நமஸ்காரத்தை எவ்வாறு செய்வது?
1. தெய்வத்திற்கு கைகளைக் கூப்பி எவ்வாறு நமஸ்காரம் செய்வது?
தெய்வத்திற்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய முடியவில்லை என்றால் கைகளைக் கூப்பி நமஸ்காரம் செய்ய வேண்டும். இந்த நமஸ்காரத்தை நிதானமாக, சிறப்பு வழிகளின்படி செய்ய வேண்டும். இந்த சிறப்பு வழிகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன. அதோடு கைகளைக் கூப்பி நமஸ்காரம் செய்யும் வழிமுறை 2 வரைபடங்களின் உதவியுடன் காட்டப்பட்டுள்ளன. நீங்களும் இன்றிலிருந்து இவ்வழிமுறைப்படி நமஸ்காரம் செய்ய ஆரம்பியுங்கள், அதன் மூலம் ஈச்வர சைதன்யத்திற்கு பாத்திரமாகுங்கள்!
Contents
- நமஸ்காரத்தை எவ்வாறு செய்வது?
- 1. தெய்வத்திற்கு கைகளைக் கூப்பி எவ்வாறு நமஸ்காரம் செய்வது?
- 1 அ. செயல்
- 2. தெய்வங்களுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது எப்படி?
- 2 அ. இரண்டாவது விளக்கம்
- 2 ஆ. செயல்முறை
- 2 இ. ‘ஸாஷ்டாங்க நமஸ்காரம்’ செய்யும்போது தோளிலிருந்து விரல்கள் வரை பூரணமாக கைகளை பூமியில் படிய வைப்பது தவறு
- 3. கோவிலில் தெய்வத்திற்கு நமஸ்காரம் செய்தல்
- 3 அ. கோவிலுக்குள் நுழையும்போது படிகளுக்கு நமஸ்காரம் செய்யவும்
- 4. மகான்களுக்கு நமஸ்காரம்
- 4 அ. ஆண்கள் மகான்களுக்கு ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்தல்
- 4 ஆ. ஆண்களும் பெண்களும் மகான்களின் சரணங்களில் தலை வைத்து நமஸ்காரம் செய்தல்
- 5. பெரியவர்களுக்கு ஏன் நமஸ்காரம் செய்ய வேண்டும்?
- 5 அ. வெளிநாடுகளுக்கு செல்லும் முன்பும் திரும்பிய பின்னும் வீட்டிலுள்ள பெரியவர்களுக்கு ஏன் நமஸ்காரம் செய்ய வேண்டும்?
- 6 . திருமணத்திற்குப் பிறகு கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து ஏன் நமஸ்காரம் செய்ய வேண்டும்?
- 6 அ. ஜோடியாக நமஸ்காரம் செய்யும்போது மனைவி கணவனுக்கு எந்தப் பக்கம் இருக்க வேண்டும்?
- 7. நமஸ்காரம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்
- 7 அ. உலக நன்மை
- 7 ஆ. ஆன்மீக நன்மை
- 8. இதை கவனத்தில் கொள்ளுங்கள்!
- 8 அ. நமஸ்காரம் செய்யும்போது ஏன் கண்களை மூட வேண்டும்?
- 8 ஆ. நமஸ்காரம் செய்யும்போது ஏன் காலணிகளை அணியக் கூடாது?
- 8 இ. ஒரு கையால் ஏன் நமஸ்காரம் செய்யக் கூடாது?
- 8 ஈ. நமஸ்காரம் செய்யும்போது கைகளில் ஏன் எப்பொருளையும் வைத்திருக்கக் கூடாது?
- 8 உ. நமஸ்காரம் செய்யும்போது ஆண்கள் தலையை மூடக் கூடாது; ஆனால் பெண்கள் தலையை ஏன் தலையை மூட வேண்டும்?
- 8 ஊ. தார்மீக காரியங்களின்போது கழுத்தில் ஏன் வஸ்திரத்தை சுற்றிக் கொள்ளக் கூடாது?
- 8 எ. கைகளைக் குலுக்காமல் ஏன் கைகளைக் கூப்பி நமஸ்கரிக்க வேண்டும்?
1 அ. செயல்
அ. ‘தெய்வங்களை வணங்கும்போது முதலில் இரண்டு கைகளையும் நெஞ்சுக்கருகே சேர்த்து கூப்ப வேண்டும்.
1. கைகளைக் கூப்பும் சமயத்தில் விரல்களைத் தளர்வாக வைத்துக் கொள்ள வேண்டும்.
2. விரல்களிடையே இடைவெளி விடாமல் ஒன்றோடொன்று சேர்ந்திருக்க வேண்டும்.
