Contents
- ஸாத்வீக கண்ணோட்டத்தில் ஆடைகளில் வடிவமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும்?
- 1. வடிவமைப்பு அர்த்தமில்லாமல் இருக்கக்கூடாது
- 2. வடிவமைப்புகள் பெரியதாகவும், கூரான முனைகள் கொண்டதாகவும் இருக்கக் கூடாது
- 3. வடிவமைப்பு நெரிசலாக முழு ஆடையும் நிறையும்படி இருக்கக்கூடாது
- 4. ஆடையில் கோடுகள் இருந்தால் அவை எவ்வாறு இருக்கவேண்டும் – நேர்கோடுகள், படுத்தக்கோடுகள், சாய்ந்த கோடுகள்?
- 5. வடிவமைப்பு கொண்ட ஆடைகளைக் காட்டிலும் ஏன் வடிவமைப்பே இல்லாத ஆடைகள் சிறந்தது?
கலியுகத்தில் கலைவடிவம் என்ற பெயரில் விசித்திர வடிவங்களை உபயோகப்படுத்துவது மனிதகுலத்திற்கு தீங்கிழைப்பதாகும்: இன்றைய கலியுகத்தில் பலவித மிருகங்கள், பயங்கர பூதவடிவங்கள் பதிக்கப்பட்ட ஆடைகள் மற்றும் கிழிந்து போன தோற்றம் தரும் ஆடைகள் ஆகியவை பிரபலமாயுள்ளன. இத்தகைய வக்ரமான வடிவமைப்பில் தீயஅதிர்வலைகள் சேர்கின்றன. காலப்போக்கில் இவற்றை உபயோகப்படுத்துபவரின் இயல்பிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இத்தகைய ஆடைகளை உபயோகிக்கும் நபர் காலப்போக்கில் தமோகுண பிரதானமாய் மாறுகிறார்.’ – ஒருவித்வான் ( திருமதி அஞ்ஜலி காட்கில் மூலமாக, 6.7.2008, இரவு 7.09)
ஸாத்வீக கண்ணோட்டத்தில் ஆடைகளில் வடிவமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும்?
1. வடிவமைப்பு அர்த்தமில்லாமல் இருக்கக்கூடாது
‘ஆடைகளைத் தேர்வு செய்யும்போது அதில் உள்ள வடிவமைப்பு அர்த்தமுள்ளதாக தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக, புள்ளிகள் இலைகள், பூக்கள் மற்றும் கொடிகள்
2. வடிவமைப்புகள் பெரியதாகவும், கூரான முனைகள் கொண்டதாகவும் இருக்கக் கூடாது
உதாரணமாக, பூக்கள், இலைகள் கொண்ட வடிவமைப்பு உடைய ஆடையைத் தேர்வு செய்யும்போது, அவற்றில் மேலே உள்ளது போல் கூரானமுனையைக் கொண்ட பூக்கள், இலைகள் இருக்குமாறு தேர்வு செய்யக்கூடாது. வடிவமைப்பு நளினமானதாக, மனதைக் கவரும் வகையில் இருக்க வேண்டும்.
3. வடிவமைப்பு நெரிசலாக முழு ஆடையும் நிறையும்படி இருக்கக்கூடாது
இடது பக்கத்திலுள்ள படத்தின்படி ஆடையில் நெரிசலான வடிவமைப்பு இருந்தால் அதன் மூலம் கஷ்டம் தரும் அதிர்வலைகள் வெளிப்படுகின்றன. நல்லவடிவமைப்பும் கூட அருகருகில் நெருங்கி இருக்கும்போது அதிலிருந்து கஷ்டம் தரும் அதிர்வலைகளே வெளிப்படுகின்றன. வடிவமைப்பு எந்த அளவு போதிய இடைவெளி விட்டு சீராக இருக்கிறதோ (வலது பக்கத்தில் உள்ளபடி) அந்த அளவு நிர்குண தத்துவத்தோடு நெருங்கி இருக்கிறது. அதனால் அதிலிருந்து நல்ல அதிர்வலைகள் வெளிப்படுகின்றன.
4. ஆடையில் கோடுகள் இருந்தால் அவை எவ்வாறு இருக்கவேண்டும் – நேர்கோடுகள், படுத்தக்கோடுகள், சாய்ந்த கோடுகள்?
4 அ. கோடுகள் சம்பந்தமான சூட்சும பரிசோதனை
‘சூட்சும்’ என்றால் ஸ்தூல பஞ்சேந்த்ரியங்கள், மனம் மற்றும் புத்திக்கு அப்பாற்பட்டது என்று அர்த்தம். ஏதாவது ஒரு பொருளைப் பார்க்கும்போது நல்ல அல்லது கஷ்டம் தரும் அதிர்வலைகளை உணரும்போது அல்லது ஏதாவது அனுபூதி ஏற்படும்போது இது சம்பந்தமாக நடக்கும் ஆய்வே சூட்சும பிரயோகம் ஆகும். இதன் மூலம் சூட்சும மனத்தின் உதவியுடன் என்ன பொருளிடம் என்ன மாதிரியான (நல்ல, கஷ்டம்தரும்) அதிர்வலைகள் வெளிப்படுகின்றன என்பதைக் கண்டறிய முடியும். அதோடு சூட்சுமபுத்தியின் உதவியுடன் ஏன் நல்ல அல்லது கஷ்டம் தரும் அதிர்வலைகள் வெளிப்படுகின்றன என்பதையும் அறிய முடியும்.
