ஆடைகளின் மஹத்துவமும் லாபமும்

Contents

1. உடல்ரீதியான மஹத்துவம்

ஆடைகளை அணிவதால் ஒருவரின் மானம் காக்கப்படுகிறது. அதோடு குளிர், காற்று, வெயில்  மற்றும் மழையிலிருந்து உடல் பாதுகாக்கப்படுகிறது.

2. மனோரீதியான மஹத்துவம்

2 அ. ஆடைகள் மூலமாக ஒருவரின் இயல்பும் தனித்தன்மையும் தெரிய வருகின்றன

மனிதன் தன் இயல்பிற்கேற்றபடி ஆடைகளை தேர்ந்தெடுக்கிறான். சாதாரணமாக யார் நேர்த்தியாக, இஸ்திரி செய்யப்பட்ட ஆடைகளை அணிகிறாரோ, அவர் ஒழுங்கு முறையை கடைபிடிப்பவராக, பரிபூர்ண இயல்புகளைக் கொண்டவராக இருப்பார். யார் சௌகரியமான, சாதாரண ஆடைகளை அணிகிறாரோ அவர் வெளிப்படையானவராக மனசாட்சி கொண்டவராக இருப்பார். யார் ஒழுங்கற்ற விசித்ர ஆடைகளை அணிகிறாரோ அவர் சோம்பேறியாக பொறுப்பற்றவராக இருப்பார். சுருக்கமாக, ஆடைகள் ஒருவரின் இயல்புகளை, தனித்தன்மைகளை எடுத்துரைக்கின்றன. அதனால்,  மனிதன் நடைமுறை வாழ்க்கையில் பலவித சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு ஆடைகளை அணிவது அவசியமாகிறது.  உதாரணமாக, ஒருவர் வேலைக்காக பேட்டிக்கு செல்லும் போது நேர்த்தியான, இஸ்திரி செய்யப்பட்ட ஆடைகளை அணிவது, ஒழுங்கு மற்றும் பணிவு போன்ற பண்புகளை எடுத்துக்காட்டும்.

2 ஆ. ஆடைகள் ஒருவரின் மனோபாவத்தையும் பாதிக்கிறது

புத்தாடைகளை உடுத்தும் போது நமக்கு ஒரு இன்ப உணர்வு ஏற்படுகிறது.  இதற்கு மாறாக அழுக்கான இறுக்கமான ஆடைகளை அணியும் போது பலருக்கு அசௌகரியமான உணர்வு ஏற்படுகிறது. இதிலிருந்து ஆடைகள் மனிதனின் மனோநிலையை எவ்வாறு பாதிக்கிறது என்பது தெரிய வருகிறது. ‘ஆர்த்தர் ஆண்டர்ஸன்’ என்ற ஆங்கிலேய கம்பெனி இதைப் பற்றிய பெரிய ஆராய்ச்சி செய்து அதில் கண்டறிந்த உண்மைகளின்படி அதன் தொழிலாளர்களின் சீருடைகளில்  மாற்றத்தைக் கொண்டு வந்தது. இதன் பலனாக தொழிலாளர்களிடம் பெரும் திருப்தி மனப்பான்மை ஏற்பட்டு அவர்களின் வேலை திறனிலும் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது.

3. ஆன்மீகரீதியான மஹத்துவம்

  3 அ. ஆடைகளை அணிவது என்பது பரப்பிரம்மத்தை உணர மாயையின் உதவியை நாடுவது என்பது ஆகும்

‘ஆடைகளை துறப்பது என்பது மாயையான பற்றுதலை விடுத்து ப்ரம்ம நிலையை அடைவதைக் குறிக்கும் என்றால் ஆடைகளை அணிவது என்பது மாயையின் உதவி கொண்டு ப்ரம்ம நிலையை அடைவதைக் குறிப்பதாகும்’. –  ஒரு ஞானி ( திரு நிஷாத் தேஷ்முக் மூலமாக,18.06.2007, மாலை 6.27)

3 ஆ.  தர்மவழிப்படியான ஆடைகள் ஒரு ஜீவனை, பாவங்கள் புரிவதிலிருந்து தடுக்கிறது

‘வெளி உலகிற்கு தர்மவழியைக் காட்டும் ஆடைகளான வேஷ்டி, அங்கவஸ்திரம், சந்தனம், திலகம், மாலை போன்றவை ஒரு ஜீவனை, அதர்மம், முறையற்ற சிற்றின்பம், மதுபானம் போன்ற பாவங்களைச் செய்வதிலிருந்து தடுக்கிறது.’- குருதேவ் டாக்டர் காடே ஸ்வாமிஜி

3 இ.  ஸாத்வீக ஆடைகளை அணிவதால் வாயுமண்டலத்தில் உள்ள ஸாத்வீக அதிர்வலைகள் அந்த ஜீவனிடம் ஆகர்ஷிக்கப்படுகின்றன

