இணையதளத்தின் நன்மைகள் மற்றும் அதன் தீமைகள்

இளம் நண்பர்களே, இன்றைய யுகம் இணையதளத்தின் யுகமாக உள்ளது. இணையதளத்தைப் பற்றி கற்றுத் தெளிவது ஒரு பெருமைக்குரிய விஷயமாக உள்ளது. ஆனால் சரியானபடி கவனம் செலுத்தாவிட்டால் இந்த இணையதளமே ‘மோகவலை’யாக மாறி நாம் அதில் மாட்டிக் கொள்ளும் போது நமக்கு அது ‘விஷவலை’ ஆகிறது என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்! அவ்வாறு நடக்காமல் இருக்கவும் ஆனந்தமாக இணையத்தை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். இன்று பல தகவல்களை இணையதளத்தின் மூலம் நொடியில் பெற இயலும் அதே போல் உலகில் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு நொடியில் அனுப்ப இயலும்.

1. இணையதளத்தின் நன்மைகள்

தினசரி பத்திரிகைகள், நூல் வெளியிடும் ஸ்தாபனங்கள், ஆன்மீக ஸ்தாபனங்கள், சமூக ஸ்தாபனங்கள் ஆகியவற்றை சேர்த்து ஆயிரக்கணக்கான வலைதளங்கள் உள்ளன. இவற்றில் வாழ்விற்கு உபயோகமான ஞானத்தை வழங்கும், நல்ல ஸன்ஸ்காரங்களை ஏற்படுத்தும் மற்றும் நல்ல தகவல்களை வழங்கும் ‘வலைதளங்கள்’ மற்றும் ‘கூகுள் ஆப்ஸ்’ ஆகியவற்றைப் பார்வையிடுவது நல்லது.

இன்று ‘ஃபேஸ்புக்’, ‘ட்விட்டர்’ போன்ற ஸோஷியல் நெட்வொர்க்கிங் வலைதளங்கள் மற்றும் ‘பிளாக்’ ஆகியவை பெரிய அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வலைதளங்களின் மூலம் விரிவான விவரங்களைப் பெறவும் மற்றவர்களுக்கு அனுப்பவும் முடிகிறது. ஆனால் இன்று துரதிஷ்டவசமாக வெறும் விளையாட்டுகள் விளையாடவும் மற்ற வேண்டாத விஷயங்களைப் பார்க்கவுமே வலைதளங்கள் அதிகமாக உபயோகப்படுத்தப்படுகின்றன.

‘ஜி-மெயில்’, ‘யாஹூ’ போன்றவற்றின் மூலமாக இ-மெயில், கோப்புகள், இ -மெசேஜ்  அனுப்ப முடியும் அத்துடன் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடியும்

2. இணையதளத்தின் தீமைகள்

2 அ. இணையதளம் என்பது இன்றைய கால நவீன சந்ததியினரை பீடித்துள்ள ஒரு போதைப்பழக்கம்

நவீன விஞ்ஞானத்தால் எப்படி நன்மை ஏற்படுகிறதோ அப்படியே தீமையும் ஏற்படுகிறது.  இணையதளம், உலகிற்கு முன்னால் அபரிதமான விஷயங்கள் அடங்கிய கிடங்கை திறந்து விட்டிருப்பது உண்மை என்றாலும் இதற்கு குழந்தைகள் அடிமையாவதும் அதிகரித்து வருகின்றது. இன்று கைப்பேசியிலும் இணையதளம் வந்து விட்டதால் இரவு பகல் ஆன்லைனில் இருக்கும் வசதி இன்றைய தலைமைமுறையினருக்கு கிடைத்துள்ளது.

