பிரம்மமுஹூர்த்தத்தில் எழுவதால் கிடைக்கும் ஒன்பது பலன்கள்

பிரம்மமுஹூர்த்தம் என்பது அதிகாலையின் 1.45 மணி நேர அளவை குறிக்கும். அதிகாலை 3.45 மணிக்கு தொடங்கி 5.30 மணிக்கு முடிவடையும் இந்த நேரம், இரவின் 4வது ஜாமம் அல்லது உத்தரராத்திரி என்று அழைக்கப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில்தான் நமது அன்றாடச் செயல்பாடுகள் அனைத்திற்கும் தேவையான சக்தியை  வழங்கும் பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இந்த நேரத்தில் எழுவதால்  ஒரே நேரத்தில் ஒன்பது நன்மைகள் கிடைக்கிறது.

பிரம்மமுஹூர்த்தம் (விடியற்காலையில் நல்ல நேரம்)

1. அதிக அளவில் ஆக்ஸிஜனைப் பெறுதல்

மனிதர்கள் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜன் அதிக அளவில் ஓசோனில் உள்ளது. பிரம்மமுஹூர்த்த நேரத்தில், ஓசோன் வாயு பூமியின் வளிமண்டலத்தின் மிகவும் கீழ் மட்ட நிலையில் (மிகவும் தாழ்ந்த அடுக்கில்) அதிக அளவில் குவிந்துள்ளது. இந்த அதிக அளவு ஆக்ஸிஜன் இரத்தத்தில் இருந்தால், ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து 90% நோய்களில் இருந்து நாம் விடுபடலாம். எனவே, இந்த நேரத்தில் ஒருவர் வலது நாசி வழியாக ஆழ்ந்த மூச்சை எடுப்பதன் மூலம் அவரது இரத்தம் சுத்தமாகும்.

2. வானம் நட்சத்திரங்களால் ஒளிரும் காலத்திற்குள் எழுந்திருங்கள்

இந்த காலகட்டத்தில் வானம் மங்கலாக ஒளிரும். பிரகாசமான வெளிச்சத்தில் கண்களைத் திறந்தால், ஒரு கணம் பார்வை இல்லாதது போல் உணர்கிறீர்கள். இது மீண்டும் மீண்டும் ஏற்பட்டால், கண்களில் பாதிப்பு ஏற்பட்டு, பார்வை பலவீனமடையும். இதைத் தடுக்க, ஒருவர் மங்கலான நட்சத்திர ஒளியுடன் வானம் இருக்கும்போது எழுந்திருக்க வேண்டும்.

3. அபான வாயுவின் சீரான செயல்பாடு

பிரம்மமுஹூர்த்த காலத்தில், பிரபஞ்சத்தில் பஞ்சபூத தத்துவதில் ஒன்றான வாயுதத்துவமும் மற்றும் மனித உடலில் அபான வாயுவும் அதிக செயல்பாட்டில் உள்ளது. அபான வாயு, மலம் கழித்தல் மற்றும் உடலை சுத்தப்படுத்தும் பணியை செய்கிறது. எனவே, இந்த வாயு செயல்படும் போது மலவெளியேற்றம் சீராக நிகழ்கிறது. மலம் கழிக்கும் போது எற்படும் மலச்சிக்கலால், காலப்போக்கில் மூல நோய் ஏற்படும். இவற்றை தடுக்கவும், சிறந்த குடல் சுத்திகரிப்புக்காகவும் பிரம்மமுகூர்த்தத்தின் போது மலம் கழிக்க வேண்டும். கரிம கடிகாரத்தின்படி (உடல் உறுப்பு கடிகாரத்தின் படி), இந்த காலகட்டத்தில் நமது பெருங்குடலில் சக்தி ஓட்டம் செயல்பாட்டு நிலையில் உள்ளது.