3. மற்ற விரல்கள் கட்டை விரலோடு சேராமல் தனித்து இருக்க வேண்டும்.
4. ஆரம்ப நிலையில் உள்ள ஸாதகனும் சாதாரண மனிதனும் நமஸ்காரம் செய்யும்போது இரண்டு கைகளும் சேர்ந்திருக்க வேண்டும். வெற்றிடம் கூடாது. 5-6 வருடங்கள் ஸாதனை செய்து முன்னேறிய ஸாதகன் நமஸ்காரம் செய்யும்போது கைகளுக்கிடையே வெற்றிடம் அவசியம்.
ஆ. கைகளைக் கூப்பிய பின் முதுகை சிறிது முன்னோக்கித் தாழ்த்த வேண்டும்.
இ. அதே சமயம் தலையையும் சிறிது தாழ்த்தி இரண்டு கட்டைவிரல்களையும் புருவ மத்தியில் தொட்டு மனதை இறைவனின் சரணங்களில் பதிய வைக்க முயற்சி செய்ய வேண்டும்.
ஈ. பின்னர் கைகளை உடனே கீழே இறக்காமல் மெதுவாக நெஞ்சுப் பகுதியில் வைத்து விட்டு பின் கீழிறக்கலாம்.
2. தெய்வங்களுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது எப்படி?
சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தல்
உரஸா ஸிரஸாத்ருஷ்ட்யா மனஸா வசஸா ததா |
பதப்யாம் கராப்யாம் ஜானுப்யாம் ப்ரணாமொஷ்டாங்கமுச்யதே ||
அர்த்தம் : 1. ஹ்ருதயம், 2. தலை, 3. திருஷ்டி (கண்கள் மூலமாக நமஸ்காரம்), 4. மனம் (மனதால் நமஸ்காரம்), 5. வாக்கு (வாயினால் நமஸ்காரம் சொல்வது) 6. கால்கள், 7. கைகள் மற்றும் 8. முட்டி ஆகிய இந்த எட்டு அங்கங்களால் செய்யப்படும் நமஸ்காரமே ‘ஸாஷ்டாங்க நமஸ்காரம்’ எனப்படுகிறது.
இதையே ‘விதிப்படியான நமஸ்காரம்’ என்று கூறுவார்கள். இதில் உடல், வாக்கு, மற்றும் மனதால் இறைவனுடைய திருவடியை அடைந்து அவனை ஆவாஹனம் செய்கிறோம்.
2 அ. இரண்டாவது விளக்கம்
ஆறு பகைவர்கள் (காம, குரோத, மோக, லோப, மத, மாச்சர்ய) மற்றும் மனம், புத்தி ஆகிய எட்டு அங்கங்களை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிப்பதே ‘ஸாஷ்டாங்க நமஸ்காரம்’. ஆறு பகைவர்கள் சூட்சும மனத்துடன் சம்பந்தம் கொண்டவை. மேற்கூறிய மனம் மற்றும் புத்தி முறையே ஸ்தூல மனம், ஸ்தூல புத்தியைக் குறிக்கிறது. ஈச்வரனோடு ஒன்ற வேண்டும் என்ற தீவிர ஆர்வமுள்ள 60%-க்கும் மேற்பட்ட ஆன்மீக நிலை கொண்ட ஸாதகர்கள் அஹத்தோடு கூடவே சரணத்தை அடைவார்கள். எந்த ஸாதகருக்கு ஆன்மீகத்தில் உள்ள தீவிர ஆர்வத்தின் பலன் மிகவும் ஸஹஜமாகி விட்டதோ அத்தகைய ஸாதகருக்கு மேற்கூறிய வாசகம் பொருந்தும்.’ – திருமதி அஞ்ஜலி காட்கில், 8.7.2005, மதியம் 1.34
(ஜன்ம ஜன்மாந்திரமாக சித்தத்தில் படிந்துள்ள ஸம்ஸ்காரங்களையே ஆறு பகைவர்கள் எனக் கூறுவர். ஸன்ஸ்காரங்கள், சித்தம் அல்லது ஆழ்மனதில் ஏற்படுபவை. வெளிமனதைக் காட்டிலும் இது அதி சூட்சுமமானது. அதனால்தான் ஆறு பகைவர்களும் சூட்சும மனதோடு சம்பந்தப்பட்டவை எனக் கூறப்பட்டிருக்கிறது. சாமான்யமாக எந்த மனம், புத்தி வாயிலாக நாம் சிந்திக்கிறோமோ அவற்றை ஸ்தூல மனம், ஸ்தூல புத்தி என குறிப்பிட்டிருக்கிறோம். – தொகுத்தவர்)
2 ஆ. செயல்முறை
1. கைகளை நெஞ்சருகில் கூப்பி, இடுப்பளவில் குனிந்து தரையில் உள்ளங்கைகளைப் பதிக்க வேண்டும்.
