நல்லொழுக்கங்கள் மற்றும் நல்ல பழக்கங்கள் ( பகுதி 1)

1.நல்லொழுக்கங்கள் ஏன் அவசியம் ?

1 அ. ஸன்ஸ்காரின் வரையறை

அன்புள்ள குழந்தைகளே! ‘ஸன்ஸ்கார்’ என்றால் என்ன? சுருக்கமாக, ஸன்ஸ்கார் (ஆழ்மன பதிவுகள்) என்பது நல்லொழுக்கங்களை பெருக்குதல் மற்றும் ஆளுமை குறைகளை வகுத்தல் ஆகும். ‘நல்லொழுக்கங்களை பெருக்குதல்’ என்றால் நம்மிடமுள்ள நல்லொழுக்கங்களை அதிகரித்தல் மற்றும் ‘ஆளுமை குறைகளை வகுத்தல்’ என்றால் நம் ஆளுமை குறைகளை குறைத்தல் என்றும் பொருள்படும்.

1 ஆ. ஸன்ஸ்காரின் வகைகள்

நல்ல மனிதர்களாக உருவாக வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் நல்ல ஸன்ஸ்காரங்களை உள்வாங்கிக் கொள்ள முயல வேண்டும்.  நல்ல மற்றும் தீய ஸன்ஸ்காரங்களின் உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1 ஆ 1. நல்ல ஸன்ஸ்காரங்கள் : அதிகாலை கண்விழித்தல், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் மற்றும் பெற்றோரை வணங்குதல், எல்லோரிடமும் பணிவுடனும் அன்புடனும் நடந்து கொள்ளுதல், தூய்மையை கடைப்பிடித்தல், நேர்த்தியாக இருத்தல், தினமும் பள்ளிக்கு செல்லுதல், வீட்டுப்பாடத்தை நேரத்தில் முடித்தல், வீட்டு வேலையில் அம்மாவிற்கு உதவுதல் முதலியன.

 1 ஆ 2. தீய ஸன்ஸ்காரங்கள் : காலையில் தாமதமாக எழுதல், தொடர்ந்து தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருத்தல், படிக்காமல் இருத்தல், எதிர்த்து பேசுதல், அசுத்தமான பழக்கங்கள், படிக்கும் மேசையை அசுத்தமாக வைத்திருத்தல், பொய் சொல்லுதல் முதலியன.

1 இ. குழந்தை பருவத்திலேயே நல்ல ஸன்ஸ்காரங்களை ஏற்படுத்துவதன் அவசியம்

1 இ 1. நல்ல ஸன்ஸ்காரங்களை ஏற்படுத்துவதன் மூலம் வாழ்க்கை முன்னுதாரணமாகிறது : முன்காலத்தில், குழந்தைகள் பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்து அன்றாடம் அவர்களை வணங்கினர்.  உணவு உண்ணும் முன் குழந்தைகள் ஸ்லோகம் சொல்வர். மாலையில் கை கால்களை கழுவி சுத்தம் செய்துவிட்டு, கடவுளுக்கு விளக்கேற்றி ஸ்லோகம் சொல்வர். இரவில் நேரத்திற்கு உறங்கி காலையில் சீக்கிரம் எழுந்திருப்பர். இதுபோன்ற நடத்தையால் அவர்களிடம் நல்ல குணங்கள் உருவாயிற்று. குழந்தைகளே!  மற்றவர் உங்களை ‘உதாரண மாணவன் எனக் கூற வேண்டாமா? ஒரு ‘உதாரண மாணவனாக திகழ நீங்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும்.  நல்ல ஸன்ஸ்காரங்களை உள்வாங்கிக்கொள்வதால் ஒழுக்கமுள்ளவராக மாறி அதனால் உதாரண மாணவனாக முடியும்.

1 இ 2. நல்ல ஸன்ஸ்காரங்களை உள்வாங்கிக்கொள்வதால், வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும் : பெற்றோரை கீழ்பணிதல், பெரியோரை மதித்தல், இறைவனிடம் பக்தி போன்ற ஸன்ஸ்காரங்களால் இறைவனின் அருளை பெறுவதோடு வாழ்க்கை ஆனந்தமயமாகிறது. இதற்கு நேர் மாறாக, பிறரை கிண்டல் செய்தல், பெரியவர்களிடம் திமிராக பேசுதல், பொய் பேசுதல் போன்ற தீய ஸன்ஸ்காரங்களால் பாவங்கள் உண்டாகி வாழ்க்கை துன்பமயமாகிறது.

