ஆளுமை, ஆளுமை குறைகளைக் களைவது பற்றிய தவறான கருத்துகள் மற்றும் அவை ஏற்படுவதற்குரிய  காரணங்கள்

1. ஆளுமை

ஆழ்மனதிலுள்ள ஸன்ஸ்காரங்கள் ஒவ்வொரு காரியமாக வெளிப்படும் போது அவையே ஒருவரின் ஆளுமை ஆகிறது. அதாவது ஆளுமையே ஒருவரின் இயல்பு. சிலரிடம் இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடக்கும்போது அவர்களின் குணம் அல்லது குறைபாடு அவரை அடையாளம் காண்பிக்கிறது.

ஆளுமையில் உள்ள குணங்களும் குறைகளும் : சாதாரணமாக நல்ல ஸன்ஸ்காரங்களை குணங்கள் என்றும் தீய ஸன்ஸ்காரங்களை குறைகள் எனவும் கூறுகிறோம். ஒருவரின் ஒரு குறிப்பிட்ட தன்மையால் அவருக்கும், மற்றவருக்கும் கஷ்டம் ஏற்படும்போது அது அவரின்  ‘ஆளுமை குறை’ ஆகிறது.

1 அ. ஆளுமை குறைகளின் தோற்றம்

‘ஸத்யம் சிவம் ஸுந்தரம்’ என்பதற்கேற்ப இறைவன் ஸம்பூர்ண படைப்புகளை உருவாக்கும்போது ஒவ்வொன்றிலும் ஒரு அழகை வைத்தான். ஸத்யுகத்தில், மனிதனின் முதன்மையான பிறவியில் அவனின் மனதில் குணங்களே ஸன்ஸ்காரங்களாக இருந்தன. அப்பொழுது மனிதன் ‘ஸோஹம்’ உணவுடன் இருந்தான்.  அதாவது ‘இறைவனே நான்’ என்ற உணர்வு ஒவ்வொருவரிடமும் இருந்தது. இந்த யுகத்தில் உடனடியாக செயல்படும் திறன், குணங்களை வளர்த்துக் கொள்ளும் திறன், பணிவு, கீழ்ப்படிதல் போன்ற குணங்கள் பிறவியிலேயே அவனிடம் இருந்தன.

காலப்போக்கில் சமூகத்தின் ஸாத்வீகத் தன்மை குறைந்ததால் மனிதன், தர்ம வழியிலிருந்து விலகிப் போக ஆரம்பித்தான். அதன் பலனாக அவனுடைய குணங்கள், ரஜ – தம என்ற கருப்பு ஆவரணத்தால் மூடப்பட்டன. கலியுகத்தில் குணங்களின் இடத்தை ஆளுமை குறைகளான சோம்பேறித்தனம், குற்றம் காணுதல்,  அடாவடித்தனம், கீழ்ப்படியாமை போன்றவை பிடித்து விட்டன. அதேபோல் ஸோஹம்பாவத்தின் இடத்தை அஹம்பாவம் பிடித்துவிட்டது. இது போன்று ஆளுமை குறைகள் தோன்றின.

1 ஆ. ஆளுமை குறைகளின் வெளிப்பாடு

நாம் செய்யும் செயல்கள் மற்றும் மனதில் எழும் வெளிப்பட்ட, வெளிப்படாத எண்ண ஓட்டங்கள் நம்முடைய ஸன்ஸ்காரங்களை பொருத்தே அமைகின்றன. சாதாரணமாக நம் வாழ்வின் ஒட்டுமொத்த செயல்கள் மற்றும் எண்ணங்களில் 50% சரியானவை மற்றும் 50% தவறானவை. சரியான செயல்கள் மற்றும் எண்ணங்கள் குணங்களுடன் சம்பந்தப்பட்டவை மற்றும் தவறான செயல்கள் மற்றும் எண்ணங்கள் குறைகளுடன் சம்பந்தப்பட்டவை. தவறான செயல்கள் மற்றும் எதிர் எண்ணங்களால் நமக்கு துன்பம் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட மற்றவர்களுக்கும் துன்பம் அளிக்கிறோம். இதனால் மற்றவர் மனங்களிலும் எதிர் எண்ணங்கள் உண்டாகி அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. ஆளுமை குறைகள் என்பவை தவறான செயல்களாகவும் தவறான எண்ணங்களாகவும் வெளிப்படுகின்றன. அதனால் ஆளுமை குறைகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு அவற்றைப் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

