Contents
- 1. தொலைக்காட்சியின் தீய விளைவுகள்
- 1 அ. கண்களுக்கு தீங்கு
- 1 ஆ. தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு உணவு உண்பதால் ஏற்படும் தீய விளைவுகள்
- 1 இ. பொருத்தமற்ற நிகழ்ச்சிகளை பார்ப்பதால் தீய ஸன்ஸ்காரங்கள் மனதில் ஏற்படுகின்றன
- 1 ஈ. தீய பழக்கங்களை உள்ளீர்த்துக் கொள்வதால் எதிர்கால வாழ்க்கை மோசமாக பாதிக்கப்படுகிறது
- 1 உ. ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், சக்திமான் போன்ற கற்பனை கதாபாத்திரங்களின் ஈர்ப்பால் ஏற்படும் மோசமான பாதிப்பு
- 1 ஊ. வாழ்க்கையில் விலைமதிப்பற்ற நேரத்தை வீணாக்குதல்
- 2. தொலைக்காட்சியை விட்டு எவ்வாறு விலகி இருப்பது ?
நல்லொழுக்க ஸன்ஸ்காரங்களை ஏற்படுத்திக்கொள்ள தொலைக்காட்சியை தூர விலக்குங்கள்!
1. தொலைக்காட்சியின் தீய விளைவுகள்
1 அ. கண்களுக்கு தீங்கு
குழந்தைகளே! இன்று தொலைக்காட்சி தொடர்கள் அனைவருக்கும் பிடித்தமான விஷயம். ‘தொலைக்காட்சி’ என்ற வார்த்தையில் அனைவரும் சிக்கிக் கொண்டுள்ளனர். பல குழந்தைகள் தொலைக்காட்சி முன் உட்கார்ந்து பல மணி நேரம் முழு கவனத்தையும் செலுத்தி அதிலேயே ஒன்றி விடுகின்றனர். அவர்கள் விளையாடுவதைக் காட்டிலும் தொலைக்காட்சி பார்ப்பதையே அதிகம் விரும்புகின்றனர். பெரும்பாலோர் தடித்த லென்ஸ் கொண்ட மூக்குக் கண்ணாடி அணிந்திருப்பர். அவர்கள் அடிக்கடி ‘கண்களில் வலி’ இருப்பதாக புகார் செய்வர்.
1 ஆ. தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு உணவு உண்பதால் ஏற்படும் தீய விளைவுகள்
சில குழந்தைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்த்துக் கொண்டு உணவு உண்பர். இந்த நிகழ்ச்சிகள் சர்ச்சைக்குரிய, சோகமான சம்பவங்கள், கொலைகள் போன்றவைகளை காட்டுகின்றன. இவை உணவின் மீது பாதகமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகளுக்கு உடல் மற்றும் மனதளவில் கோளாறுகள் ஏற்படுகின்றன.
1 இ. பொருத்தமற்ற நிகழ்ச்சிகளை பார்ப்பதால் தீய ஸன்ஸ்காரங்கள் மனதில் ஏற்படுகின்றன
பல குழந்தைகள் குடும்ப நாடகங்களை தொலைக்காட்சியில் பார்க்கின்றனர். அவை பெரும்பாலும் கோபம் அல்லது வெறுப்பினால் ஏற்படும் சண்டை, கண்ணீர் சிந்தும் காட்சிகள் போன்றவைகளை காட்டுகின்றன. குழந்தைகள் தொலைக்காட்சியில் திரைப்படங்கள், சினிமா நடிகர்களின் பேட்டி, ஆபாசமான பாடல்கள் மற்றும் நடனங்களை பார்க்கின்றனர். பின் அதேபோல் பின்பற்ற அல்லது ஆபாசமான பாடல்களை பாட நினைக்கின்றனர்.
1 ஈ. தீய பழக்கங்களை உள்ளீர்த்துக் கொள்வதால் எதிர்கால வாழ்க்கை மோசமாக பாதிக்கப்படுகிறது
1. எதிர்த்து பேசுதல், சண்டையிடுதல், திருடுதல், கற்பழிப்பு, கொலைகள் போன்ற விரும்பத்தகாத காட்சிகளை தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் பார்ப்பதால் குழந்தைகள் வழிதவறி போவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
2. திகில் தொடர்களை பார்ப்பதால் குழந்தைகள் பயந்து இரவில் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டு கத்துகிறார்கள் அல்லது அழுகிறார்கள்.
3. பரீட்சை நெருங்கும் சமயம் கூட குழந்தைகளால் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்த முடிவதில்லை. இதனால் அவர்களின கல்வி கடுமையாக பாதிப்பதோடு அவர்களின் எதிர்கால வாழ்வும் மோசமாக பாதிக்கப்படுகிறது.