1 இ 3. உதாரண தலைமுறை தேசத்தை விடுவிக்கிறது : சத்ரபதி சிவாஜி மஹராஜ் ஒரு உதாரண புருஷராக இருந்ததால் அவரால். ‘ஹிந்தவி ஸ்வராஜ்’ யத்தை உருவாக்க முடிந்தது.  நாமும் ஒரு உதாரண புருஷனாக மாறும்போது தேசம் மேன்மை அடையும்.

2. நேரத்திற்கு உறங்கி சீக்கிரம் விழிக்க வேண்டும் !

நேரத்திற்கு உறங்கி சீக்கிரம் விழித்தல் ஒருவனை ஆரோக்கியமானவனாக, செல்வந்தனாக விவேகமுடையவனாக ஆக்குகிறது என்று கூறப்படுகிறது. நேரத்திற்கு உறங்கி சீக்கிரம் விழிப்பவனுக்கு நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியம் கிடைக்கிறது. இதன் விளைவாக அவன் செல்வந்தன் ஆகிறான்.  நம்முடைய திருமுறை நூல்களும் நாம் அனைவரும் அதிகாலை அதாவது சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்திருக்க வேண்டும் எனக் கூறுகிறது. எனினும் தற்போது பல குழந்தைகள் படிப்பதற்கு அல்லது தொலைக்காட்சி பார்ப்பதற்கு இரவில் நெடுநேரம் விழித்திருக்கின்றனர். இதன் விளைவாக காலையில் 8 – 9 என்று நேரம் கழித்து விழிக்கின்றனர்.

2 அ. இரவு நெடுநேரம் விழித்திருப்பதால் ஏற்படும் தீங்கு

இரவு நெடு நேரம் விழித்திருப்பதால் உடல் சூடு சம்பந்தமான நோய்கள் உண்டாகும். மேலும் கண் பார்வை பாதிக்கப்படும்

2 ஆ. காலையில் சீக்கிரம் விழிப்பதால் ஏற்படும் நன்மைகள்

காலையில் சுற்றுப்புற சூழல் தூய்மையாக, பக்திமயமாக, அமைதியாக, உற்சாகமானதாக இருப்பதால், காலையில் படிப்பது அதிக பலனைக் கொடுக்கும்.

3. தெய்வங்களுக்கு பூஜை, அர்ச்சனை போன்ற உபாஸசனையை செய்யவும் !

3 அ. குளித்த பிறகு இவற்றைச் செய்யவும் !

3 அ 1. பூஜை : வீட்டு பூஜை அறையில் ஏற்கனவே தெய்வங்களுக்கு பூஜை செய்யப்பட்டிருந்தால், குளித்த பின் தெய்வங்களுக்கு முன் நின்று அவர்களுக்கு மஞ்சள், குங்குமம் மற்றும் மலர்களை சமர்ப்பிக்கவும். ஊதுபத்தி காண்பிக்கவும்.  பூஜை இனிமேல் தான் செய்ய வேண்டும் என்றால் பெரியவர்களிடம் அனுமதி பெற்று பூஜை செய்யவும்.

3 அ 2. ஸ்ரீ கணேசவந்தனம் செய்து பிற ஸ்லோகங்களை சொல்லவும் : தெய்வத்திற்கு பூஜை செய்த பின்பு. கைகளை நமஸ்கார முத்திரையில் வைத்துக் கொண்டு ஸ்ரீ கணேசவந்தனம் செய்து பின்வரும் ஸ்லோகத்தை சொல்லவும்

வக்ரதுண்ட  மஹாகாய  கோடிசூர்ய ஸமப்ரப |
நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா ||

அர்த்தம் :  ஸ்ரீ கணேசா !  வளைந்த துதிக்கை (தீயவர்களை அழிக்கும் திறன் கொண்டது), பெரிய உடல் (மகத்தான சக்தியை பிரபலிக்கிறது) மற்றும் கோடி சூரியனின் ப்ரகாசத்தை உடையவனே! உன்னுடைய அருளால் எந்த தடைகளும் இல்லாமல் என்னுடைய அனைத்து காரியங்களும் நிறைவேறட்டும்.

அதன் பின், உங்களுக்கு தெரிந்த பிற ஸ்லோகங்களைச் சொல்லவும்.

3 அ 3. இறைவனை பிரார்த்தனை செய்யுங்கள் !

அ. ஹே இறைவா! நாள் முழுவதும் நல்ல காரியங்களை நான் செய்ய உதவுங்கள். தீய காரியங்களில் இருந்து என்னை அப்பால் தள்ளி வையுங்கள்.

ஆ. ஹே குலதெய்வமே ! உன் நாமஜபம் எப்போதும் என் நினைவில் இருக்கட்டும்.