ஒரு ஜீவன் ஆடைகளை அணியும் போது அவற்றின் சூட்சும  ஸ்பர்சத்தால் உராய்வு ஏற்படுகிறது. அதனால் வாயு மண்டலத்திலுள்ள ஸாத்வீக அதிர்வலைகள், ஆடைகளின் உதவியோடு ஜீவனின் சூட்சம-கோஷங்கள் மற்றும் தேஹத்தில் ஆகர்ஷிக்கப்படுகின்றன.’- ( ஒரு ஞானி, திரு நிஷாத் தேஷ்முக் மூலமாக, 18.6.2007, மாலை 6.27)

3 ஈ. ஹிந்து தர்மம் விதித்துள்ள ஆடைகளை அணிவதால் நமக்குள் இருக்கும் சிவ, சக்தி தத்துவங்கள் விழிப்படைகின்றன

ஹிந்து தர்மத்தில் பெண்கள் மற்றும் ஆண்கள் அணிய வேண்டிய ஆடைகளை வடிவமைத்தது தெய்வங்களாகும். அதனால் அவை சிவ மற்றும் சக்தி தத்துவங்களை வெளிப்படுத்துகின்றது. பெண்களின் ஆடைகளால் அதாவது புடவையால், சக்தி தத்துவம் விழிப்படைகிறது. ஆண்களின் ஆடைகளால் சிவ தத்துவம் விழிப்படைகிறது.  சாஸ்திரப்படியான ஆடைகளை அணிவதன் மூலம் நமக்கு நம்முடைய வாஸ்தவமான உண்மையான ஸ்வரூபத்தை அனுபவிக்க முடிகிறது. அதோடு நம் ஆன்மபலம் வீணாவதில்லை. தெய்வங்களால் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிவதன் மூலம் ஸ்தூலதேஹம் மற்றும் மனோதேஹத்திற்கு தேவையான சக்தி தானே கிடைக்கிறது.’ –  ஒரு தெரியப்படாத சக்தி (திருமதி ரஞ்சனா கடேகர் மூலமாக,12.12.2007, காலை 11.30)

3 உ. ஹிந்து தர்மம் வகுத்துள்ளபடி ஆடைகளை அணிவதன் மூலம் ஈச்வர சைதன்யம் மற்றும் தெய்வ தத்துவங்கள் ஆகர்ஷிக்கப்படுகின்றன

இதற்கான இரண்டு உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அ. குர்தா மற்றும் பைஜாமா: ‘குர்தா மற்றும் பைஜாமா அணிவதால் தீபத்தின் ஜோதி வடிவத்தைப் போன்ற ஒரு பாதுகாப்பு கவசம் நிர்மாணமாகிறது. இதன் மூலம் ஜீவனுக்கு வாயு மண்டலத்திலிருந்து ஈச்வர சைதன்யத்தை க்ரஹிப்பது சுலபமாகிறது. அதோடு ரஜ – தம தன்மைகளை எதிர்க்கவும் முடிகிறது.

ஆ. பட்டு வேஷ்டி: குர்தா பைஜாமாவைக் காட்டிலும் பட்டு வேஷ்டி அதிக ஸாத்வீகமானது. இதை அணிவதால் ஜீவனைச் சுற்றி ஒரு சூட்சும கோள வடிவான பாதுகாப்பு கவசம் நிர்மாணமாகிறது. அதனால் ஜீவனுக்கு தெய்வங்களின் தாரக – மாரக மற்றும் ஸகுன – நிர்குண ஆகிய இருவகை தத்துவங்களையும் க்ரஹிப்பது சுலபமாகிறது.’ – ஒரு வித்வான் ( திருமதி அஞ்சலி காட்கில் மூலமாக, 17.06.2007, இரவு 8.59).

3 ஊ. ஆடைகளின் மூலம் ஸாத்வீகத் தன்மை ஆகர்ஷிக்கப்படுவது, வெளியிடுவது ஆகியவை ஆடைகளின் வகை மற்றும் அணியும் முறையை பொறுத்தது

வரிசை எண் ஆடைகள் மற்றும்  அணியும் விதம் ஸாத்வீக தன்மையை க்ரஹித்து வெளியிடும் அளவு
1 ஒன்பது கஜ புடவை மற்றும் வேஷ்டி அதிகபட்சம்
2 ஆறு கஜ புடவை
அ. இடது தோளில் முந்தானை
ஆ. வலது தோளில் முந்தானை
அதிகம்
குறைவு
3 லுங்கி குறைவு
4 ஸல்வார்- குர்தா
அ. இரு தோள்களிலும் துப்பட்டா
ஆ. ஒரு தோளில்  துப்பட்டா
அதிகம்
குறைவு

– ஈச்வர் ( குமாரி மதுரா போஸ்லே மூலமாக, 28.11.2007   இரவு 7.15)

இதிலிருந்து ஹிந்து கலாச்சார பாரம்பரிய ஆடைகளான ஒன்பது கஜ புடவை மற்றும் வேஷ்டி ஆகியவற்றின் மஹத்துவம் தெரிய வருகிறது. ஹிந்து கலாச்சாரம், சைதன்யம் நிரம்பிய கலாச்சாரம் என்பதற்கான உன்னத உதாரணம் இது.

