நல்லொழுக்கங்கள் மற்றும் நல்ல பழக்கங்கள் ( பகுதி 2)

Contents

வீட்டில் உள்ள பெரியவர்கள் மற்றும் பெற்றோரை வணங்கி நமஸ்கரிக்கவும்!

குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் மற்றும் பெற்றோரை வணங்கி நமஸ்கரிக்க வேண்டும். அதாவது கால்களை தொட்டு வணங்க வேண்டும். சில குழந்தைகள் தங்கள் பெற்றோரின் காலில் விழுந்து நமஸ்கரிக்க வெட்கப்படுவர். ஒரு தாய் தன் குழந்தைகளின் தேவைகளை கவனிக்க நாள் தோறும் 10 முறையேனும்  குனிந்து நிமிர்ந்து வேலை செய்கிறாள். விளையாடும் போது குழந்தைகள் அண்டை வீட்டாருக்கு தீங்கு விளைவித்தால், தந்தை அவர்கள் அவமானப்படுத்தியதை சகித்துக் கொள்கிறார். பின் ஏன் குழந்தைகள் இப்பேற்பட்ட பெற்றோரை வணங்க வெட்கப்பட வேண்டும்? குழந்தைகளே! இன்று முதல் உங்கள் பெற்றோரை வணங்கி நமஸ்காரம் செய்வீர்கள் அல்லவா?

பெற்றோர் மட்டுமல்ல, வீட்டில் உள்ள பெரியவர்கள் மற்றும் மூத்த சகோதர சகோதரிகள்,.வயதில், ஞானத்தில், கலையில் மூத்தவர்களை சந்திக்கும் போது அவர்களை மரியாதையுடன் நமஸ்கரிக்க வேண்டும்

1. ஏன் பெரியவர்களை நமஸ்கரிக்கும் போது தலை வணங்க வேண்டும் ?

பெரியவர்களை நமஸ்கரிக்கும்போது தலை வணங்குவதால் மரியாதை வெளிப்படுகிறது. நம்மில் பணிவு என்னும் நல்லொழுக்கம் உண்டாகிறது. ‘தலை வணங்கி நமஸ்காரம் செய்வது’  நம் அகங்காரம் குறைய மிக எளிமையான வழி.

2. பெற்றோரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் ?

பெற்றோரின் முக்கியத்துவம்:  ‘மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ’ என்பது பழமையான வாக்கு.  தாய் தந்தையை இறைவனாக கருதவும். இது நம் மகத்தான ஹிந்து கலாச்சாரத்தின் போதனை.

 2 அ.  பெற்றோரின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்களுக்கு ஸேவை செய்த சில உன்னத புருஷர்கள்

ச்ரவணகுமாரன் : தன்னுடைய கண் தெரியாத பெற்றோருக்கு அயராது ஸேவை புரிந்தான். வயதான பெற்றோர் காசிக்கு செல்ல வேண்டும் என விருப்பப்பட்டதும் அவன் உடனே அவ்விருப்பத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தான். அவர்களை காவடியில் அமர வைத்து, அதனை சுமந்து கால்நடையாக காசிக்கு புறப்பட்டான்.

ஸ்ரீராமர் : ராமன் தன்னுடைய இளைய சகோதரனுக்காக அயோத்தியா அரியணை உரிமையை விட்டுக்கொடுத்து தன் மாற்றாந் தாய் கைகேயியின் கட்டளையை முழு மனதுடன் கீழ் பணிந்து, 14 வருடங்கள் காட்டில் வாழப் புறப்பட்டார். இதன் மூலம், தன் மாற்றான் தாய் கைகேயிக்கு  தன் தந்தை அளித்த வாக்கையும் காப்பாற்றினார்.

பக்தன் புண்டலீகன் : தவம் போல் தன் பெற்றோருக்கு ஸேவை புரிந்தான். இத்தவத்தால், பகவான் விட்டலன் மனம் மகிழ்ந்து அவனை காண வந்தார். தன் பெற்றோருக்கு செய்யும் ஸேவையில் எந்த இடையூறும் நேர விரும்பாத குண்டலீகன், ஒரு செங்கலை வைத்து அதன் மீது பகவான் விட்டலனை நிற்கக் கூறினான்.

