சியுடன் இருப்பர்.

(தகவல் : சனாதனின் தமிழ் நூல் ‘ஹிந்து ராஷ்ட்ரம் ஏன் தேவை?’)

Leave a Comment