ஆளுமை குறைகளால் ஏற்படும் தீங்கு

மனிதர்கள் மூலமாக எந்தக் காரியம் நடந்தாலும் அது மனதால் நடக்கிறது. உடலால் நடக்கும் ஒவ்வொரு செயலும் மனதால் நடக்கிறது. மனம் நல்லதாக இருந்தால், அதாவது மனதில் ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவம் இல்லாமல் இருந்தால் உடல் மூலமாக காரியங்கள் சரியானபடி நடக்கின்றன. ஆளுமை குறைகளும் அஹம்பாவமும் இருந்தால் உடலால் தவறான காரியங்கள் நடக்கின்றன. குணங்களை வளர்த்து, குறைகளைக் குறைப்பதற்கு பல வருடங்கள் பிடிக்கின்றன. மாறாக குறைகளைக் களைவதால் குணங்கள் விரைவில் வளர்கின்றன.

1. உலகியல் சம்பந்தமாக

உடலளவில் : ஆளுமை குறைகளால் உடலில் நோய்கள் ஏற்படுகின்றன. அவற்றை ‘மனோரீதியான நோய்கள்’ எனக் கூறுவர். உதாரணத்திற்கு ஒருவருக்கு கவலைப்படும் சுபாவம் இருந்தால் உடலின் எல்லா அங்கங்களிலும் அதன் பாதிப்பு ஏற்படுகிறது. அதன் விளைவாக அமிலக்கோளாறு, குடல்புண், ஆஸ்துமா இருதய நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. உடலின் செயலாற்றல் அதிகரிக்கவும் மனம் தூய்மையாகவும் ஆளுமை குறைகளைக் களையும்  முயற்சியை மேற்கொள்வது அவசியமாகிறது

மானசீக அளவில் : எண்ணிலடங்கா பிறவிகளின் ஆளுமைக் குறைகளால் மனதில் ஜடத்தன்மை ஏற்பட்டு மனதால் மூளைக்கு கிடைக்கும் சைதன்யம் தடைபடுகிறது. அதேபோல் மனம் மற்றும் மூளையை இணைக்கும் கிருஷ்ண தத்துவம் துண்டிக்கப்படுகிறது. அதனால் மனதில் செயலாற்றல் குறைந்து மனோவியாதிகள் ஏற்படுகின்றன. ஆளுமை குறைகளால் நம்பிக்கையின்மை, மன ஒருமைப்பாடு மற்றும் தன்னம்பிக்கை இல்லாமை, மறதி, ஷிஸோப்ரெனிய போன்ற பல்வேறு மனநோய்கள் ஏற்படுகின்றன. எந்த அளவிற்கு ஆளுமை குறைகள் அதிகமாக உள்ளதோ, அந்த அளவு மன அழுத்தம் ஏற்படுகிறது. ஒருவரிடம் கவலைப்படும் சுபாவம் இருந்து, சிடுசிடுக்கும் குறையும் இருக்குமானால் இருவகை அழுத்தங்களையும் மனது சகிக்க வேண்டி உள்ளது. அதனால் மற்றவர்களிடம் சஹஜமாக பழக முடிவதில்லை. சிறு சம்பவங்களாலும் அவருக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. தினசரி வாழ்க்கையில் குடும்ப மற்றும் நிதிநிலை நெருக்கடிகளை சந்திக்கும்போது ஆளுமை குறைகள் வெளிப்படுவதால் வாழ்க்கையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் மனப் போராட்டங்களையும் மன அழுத்தத்தையும் சந்திக்க வேண்டி உள்ளது மனதின் அழுத்தம் அதிகமாவதால் நம்முடைய குறைகளை எதிர்த்து போராடுவதற்கு மனதின் சக்தி மற்றும் ஆற்றல் பெருமளவு செலவாகிறது. எண்ண சுழற்சிகளால் மனதின் சக்தி செலவழிவதால் ஒருவருக்கு விரைவில் சோர்வு ஏற்படுகிறது, உற்சாகம் குறைகிறது.