2. வலது காலை பின்னுக்கிழுத்து பின்பு இடக்காலை பின்னுக்கிழுக்க வேண்டும்.
3. முழங்கால்களை மடித்து கண்களை மூடி தலை, மார்பு, கைகள், முழங்கால்கள் மற்றும் கால் பெருவிரல்கள் தரையில் படுமாறு படுக்க வேண்டும்.
4. மனதளவில் நமஸ்காரம் செய்து, ‘நமஸ்காரம்’ என கூற வேண்டும்.
5. எழுந்து நின்று அநாஹத சக்கரத்தில் கைகளைக் கூப்பி, பக்தியுனர்வோடு நமஸ்கரிக்க வேண்டும்.
2 இ. ‘ஸாஷ்டாங்க நமஸ்காரம்’ செய்யும்போது தோளிலிருந்து விரல்கள் வரை பூரணமாக கைகளை பூமியில் படிய வைப்பது தவறு
பலர் ‘ஸாஷ்டாங்க நமஸ்காரம்’ செய்யும்போது இரு கைகளையும் தலைக்கு மேல் கொண்டு போய் தோளிலிருந்து கைவிரல்கள் வரை பூரணமாக கைகள் பூமியில் படும்படியாக நமச்கரிக்கின்றனர். இந்த முறையில் ஒருவரின் பிறப்புறுப்புகள் பூமியை ஸ்பர்சிக்கின்றன. தர்ம சாஸ்திரப்படி பிறப்புறுப்புகள் பூமியை ஸ்பர்சிப்பது தவறானது. அதனால் இம்முறைப்படி செய்யப்படும் ‘ஸாஷ்டாங்க நமஸ்காரம்’ தவறானது.
3. கோவிலில் தெய்வத்திற்கு நமஸ்காரம் செய்தல்
3 அ. கோவிலுக்குள் நுழையும்போது படிகளுக்கு நமஸ்காரம் செய்யவும்
3 அ 1. செயல் : ‘கோவில் அல்லது கர்ப்பக்ருஹத்தின் முதல் படியை இரு கைகளால் தொட்டு பின் கைகளை தலையில் தடவிக் கொள்ள வேண்டும். படிகளுக்கு ஒரு கையால் தொட்டு நமஸ்காரம் செய்யக் கூடாது.
3 அ 2. சாஸ்திரம் : கோவில்களுக்கு அருகாமையில் தெய்வங்களின் அதிர்வலைகள் அதிகமாக உள்ளதால், ஸாத்வீகத்தன்மையும் அங்கு அதிகமாக உள்ளது. சுற்றுப்புறத்தில் பரவியிருக்கும் சைதன்யத்தால் நுழைவாயிலுக்கும் அந்த தெய்வீகத் தன்மை வந்தடைகிறது. அதனால் நுழைவாயிலை இரு கைகளாலும் தொட்டு பின் தலையில் தடவிக் கொள்வது வழக்கம். இதிலிருந்து நுழைவாயிலில் உள்ள மண் துகள்களும் சைதன்யம் நிரம்பியது என்பது தெரிகிறது. நாம் அந்த மண் துகள்களின் மதிப்பையும் உணர்ந்து கொண்டால், அதிலிருந்தும் பயன் பெறலாம். ‘நுழைவாயிலில் நிரம்பியிருக்கும் தெய்வீகத் தன்மை கைகளின் வழியாக முழு உடலுக்கும் பாய்கிறது’ என்ற உணர்வுடன் நமஸ்காரம் செய்தால் அதிக பயனடையலாம். இச்சமயத்தில் நம் அஹம்பாவமும் குறைவாக இருந்தால் நமஸ்காரத்தின் பூரண பலனையும் பெறலாம். அஹத்தை தியாகம் செய்து செய்யப்படும் கர்மாக்கள் எல்லாம் அகர்ம கர்மாவாகின்றன.
3 அ 3. சில காரணங்களால் படிகளைக் கைகளால் தொட்டு நமஸ்காரம் செய்ய முடியவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்? : ஒருவர் வயதானதாலோ அல்லது உடல்நலக் குறைவாலோ கைகளால் படிகளைத் தொட முடியவில்லை என்றால் அவர் தெய்வத்திடம் மன்னிப்பு வேண்டி படிகளை ஆன்மீக உணர்வுபூர்வமாக ஏறினாலேயே அவருக்குத் தேவையான அளவு சைதன்யம் கிடைத்து விடும்.