இணையதளத்தைக் கையாள்வதற்கு தெரிந்த பின் ஆண் – பெண் நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதற்கும், மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், குழந்தைகள் இணையதளத்தை உபயோகிக்க ஆரம்பிக்கின்றனர். பல குழந்தைகள் காலை கண் விழித்தவுடன் முதலில் ‘வாட்ஸ் அப்’ மற்றும் ‘ஃபேஸ்புக்’ பார்க்கின்றனர்.  அதன் பிறகு ஃபேஸ்புக்கில் இரவு அப்லோட் செய்த புகைப்படங்கள் மற்றும் போஸ்ட் ஆகியவற்றிற்கு எவ்வளவு ‘லைக்’ வந்துள்ளது எவ்வளவு ‘கமெண்ட்ஸ்’ வந்துள்ளது என்பதை பார்க்கின்றனர். இதே செயல்முறை இரவு உறங்குவதற்கு முன்பும் தொடர்கிறது.

மெதுமெதுவாக அவர்கள் இணையதளத்தை பயன்படுத்தும் கால அளவு அதிகரிக்கிறது. பிறகு அதற்கே அடிமையாகின்றனர். அவர்களின் நடவடிக்கைகள் மீதும் இதன் தாக்கம் ஏற்படுகிறது. இணையதளம் இல்லையென்றால் நிலைகொள்ளாமல் தவிக்க ஆரம்பிக்கின்றனர். இது போன்று இணையதளத்திற்கு அடிமையாகின்றனர். மது, போதைப் பொருட்களைப் போன்று இதுவும் மிகவும் கேடுகளை விளைவிப்பதாக உள்ளது.  இணையதளத்தின் மீதுள்ள இந்த போதை பழக்கத்தை ‘இன்டர்நெட் அடிக்க்ஷன் டிஸ்ஆர்டர்’ எனக் கூறுகின்றனர்.

2 ஆ . இணையதள போதைப் பழக்கத்தின் வகைகள்

ஆன்லைன் கேம்ஸ் விளையாடும் பழக்கம்; பல்வேறு வகை ஆன்லைன் கேம்ஸ் விளையாடும் போது குழந்தைகளுக்கு கால நேரம் எதுவும் தெரிவதில்லை. மென்மேலும் கேம்ஸ் விளையாடுவதால் குளித்தல், படித்தல், உண்ணுதல் ஆகியவற்றை புறக்கணிக்க ஆரம்பிக்கின்றனர்.  உண்மையில் குழந்தைகள் மாலை வேலையில் மைதானத்தில் இருப்பதற்கு பதிலாக அவர்கள் இணையதளத்தில் ஆன்லைன் கேம் விளையாடுகின்றனர். மாயா உலகத்தைக் காட்டிலும் நிஜ உலகில் எவ்வாறு வாழ்வது என்பதை குழந்தைகளுக்குக் கற்றுத் தருதல் மஹத்துவம் மிக்கது

ஸைபர் ரிலேஷன்ஷிப் அடிக்ஷன்: ‘இதில் சோஸியல் நெட்வொர்க்கிங் வெப்சைட், சாட்டிங், மெசேஸிங்  ஆகியவற்றின் பயன்பாடு பெரும் அளவு அதிகரித்துள்ளது.  எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என்றால் குடும்ப அங்கத்தினர்கள் மற்றும் நண்பர்கள் கூட்டம் இவர்களைக் காட்டிலும் நேரில் எப்பொழுதும் சந்தித்திராத ‘ஆன்லைன் நண்பர்கள்’ அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக ஆகின்றனர்.

எப்போதும் ஏதாவது ஒரு வலைத்தளம் அல்லது டேட்டாபேஸ் -ஐ   ஆராய்வதற்கான பழக்கம் ஏற்படுகின்றது. அதனால் குடும்பத்தினர் மற்றும் நண்பருடன் உரையாடுவது குறைகிறது.  புதிது புதிதாக உபகரணங்கள் (மொபைல் காட்ஜெட்) வாங்கவேண்டும் என்ற உந்துதல் ஏற்படுதல், டேடிங் சைட்- இல் அதிக நேரம் செலவிடுதல் போன்றவைகளும் இதில் அடங்கும்.