சர்வசாதாரண மனிதனின் ஆன்மீகநிலை 20% ஆகும். மோக்ஷத்தை அடைந்த ஜீவனின் நிலை 100% ஆகும். சாதாரண மனிதனுக்கு சூட்சுமத்தை அறிந்து கொள்ளும் சக்தி இல்லை. ஆன்மீகநிலை 35%-க்கு மேலே உயர்ந்த பிறகு ஓரளவிற்கு சூட்சுமத்தை அறிந்து கொள்ள முடிகிறது. ஆன்மீக நிலை உயர உயர, சூட்சுமத்தை அறிந்து கொள்ளும் சக்தியும் அதிகரிக்கிறது. குருவின் க்ருபை கிடைக்கும்போது, தாழ்ந்த ஆன்மீக நிலையிலேயே சூட்சுமத்தை அறிந்து கொள்ள முடியும்.
4 ஆ. நேரிடையானபிரயோகம்
மேலே கொடுக்கப்பட்டுள்ள ‘அ‘, ‘ஆ‘ மற்றும் ‘இ‘ படங்கள் ஒவ்வொன்றையும் இரண்டு நிமிடங்கள் பார்க்கும்போது என்ன உணர முடிகிறது என்று கவனியுங்கள். பின்பு மேலே படியுங்கள். ‘அ ‘ படத்தைப் பார்க்கும்போது அதிகபட்ச நல்லஉணர்வுகள் ஏற்பட்டது. ஆ ‘ படத்தைப் பார்க்கும்போது ஓரளவு நல்ல உணர்வு ஏற்பட்டது. மற்றும் ‘இ‘ படத்தைப் பார்க்கும்போது கஷ்டம் ஏற்பட்டது. படுத்த கோடுகளைக் காட்டிலும் நேர்கோடுகள் நல்ல அதிர்வலைகளை வெளிப்படுத்துகின்றன. ஏனென்றால் படுத்தகோடுகள் பூமிதத்துவத்தோடும், நேர்கோடுகள் ஆகாயதத்துவத்தோடும் சம்பந்தப்பட்டவை. சாய்ந்த கோடுகளிலிருந்து இரண்டு திசைகளும் கலந்த அதிர்வலைகள் வெளிப்படுவதால் அவற்றிலிருந்து கஷ்டம் தரும் அதிர்வலைகள் வெளிப்பட்டன. இதிலிருந்து நேர்கோடுகள் அமைந்த உடையைத் தேர்வு செய்வது நல்லது என தெளிவாகிறது.’ — ஸனாதனின் ஸாதக–சித்திரக்காரர் திருமதி ஜான்வி ஷிண்டே, ஸனாதன்ஆச்ரமம். ராம்நாதி, கோவா.
4 இ. கோடுகள், நிறங்கள் மற்றும் தத்துவம்
கோடுகள் |
நிறம் |
தத்துவம் |
நிற்கும்கோடுகள் |
எல்லாதாரகநிறங்கள் |
தாரக(காக்கும்) |
படுத்தகோடுகள் |
சிவப்பு |
மாரக (அழிக்கும்) |
சர்வசாதாரண மனிதனின் இயல்பு தாரக தத்துவமானதால், மாரக தத்துவத்தால் கஷ்டம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். ஆடையில் படுத்த கோடுகளிலிருந்து மாரக தத்துவம் வெளிப்படுகிறது. அதனால் கஷ்டம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதனால் படுத்தகோடுகளைக் கொண்ட ஆடைகளை உபயோகிக்ககூடாது.
5. வடிவமைப்பு கொண்ட ஆடைகளைக் காட்டிலும் ஏன் வடிவமைப்பே இல்லாத ஆடைகள் சிறந்தது?
ஆடையில் வடிவமைப்பு எதுவும் இல்லாதபோது, ப்ரம்மாண்டத்திலிருந்து வரும் நிர்குண சைதன்ய அதிர்வலைகளை அதனால் சுலபமாக க்ரஹிக்க முடிகிறது. அதற்கு மேலே காரியத்திற்கேற்றபடி வாயுமண்டலத்தில் எந்தத் தடங்கலுமில்லாமல் வெளிப்படுத்தவும் முடிகிறது. அதனால் வடிவமைப்பு இல்லாத ஆடைகள் அதிக ஸாத்வீகமானதாக கருதப்படுகிறது.’ –ஒருவித்வான் (திருமதி அஞ்ஜலி காட்கில் மூலமாக, 6.7.2008 மாலை 7.09)
துணிகளில் உள்ள வடிவமைப்பை தேர்வு செய்யும்போது ‘அது ஸாத்வீகமானதா இல்லையா’ என யோசிக்க வேண்டியுள்ளது. வடிவமைப்பே இல்லாத துணிகளில் இந்த பிரச்சனை எழுவதில்லை. இக்கண்ணோட்டத்திலும், வடிவமைப்பு இல்லாத துணிகளைத் தேர்வு செய்வது சிறந்தது.
தகவல்: ஸனாதனின் தமிழ் நூல் ‘ஆன்மீக கண்ணோட்டப்படி ஆடைகள் எவ்வாறு இருக்க வேண்டும்?