4. பிரம்மமுஹூர்த்தத்தின் போது உடலில் உள்ள ஒன்பது துவாரங்கள் மூலம் கழிவுகளை வெளியேற்றுவதன் முக்கியத்துவம்

நாள் முழுவதும் நம் உடலில் சேரும் கழிவுகள் உடலின் ஒன்பது துவாரங்களான  இரண்டு கண்கள், இரண்டு நாசி, இரண்டு காதுகள், வாய், சிறுநீர் மற்றும் குத திறப்புகள் வழியாக வெளியேற்றப்படுகிறது. இரவில் இந்த துவாரங்களில் கழிவுகள் சேர்ந்து குவிந்து கிடக்கும். இவை பாக்டீரியா மற்றும் வைரஸ்களை உண்டாக்கும் பல நோய்களைக் கொண்டுள்ளது. சூரிய ஒளியில் இவை வேகமாகப் பெருகி நோய்களை உண்டாக்கலாம். இதைத் தடுக்க பிரம்மமுஹூர்த்தத்தில் எழுந்திருந்து இக்கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும்.

5. பிரம்மமுஹூர்த்தத்தில் நீராடுவதன் முக்கியத்துவம்

ஒருவர் சூரிய உதயத்திற்கு முன் பிரம்மமுகூர்த்தத்தில் குளித்தால், தோல்களில் உள்ள துவாரங்கள் திறக்கப்பட்டு, அப்போது கிடைக்கும் தூய்மையான காற்றை உறிஞ்சிவிடும். இந்த காற்று அனைத்து உறுப்புகளுக்கும் சுத்தமான ஆக்ஸிஜனை வழங்குவதால், அன்றாட வேலைகளுக்கு தேவையான சக்தியை முழு உடலுக்கும் அளிக்கிறது. அதன்பிறகு, நாள் முழுவதும் வேலை செய்தாலும் உடல் களைப்பற்று உற்சாகமாக இருக்கும்.

6. மூளையின் ஞாபகசக்தி மற்றும் பிற சக்தி மையங்களை எழுப்புதல்

பிரம்மமுஹூர்த்த காலத்தில் ‘ஓம்’ என்ற நாமத்தை உச்சரிப்பதால் மூளையில் ஞாபகசக்தி மற்றும் பிற சக்தி மையங்கள் செயல்பட உதவுகிறது. இந்த நேரத்தில் கற்கும் விஷயங்கள், மற்ற நேரங்களில் கற்பதை விட அதிக நேரம் நினைவில் இருக்கும்.

7. பிரம்மமுகூர்த்தத்தில் உடலை தூய்மைப்படுத்துவதன் முக்கியத்துவம்

சூரிய உதயத்தின் போது பல்வேறு ஆரோக்கியத்தை அளிக்கும் அதிர்வலைகள் சூரியக் கதிர்களுடன் சேர்ந்து வளிமண்டலத்தில் (வாயு மண்டலத்தில்) நுழைகின்றன. நமது தோலிலுள்ள துவாரங்கள் திறந்திருந்தால், அவை ஈர்க்கப்படும். எனவே, உடலைத் தூய்மைப்படுத்த பிரம்மமுஹூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும்.

8. ஆன்மீக பயிற்சி செய்வதன் மூலம் ஏழு சக்கரங்களையும் செயல்படுத்துதல்

பிரம்மமுஹூர்த்த காலத்தில் “ஓம்” என்ற நாமத்தை உச்சரித்து ஆன்மீக பயிற்சியை மேற்கொண்டால் ஏழு சக்கரங்களும் செயல்படும். அந்த நேரத்தின் போது வளிமண்டலத்தின் தூய்மையானது அதிக அதிர்வலைகளை  உருவாக்க உதவி, குண்டலினியை (ஆன்மீக ஆற்றல் அமைப்பு) செயல்படுத்துகிறது.

9. புண்ணிய ஆத்மாக்கள் மற்றும் மஹான்களிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறுதல்

பிரம்மமுகூர்த்தத்தின் போது, ​​பல புண்ணிய மற்றும் மஹான்களின் ஆத்மாக்கள் மற்ற லோகங்களிலிருந்து பூமிக்கு இறங்குகின்றன. இந்த நேரத்தில் ஆன்மீக பயிற்சியை மேற்கொள்வதன் மூலம்,   அவர்களுடைய சிறந்த வழிகாட்டுதலைப் பெறலாம்.

பிரம்மமுஹூர்த்தத்தில் எழுவதால் இந்த ஒன்பது பலன்களையும் பெறலாம்.

(தகவல் : ஸனாதன் பிரபாத்)

Leave a Comment