2 இ. இணையதள பழக்கத்திற்கு அடிமையாவதால் உண்டாகும் தீமை

உடல் ரீதியான தீமை

  • இணையதளத்திற்காக கணினி முன் எப்பொழுதும் உட்காருவதால் கீழே கூறப்பட்டுள்ள கஷ்டங்கள் ஏற்படலாம்
  • கைகள் மற்றும் மணிக்கட்டு பலவீனமாக இருப்பதாகத் தோன்றுதல்.
  • கண்கள் தொடர்ந்து சோர்வாக இருந்தல்.
  • முதுகு, கழுத்து மற்றும் தலையில் வலி ஏற்படுதல்.
  • போதிய உறக்கம் இல்லாதது.
  • திடீரென்று உடல் பருமனாதல் அல்லது இளைத்தல்.

மனோ ரீதியான தீமை

  • இணையதளம் கிடைக்காவிட்டாலோ அல்லது இடையில் தடைப்பட்டாலோ எரிச்சல் அடைதல்
  • தொடர்ந்து இணையதளத்தை உபயோகிக்கும்போது மற்றவர்கள் திட்டினால் தவற்றை ஒப்புக் கொள்ளாமல் எரிச்சல் அடைத்தல்
  • ஏதோ ஒரு மன அழுத்தத்தில் இருந்து விடுபட சரியான நிவாரணத்தைப்  பற்றி சிந்திக்காமல் இணையதளத்தை நாடுதல்
  • இணையதளத்தை அளவிற்கதிகமாக உபயோகிப்பதால் மனதின் சக்தி அநாவசியமாக வீணாகுதல்.

குடும்பரீதியான தீமை

இன்று குழந்தைகள் அறையில் சென்று கதவை தாளிட்டு மணிக்கணக்காக இணையதளத்தில் செலவிடுகின்றனர். இதனால் தாய் தந்தையிடம் மனம் விட்டு பேசுதல், ஒருவருக்கொருவர் கஷ்டங்களை பகிர்ந்து கொள்ளுதல் போன்றவை நடப்பதில்லை. அதனால் பரஸ்பர குடும்ப உணர்வு மற்றும் அன்பு குறைந்து கொண்டே போகிறது.

கல்வித்துறையில் ஏற்படும் தீமை

.  கல்வி பயில்வதில் கவனக் குறைவு ஏற்படுகிறது. மேலும் இன்று இணையதளத்தின் மூலம் எல்லா விஷயங்களைப் பற்றிய விரிவான  விளக்கங்களும் சுலபமாக கிடைக்கின்றன. மாணவர்கள் ஏதாவது ஒரு தலைப்பில் கட்டுரை அல்லது சொற்பொழிவு தயார் செய்ய வேண்டுமென்றால் அவர்கள் தாங்களே சுயமாக சிந்திப்பதை விட்டுவிட்டு இணையதளத்திற்கு செல்கின்றனர்.  அங்கு தனக்கு வேண்டிய விஷயத்தை ‘கட்- பேஸ்ட்’ செய்து கட்டுரையை தயார் செய்கின்றனர்.  சுயமாக சிந்திக்கும் பழக்கம் இல்லாத மாணவர்களிடம் சிந்தனை ஆற்றல் மற்றும் பேச்சாற்றல் எப்படி வரும்? படித்து மனதிற்குள் சிந்தனை செய்யும் பழக்கம் இல்லாத இது போன்ற குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு தலைப்பில் சில நொடியில் பேசுவது கூட கடினமாக இருக்கும்.

