குருவின் மஹத்துவம்

குருர்ப்ரம்மா குருர்விஷ்ணு குருர்தேவோ மஹேச்வர:
குருரேவ பரப்ரம்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:

இந்த ஒரு ஸ்லோகத்திலேயே குரு என்ற வார்த்தையின் மஹத்துவம் தெரிய வருகிறது.

1. குரு என்ற வார்த்தையின் அர்த்தம்

சிஷ்யனின் அஞ்ஞானத்தை நீக்கி, அவனுடைய ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக யார் அவனுக்கு ஸாதனையை கற்றுத் தந்து அவனை செய்ய வைத்து அனுபூதிகளை வழங்குகிறாரோ அவரே குரு எனப்படுகிறார். சிஷ்யனுக்கு பரம மங்களமான மோக்ஷம், குருவருளாலேயே கிடைக்கிறது.

2. குருவின் சூட்சும திருஷ்டி

பண்டைய காலந்தொட்டே குரு பரம்பரை இருந்து வந்துள்ளது. ஒரு சிஷ்யன் எவ்வித ஸாதனை செய்ய வேண்டியது அவசியம் என்பதை குருவே அவனுக்கு எடுத்துக் காட்டுகிறார். குரு, சிஷ்யனுக்கு என்ன வேண்டும், அவனின் நிலை என்ன, ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட அவன் என்ன செய்ய வேண்டும் என்பதை அவனுக்கு எடுத்துக் காட்டி வழி நடத்துகிறார். இதுவே குருவின் சூட்சும திருஷ்டி ஆகும். குரு, தன் சிஷ்யனின் ஆன்மீக முன்னேற்றத்தை ஏற்பட வைக்கிறார். பிறகு சிஷ்யன் குருசரணங்களிலேயே வசிக்கிறான். குரு ஸாதனையை பற்றி சொல்லி அவனை செய்ய வைத்து அனுபூதிகளையும் வழங்குகிறார். இதனால் சிறிது காலத்திற்குள்ளேயே சிஷ்யனின் ஆன்மீக முன்னேற்றம் துரித கதியில் நடக்கிறது.

3. பிறப்பு-இறப்பு சக்கர சுழற்சியிலிருந்து விடுவிக்கும்
குருவின் மஹத்துவத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்!

இந்த ஒரு பிறவியில் சிறு சிறு விஷயங்களுக்காக ஒவ்வொருவரும் ஆசிரியர், வைத்தியர் போன்றவர்களிடம் வழிகாட்டுதல் பெறுகிறோம். ஆனால் பிறப்பு சக்கர சுழற்சியிலிருந்து விடுவிக்கும் குருவின் மஹத்துவம் எவ்வளவு என்று கற்பனை கூட செய்ய முடியாது! அதாவது…

குருமூலமாக யாருக்கு ஞானம் கிடைக்கவில்லையோ
அவர்கள் பவசாகரத்தை கடக்க வேறு வழியேது?
ஸ்ரீஹரியின் உள்ளத்தை அவர்கள் வெல்லவில்லையே
அவர்களின் பிறவி அந்தோ வீணாகிப் போனதல்லவோ!

ஞானதேவகாதா அபங் 698

 

குருவுடன் உள்ள உறவு

குரு என்ற பவித்ரமான உறவு ஞானத்தை அதிகரிக்கவும் ஆன்மீக ஸாதனையை அதிகரிக்கவும் உதவுகிறது.