1 உ. ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், சக்திமான் போன்ற கற்பனை கதாபாத்திரங்களின் ஈர்ப்பால் ஏற்படும் மோசமான பாதிப்பு
கற்பனை கதாபாத்திரங்கள் அவர்கள் தோன்றுவது போல் உண்மையில் அவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள் அல்ல. எனவே, அவர்களால் நமக்கு எப்பொழுதும் உதவ முடியாது. தற்போது, ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், சக்திமான் போன்ற பொழுதுபோக்கு தொடர்கள் சிறு குழந்தைகளுக்காக தொலைக்காட்சியில் காட்டப்படுகின்றன. இந்த கற்பனை கதாபாத்திரங்கள் சமுதாயத்தின் பேரழிவு சமயங்களில் உதவுவது மற்றும் பிறரின் நலனுக்காக போராடுவது போன்று தோன்றுவார்கள். இந்த கதாபாத்திரங்கள் பறப்பார்கள், மறைவார்கள், ஓடும் ரயிலை நிறுத்துவார்கள் மற்றும் தங்கள் விரல்கள் மூலம் துப்பாக்கி குண்டுகளை அல்லது அழிக்கும் கதிர்களை வெளியிடுவார்கள். வில்லன்களை இத்தகைய தகிடுதத்தங்கள் மூலம் அழிப்பது போல காட்டுவார்கள். இதனால், குழந்தைகள் இத்தகைய கதாபாத்திரங்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள். இந்த கதாபாத்திரங்கள் நம்முடைய அழிவு காலத்திலும் காப்பாற்றுவார்கள் என அவர்கள் நினைக்கிறார்கள். எனினும் உண்மையில், இந்த கதாபாத்திரங்கள் அனைவரும் கற்பனையே, உண்மை உலகில் அவர்களின் இருப்பு இல்லை. ஆகவே நம்முடைய கஷ்டகாலத்தில் அவர்களை அழைத்தால் அவர்களால் நமக்கு உதவ முடியாது.
கற்பனை கதாபாத்திரங்களை விட மாருதி கடவுளின் வேகம் மிக அதிகம்.
1. ஸ்பைடர்மேன் அல்லது சூப்பர்மேன் போன்ற கற்பனை கதாபாத்திரங்களை பிடிப்பதற்கு காரணம் அவர்களின் வேகம். மாருதி கடவுளின் வேகம் இவர்களை விட அதிகம் மட்டுமல்ல மனதின் வேகத்தை விட அதிகம். ஸ்ரீ ராமர் மற்றும் இராவணனுக்கு நடந்த யுத்தத்தில், ஸ்ரீராமரின் தம்பி லட்சுமணன், இந்திரஜித்தால் அடிப்பட்டு மூர்ச்சையாகி விட்டான். அப்பொழுது, அவருக்கு சிகிச்சை அளித்த வைத்தியர் மாருதியிடம் துரோணகிரி மலையில் இருந்து ‘ஸஞ்ஜீவினி’ என்ற மூலிகையை எடுத்து வரச் சொன்னார். அதனை எடுக்க, மாருதி பல ஆயிரம் மைல்களை ஒரே இரவில் கடந்தார். முழு துரோணகிரி மலையை தூக்கி வந்தார். லட்சுமணன் நினைவு திரும்பியதும் அந்த இரவே அந்த மலையை அதன் இருப்பிடத்தில் கொண்டு வைத்தார். இக்காரியத்தை அவர் வியக்கத்தக்க வேகத்தில் முடித்தார். மாருதி, அவ்வளவு சக்தி மற்றும் வேகம் மிக்கவர்.
2. அசோகவனத்தில் மாருதி, சீதையை சந்தித்தபோது, தன்னுடன் வருமாறு வேண்டினார். அச்சமயம், மாருதி எடுத்திருந்த சிறிய வடிவத்தை கண்டு சீதை அவரின் சக்தியை சந்தேகப்பட்டார். அவர் உடனே தன் விச்வரூபத்தை வெளிப்படுத்தினார்.