பணரீதியான தீமை

இணையதள வசதி இப்பொழுது குறைந்த விலையில் கிடைத்தாலும் அநாவசியமாக உபயோகப்படுத்துவதால் தாய் -தந்தையரின் பணம் வீணாகிறது

தேசத்திற்கு ஏற்படும் தீமை

தேசத்தின் எவ்வளவு மனித – மணித்துளிகள் வீணாகின்றன. இன்று வெறும் குழந்தைகள் மட்டுமல்ல, இளைஞர்களும் இணையதளத்தை அநாவசியமாக பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்களின் தனிப்பட்ட நேரம் வீணாவதுடன் இதுபோன்ற பலரின் நேரம் வீணாவதால் தேசத்தின் லக்ஷக்கணக்கான மனித மணித்துளிகள் வீணாகின்றன. இந்த நேரத்தை தேசத்தின் முன்னேற்றம், சமூக காரியங்கள், ஆன்மீக பயிற்சி போன்றவற்றிற்காக செலவிடுவது அவசியமாகும்.

2 ஈ. வலைதளத்தை அநாவசியமாக பார்வையிடும் பழக்கத்தை எவ்வாறு நிறுத்துவது

  • வலைதளத்தை சரியானபடி உபயோகித்து தேசப்பற்று, தர்மப்பற்றுள்ளவராக உருவாகுங்கள்.
  • நன்றாக பயின்று வெற்றி பெறுவதை லட்சியமாகக் கொள்ளுங்கள்
  • புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் அல்லது ஏதாவது ஒரு கலை அல்லது பொழுதுபோக்கு விளையாட்டை வளர்த்துக் கொள்ளுங்கள்

2 உ. நல்ல ஸன்ஸ்காரங்களை உருவாக்கும் Balasanskar.com என்ற வலைதளத்தைப் பார்வையிடவும்

Balasanskar.com வலைதளத்தின் லட்சிய வாக்கியம்:  ஆதர்ச, நல்ல ஸன்ஸ்காரமுள்ள சந்ததியே தேசத்தின் ஒளிமிகு எதிர்காலம்!

சில முக்கிய தலைப்புகள்

1. ஆதர்ச குழந்தை: இத்தலைப்பின் கீழ் ‘எவ்வாறு படிக்கவேண்டும்? பரீட்சை பற்றிய கவலையை எவ்வாறு தூர விலக்குவது? ஆசிரியர்களிடம் எவ்வாறு மரியாதை வைப்பது? ஆளுமை குறைகளை எவ்வாறு களைவது?  போன்றவற்றின் விவரங்கள் உள்ளன.

2. ஸ்லோகங்கள் மற்றும் ஆரத்திகள் என்ற தலைப்பில் குளிப்பதற்கு முன்பும் உண்ணும் முன்பும் சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள், நல்வழி காட்டும் ஸம்க்ருத சுப வாக்கியங்கள் ஆகியவை உள்ளன.

3. பிறந்தநாளை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பது சம்பந்தமான வீடியோ வலைதளத்தில் உள்ளது.

4. இதிஹாசத்தின் பொன்னேடுகள் என்ற தலைப்பில் விஞ்ஞான ஆராய்ச்சியாளராக விளங்கிய ஹிந்து ரிஷிகள், முனிவர்கள், மஹான்கள் ஆகியோரின் காரியங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் உள்ளன

5. நீதிக் கதைகளில் தெய்வங்கள், மஹான்கள், ஹிந்துராஜாக்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆகியோரின் பராக்கிரமத்தை வெளிப்படுத்தும் சிறப்பு நிகழ்வுகள் மற்றும் நீதிக்கதைகள் உள்ளன.

6. மேலும் மற்ற தலைப்புகளான ‘பாரதீய தீர்த்த க்ஷேத்ரங்கள் மற்றும் கோவில்கள்’, ‘நம் கலாச்சாரம்’, ‘அழகான கோட்டைகள்’, ‘ஊக்கமளிக்கும் பாடல்கள்,’ ‘அறிவைக் கூட்டுங்கள்’, ‘தெய்வ மொழி ஸமஸ்கிருதம்’ போன்றவற்றை பாருங்கள்.

தகவல்: ஸனாதனின் தமிழ் நூல் ‘தொலைக்காட்சி,கைபேசி மற்றும் இணையதளத்தின் தீமையைக் களைந்து நன்மை அடையுங்கள் !

 

Leave a Comment