2. ஆளுமை குறைகளைக் களைவது பற்றிய தவறான கருத்து

ஆளுமைக் குறைகளைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டும்?:  ஒரு மனிதன் என்றால் அவனிடம் குணமும் இருக்கும், குறைகளும் இருக்கும். குணங்களை விட்டுவிட்டு ஏன் குறைகளின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று சிலருக்கு தோன்றலாம்.

ஒருவரின் சுபாவத்தை (ஆளுமை) மாற்ற முடியுமா?: ஒருவரின் சுபாவத்தை மாற்றுவதற்கு எந்த மருந்தும் இல்லை. அப்படி இருக்கும்போது ஆளுமை குறைகளையும் செயல்முறையையும் செய்வதால் என்ன பயன் என்று சமூகத்தில் பலருக்குத் தோன்றலாம்.

சமூகத்தில் நன்நடத்தையுடன் இருந்தால் போதுமானது, எதற்காக ஆளுமை குறைகளை களைய வேண்டும்? ஆளுமை குறைகள் என்பது குணங்களைப் போல ஆளுமையின் ஒரு அங்கமாக விளங்குவதால் சம்பவத்திற்கேற்றபடி அவை வெளிப்படுகின்றன. அதனால் சமூகத்தில் ஒருவர் எவ்வளவு நன்நடத்தையுடன் நடந்து கொள்ள முயற்சித்தாலும் அவரின் பிறவி குணம் மாறாமல் இருப்பதால் அவரிடம் உள்ள குறைகளும் அப்படியே உள்ளன. அதோடு அவை அவ்வப்பொழுது வெளிப்பட்டு மன அழுத்தத்தை உண்டாக்குகின்றன.  அதனால் அவற்றை ஸன்ஸ்காரங்களாகிய வேருடன் பிடுங்கி எறிந்தால்தான் பயன் ஏற்படும்.

ஸாதனை செய்யும் போது குறைகள் வெளிப்படவில்லை என்றால் அவற்றை களைய வேண்டிய அவசியம் இல்லை: இவ்வாறு கூறுபவர்களுக்கு அன்றாட நடைமுறை வாழ்க்கையையே ஆன்மீக வாழ்க்கையாக வாழ்வதுதான் ‘ஸாதனை’ என்பது தெரிவதில்லை. அதனால் அவர்களுக்கு ஆளுமை குறைகளைக் களைய முயற்சிக்க வேண்டும் எனத் தோன்றுவதில்லை.

நாமஜபமே எல்லாவற்றையும் சாதிக்க வல்லது என்பதால் ‘ஆளுமை குறைகளைக் களைதலை’ விட நாமஜபத்தில் அதிக நம்பிக்கை உள்ளது:  இது போன்று சில ஸாதகர்களுக்குத் தோன்றுகிறது. அதனால் நாமஜபம்  செய்யக்கூடிய பலரும் ஆளுமை குறைகளை களைவதை புறந்தள்ளுகின்றனர். இதன் பலனாக நாமஜபத்தால் கிடைக்கும் சக்தி, மனதில் தோன்றக்கூடிய வேண்டாத சிந்தனைகள் மற்றும் சந்தேகங்களை தூர விரட்டுவதில் வீணாகிறது.

3. ஆளுமை குறைகளைக் களைதல் பற்றி தவறான கருத்துக்கள் ஏற்பட காரணம்

அறியாமை : தனிப்பட்ட, குடும்ப, சமூக மற்றும் ஆன்மீக வாழ்வை ஆளுமை குறைகள் எவ்வாறு பாதிக்கிறது என்பது பலருக்கு தெரியாமல் இருப்பதால் அவற்றைக் களைய வேண்டிய முக்கியத்துவத்தை அவர்கள் உணர்வதில்லை. அதனால் அவர்கள், இந்த செயல்முறையை தேவையில்லை என நினைக்கின்றனர்.