– திருமதி அஞ்ஜலி காட்கில், 8.7.2005, மாலை 3.15
3 அ 4. சிவாலயங்களில் நந்திக்கு அருகிலும் மற்ற ஆலயங்களில் ஆமைக்கு அருகிலும் நின்று கொண்டு ஏன் நமஸ்காரம் செய்ய வேண்டும்? : சிவாலயங்களில் நந்திக்கு அருகிலும் மற்ற ஆலயங்களில் ஆமைக்கு அருகிலும் நின்று கொண்டு நமஸ்காரம் செய்வதால் தெய்வங்களிலிருந்து வெளிப்படும் ஸாத்வீக அதிர்வலைகளால் நமக்கு கஷ்டம் ஏற்படாது மற்றும் நமக்குத் தேவையான அளவு அவற்றை க்ரஹித்துக் கொள்ள முடியும்.
3 அ 5. தெய்வங்களுக்கு நமஸ்காரம் : ஆண்கள் முடிந்தால் தெய்வங்களுக்கு ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். ஆனால் பெண்கள், அவ்வாறு ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்யக் கூடாது.
4. மகான்களுக்கு நமஸ்காரம்
மகான்களின் சரணங்களில் தலைபதித்து நமஸ்கரிக்க வேண்டும்
4 அ. ஆண்கள் மகான்களுக்கு ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்தல்
ஆண்கள் முடிந்தால் மகான்களுக்கு ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். ஆனால் பெண்கள், அவ்வாறு ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்யக் கூடாது.
4 ஆ. ஆண்களும் பெண்களும் மகான்களின் சரணங்களில் தலை வைத்து நமஸ்காரம் செய்தல்
ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய முடியவில்லை என்றால் ஆண்கள் கீழ்க்கூறியவாறு மகான்களை நமஸ்கரிக்கலாம். பெண்களும் இம்முறைப்படி நமஸ்காரம் செய்யலாம்.
4 ஆ 1. சரணங்களில் படும்படியான தலைப்பாகம் : பிரம்மரந்திரத்தின் (உச்சந்தலை) மூலம் அதிகபட்ச சைதன்யத்தை ஒருவரால் க்ரஹிக்க முடியும். உச்சந்தலையை மகான்களின் பாதங்களில் படும்படி வைக்க முடியாது என்பதால் நெற்றிபட நமஸ்கரிக்க வேண்டும். இதன் மூலம் அவர் பாதங்களிலிருந்து வெளிப்படும் சைதன்யத்தை அதிக அளவு க்ரஹிக்க முடிகிறது. இதன் மூலம் அவர் பாதங்களிலிருந்து வெளிப்படும் சைதன்யத்தை அதிக அளவு க்ரஹிக்க முடிகிறது.
4 ஆ 2. சரணங்களில் தலை வைப்பதற்கான சரியான ஸ்தானம் : மகான்களுடைய பாதங்களில் பெருவிரல் வழியே அதிக சைதன்யம் வெளிப்படுகிறது. அதனால் பெருவிரல் மீது நம் நெற்றி படுமாறு நமஸ்கரிக்க வேண்டும். இரண்டு பெருவிரல்களும் கிடைக்கும் பக்ஷத்தில் வலது கால் பெருவிரல் மீது நெற்றி படும்படியாக நமஸ்கரிப்பது சிறந்தது.
4 ஆ 3. பாதங்களில் நெற்றிபட நமஸ்கரிக்கும்போது கைகளின் நிலை : உள்ளங்கைகள் மகான்களின் பாதங்களைத் தொடும்படி வைக்க வேண்டும்.
(ஆண்கள் மற்றும் பெண்கள், பிரம்மச்சாரி, சந்நியாசி மற்றும் அனுஷ்டானத்தில் இருக்கும் மஹான்கள் ஆகியோரை நமஸ்கரிக்கும்போது அவர்களைத் தொடக் கூடாது.- தொகுத்தவர்)
5. பெரியவர்களுக்கு ஏன் நமஸ்காரம் செய்ய வேண்டும்?
ஊர்த்வம் ப்ராணா ஹ்ருத்க்ராமந்தி யூன: ஸ்தவிர ஆயதி |
ப்ரத்யுத்தானாபி வாதாப்யாம் புனஸ்தான்ப்ரதிபத்யதே ||
– மனுஸ்ம்ருதி 2.120, மகாபாரதம், உத்யோக், 38.1, அனு. 104, 64-65
அர்த்தம் : வயதில் முதிர்ந்தவர்கள் எதிரில் வரும்போது, வயதில் இளையவர்களின் பிராணன் மேலேழும்புமிறது. அவர்கள் எழுந்து நமஸ்காரம் செய்யும்ப்வோது, பழையபடி ஸஹஜ நிலைக்கு திரும்புகிறார்கள்.
