தீய ஸன்ஸ்காரங்களிலிருந்து விடுபடவும் வாழ்வு ஆனந்தமயமாகவும் இந்த உபாயங்களை செய்யுங்கள்!

தொலைக்காட்சியில் அர்த்தமற்ற நிகழ்ச்சிகளைப் பார்த்தல், கைபேசியில் கேளிக்கை சினிமாக்களை பதிவிறக்குதல், கொடூர கேம்ஸ் விளையாடுதல் போன்ற தீய வழக்கங்கள் மனதில் பதிந்துள்ள தீய ஸன்ஸ்காரங்களால் உண்டாகிறது. இந்த தீய வழக்கங்களை நிறுத்துவதற்கும் அதற்கு ஆணிவேராக உள்ள தீய ஸன்ஸ்காரம் மற்றும் ஆளுமை குறையை நீக்குவதற்கும் தினசரி செய்வதற்குரிய இரு உபாயங்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

 1. மனதிற்கு சுய ஆலோசனை வழங்குங்கள்!

குழந்தைகளே, முதலில் சுய ஆலோசனை என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். பிறகு தவறான வழக்கம் மற்றும் ஆளுமை குறைகளைக் களைவதற்கு சுய ஆலோசனை எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

 2. ‘சுய ஆலோசனை’ என்றால் என்ன?

நாம் சாதாரணமாக மனம் என்று எதைக் குறிப்பிடுகிறோமோ அது ‘வெளி மனதைக்’ குறிக்கிறது. மனதில் இரண்டாவது ஒரு அங்கம் உள்ளது. அதுதான் ‘ஆழ்மனம்’. ஆழ்மனதில் பல நல்ல – தீய ஸன்ஸ்காரங்கள் உள்ளன. இந்த நல்ல மற்றும் தீயஸன்ஸ்காரங்களால் மனதில் சிந்தனைகள் எழும்புகின்றன மற்றும் அவை ஒருவரின் நடவடிக்கைகளில், பேச்சுகளில் வெளிப்படுகின்றன.

ஒருவரின் மனதில் எழும் தவறான சிந்தனைகள், தவறான உணர்வுகள், அத்துடன் ஒருவரால் செய்யப்படும் தவறான செயல்கள் மற்றும் வெளிப்பட்ட அல்லது மனதில் எழும் தவறான எதிர் எண்ணங்கள் ஆகியவற்றை நாம் சாதாரணமாக ‘தவறுகள்’ என்று கருதுகிறோம். இந்த தவறுகள் நடப்பதற்கு  நம் ஆளுமை குறைகள் காரணமாக உள்ளன. நம் ஆழ் மனதில் (சித்தத்தில்) பதிந்துள்ள தவறான ஸன்ஸ்காரங்களால் இந்தத் தவறுகள் நம் மூலமாக ஏற்படுகின்றன. இந்த ஒவ்வொரு தவறும் நிகழாமல் இருப்பதற்கு  (உதாரணமாக சரியான செயல்  நடப்பதற்கு மனதில் சரியான எண்ணம் நிர்மாணமாவதற்கு) நம்முடைய ஆழ்மனதிற்கு சரியான ஆலோசனையை வழங்க வேண்டும். இந்த ஆலோசனை ‘சுய ஆலோசனை’ எனப்படுகிறது. மேலும் எளிய மொழியில் கூற வேண்டுமென்றால் தன்னால் ஏற்பட்ட தவறான விஷயம் சம்பந்தமாக ஆழ்மனதிற்கு (சித்தத்திற்கு) சரியான விஷயம் நடப்பதற்கான உபாயத்தைக்  கூறுவதே ‘சுய ஆலோசனை’ ஆகும்.

3. சுய ஆலோசனை வழங்குவது சம்பந்தமாக சில குறிப்புகள்

சுய ஆலோசனையை வழங்குவதற்கு முன்பு பிரார்த்தனை செய்ய வேண்டும் மற்றும் 2 நிமிடங்கள் நாமஜபம் செய்து மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வதால் அந்த ஆலோசனை ஆழ்மனம் வரை சென்று மனதளவிலுள்ள கஷ்டங்கள் மற்றும் ஆளுமை குறைகளை தூர விலக்க உதவுகிறது.

ஒரு சுய ஆலோசனையை நாள் முழுவதும் 3-லிருந்து 5 முறை வழங்கலாம்.

சுய ஆலோசனையின் சில உதாரணங்கள்

சம்பவம் 1 : படித்து முடித்த பின்னர் பொழுது போகவில்லை என்பதால் சி. ரமேஷ் மாலை 7 முதல் 8 வரை தொலைக்காட்சியில் ‘WWF’ விளையாட்டைப் பார்த்து நேரத்தை செலவழித்தான்.