எதிர்மறையான மனப்பான்மை : ‘என் சுபாவம் மாறப்போவதில்லை’ என்று சுயமாக அனுமானித்துக் கொள்வதால் ஆளுமை குறைகளைக் களைய வேண்டும் என்ற சிந்தனையே எழுவது இல்லை.

அஹம்பாவத்தால் குறைகளை ஒத்துக் கொள்ளாமை : அதிக அஹம்பாவத்தால் சிலர் ‘என்னிடம் எந்த குறைகளும் இல்லை’ என்று கருதி தன் குறைகளை ஒத்துக் கொள்ள மறுக்கின்றனர். அதனால் ஆளுமை குறைகளைக் களைய முயற்சிக்க வேண்டும் என்று கூட அவர்களுக்குத் தோன்றுவதில்லை.

மனம் வெளிமுகமாதல் : மனம் வெளிமுகமாவதால் பெரும்பான்மை வேளைகளில் பாதகமான சந்தர்ப்ப சூழ்நிலைகளில் மற்றவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. அந்த சந்தர்ப்பத்தில் ‘நான் எங்கு தவறு இழைத்தேன்’ என்ற சிந்தனை ஏற்படுவதில்லை. சுய ஆளுமை குறைகளைக் களையும் சிந்தனையும் மனதில் ஏற்படுவதில்லை. அதனால் அவற்றைக் களையும் முயற்சியைப் பற்றிய பேச்சே இல்லை.

அலட்சியப் போக்கு : பல சமயங்களில் நம்மிடமுள்ள ஆளுமை குறைகளால் நமக்கும் பிறருக்கும் கஷ்டம் ஏற்படுகிறது எனத் தெரிந்தும் சுயமாற்றம் ஏற்படுவதற்கு ஆழ்மனம் எதிர்ப்பதாலும் ஆளுமை குறைகளைக் களைதலின் முக்கியத்துவம் மனதில் ஏற்படாததாலும் ஆளுமை குறைகளைக் களைவது பற்றிய அலட்சியப் போக்கு காண்பிக்கப்படுகிறது.

அளுமைக் குறைகளை களைவதால் மட்டுமே ஆன்மீக பயிற்சி நல்ல முறையில் நடக்கும் என்ற சரியான கண்ணோட்டம் இல்லாதது : மாறாக ஆன்மீக பயிற்சி செய்வதால் மட்டுமே ஆளுமை குறைகள் தானாக மறைந்து விடும் என்று தவறாக எண்ணுவது: ஆன்மீகத்தில் வெறும் ‘தத்துவவிஷயங்களை’ அறிந்து கொள்வது முக்கியமல்ல. ‘வாழ்க்கையில் ஆன்மீகத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஸாதனை செய்து அதன் அனுபூதிகளை உணர்தல்’ அதாவது ‘ஆன்மீக வாழ்க்கை வாழ்வது’ என்பது முக்கியமானதாகும். ஸாதனை நன்கு நடைபெற ஒவ்வொரு செயலின் மஹத்துவத்தை உணர்ந்து அச்செயலை செய்வது அவசியமாகிறது, ஆனந்தத்தை அடைவதை ஸாதனையின் லட்சியமாக இருப்பதால் ஒரு நாள் முழுவதும் எவ்வளவு மணி நேரம் ஸாதனையில் ஈடுபட்டோம், எவ்வளவு மணி நேரம் உலக விஷயங்களில் ஈடுபட்டோம் என்பதைக் காட்டிலும் ‘தினசரி வாழ்க்கையை ஆன்மீகத்துடன் இயைந்த வாழ்வாக வாழ்வோமா’ என்பதை கவனிப்பது அதிக மஹத்துவம் வாய்ந்தது. அதன் மூலம் தினசரி வாழ்வில் ஒவ்வொரு செயலின் மூலமும் ஆனந்தத்தை அனுபவிக்க ஸாதனை கண்ணோட்டத்தை வைத்திருப்பது அவசியமாகிறது. குணங்களால் நம் மூலமாக சரியான செயல்கள் நடைபெற்று, சரியான எண்ண ஓட்டங்கள் ஏற்பட்டு ஆனந்தத்தை அனுபவிக்க ஏதுவாகிறது. ஸாதனையில் ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட்டு மனம், புத்தி மற்றும் அஹம்பாவம் கரையும் வரை ஆளுமை குறைகள் செயல்பாட்டில் இருக்கின்றன. ஆளுமை குறைகளால் நம் மூலமாக தவறான செயல்கள் ஏற்பட்டு தவறான எண்ணங்கள் மனதில் தோன்றி நம்முடைய ஸாதனைக்கும் பிறரின் ஸாதனைக்கும் பாதகத்தை ஏற்படுத்துகின்றன. ஆளுமை குறைகளால் மனதில் ஏற்படும் தவறான எண்ணங்கள் மற்றும் சந்தேகங்களால் ஸாதனை தொடர்ந்து நடைபெறுவது இல்லை. அதனால் நமக்கு மற்றும் பிறருக்கு ஆனந்தம் கிடைப்பதில் ஏற்படும் தடைகளை தூர விலக்குவதற்கும் ஸாதனை தொடர்ந்து நடைபெறுவதற்கும் உன்னத குணங்கள் வளர்வதற்கும் ஆளுமை குறைகளைக் களைவது  அத்தியாவசியமாகிறது.