5 அ. வெளிநாடுகளுக்கு செல்லும் முன்பும் திரும்பிய பின்னும் வீட்டிலுள்ள பெரியவர்களுக்கு ஏன் நமஸ்காரம் செய்ய வேண்டும்?
வீட்டிலுள்ள பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்வது என்பது ஒருவிதத்தில் அவர்களுக்குள் இருக்கும் டேய்வத்தன்மையில் அடைக்கலம் புகுதல் ஆகும். எப்பொழுது ஒரு ஜீவன் மிகுந்த தாழ்மை உணர்ச்சியோடு நமஸ்காரம் செய்கிறதோ அப்பொழுது அந்த ஜீவனுள் கருணாரசம் நிரம்புகிறது. இந்த கருணாரஸ உணர்வானது சூட்சும தேஹத்திற்குள் நுழைந்து மனச்சக்தியை செயல்பட வைக்கிறது; மற்றும் மணிபூரக சக்கரத்தில் நிலைபெற்றுள்ள பஞ்சபிராணனையும் செயல்பட வைக்கிறது. பஞ்சபிராணன் சரீரத்தில் பிரவேசிக்க ஆரம்பிப்பதால் ஜீவனின் ஆத்மசக்தி விழிப்படைகிறது. ஆத்மசக்தியின் பலத்தால் ஸுஷும்னா நாடி செயல்பட ஆரம்பிக்கிறது. ஜீவனின் வெளிப்படும் சக்தி வெளிப்படாத சக்தியாக மாறி அந்தப் பெரியவர்களின் மூலமாக ப்ரம்மாண்டத்திலிருந்து எந்த தத்துவம் நமக்குத் தேவைப்படுகிறதோ அது கிடைக்கிறது. இம்மாதிரியாக வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது ஒரு ஜீவன் பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்து அவர்களிடமிருந்து வெளிப்படும் ஸாத்வீக அதிர்வலைகளின் பலத்தால் வாயு மண்டலத்தில் உள்ள கஷ்டம் தரக்கூடிய அதிர்வலைகளிலிருந்து பாதுகாப்பு பெறுகிறது. அதேபோல் வீட்டிக்கு திரும்பும் சமயத்திலும் பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்வதன் மூலம் நம்மோடு கொண்டு வந்த ரஜ-தம அணுக்கள் நஷ்டமடைகின்றன.’ – திருமதி அஞ்ஜலி காட்கில், 20.5.2005,
6 . திருமணத்திற்குப் பிறகு கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து ஏன் நமஸ்காரம் செய்ய வேண்டும்?
சிவஸ்வரூபமான கணவன் மற்றும் சக்தி ஸ்வரூபமான மனைவியின் தத்துவங்கள் ஒன்றிணைவதே திருமணம் ஆகும். சிவஸ்வரூப ஸகுண க்ரியா சக்தி மற்றும் அதை வழி நடத்திச் செல்லும் நிர்குண சம்பந்தமான சக்தி ஆகிய இவ்விரண்டின் யோகத்தினால் ஒவ்வொரு கர்மாவும் பூரண கர்மாவாகிறது. திருமணத்திற்குப் பிறகு இரண்டு ஜீவன்களும் க்ரஹஸ்தாச்ரமத்தில் நுழைகின்றன. க்ரஹஸ்தாச்ரமத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் அனுகூலமாக இருந்து கொண்டு சம்சார சாகரத்தில் விதிக்கப்பட்ட கர்மாக்களை செய்து கொண்டு அவற்றை வெற்றிகரமாக முடிக்க வயதில் முதிர்ந்த பெரியவர்களின் ஆசியை பெற்றுக் கொள்வது மகத்துவம் நிறைந்ததாகும். இருவரும் சேர்ந்து நமஸ்காரம் செய்வதினால் பிரம்மாண்டத்திலுள்ள சிவ-சக்தி அதிர்வலைகள் செயல்பட ஆரம்பிக்கின்றன. அந்த ஜீவன்களின் தன் தன்னடக்க உணர்ச்சி மேலெழும்புகிறது. க்ரஹஸ்தாச்ரமத்தில் பரிபூரண கர்மா செய்யும்போது அதற்கு வேண்டிய யோக்கிய பலனும் கிடைக்கிறது. இக்காரணத்தால் கொடுக்கல்-வாங்கல் சிறிதளவே ஏற்படுகிறது. இதனால் திருமணத்திற்குப் பிறகு இருவரும் எல்லா செயல்களையும் சேர்ந்தே செய்ய வேண்டும். மேலும் நமஸ்காரம் போன்ற செயல்களின் மூலம் ஒருவருக்கொருவர் அனுகூலமாக இருந்து கொள்வதே மேற்கூறிய வழிமுறையின் உத்தேசம்.