இ. ஹே ஸ்ரீராமா! எல்லாப் பெரியவர்களிடமும் எவ்வாறு மரியாதையுடன் நடக்க வேண்டும் என்பதை எனக்கு கற்றுத் தாருங்கள்.

ஈ. ஹே ஸ்ரீ கிருஷ்ணா! எனக்கு தர்மம் மீதும் என் தேசத்தின் மீது உள்ள பற்று வளரட்டும்.

3 அ 4. இறைவனை நமஸ்கரியுங்கள் : குலதெய்வம் அல்லது உபாஸனை தெய்வம் மற்றும் பிற தெய்வங்களுக்கு ஆன்மீக உணர்வுடன் ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்யவும். ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய முடியாவிட்டால் கைகளை கூப்பி நமஸ்காரம் செய்யவும்.

3 அ 5. இறைவனின் நாமத்தை ஜபம் செய்யவும் : இறுதியில் உட்கார்ந்து இறைவனின் நாமத்தை 10 நிமிடங்கள் ஜபம் செய்ய வேண்டும். எந்த தெய்வத்தின் நாமத்தை ஜபம் செய்ய வேண்டும் என்று நீங்கள் யோசிப்பீர்கள் அல்லவா?

சத்ரபதி சிவாஜி மஹராஜ் தன்னுடைய குலதெய்வமான ஸ்ரீ பவானி தேவியை வழிபட்டார். அத்தெய்வத்தின் அருளால் அவர் ‘ஹிந்தவி ஸ்வராஜ்’ யத்தை நிறுவினார்.  அன்பு குழந்தைகளே! மற்ற தெய்வங்களைக் காட்டிலும் நம்முடைய குலதெய்வம் நம் வேண்டுதலுக்கு விரைவாக செவிசாய்க்கும். ஆகவே, உங்களுடைய குல தெய்வத்தை வழிபட்டு அவரின் நாமத்தை ஜபம் செய்யவும்.

நாமஜபம் செய்யும்போது, குலதெய்வத்தின் பெயருக்கு முன் ‘ஸ்ரீ’  சேர்த்து நான்காம் வேற்றுமையில் பெயரை சேர்த்து நமஹ என்று முடிக்க வேண்டும்.  உதாரணமாக உங்கள் குலதெய்வத்தின் பெயர் பவானி தேவியாக இருந்தால் ‘ஸ்ரீ பவானி தேவ்யை நமஹ’ என்று சொல்ல வேண்டும். உங்கள் உபாஸனை தெய்வம் ஸ்ரீ கணபதி என்றால் ‘ஸ்ரீ கணேசாய நமஹ’ என்று சொல்ல வேண்டும். உங்களுடைய குலதெய்வம் தெரியவில்லை என்றால் உங்கள் உபாஸனை தெய்வத்தின் நாமத்தை ஜபம்  செய்யவும். நாள் முழுவதும் விட்டுவிட்டு நாமஜபம் செய்ய முயற்சி செய்யுங்கள்

 3 ஆ. அந்தி வேளையில் இதை செய்யுங்கள் !

3 ஆ 1. சுபம் கரோதி… என்ற ஸ்லோகத்தைச் சொல்லவும் ! : சூரிய அஸ்தமனத்திற்கு பின் அந்தி வேளை துவங்குகிறது. அச்சமயத்தில் வலுப்பெறும் தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பு பெற நன்நடத்தையை நாம் பின்பற்ற வேண்டும். எனவே, கை கால்கள் மற்றும் முகத்தை அலம்பி கொண்டு, இறைவன் முன் விளக்கேற்றி கீழ்க்கண்ட ஸ்லோகத்தை கூறவும்

.  சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தனசம்பதாம் |
சத்ருபுத்திர்வினாசாய  தீபஜோதிர்நமோஸ்து தே ||

அர்த்தம் :  ஹே தீப ஜோதியே!  நீ சுபம் மற்றும் மங்கலத்தை கொடுக்கிறாய். அதோடு ஆரோக்கியமும் செல்வமும் கொடுக்கிறாய். மற்றும் சத்ருபுத்தியை அதாவது வெறுப்பை நாசம் செய்கிறாய், அதனால் நான் உனக்கு நமஸ்காரம் செய்கிறேன்.

 3 ஆ 2. ஸ்தோத்திரங்கள் சொல்லவும் : ‘ஸ்ரீ ராமரக்ஷா ஸ்தோத்திரம்’, ‘கந்த சஷ்டி கவசம்’ போன்ற ஸ்தோத்திரங்களை சொல்லவும்.

தகவல்: ஸனாதனின் தமிழ் நூல் ‘நல்லொழுக்கங்கள் மற்றும் நல்ல பழக்கங்கள்’

Leave a Comment