அனுமனின் இலங்கை தகனம்

இராவணன் மூலமாக அனுமனின் வாலில் நெருப்பு வைக்கப்பட்டது. அதன் பிறகு அனுமன் இலங்கையை தகனம் செய்தார்.  ஆனால் அந்த செயலுக்காக வருத்தம் அடைந்தார். இது ஏன்?

பதில்: வால்மீகி மகரிஷி எழுதிய இராமயணத்தில் அனுமன் இலங்கையை எரித்தபின்,   அவர் அந்த செயலால் மன வருத்தம்  அடைந்தார் என்ற குறிப்பு  காணப்படுகிறது.  வால்மீகி ராமாயணத்தில் இதைப் பற்றிய ஒரு ஸ்லோகம் பின் வருமாறு உளது –

யதி தக்தாத்வியம் சர்வானுனமார்யாபி ஜானகி|
தக்தா தேன மயா பர்துஹதமகார்யஜானதா|

அர்த்தம் என்னவென்றால் இலங்கையை எரித்த பிறகு அனுமன் மனதில் இந்த சிந்தனை வந்தது – “ இலங்கை முழுவதும் தீயில் எரிந்துவிட்டது  என்றால், நிச்சயம் சீதையும் அதில் சிக்கி தீக்கிரையாயிருப்பாள். இப்படிச் செய்து நான் என்னுடைய ஸ்வாமி ப்ரபு ஸ்ரீராமனுக்கு மிகப் பெரிய தீங்கிழைத்துவிட்டேன். பகவான் ஸ்ரீ ராமர் என்னை, சீதையை கண்டுபிடிப்பதற்காக இலங்கைக்கு அனுப்பினார். ஆனால் நானோ வேறு ஒன்றை செய்துவிட்டேன். எப்போது சீதையே உயிருடன் இல்லையோ, அப்போது ராமர் எப்படி இருப்பார்? மேலும் சுக்ரீவன் மற்றும் ராமருக்கும் இடையேயான நட்பிற்கு என்ன அர்த்தம் இருக்கப் போகிறது?  நான் எப்படி ஸ்ரீ ராமரிடம் என் முகத்தை   காண்பிப்பேன்” என்றெல்லாம் சிந்தனையில் ஆழ்ந்தார்.

பச்சாதாப(குற்ற) உணர்வில் அனுமன் ஒரு கணம் இதை மறந்து விட்டார்: எந்த சீதா தேவியானவள், சிறிது நேரம் முன்பு அனுமனை சிரஞ்சீவி என ஆசீர்வாதம் செய்தாளோ, அந்த ஜனகரின் மகளையா அக்னி தொட்டு விட முடியும்?

அஜர் அமர் குண நிதி சுத் ஹோஹூ
கரஹிம் சதா ரகு நாயக சோஹூ|

இதன் அர்த்தம்: “மைந்தனே, நீ முதுமை அடையாமல் என்றும் இளமையாய் (சிரஞ்சீவியாய்)  இருப்பாய். மேலும் உன் மீது, ப்ரபு ஸ்ரீ ராமர் அளவிலா கருணை பொழிவார்.”

அதனால்தான், நெருப்பினால் அனுமன் சூழப்பட்டபோதும், அது அனுமனின் உடலில் எந்தவித பாதிப்பையும் எற்படுத்தவில்லை.   உண்மையிலேயே, அது அன்னை சீதை செய்த ப்ரார்த்தனையின் விளைவே.  அரக்கிகள் சீதையிடம் , ராவணனால் அனுமனின் வாலில் நெருப்பு வைக்கப்படுகிறது என்று கூறியபோது சீதை அக்னி தேவரிடம் இவ்வாறு ப்ரார்த்தனை செய்தாள்-“ ஏ! அக்னி தேவரே, நான் ஒரு பதிவ்ரதை மற்றும் தபஸ்வினி என்பது உண்மையானால்  நீண்ட கைகளையுடைய அனுமனுக்கு குளிர்ச்சியை அளிப்பாயாக” என்றாள்.

அனுமன், இலங்கையை எரித்ததற்கு தானே காரணம், குற்றவாளி என எண்ணிய தருணத்தில், அவருக்கு முன்பாக பல சுப சகுனங்கள் தென்பட்டன. அதன் பின்னர், அவரது  சிந்தனையில் புதிய  திருப்பம் எற்பட்டது.   “ அன்னை சீதா சுயமாகவே நெருப்பின் வடிவம், மேலும் ப்ரபு ஸ்ரீ ராமரின் தர்ம பத்தினி என்பதனால், அக்னி அவளைத் தொடக்கூட முடியாது”. அந்த நேரத்தில், அனுமனுக்கு, ஒரு தெய்வீக அசரீரி(வான் வழிக்-குரல்) கேட்டது: அரக்கர்களின் இலங்கை எரிந்துவிட்டது.  ஆனால் அன்னை சீதையை ஒரு நெருப்புப் பொறிகூட நெருங்கவில்லை. அப்போது அனுமன் தன் மனோரதத்தைப் பூரணமாகத் தெரிந்து கொண்டான்.

அனுமன் இலங்கையை எரித்தார்; ஆனால் அந்த இலங்கையில் இருந்த விபீஷணன் வீட்டை ஏன் எரிக்கவில்லை?

அனுமன், இலங்கையின் அனைத்து வீடுகளுக்கும் நெருப்பு வைத்தான். ஆனால் விபீஷணன் வீட்டிற்கு வைக்கவில்லை இந்தக் கதை இராமாயணத்தில் வருகிறது.

‘ஜாரா நகர நிமிஷ இக் மாஹிம் ஏக் விபீஷண கர்  க்ருஹ நாஹிம்”

காரணம், விபீஷணன் வீட்டு வாசலில் துளசி செடி வைக்கப்பட்டு இருந்தது. மேலும், திருமாலின் புனித சின்னங்களான, சங்கு, சக்கரம், மற்றும் கதை  அந்த வீட்டு கதவில் பொறிக்கபட்டு இருந்தது. இதைப் பார்த்து அனுமன், அந்த வீட்டை எரிக்காமல் விட்டு சென்று விட்டார்.

இதன் மூலம் அனுமனின் சிறப்பியல்புகள், நம்து சிந்தனைக்ககு வருகின்றன. பகவானின் பக்தர்களை அனுமன் காப்பாற்றுகிறார்.

 

 

Leave a Comment