புத்தியளவில் : ஆளுமை குறைகளால் மனதின் மீது விவேக புத்தியின் தாக்கம் ஏற்படாது. ஆளுமை குறைகளை களைவதால் விவேக புத்தி விழிப்படைந்து சித்தம் தூய்மையாகும். ஆளுமை குறைகள் அதிகம் இருந்தால் க்ரஹிக்கும் சக்தி மற்றும் எண்ணவோட்டம் ஆகியவற்றின் மீது எதிர்மறையான பரிணாமம் ஏற்படுகிறது.

குடும்ப அளவில் : குடும்பத்திலுள்ள அங்கத்தினரிடம் உள்ள ஆளுமை குறைகளால் அவர்களிடம் நல்ல முறையில் உரையாடுவதில் தடங்கல்கள் ஏற்படுகின்றன.  குடும்பத்தில் ஒருவர் முன்கோவம் உடையவராக இருந்தால், அவர் ஒருவரால் வீட்டில் உள்ள சூழ்நிலையே அழுத்தத்திற்குள்ளாகிறது. அத்தோடு குடும்பத்திலுள்ள அமைதி கெடுகிறது

சமூக அளவில் : ஒருவரிடம் உள்ள ஆளுமை குறைகளால் அவருடன் தொடர்பில் உள்ள ஒவ்வொருவருக்கும் கஷ்டம் ஏற்படுகிறது. இது போன்று அவரின் ஆளுமை குறைகள், சமூக ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதாக உள்ளது.

2. ஆன்மீக கண்ணோட்டத்தில்

பல்வேறு யோக வழிகளின் மூலம் தனிப்பட்ட ஆன்மீக முன்னேற்றம் சாத்தியமாகிறது. ஸமஸ்க்ருத ‘யுஜ்’ என்ற மூல வார்த்தையிலிருந்து ‘யோக’ என்ற வார்த்தை உருவானது. ‘யுஜ்’ என்றால் இணைதல் அல்லது சேருதல் என்று அர்த்தம். ஜீவன் சிவனோடு, அதாவது இறைவனோடு இணைந்து ஒன்றறக் கலப்பது என்பதே யோகம் ஆகும். இறைவனை அடைவது மற்றும் இறைவனுடன் ஒன்றுவது என்பதே ஆன்மீக முன்னேற்றத்தின் நோக்கம் ஆகும். இறைவனுடன் ஒன்றுவதற்கு முதலில் அவனுடைய குணதர்மத்துடன் ஒன்றிணைய வேண்டும். இறைவன், குறைகள் இல்லாத, ஸர்வ கல்யாண குணங்கள் நிறைந்த பரிபூரணமானவன் ஆதலால் ஸாதனை மூலமாக இறைவனுடன் ஒன்றிணைய நம் ஆளுமை குறைகளைக் களைந்து குணங்களை வளர்த்துக் கொள்வது அத்தியாவசியமாகிறது.

2 அ. எல்லா யோக வழிகளிலும் தடங்கல்களை ஏற்படுத்தும் ஆளுமை குறைகள்

எந்த ஒரு யோக வழியில் ஸாதனை செய்தாலும் ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தை சிறிதளவாவது களைய முயற்சிக்காவிட்டால் ஸாதனையில் முன்னேறுவது என்பது மிகவும் கடினமாக விளங்கும்.  பல்வேறு யோக வழிகளுக்கு தடங்கல்களை ஏற்படுத்தும் ஆளுமை குறைகள் பின் வருமாறு.

கர்ம யோகம் : சோம்பல், கவனக்குறைவு, ஒழுக்கமின்மை, எதிர்பார்ப்புடன் செயல்படுதல், குறுகிய மனப்பான்மை போன்ற ஆளுமை குறைகள் எந்த ஒரு கர்மாவையும் திறனுடன் மற்றும் எதிர்பார்ப்பில்லாமல் செய்ய தடங்கலை ஏற்படுத்துகின்றது,

கர்மகாண்டம் : சோம்பல், விடாமுயற்சி இல்லாதது, நேரந்தவறாமை இல்லாதது, கஞ்சத்தனம், சுத்தமின்மை, கவனக்குறைவு, தொடர்முயற்சி இல்லாதது, மனம் போனபடி நடப்பது போன்றவை கர்மகாண்டத்திற்கும் வேத நியமப்படி செய்ய வேண்டிய ஷோடசோபசார பூஜைக்கும்  தடங்கல்களை ஏற்படுத்தும்.