சத்ரபதி சிவாஜி மஹராஜ்: தன் தாய் ஜீஜாபாயை சந்திக்கும்போது அவரை நமஸ்கரிப்பார். தன் தாயின் அனைத்து அறிவுரைகளையும் கீழ்ப்பணிந்து அதன்படி நடப்பார். போருக்கு செல்லும்போது அவரை நமஸ்கரித்துவிட்டு அவரின் ஆசியைப் பெறுவார்.

2 இ. பெற்றோருக்கு முழு மனதுடன் ஸேவை செய்வதால் அடையும் பலன்கள்

‘பெற்றோருக்கும் குருவுக்கும் செய்யும் ஸேவையை மிக உயர்ந்த தவம்’ என திருமறை நூல்கள் கூறுகின்றன.

துஷ்டாயாம்  மாதிரி சிவே துஷ்டே பிதரி பார்வதி |
  தவ ப்ரீதிர்பவேத்தேவி   பரப்பிரம்ம ப்ரஸீததி   ||

-,மஹா நிர்வாணதந்த்ரா  உல்லாஸ் 8 ,  ஸ்லோகம்  26

 அர்த்தம் :  சிவபெருமான் கூறுகிறார், “ஓ பார்வதி! பெற்றோரை சந்தோஷமாக வைத்துக் கொள்கிறவர்களுக்கு நீ அருள் புரிகின்றாய்.  இத்தகைய ஜீவனிடத்தில் பரப்பிரம்மமும் மகிழ்ச்சியும் அடைகின்றார்”.

 2 ஈ.  எப்பொழுதும் பெற்றோர் மனம் வருந்தும்படி நடக்காதீர்!

குழந்தைகளுக்காக பெற்றோர் மிகவும் கஷ்டப்படுகின்றனர். குழந்தைகள் நன்றாக வர வேண்டும் மற்றும் அவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்கிறார்கள். எனினும், சில குழந்தைகள் பெற்றோரை எதிர்த்துப் பேசுகின்றனர். இது பெற்றோரின் மனதை புண்படுத்துகிறது. குழந்தைகள் பெற்றோரை எதிர்த்து பேசும்போது அவர்கள் மனம் புண்பட்டால், அது கடவுளை புண்படுத்தியதற்கு சமம். இதனைத் தவிர்க்க, உங்கள் பெற்றோரை நேசியுங்கள்.  அவர்களிடம் நன்றி உணர்ச்சியுடன் இருங்கள்.

 2 உ. உங்கள் பெற்றோரை முழு மனதுடன் கீழ்ப்படியுங்கள்

ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு பிடித்த உணவை தயாரிப்பதுடன் அவர்களுடைய தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுகிறாள். அதேபோல், தன் குழந்தைகள் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் சமயம் பல இரவுகள் தூங்காமல் அவர்களை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறாள். இவையெல்லாம் செய்யும்போது அவள் தன்னைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவள் எப்பொழுதும் தன் குழந்தைகளின் நலனைப் பற்றியே நினைப்பாள். தந்தையும் குழந்தைகள் மற்றும் குடும்ப தேவைகளுக்காக மிகவும் கடினமாக உழைத்து பணம் சம்பாதிக்கிறார். தன் குழந்தைகளுக்கு தேவையானவற்றை கொடுக்க அவர் எப்பொழுதும் தயாராக இருக்கிறார். எனவே தங்கள் பெற்றோரை கீழ்பணிகிறோமா என்பதை குழந்தைகள் சிந்திக்க வேண்டும்.

நீங்கள் எவ்வளவுதான் உங்கள் பெற்றோருக்கு சேவை செய்தாலும் பெற்ற கடனை உங்களால் அடைக்க முடியாது. அக்கடனில் இருந்து சிறிதளவேனும் விடுபட வேண்டும் என்றால், அவர்களை முழு மனதுடன் கீழ்பணிவதோடு அவர்களிடம் மரியாதையுடன் பேச வேண்டும்.

 2 ஊ. செயல்கள் மூலம் பெற்றோரிடம் அன்பை வெளிப்படுத்த வேண்டும்

குழந்தைகளுக்கு பெற்றோரிடம் அன்பு உள்ளது. எனினும், இந்த அன்பு, செயல்கள் மூலமாகவும் வெளிப்பட வேண்டும். குழந்தைகள், செயல்களின் மூலம் தங்களின் அன்பை வெளிப்படுத்தும்போது பெற்றோர் மகிழ்ச்சி அடைகின்றனர்.