கணவன் மற்றும் மனைவியின் ஆன்மீக நிலை அல்லது இறைவனிடம் உள்ள ஆன்மீக உணர்வு 50%-க்கு மேற்பட்டு இருக்கும்போது, இருவரும் சேர்ந்து நமஸ்காரம் செய்வது, ஒருவர் மட்டுமே நமஸ்காரம் செய்வது அல்லது மானசீக நமஸ்காரம் செய்வது ஆகிய மூன்று வித செயல்களினாலும் ஒரே வித பலன் கிடைக்கிறது. பிரத்யேகமாக நாம் செய்யக் கூடிய கர்மாக்களைக் காட்டிலும் இறைவனின் மேலுள்ள ஆன்மீக உணர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, இந்த அனன்ய பக்தியை ஸஹஜமாக்கிக் கொள்ள வேண்டும். (கணவன்-மனைவி இருவரில் ஒருவர் மட்டுமே அங்கிருந்தால் அவர் மட்டும் நமஸ்காரம் செய்ய வேண்டும். – தொகுத்தவர்)
6 அ. ஜோடியாக நமஸ்காரம் செய்யும்போது மனைவி கணவனுக்கு எந்தப் பக்கம் இருக்க வேண்டும்?
கணவனும் மனைவியும் சேர்ந்து நமஸ்காரம் செய்யும்போது மனைவி கணவனின் இடப்பக்கம் இருக்க வேண்டும்! (தகவல் – ஸார்த்த சோடசஸன்ஸ்கார் ரத்னமாலா)
7. நமஸ்காரம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்
நமஸ்காரம் செய்வதன் முக்கிய நோக்கம் யாருக்கு நாம் நமஸ்காரம் செய்கிறோமோ அவரிடமிருந்து நமக்கு ஆன்மீக அல்லது உலக நன்மை ஏற்பட வேண்டும் என்பதே.
7 அ. உலக நன்மை
தெய்வங்கள் மற்றும் மகான்களுக்கு நமஸ்காரம் செய்வதால் அவர்களின் குணங்கள் மற்றும் கர்த்ருத்வம் நம்மையறியாமலேயே நம்முன் ஆதர்சமாக உள்ளன. அதன்படி நம்மிடம் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள முயலலாம்.
7 ஆ. ஆன்மீக நன்மை
1. பணிவு அதிகரித்தல் மற்றும் அஹம்பாவம் குறைதல் : நமஸ்காரம் செய்யும்போது ‘நீங்கள் உயர்ந்தவர்; நான் தாழ்ந்தவன்; என்னிடம் எந்த ஞானமும் இல்லை; நீங்களோ அனைத்தும் அறிந்தவர்’ என்ற சிந்தனை இருந்தால் நம்மிடம் பணிவு அதிகரித்து அஹம்பாவமும் குறையும்.
2. சரணாகதி மற்றும் நன்றியுணர்வு அதிகரித்தல் : நமஸ்காரம் செய்யும்போது ‘எனக்கு எதுவும் வராது, நீங்களே அனைத்தையும் செய்விக்க வல்லவர், எனக்கு உங்களின் சரணங்களில் இடம் தாருங்கள்’ என்ற சிந்தனை இருந்தால் சரணாகதி மற்றும் நன்றியுணர்வு அதிகரிக்க அது உதவும்.
3. ஸாத்வீகத் தன்மை கிடைத்தல் மற்றும் ஆன்மீக முன்னேற்றம் விரைவாக ஏற்படுதல்
1. நமஸ்கார முத்திரையால் நமக்கு ஸாத்வீகத் தன்மை அதிகம் கிடைக்கிறது.
2. தெய்வங்கள் மற்றும் மகான்களை நமஸ்கரிப்பதால் அவர்களிடமிருந்து வெளிப்படும் சூட்சும அதிர்வலைகள், உதா. ஸத்வ மற்றும் அனந்த அதிர்வலைகள் நமக்குக் கிடைக்கின்றன.