3. தெய்வங்கள் கற்பனை அல்ல உண்மையில் உள்ளனர் என்பதை உணர ஸாதனை செய்யுங்கள்: ஹிந்து தர்மத்தில் உள்ள தெய்வங்கள் கற்பனை அல்ல உண்மையில் உள்ளனர். ஸாதனை செய்பவர்கள் மற்றும் ஆழ்ந்த பக்தி உடையவர்களுக்கு தெய்வங்கள் உதவுவர். ஸனாதன் பாலஸன்ஸ்கார் வகுப்புகளில் கலந்து கொள்ளும் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கள் ஆன்மீக அனுபூதிகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். குழந்தைகளே! ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், சக்திமான் போன்ற கற்பனை கதாபாத்திரங்களால் ஈர்க்கப்படாமல், எல்லாவற்றையும் அறிந்த, எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை புரிந்து கொள்ளும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் திறனுக்கு ஏற்ப ஸாதனை செய்யுங்கள்.
1 ஊ. வாழ்க்கையில் விலைமதிப்பற்ற நேரத்தை வீணாக்குதல்
குழந்தைகள் தாகம், பசி, தூக்கம், படிப்பு, விளையாட்டு மற்றும் பிற வேலைகளை மறந்து தொலைக்காட்சி பார்ப்பதில் ஈடுபடுகின்றனர். அதனால் அவர்களின் குழந்தை பருவத்தின் பெரும்பகுதி வீணாகிறது.
2. தொலைக்காட்சியை விட்டு எவ்வாறு விலகி இருப்பது ?
2 அ. படிப்பது போன்ற மற்ற பொழுது போக்குகளை பின்பற்றுங்கள்
தொலைக்காட்சியால் ஏற்படும் தீய விளைவுகளை உணர்ந்து அதனை விட்டு விலகி இருங்கள். அந்த ‘முட்டாள் பெட்டி’யிடம் ஒட்டிக் கொள்வதை விட, வெளிப்புற விளையாட்டுகள், புதிய விஷயங்களை கற்றுக் கொள்வது, புதிய பொழுதுபோக்குகளை வளர்த்துக் கொள்வது மற்றும் உடற்பயிற்சி செய்வது போன்றவற்றில் குழந்தைகள் ஈடுபட வேண்டும். ‘தள்ளுங்கள் ரிமோட்டை ஒரு பக்கம் மூலையில் எடுங்கள் படிப்பதற்கு புத்தகத்தை விரைவில்’ என்பது உங்களின் தாரக மந்திரமாகட்டும் !
2 ஆ. தொலைக்காட்சி பார்க்கும் பழக்கத்தை படிப்படியாக குறைத்துக் கொள்ளுங்கள்
ஒவ்வொரு வாரமும் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தை அரை மணி நேரம் குறைத்துக் கொள்ளுங்கள். விடுமுறை நாட்களில் இந்த நேரத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைத்துக் கொள்ளுங்கள். பரீட்சை சமயத்தில் தொலைக்காட்சியை முழுவதும் நிறுத்தி விடுங்கள்’ – குமாரி இந்திராணி புராணிக், ஸனாதன் ஆச்ரமம், ராமநாதி, கோவா.
2 இ. பொதுநல அல்லது கல்வி நிகழ்ச்சிகளை பார்க்க மட்டுமே தொலைக்காட்சியை உபயோகிக்க வேண்டும்
‘பொழுதுபோக்கு திரைப்படங்கள் மற்றும் ஆபாசமான நடன நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு பதில், இராமாயணம், மஹாபாரதம், தமிழ் கடவுள் முருகன், ஜான்சி ராணி, போன்ற தொடர்கள், ஆதிசங்கரர், அருணகிரிநாதர் போன்ற மஹான்களின் படங்கள் அல்லது புரட்சியாளர்களின் தொடர்களை பார்க்க வேண்டும். நம் தேசப்பற்றை வெளிப்படைய செய்யும் மற்றும் பொது அறிவை வளர்க்கும் (‘டிஸ்கவரி சேனல்’ மற்றும் ‘நேஷனல் ஜியாக்ராபிக்’ போன்றவை). நிகழ்ச்சிகளை குறைந்த நேரத்திற்கு பார்க்க வேண்டும்’. – திரு பிரசாத் மஹய்ஸ்கர், ஸனாதன் ஆச்ரமம், பன்வேல். மகாராஷ்டிரா.
2 ஈ. தொலைக்காட்சி பார்க்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
1. தொலைக்காட்சியின் திரை நடுத்தர அல்லது பெரிய அளவில் இருக்க வேண்டும்.
2. தொலைக்காட்சி பார்க்கும் அறை இருட்டாக இருக்கக் கூடாது.
3. தொலைக்காட்சி பார்க்கும்போது திரையை விட்டு சிறிது துரத்தில் அமர வேண்டும்.
தகவல்: ஸனாதனின் தமிழ் நூல் ‘நல்லொழுக்கங்கள் மற்றும் நல்ல பழக்கங்கள்’