தவறான செயல் : தொலைக்காட்சியில் பயனற்ற நிகழ்ச்சிளைப் பார்த்தல்

ஆளுமை குறை : நேரத்தை வீணாக்குதல்

எடுக்க வேண்டிய சுய ஆலோசனை: எப்பொழுதெல்லாம் நான் மாலையில் தொலைக்காட்சியில் ‘WWF’ விளையாட்டைப்  பார்க்க உட்காருகிறேனோ அப்பொழுது ‘இந்த அர்த்தமற்ற அடிதடி விளையாட்டைப் பார்ப்பதில் என் நேரம் வீணாகிறது என்பதை உணர்ந்து கை கால்களைக்  கழுவிக் கொண்டு தெய்வத்தின் முன் அமர்ந்து ‘சுபம் கரோதி’ அல்லது ‘கந்த சஷ்டி கவசத்தை’ சொல்வேன்

சம்பவம் 2 : சி. சுரேஷ் அவனுடைய கைபேசியில் கேளிக்கை சினிமாவை பதிவிறக்கினான்

தவறான செயல் : கைபேசியில் கேளிக்கை சினிமாவை பதிவிறக்குதல்

ஆளுமை குறை : அர்த்தமற்ற செயல்களில் ஈடுபடுதல் மற்றும் நேரத்தை வீணாக்குதல்

எடுக்க வேண்டிய சுய ஆலோசனை:  எப்பொழுதெல்லாம் நான் என் கைபேசியில் கேளிக்கை சினிமாவை பதிவிறக்கம் செய்கிறேனோ அப்பொழுதெல்லாம் ‘நான் கைபேசியை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்த முடியும்’ என்பதை உணர்ந்து என் நண்பர்களுக்கு கைபேசி மூலம் ராஷ்ட்ரம் மற்றும் தர்மம் சம்பந்தமான விழிப்புணர்வு செய்திகளை (எஸ்.எம்.எஸ்) அனுப்புவேன்.

சம்பவம் 3 : ‘கொடூர கேம்ஸ் விளையாடமாட்டேன்’ என்று ஒப்புக் கொண்ட பிறகும் இன்று வீட்டில் யாரும் இல்லாத  சமயம், சி.மஹேஷ் வீட்டு கணினியில் கொடூர கேம்ஸ் ஒன்றை பதிவிறக்கி 2 மணி நேரம் விளையாடினான்.

தவறான செயல் : கொடூர கேம்ஸ் விளையாடுதல்

ஆளுமை குறை : அர்த்தமற்ற செயல்களில் ஈடுபடுதல், வெறித்தனமாக நடத்தல் மற்றும் நேரத்தை வீணாக்குதல்

எடுக்க வேண்டிய சுய ஆலோசனை: எப்பொழுதெல்லாம் நான் கொடூர கேம்ஸ் விளையாட கணினியை இயக்குகிறேனோ அப்பொழுதெல்லாம் நான் கொடூர கேம்ஸ் விளையாடிய பிறகு என் அக்காவிடம் முரடாக நடந்து கொள்கிறேன் என்பதை உணர்வேன். அதனால் அதை நிறுத்திவிட்டு மைதானத்தில் விளையாட செல்வேன்

சம்பவம் 4: சி. சதீஷ் வீட்டின் இணையதளத்தில் பல்வேறு வலைதளங்களைப் பார்வையிட்டான்.

தவறான செயல் : தேவையில்லாத பல வலைத்தளங்களைப் பார்வையிடுதல்

ஆளுமை குறை : அர்த்தமற்ற செயல்களில் ஈடுபடுதல் மற்றும் நேரத்தை வீணாக்குதல்

எடுக்க வேண்டிய சுய ஆலோசனை : எப்பொழுதெல்லாம் நான் பல வலைத்தளங்களை பார்வையிடுகிறேனோ அப்பொழுதெல்லாம் ‘அநாவசிய வலைதளங்களைப் பார்வையிடுவதால் என் புத்தி கூர்மை மழுங்குகிறது’ என்பதை உணர்ந்து என் நண்பர்களுடன் சேர்ந்து பால ஸனஸ்கார் வகுப்புக்கு செல்வேன்

சுய ஆலோசனைகளை தொடர்ந்து 2 – 3 வாரங்களுக்கு கொடுத்தால் அது சம்பந்தமான ஆளுமை குறை அல்லது தீய ஸன்ஸ்காரம் தூர விலக உதவுகிறது,

குழந்தைகளே, பலவித சுய ஆலோசனைகளை உருவாக்கும் வழிமுறை,  சுய ஆலோசனைகளை எவ்வாறு எடுத்துக் கொள்வது, சுய ஆலோசனைகளின் சில உதாரணங்கள் ஆகியவை பற்றிய விரிவான தகவல்கள் ஸனாதனின் ‘ஆளுமை குறைகளைக் களையுங்கள் மற்றும் ஆனந்தமாய் இருங்கள்!’ என்ற நூலில் உள்ளது.