3. தெய்வங்கள் மற்றும் மகான்களை நமஸ்கரிப்பதால் நமக்கு அவர்களின் ஆசீர்வாதமும் கிடைக்கின்றன. அதனால் நமக்கு ஆன்மீக முன்னேற்றம் விரைவாக ஏற்படுகின்றது.
– கு. மதுரா போஸ்லே, 2.12.2004, மாலை 7.15
8. இதை கவனத்தில் கொள்ளுங்கள்!
8 அ. நமஸ்காரம் செய்யும்போது ஏன் கண்களை மூட வேண்டும்?
‘இரு கைகளையும் கூப்பி சிரம் தாழ்த்துவது என்பது இறைவனிடம் மற்றும் எதிரிலுள்ள நபரிடம் உள்ள தெய்வத்வத்திற்கு வந்தனம் செய்வது ஆகும். நமக்குள் அந்தர்யாமியாய் விளங்கும் இறைவனின் தரிசனம் ஏற்பட வேண்டும் என்பதற்காக இறைவனுக்கு மற்றும் மரியாதைக்குரிய நபருக்கு வந்தனம் செய்யும்போது கண்களை மூடிக் கொள்கிறோம். ‘ – கு. மதுரா போஸ்லே, 2.12.2004, மாலை 7.28
8 ஆ. நமஸ்காரம் செய்யும்போது ஏன் காலணிகளை அணியக் கூடாது?
ஸோபானத்கஷ்சாஷனாஸனசயநாபிவாதன நமஸ்காரன் வர்ஜயத் | – கௌதமஸ்ம்ருதி 9
அர்த்தம் : உட்காரும்போது, சாப்பிடும்போது, தூங்கும்போது, குருமார்களுக்கு வந்தனம் செய்யும்போது மற்றும் நமஸ்காரம் செய்யும்போது காலணிகளை அணியக் கூடாது.
8 இ. ஒரு கையால் ஏன் நமஸ்காரம் செய்யக் கூடாது?
ஜன்மப்ரப்ருதி யத்கிஞ்சித்ஸுக்ருதம் ஸமுபார்ஜிதம் |
தத்ஸர்வம் நிஷ்ஃ பலம் யாதி ஏகஹஸ்தாபிவாதனாத் ||
– வ்யாக்ரபாதஸ்ம்ருதி 367
அர்த்தம் : யார் ஒரு கையால் நமஸ்காரம் செய்கிறார்களோ, அவர் வாழ்நாள் முழுவதும் சேர்த்து வைத்த புண்ணியம் பலனளிக்காமல் போய்விடும்.
8 ஈ. நமஸ்காரம் செய்யும்போது கைகளில் ஏன் எப்பொருளையும் வைத்திருக்கக் கூடாது?
1. ‘நமஸ்காரம் செய்யும்போது கைகளில் ஏதேனும் பொருள் வைத்திருந்தால் கைவிரல்கள் நேராக இல்லாமல் சிறிது மடங்கி விடுகின்றன. இதனால் எதிரில் காணப்படும் ஸாத்வீக அதிர்வலைகளை மடங்கிய விரல்களின் நுனி மூலம் க்ரஹிக்க முடிவதில்லை.
2. எதிரில் உள்ள ஸாத்வீக அதிர்வலைகள் கைகளிலுள்ள பொருளின் மீது பட்டு திரும்பிப் போகின்றன. சில சமயம் கையில் உள்ள பொருளே அதைத் தன்னுள் இழுத்துக் கொள்கிறது.
3. கையிலுள்ள பொருள் ஒரு வேளை ராஜஸீக அல்லது தாமசீகத் தன்மை கொண்டிருந்தால் நமஸ்காரம் செய்யும்போது அந்தப் பொருள் நம்முடைய நெற்றி அல்லது இதயத்தில் பட்டால் அதிலுள்ள ரஜ-தம அதிர்வலைகள் நம் உடலுக்குள் பரவுகிறது.’
– (ஸ்ரீசித்சக்தி) திருமதி அஞ்ஜலி காட்கில், 3.12.2004, மதியம் 1.32
8 உ. நமஸ்காரம் செய்யும்போது ஆண்கள் தலையை மூடக் கூடாது; ஆனால் பெண்கள் தலையை ஏன் தலையை மூட வேண்டும்?
ந ஸோபானத்வேஷ்டிதசிரா அவஹிதபாணிர்வாபிவாதயீத |
– ஆபஸ்தம்ப தர்மசூத்ரம் 1/4/14/19
அர்த்தம் : காலணிகளை அணிந்து கொண்டும், தலையை மூடியும் அல்லது கைகளில் ஏதாவது பொருளை வைத்துக் கொண்டும் நமஸ்காரம் செய்யக் கூடாது. (பெண்கள் தலையை முந்தானையால் மூடிக் கொண்டு நமஸ்கரிக்க வேண்டும்.)
