ஸ்தூலத்திலிருந்து சூட்சுமத்திற்கு செல்வது
நீங்கள், தேவியின் ஸ்தூல மூர்த்திக்கு அல்லது சித்திரத்திற்கு பூஜை செய்யலாம். ஆனால் ஈச்வர தத்துவம் அதி சூட்சுமமானது. இப்படி இருக்கும்போது உங்கள் ஆயுள் முழுவதும் ஸ்தூல மூர்த்திக்கே பூஜை செய்து கொண்டிருந்தால் சூட்சுமத்திற்கு எவ்வாறு செல்வது? அதனால் ஸ்தூலமான பூஜையைக் காட்டிலும் மானஸ பூஜை செய்யுங்கள். உடலால் கோவில்களுக்கும் தீர்த்த யாத்திரைகளுக்கும் செல்வதற்கு பதில் மனதால் சென்று வர முயலுங்கள். இது போன்று சூட்சும ஸாதனை பழக்கமாகி விட்டால் ஒரு நாள் அதி சூட்சும தத்துவத்தை நிச்சயமாக அடைய இயலும். நாமஜபத்தை உரக்க சொல்வதற்கு பதிலாக மனதுக்குள் சொல்ல பழகுங்கள். ஆரத்தியின்போது என்ன நடக்கிறது, அதிக சப்தம் எழுப்பும் வாத்தியங்களுடன் உரத்த குரலில் ஆரத்தி பாடப்படுகிறது! ஆன்மீக சாஸ்திரப்படி நம்முடைய ஆன்மீக பயணம் நான்கு வாணிகள் வழியாக படிப்படியாக மேலே உயர வேண்டும். வைகரீயிலிருந்து மத்யமாவிற்கு, மத்யமாவிலிருந்து பச்யந்திக்கு, பச்யந்தியிலிருந்து பராவிற்கு என்று நமது நாமஜபம் முன்னேற வேண்டும். இறுதியில் நாமத்துடனேயே ஒன்ற முடியும். இதுவே உண்மையான ஸாதனை. ஸந்த் கபீர் சொல்கிறார், ஒரு எறும்பின் காலிலுள்ள சதங்கையின் ஒலியை யாரால் கேட்க முடியுமோ அவருக்கு உங்களின் பிரார்த்தனை ஏன் கேட்காது? ஆனால் உரத்த குரலில் கத்தி பாடினால்தான் பக்தி என்று சிலர் எண்ணுகிறார்கள்!
குருக்ருபாயோகம் – தத்துவ எண் 4
ஆன்மீக நிலைக்கேற்ற ஸாதனை
ஆன்மீக நிலை என்பது தகுதி. மஹான் துகாராம் மஹராஜ் சொல்கிறார், யாருக்கு தகுதி உள்ளதோ அவருக்கே உபதேசம். உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஸாதனை செய்ய முயற்சி செய்தால் முன்னேற்றம் ஏற்படும். யாருக்கு தகுதி இல்லையோ அவரால் செய்ய இயலாது. ஆன்மீக நிலைக்கேற்றவாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி ஸாதனை செய்ய வேண்டும். அதாவது அந்தந்த ஆன்மீக நிலை எய்துவதற்காக அந்தந்த ஸாதனை செய்ய வேண்டும். உயிரில்லாத பொருட்களின் ஆன்மீக நிலை 0 சதவிகிதம் என்றால் மோஷமடைந்தவரது நிலை 100 சதவிகிதம் ஆகும். கலியுகத்தில் சர்வ சாதாரண மனிதனின் ஆன்மீக நிலை 20 சதவிகிதம் மட்டுமே.
ஆன்மீக நிலை (%) | ஸாதனை |
20 | இல்லை |
30 | பூஜை, கோவிலுக்கு செல்வது, பாராயணம் செய்வது போன்றவை |
40 | நாமஜபம் |
50 | ஸத்ஸங்கம் |
55 | ஸத்ஸேவை மற்றும் குருப்ராப்தி |
60 | தியாகம் |