தியான யோகம் : விடாமுயற்சி, தொடர் முயற்சி, மன ஒருமைப்பாடு, சுயகட்டுப்பாடு மற்றும் சகிப்புத்தன்மை போன்ற குணங்கள் இல்லாதிருத்தல், சோம்பல் ஆகியவை தியான யோகத்தில் யம, நியம,  ஆஸன, பிராணயாம, ப்ரத்யாஹார, தாரண, தியான மற்றும் ஸமாதி ஆகிய நிலைகளுக்கு பெரும் தடைகளை ஏற்படுத்துகின்றன.

 ஞானயோகம் : ஞானயோகம், விவேகம் மற்றும் வைராக்கியம் ஆகியவற்றின் உதவியோடு புத்திக்கு சூட்சுமத் தன்மையையும் சுபாவத்திற்கு சாக்ஷி உணர்வையும் வழங்குகிறது. ஆளுமை குறைகளால் விவேகமும் வைராக்கிய உணர்வும் நிர்மாணமாவதில் தடைகள் ஏற்படுகின்றன.

பக்தி யோகம் : பாரபட்சம், சந்தேகம், வேண்டாத எதிர்மறையான எண்ணங்கள், மற்றும் மன ஒருமைபாடு, சுய கட்டுப்பாடு, அர்ப்பண உணர்வு, சகிப்புத்தன்மை போன்ற குணங்கள் குறைவாக இருப்பதால் ஒருவரின் நம்பிக்கை, பக்தி மற்றும் ஆன்மீக உணர்வில் பாதிப்பு ஏற்படுகிறது.

நாமஸங்கீர்த்தனயோகம் : மன ஒருமைப்பாடு, தொடர்முயற்சி மற்றும் விடாமுயற்சி இல்லாதிருத்தல், அதிக பரிசீலனை செய்யும் சுபாவம் ஆகியவை தொடர்ந்து நாமஜபம் நடப்பதற்கும் நாமஜபம் பத்து அபராதங்கள் இல்லாமல் நடப்பதற்கும் தடங்கல்களை ஏற்படுத்துகின்றன.

குருக்ருபாயோகம் : எந்த யோக வழி மூலமாக ஸாதனை செய்தாலும் குருவருள் இல்லாமல் மோக்ஷத்தை அடைய முடியாது. குரு கிடைத்த பின்பு குருவருள் தொடர்ந்து கிடைப்பது மஹத்துவம் நிறைந்ததாகும். உடல், மனம், செல்வம், புத்தி மற்றும் பிராணன் அதாவது எல்லாவற்றையும் குருசரணங்களில் அர்ப்பணிக்காமல் குருவருள் கிடைக்காது. எந்த ஒரு ஆளுமை குறையும் குருவருள் கிடைப்பதற்கு தடையாக விளங்குகிறது.

 2 ஆ வ்யஷ்டி ஸாதனைக்கு ஏற்படும் தீங்கு

தனிப்பட்ட ஆன்மீக முன்னேற்றத்திற்காக அதாவது இறைவனை அடைவதற்காக தினம்தோறும் தொடர்ந்து செய்யப்படும் முயற்சியே வ்யஷ்டி ஸாதனையாகும். ஆளுமை குறைகளால் வ்யஷ்டி ஸாதனையில் ஏற்படும் பாதிப்புகளின் சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1.ஆளுமை குறைகளால் மனதில் சந்தேகங்கள் ஏற்படுகின்றன அதனால் நம்பிக்கை ஆட்டம் கண்டு வ்யஷ்டி ஸாதனைக்கு பெரும் தீங்கு ஏற்படுகிறது.

