1. மற்றவர் கூற்றுப்படி நடப்பதால் உண்டாகும் பயன்
மற்றவர் கூற்றுப்படி நடந்தால் மனதின் தியாகம் நடக்கிறது.
2. எப்பொழுதும் மற்றவருக்கு
ஆனந்தத்தைத் தர முயற்சி செய்யுங்கள் !
நம்மால் மற்றவரின் மனம் எந்த விதத்திலும் துக்கப்படக் கூடாது. அதனால் பாவம் ஏற்படுகிறது மற்றும் நம் ஸாதனை பாதிக்கப்படுகிறது. நீங்கள் எப்பொழுதும் மற்றவருக்கு ஆனந்தத்தைத் தர முயற்சி செய்யுங்கள். எதிரிலுள்ளவருக்கு ஆனந்தத்தை வழங்கினால் அவரின் ஆத்ம ஸ்வரூபமாக விளங்கும் ஈச்வரன் நமக்கு ஆசீர்வாதம் தந்தருள்வார்.
3. சிறு குழந்தையைப் போல்
மனதில் ஸாதனை ஸன்ஸ்காரத்தை பதிய வையுங்கள் !
நம்முடைய மனங்களில் நாமே ஸாதனை என்கிற ஸன்ஸ்காரத்தை பதிய வைக்க வேண்டும். நாம் சிறு குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை சொல்லித் தருகிறோம். நம்முடைய மனமும் சிறு குழந்தையைப் போன்றது. மனதிற்கு எப்பொழுதும் ஸாதனை கண்ணோட்டத்தை அன்புடன் சொல்லித் தர வேண்டும்; அப்பொழுது மனம் நாம் சொன்னபடி கேட்கும்.
4. வேண்டாத விஷயங்களைப் பற்றி
சிந்திப்பதைக் காட்டிலும் வெவ்வேறான
முறைகளில் தெய்வத்துடன் தொடர்பில் இருங்கள் !
தேவையற்ற எண்ணங்களை எண்ணுவதைக் காட்டிலும் தெய்வத்துடன் வெவ்வேறான வழிகளில் தொடர்பில் இருக்க முயற்சி செய்யுங்கள். உதாரணத்திற்கு நாமஜபம் செய்யுங்கள், தெய்வத்துடன் பேசுங்கள், பிரார்த்தனை செய்யுங்கள், தெய்வத்தை நினைவில் இருத்துங்கள், பக்திஉணர்வு பெருக முயற்சி செய்யுங்கள், மனத்தால் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று தெய்வ தரிசனம் பெற்று வாருங்கள். இது போன்ற முயற்சிகளால் வேண்டாத தேவையற்ற சிந்தனைகள் வெளியேறி மனம் லேசாகி ஆனந்தத்தை அனுபவிக்க முடியும்.
5. மாயை என்பது பொய் என்பதால்
அதில் மாட்டிக் கொள்ளாதீர்கள் !
ஈச்வரன் ஒருவனே நிரந்தரமானவன்; அவனே சத்யம்; மாயை என்பது பொய். நாம் தனியாக பிறவி எடுத்து வருகிறோம். இறக்கும்போது தனியாகவே செல்கிறோம். அவ்வாறிருக்கும்போது எதற்கு மற்றவற்றில் மாட்டிக் கொள்ள வேண்டும்?
6. குடும்பத்தினருக்கு சேவை செய்யும்போது
எம்மாதிரியான ஆன்மீக உணர்வு கொள்ள வேண்டும்?
கணவன், மனைவி, குழந்தை மற்றும் உறவினர் ஆகியோருடன் பழகும்போது மற்றும் அவர்களுக்கு சேவை செய்யும்போது ‘நான் பகவானின் சேவை செய்கிறேன்’ என்ற உணர்வுடன் செய்ய வேண்டும். அதன் மூலம் எந்த விதமான எதிர்பார்ப்பும் ‘நான் செய்கிறேன்’ என்ற கர்த்தா உணர்வும் இருக்காது.
7. நம் குரு இல்லாமல் நாம்
எதுவுமே இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
8. நம்மால் சேவையை முடிக்க
முடியாதபோது அதைப்பற்றி மற்ற ஸாதகர்களிடம்
மனம் விட்டு அன்புடன் பகிர்ந்து கொள்ளுங்கள் !
உங்களிடம் ஏதாவது ஒரு சேவை செய்ய சொல்லப்படும்போது அதை உங்களால் செய்ய முடியாது எனத் தோன்றிளால் உடனே எதிரே உள்ள ஸாதகரிடம் முடியாது எனக் கூறாமல் அவரிடம் அன்புடன் உங்களின் இயலாமையை பகிர்ந்து கொள்ளவும். அதனால் உங்களால் சேவை செய்ய முடியவில்லை என்றாலும் மற்ற எதிரே உள்ள ஸாதகருக்கு உங்களின் மீது எந்த எதிர் எண்ணமும் தோன்றாது. மாறாக ஆனந்தமே தோன்றும்.
9. மற்றவரிடம் எதிர்பார்ப்பில்லாத
அன்பை செலுத்த கற்றுக் கொள்ளுங்கள்.
– தொகுத்தவர் – திருமதி ஊர்மிளா புகன், ஸனாதன் ஆஸ்ரமம், ராம்னாதி, கோவா (7.7.2017)