4. ஆன்மீக பயிற்சி செய்யும் விருப்பத்தை வளர்க்கவும்

குழந்தைகளே, நீங்கள் தொலைக்காட்சியில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஏன் பார்க்கிறீர்கள்?  ‘கைபேசி’ கையில் இருந்தால் உங்களை அறியாமல் கைகள் ஏன் கேம்ஸ் விளையாட ஆரம்பிக்கின்றன? ‘வீடியோ கேம்ஸ்’ வாங்கி தர வேண்டும் என்று ஏன் பெற்றோர்களிடம் பிடிவாதம் பிடிக்கிறீர்கள்?  ‘இணையதளத்தின்’ மூலம் நண்பர்களுடன் ஏன் மணிக்கணக்காக ‘சாட்டிங்’ செய்கிறீர்கள்? இக்காரியங்களின் மூலமாக உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது என்பதற்காகத் தானே? ஆனால் இந்த மகிழ்ச்சி சிறிது காலமே இருக்கும் அல்லவா!  குழந்தைகளே, ஒருவகை காரியத்தை செய்வதால் உங்களுக்கு பலமடங்கு அதிக உன்னதமான ஆனந்தம் கிடைக்கும், அதுவும் தொடர்ந்து கிடைக்கும் என்றால் அதைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் எழுகிறது தானே? அத்தகைய காரியமே ‘ஸாதனை’

‘ஸாதனை’ என்றால் இறைவனை அடைய தினசரி மேற்கொள்ளும் முயற்சி. இத்தகைய முயற்சியை மேற்கொள்ளத்தான் உங்களுக்கு மனித பிறவி கிடைத்துள்ளது. நாமஜெபம், தெய்வத்திடம் பக்தி போன்ற ஸாதனையை செய்து பக்த பிரஹலாதன், துருவன் மற்றும் பல மஹான்களுக்கு ஆனந்தம் கிடைத்துள்ளது.  குழந்தைகளே, ஸாதனை மூலமாக உங்களுக்கு ஒரு முறை ஆனந்தம் கிடைக்க ஆரம்பித்தால், பின்பு தொலைக்காட்சி, கைப்பேசி, இணையதளம் போன்றவற்றின் மாயவலையில் நீங்கள் விழ மாட்டீர்கள்.  மாறாக ஸாதனை நன்கு நடப்பதற்காக மற்றும் ராஷ்ட்ர, தர்ம காரியங்கள் மேலும் சிறப்பாக செய்வதற்காக இவற்றை உபயோகிப்பீர்கள்.

குழந்தைகளே, ஸாதனையை எவ்வாறு செய்வது என்ற கேள்வி உங்கள் மனங்களில் எழும். ஸாதனையின் முதல் அங்கம், தெய்வத்தின் நாமஜெபத்தை செய்வது. எல்லா தெய்வங்களிலும் ஒருவரின் குலதெய்வமே கூப்பிட்ட குரலுக்கு உடனே பதில் அளிக்கக் கூடியது. அதனால் குலதெய்வத்தின் நாமஜபம் செய்ய வேண்டும். நாமஜெபம் செய்யும் போது குலதெய்வத்தின் பெயருக்கு முன்னால் ‘ஸ்ரீ’ சேர்த்துக் கொள்ள வேண்டும்.  இலக்கணப்படி நாமத்துடன் விகுதி சேர்த்து பின்பு ‘நம’ என கூற வேண்டும்.  உதாரணத்திற்கு அங்காள பரமேச்வரி உங்களின் குலதெய்வமாக இருந்தால் ‘ஸ்ரீ அங்காள பரமேச்வரி அம்மனே நம ‘ என்று நாமஜபம் செய்ய வேண்டும்

குலதெய்வம் தெரியாவிட்டால் உங்களின் உபாசனை தெய்வத்தின் நாமஜபத்தை செய்யலாம். உதாரணத்திற்கு உபாசனை தெய்வம் ‘கணபதி’ யாக இருந்தால் ‘ஸ்ரீ கணேசாய நம’ என்று நாமஜபம் செய்யலாம். நாமஜபத்தை நாள் முழுவதும் அதிகபட்ச அளவு செய்ய வேண்டும்.

 தகவல்: ஸனாதனின் தமிழ் நூல் ‘தொலைக்காட்சி,கைபேசி மற்றும் இணையதளத்தின் தீமையைக் களைந்து நன்மை அடையுங்கள் !

 

Leave a Comment