ஆளுமை குறைகளால் நாமஜபம் போன்ற ஸாதனை மூலமாக கிடைக்கும் சக்தி வீணாகிறது என்பதை உணராமல் இருத்தல் : நாமஜபத்தின் மூலமாக நாமத்துடன் அதாவது இறைவனுடன் ஒன்றிணைவதே  நாமஜபம் செய்வதன் நோக்கமாகும்.  இறைவனிடம் ஒரு குறையும் இல்லை. குறைகள் அற்றவன் அவன். ஆளுமை குறைகளைக் களையாமல் நிர்குணமான, ரூபமில்லாத, பரிபூரணமான, குறைகலற்ற மற்றும் ஸச்சிதானந்தமயமான இறைவனுடன் ஒன்றிணையும் நோக்கம் நிறைவேறாது. ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுவதற்கு நாமஜபம் ‘தசஅபராதங்கள்’ இல்லாமல் இருப்பது அவசியமாகிறது. எந்த ஒரு அபராதமும் மற்றும் தவறான செயலும் ஒருவரிடமுள்ள ஆளுமை குறைகளால் ஏற்படுகிறது. ஆளுமை குறைகளால் ஸாதர்களின் நாமஜபம் தவறுகள் இல்லாமல் நடைபெறுவதில்லை. ஆளுமை குறைகளால் நாள் முழுவதும் செய்யும் தவறுகளின் பாவத்தைப் போக்குவதற்கு நாமஜபத்தின் முழு சக்தியும் விரயமாகிறது. அதனால் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுவதில்லை. வால்யா என்ற வால்மீகி ரிஷியும் தான் செய்த பாவங்களைத் தொலைக்க எவ்வளவு ஆயிரக்கணக்கான வருடங்கள் தொடர்ந்து ஸ்ரீ ராமனின் அகண்ட நாமஜபத்தை செய்ய வேண்டி இருந்தது. அவ்வளவு வருடங்கள் தொடர்ந்து நாமஜபம் செய்வதற்கு வேண்டிய ஆயுள் பலம் நம்மிடம் இல்லை. ஆனால் ஆளுமை குறைகளைக் களையாமல் நாமஜபம் மட்டுமே செய்வது என்பது 30 பைசாக்கள் வருமானம் உள்ள ஒருவன் ஒரு ரூபாயை செலவு  செய்வது போலாகிறது. நாமஜபத்தைப் போன்றே மற்ற ஸாதனை வழிகளுக்கும் இந்த தத்துவம் பொருந்தும்.

 

தகவல்: ஸனாதனின் தமிழ் நூல் ‘ஆளுமை குறைகளைக் களைவதன் மஹத்துவம்’

Leave a Comment