8 ஊ. தார்மீக காரியங்களின்போது கழுத்தில் ஏன் வஸ்திரத்தை சுற்றிக் கொள்ளக் கூடாது?
பிரதக்ஷிணம், நமஸ்காரம், பூஜை, ஹோமம் மற்றும் ஜபம் செய்யும் சமயங்களிலும் குரு அல்லது தெய்வ தரிசனத்தின்போதும் கழுத்தில் வஸ்திரத்தை சுற்றிக் கொள்ளக் கூடாது. ஏனென்றால், கழுத்தை சுற்றி வஸ்திரத்தை சுற்றினால் அவரின் விஷுத்தி சக்கரம் விழிப்படைவதில்லை. அதனால் அவருக்கு ஸாத்வீகத்தின் பயன் குறைவாகவே கிடைக்கிறது.
8 எ. கைகளைக் குலுக்காமல் ஏன் கைகளைக் கூப்பி நமஸ்கரிக்க வேண்டும்?
1. கைகளைக் குலுக்கும்போது கைகளின் மூலம் மற்றவரிடமிருந்து நோய்க் கிருமிகள் நமக்குள் பரவக் கூடும். அதேபோல் சிலருக்கு உண்ட பிறகு மற்றும் வெளியிலிருந்து வரும்போது கைகளைக் கழுவும் வழக்கம் இருப்பதில்லை. இது போன்ற சமயங்களில் கைகளைக் குலுக்குவதால் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
2. கை குலுக்குவது என்பது தன்னிடமுள்ள பணிவைப் போக்கி தாமசீக இயல்புடன் நடந்து கொள்வதாகும். எப்போது இருவர் கை குலுக்குகின்றனரோ அப்போது அவர்களின் கைகளிலிருந்து வெளிப்படும் ரஜ-தம அதிர்வலைகள் இரு உள்ளங்கைகளின் வெற்றிடத்தில் சேர்கின்றன. இவ்வாறு சேர்ந்ததால் ஏற்படும் உராய்வு சக்தி கைகளிலிருந்து அந்த ஜீவனின் தேஹத்திற்குள் சேர்கிறது. அதோடு அந்த சக்தியிலிருந்து எழும் அணுக்களின் மூலம் அந்த ஜீவனை சுற்றியுள்ள வாயுமண்டலமும் தாமசீகமாக மாறுவதால், சூழல் அசுத்தமாகிறது. இந்த ரஜ-தம அதிர்வலைகள் சரீரத்தில் பாய்வதால் சரீரத்தின் சூர்யநாடி செயல்பட்டு சரீரத்தில் தமோ அணுக்கள் வேகமாக பாய ஆரம்பிக்கின்றன. இதன் பரிணாமம் மனோமய கோசத்தில் ஏற்பட்டு மனோமய கோசத்தில் தமோ அணுக்களின் நடமாட்டம் அதிகரித்து ஜீவன் எரிச்சலடைய ஆரம்பிக்கிறது.
அதனால் கை குலுக்குதல் போன்ற தாமசீக செயலைத் தவிர்த்து ஜீவனின் ஸாத்வீகத் தன்மையை அதிகரித்து பணிவை ஏற்படுத்தும் நமஸ்காரம் போன்ற செயலை வழக்கத்தில் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் ஜீவனுக்கு அந்தந்த கர்மாக்களுக்கு இறைவனின் சைதன்யமய பலம் கிடைத்து அவருக்கு இறைவனின் ஆசீர்வாத ரூபமான சங்கல்ப சக்தி கிடைக்கிறது; அதோடு இச்செயல் ஸாதனையாக உருவாக்கி குறைந்த காலத்திற்குள் பூரணத்துவத்தை சென்றடைகிறது.’
– திருமதி அஞ்ஜலி காட்கில், 28.5.2005
3. கை குலுக்குவது என்பது மேற்கத்திய கலாச்சாரம். அதனால் கை குலுக்கும் பழக்கம் மேற்கத்திய கலாச்சாரத்தைப் போற்றுவது ஆகும், நமஸ்காரம் செய்வது பாரதீய கலாச்சாரத்தைப் போற்றுவது ஆகும். பாரதீய கலாச்சாரத்தைப் போற்ற இளம் சந்ததியினருக்கு கற்றுத் தர வேண்டியது பாரதீயவாசிகளின் கடமை.
தகவல் : ஸனாதன் உருவாக்கியுள்ள கையேடு ‘நமஸ்காரத்தின் சரியான வழிமுறைகள்’