2. கவலைப்படும் சுபாவத்தால் மன அழுத்தம் ஏற்படுகிறது இதனால் நாமஜபம் தரத்திலும் அளவிலும் குறைகிறது

3. நேரம் தவறாமை இல்லாதது, சோம்பல், ஒழுங்கின்மை ஆகிய ஆளுமை குறைகளால் சேவையை நேரத்தோடு முடிக்காமல் அரைகுறையாக முடிப்பது

4. ஆளுமை குறைகளால் எந்த ஒரு வேலையிலும் சேவையிலும் தவறுகளும் நடப்பதால் மன அழுத்தம் ஏற்படுகிறது. தவறுகளால் ஸாதகரின் மனம் துக்கத்திற்குள்ளாவதால் மேலும் மன அழுத்தம் ஏற்பட்டு, அதனால் ஸாதகரால் சேவையில் ஒருமித்த மனதுடன் ஈடுபட முடிவதில்லை

5. சரியானபடி திட்டமிடாமல் இருத்தல் மற்றும் முடிவு எடுக்காமல் இருத்தல் போன்ற ஆளுமை குறைகளால் எந்த சேவைக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பது தெரிவதில்லை. நேர பாகுபாட்டையும் செய்ய முடிவதில்லை. அதனால் சேவையை குறித்த நேரத்தில் செய்து முடிக்க முடிவதில்லை. திட்டமிடாததால் சேவையில் பல தவறுகள் நேருகின்றன. அதன் பலனாக செயல்திறன் குறைகிறது.

6. சேவைகளை ஒத்தி போடும் வழக்கம் இருந்தால் சில விஷயங்கள் செய்யப்படாமல் நின்று போகின்றன.  பிறகு ஏதாவது ஒரு சேவையை செய்வதற்கு மறந்தும் போகலாம். அவ்வாறு நடவாமல் இருக்க மனதின் சக்தி உபயோகப்படுத்தப்படுகிறது. நிறைவடையாத சேவையை செய்ய மனம் விழைகிறது. நிறைவடையும்வரை அது மனதை நெருடுகிறது. மேற்கொண்டு எவ்வாறு திட்டமிட்டு செய்வது என்ற சிந்தனை மனதில் ஓடிக்கொண்டே உள்ளது.  அதனால் தற்போது செய்யப்படும் சேவைகளிலும் மனம் லயிப்பதில்லை. இதன் பலனாக இரு சேவைகளிலும் முழு கவனம் செலுத்த முடிவதில்லை. சேவையும் பரிபூரணமாக முடிவடைவதில்லை.

‘ஸாதகர்களின் சிறு தவறும் இறைவனிடமிருந்து தூர விலக செய்கிறது. அதேபோல், அவர்களின் சிறு ஆளுமை குறையும் இறைவனுடன் ஒன்றறக் கலப்பதில் தடை ஏற்படுத்துகிறது.’ – சிவன் ( திரு ஞானேச்வர் பாடீல் மூலமாக, 29.11.2005, காலை 7.30 )

ஆளுமை குறைகளைக் களையாமல் இருப்பது என்பது இந்த பாரத்தை இப்பிறவியிலும் வரக் கூடிய பிறவிகளிலும் சுமப்பது என்றாகும்:  ஆளுமை குறைகளால் ஏற்படும் ஒவ்வொரு தவறான செயலும் மனதில் ஒரு தவறான எண்ணப்பதிவை உண்டாக்குகிறது. உதாரணத்திற்கு, ‘முன்கோவம்’ என்ற ஆளுமை குறையால் உங்கள் மூலமாக அடிக்கடி ஒரு தவறான செயல் நடைபெறுகிறது மற்றும் தவறான எதிரெண்ணம் மனதில் தோன்றுகிறது என்றால் ‘முன்கோவம்’ என்ற தீய சுபாவம் ஸன்ஸ்காரமாகவே உறுதிப்படுகிறது. இதன் மூலம் ‘ஆளுமை குறைகளால் தீய காரியங்களும் தீய காரியங்களால் ஆளுமை குறைகளும் திடப்படுகின்றன’ என்பது தெளிவாகிறது. இது போன்று ஒவ்வொரு பிறவிலும் ஆளுமை குறைகளின் ஸன்ஸ்காரங்கள் உறுதிப்படுகின்றன. ஒருவர் இப்பிறவியில் தன்னுடைய ஆளுமை குறைகளைக் களைவதற்கு முயலவில்லை என்றால் இப்பிறவியில் சேர்த்து வைத்த ஆளுமை குறைகளான சுமைகளையும் அடுத்த பிறவிக்கு சுமந்து செல்ல வேண்டி உள்ளது.

தகவல்: ஸனாதனின் தமிழ் நூல் ‘ஆளுமை குறைகளைக் களைவதன் மஹத்துவம்

 

 

Leave a Comment