இவ்வுலகில் குரு என்ற உறவு மிகவும் பவித்ரமானதாக கருதப்படுகிறது. இது ஒன்றே உண்மையான உறவு. குருவுடன் உள்ள சம்பந்தம் முழுவதும் ஆன்மீக ஸ்வரூபமாகவே உள்ளது. சிஷ்யனுக்கு தன்னுடைய முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்ற ஒரே நோக்கம் இருக்க வேண்டும். சிஷ்யனின் முன்னேற்றம் நடக்க வேண்டும் என்பதே குருவின் ஒரே லக்ஷியம். குரு உறவிற்கு வயது வரம்பு இல்லை. இது ஒருவரின் ஞானத்தையும் ஸாதனை பலத்தையும் ஆதாரமாகக் கொண்டது. உலக படைப்பில் அனைத்து உயிர்களும் ஸாதனையின் பலத்தால் முன்னேற்றமடைகின்றன. மற்ற எல்லா உறவுகளும் பயத்தையோ அல்லது சமூக பந்தத்தையோ அடிப்படையாக கொண்டுள்ளன; அதாவது அவற்றின் விவகாரங்கள் ஒரு எல்லைக்கு உட்பட்டது. உலக உறவுகளில் அஹம்பாவம் எப்பொழுதும் இருக்கும். இவ்வுறவில் ஞானம் மற்றும் ஸாதனைக்கு எந்த மதிப்பும் கிடையாது. அஹம்பாவத்தை காப்பாற்றுவது என்பது உலக உறவுகளை பாதுகாப்பது என்பதாகும். அஹம்பாவத்தை வளர்க்கும் எந்த உறவும் போலியானது. – ஸ்வாமி விவேகானந்தர், மும்பை.

(மேலும் விவரங்களுக்கு ஸனாதனின் தமிழ் கையேடு ‘குருக்ருபாயோகம்’ படியுங்கள்)

 

குருபூர்ணிமா மஹத்துவம்

குருபூர்ணிமா சமயத்தில் எவ்வளவு அதிகபட்ச ஆர்வத்துடன் ஸேவையில் ஈடுபடுகிறோமோ அந்த அளவு பயன் கிடைக்கும். நீங்கள் முழு ஈடுபாட்டுடன் ஸேவை செய்யும்போது குருசரணங்களுக்கு அருகே வெகு விரைவில் செல்ல முடியும். உலக விஷயங்களுக்கான பரீட்சையில் வருடாந்திர பரீட்சை நெருங்கும் சமயம் மற்ற வேலைகளை எல்லாம் ஒதுக்கி விட்டு அதிலேயே முழு கவனம் செலுத்துவோம். அதேபோன்ற முயற்சியை குருபூர்ணிமா ஸேவை செய்வதற்கு எடுத்தால் குரு வைக்கும் பரீட்சையில் தேறி நாம் செய்யும் ஸேவைக்கு தக்க பலன் கிடைக்கும்.

குருபூர்ணிமா தினத்தின் சிறப்பம்சம்

1. குருபூர்ணிமா அன்று வெறும் பூலோகத்தில் மட்டுமல்லாது ஸப்தலோகங்களிலும் குருதத்துவம் செயல்பாட்டில் உள்ளது. அதனால் எந்த சிஷ்யன் பூலோகமல்லாது மற்ற லோகங்களிலிருந்து ஸாதனை செய்கிறாரோ அவருக்கும் குருதத்துவத்தின் பயன் கிடைத்து முன்னேற்றம் ஏற்படுகின்றது.

2. சிஷ்யனுக்கு அன்றைய தினம் 1000 மடங்கு அதிக பலன் கிடைக்கிறது.

3. ஸாதகரிலிருந்து சிஷ்யன், சிஷ்யனிலிருந்து ஆழ்மன சிஷ்யன் மற்றும் ஆழ்மன சிஷ்யனிலிருந்து மஹான் என்றவாறு பயணிக்க இத்தினம் மிகவும் உகந்ததாக உள்ளது.

4. குரு, சிஷ்யனுக்கு ஆத்மஞானம் வழங்கி அவனை முன்னேறச் செய்கிறார்.

5. சிஷ்யன், மாயையிலுள்ள பல பந்தங்களை உதறி குரு என்ற ஒரே ஸத்யமான உறவை ஆதாரமாகக் கொண்டு ஆன்மீக பயணத்தை துவங்குகிறான்; குரு அவனை மோக்ஷம் வரை கூட்டி செல்கிறார்.

– குமாரி ப்ரியங்கா லோட்லிகர், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா.

Leave a Comment