  • அன்றாட வேலைகளில் பெற்றோருக்கு உதவி புரியுங்கள்.
  • உங்கள் பெற்றோருக்கு தொந்தரவு கொடுக்காமல் உங்கள் வேலைகளை நீங்களே செய்யுங்கள்.
  • மற்ற வீட்டு வேலைகளான சாப்பிடும் முன் தட்டு, கிண்ணம் போன்ற பாத்திரங்கள், குடிக்கும் நீர் உட்காரும் இடம் போன்றவற்றை ஒழுங்காக வையுங்கள்.
  • சாப்பிட்ட பின் அனைத்தையும் சுத்தம் செய்யுங்கள்.
  • இரவில் அனைவருக்கும் படுக்கை மற்றும் போர்வையை விரித்து வையுங்கள்.
  • உங்கள் பெற்றோரின் பாதங்களை பிடித்து விடுங்கள்

3. விருந்தினரை எவ்வாறு வரவேற்று உபசரிக்க வேண்டும்?

விருந்தினர் வீட்டுக்கு வரும்போது குழந்தைகள் சாதாரணமாக சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு அல்லது விளையாடிக் கொண்டிருப்பர். விருந்தினரை வரவேற்கக் கூட மாட்டார்கள்.  விருந்தினர் நிற்கும்போது குழந்தைகள் தொடர்ந்து அமர்ந்திருப்பர். பெற்றோர் தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு உள்ளே செல்ல உத்தரவிட்டால் அவர்கள் எரிச்சல் அடைந்து விருந்தினர் முன் தங்கள் பெற்றோரை எதிர்த்து பேசுவர். குழந்தைகளை!  இத்தகைய நடத்தை முறையானதா?

3 அ. விருந்தினரிடம் எத்தகைய ஆன்மீக உணர்வு இருக்க வேண்டும் ?

ஹிந்து கலாச்சாரத்தில் ‘அதிதி தேவோ பவ’ என கூறப்பட்டுள்ளது. அதன் அர்த்தம் ‘விருந்தினர் இறைவனுக்கு சமம்’ என்பது. இறைவனே விருந்தினர் ரூபத்தில் வருகிறார் என்று ஹிந்து கலாச்சாரம் நமக்கு கற்றுத் தருகிறது. இந்த போதனைப்படி, பெற்றோர் மட்டுமல்ல, குழந்தைகளும் விருந்தினரை அன்புடன் வரவேற்று முழு மனதுடன் உபசரிக்க வேண்டும். அவர்களின் நல்வாழ்த்துக்கள் மற்றும் ஆசிகளை இது பெற்று தரும்.

3 ஆ. விருந்தினரை குழந்தைகள் எவ்வாறு வரவேற்று உபசரிக்க வேண்டும் ?

1. கைகளை கூப்பி வணங்கி சிரித்த முகத்துடன் வரவேற்க வேண்டும்.

2. விருந்தினரின் கைகளில் ஏதாவது பெட்டி இருந்தால் அதை நீங்கள் தூக்கி வாருங்கள்.

3. விருந்தினரை சோபா அல்லது நாற்காலியிடம் அழைத்து சென்று அவர்களை சௌகரியமாக அமரும்படி கேட்டுக் கொள்ளவும். அவர்கள் பருகுவதற்கு தண்ணீர் கொடுக்கவும்

4. விருந்தினர் அமர்ந்த பிறகு நீங்கள் அமரவும்.  அவை அனைத்தும் அவர்களுக்கு மரியாதை அளிக்கக்கூடிய செயல்கள்.

5. அவர்களிடம் இன்முகத்துடனும் அன்புடனும் உண்மையாகவும் நலம் விசாரிக்கவும்

6. பெற்றோர் உங்களை தேநீர், காபி அல்லது பழச்சாறு தயாரிக்க சொன்னால் உடனே தயாரிக்கவும். இது விருந்தோம்பலின் ஒரு பகுதியே.

7. விருந்தினருடன் உங்கள் பெற்றோர் பேசிக் கொண்டிருக்கும் போது இடையே குறுக்கிட்டு பேசாதீர்.

8. விருந்தினர் புறப்படும்போது எழுந்து நில்லுங்கள். அவர்கள் புறப்பட்டு செல்லும்போது சிறிது தூரம் வழிநடத்தி சென்று அனுப்பி வையுங்கள்

தகவல்: ஸனாதனின் தமிழ் நூல் ‘நல்லொழுக்கங்கள் மற்றும் நல்ல பழக்கங்கள்’

 

Leave a Comment