3 எ.  தார்மீக விதிகளின்போதும் பண்டிகைகளின்போதும் ஹிந்து தர்ம பாரம்பரியமான, ஸாத்வீக ஆடைகளை அணிவதால் அதிக பட்ச ஈச்வர சைதன்யம் ஆகர்ஷிக்கப்படுகிறது

‘ஹிந்து தர்மப்படி வருடம் முழுவதும் பலவித பண்டிகைகள், உற்சவங்கள் மற்றும் விரதங்கள் கொண்டாடப்படுகின்றன.  இதோடு, பலவித பூஜைகள், உபநயனம், விவாஹம் போன்ற தார்மீக விதிகள் செய்யப்படுகின்றன. ஸ்ரீராமநவமி, ஜன்மாஷ்டமி, ஹனுமான் ஜெயந்தி, மஹான்களின் வெளிப்பட்ட தினம் போன்ற விசேஷ தினங்களில் தெய்வங்களின், மஹான்களின் தத்துவம் அதிக அளவு செயல்பாட்டில் உள்ளது. தார்மீக விதிகளின்போது பூஜா ஸ்தலத்தில் தெய்வங்களை ஆவாஹனம் செய்கிறோம். இதனால் தெய்வங்களின் ஸான்னித்யம் அங்கு உள்ளது. இதன் தாத்பர்யம் என்னவென்றால் அந்த விசேஷ தினத்தில் ஈச்வர சைதன்யம் அதிக அளவு செயல்பாட்டில் உள்ளது. அன்று ஹிந்து தர்ம பாரம்பரியப்படியான ஸாத்வீக உடைகளை அணிவதன் மூலம் அந்த சைதன்யத்தின் அதிகபட்ச லாபம் நமக்குக் கிடைக்கிறது. உதாரணம், பெண்கள் தங்க அல்லது வெள்ளி ஜரிகைக் கரை கொண்ட 6 கஜ அல்லது 9 கஜா புடவை மற்றும் ஆண்கள் வேஷ்டி – அங்கவஸ்திரம் அல்லது குர்தா – பைஜாமா அணிவது சிறந்ததாகும். ‘ – திருமதி ராஜஸ்ரீ கொல்லம். ஸனாதன் ஆச்ரமம், ராமநாதி, கோவா.

3 ஏ. பண்டிகை, சுப தினம் அல்லது தாரிமீக விதி கொண்டாடும் தினத்தன்று புதுப்பட்டாடைகள் மற்றும் பலவித ஆபரணங்கள் அணிவதன் பலன்

3 ஏ 1.  தெய்வங்களின் ஆசிர்வாதம் கிடைக்கிறது

‘ பண்டிகை, சுபதினங்கள். அல்லது தார்மீக விதி கொண்டாடும் தினத்தன்று அவ்வப்பொழுது தெய்வங்கள் சூட்சும ரூபத்தில் இந்த பூமண்டலத்திற்கு வருகின்றனர். அன்று, புத்தாடை ஆபரணங்கள் அணிந்து அழகுப்படுத்திக் கொள்வதன் மூலம் அவர்களை இங்கு வரவேற்கிறோம்.  அதன் மூலம் தெய்வங்கள் பிரஸன்னமாகி ஆசீர்வாதத்தை அருளுகின்றனர்.  அதோடு நம்மால் தெய்வீக அதிர்வலைகளை க்ரஹித்துக் கொள்ள முடிகிறது.

3 ஏ 2.   தெய்வ தத்துவ அதிர்வலைகளின் லாபம்  வருடம் முழுவதும் நமக்கு கிடைக்கின்றன

பண்டிகை அன்று புது பட்டாடைகளை உடுத்துவதன் மூலம் தெய்வங்களின் தத்துவம் அந்த சிறப்பு ஆடைகளால் க்ரஹிக்கப்பட்டு அவை ஸாத்வீகமாக மாறுகின்றன. ஆடைகளில் ஆகர்ஷிக்கப்பட்ட தெய்வ தத்துவ அதிர்வலைகள் அதிக காலத்திற்கு நீடிக்கின்றன. இந்த ஆடைகளை அணிபவருக்கு வருடம் முழுவதும் தெய்வ தத்துவ அதிர்வலைகளின் லாபம் கிடைக்கின்றன.  ஆடைகளைத் துவைத்த பின்னும் தெய்வ தத்துவ அதிர்வலைகள் ஆகர்ஷிக்கப்படுகின்றன.

3 ஏ 3.தெய்வ தத்துவ அதிர்வலைகளால் தேஹங்கள் தூய்மையடைகின்றன

தெய்வ தத்துவ அதிர்வலைகள், ஜீவனின் ஸ்தூலதேஹம் மனோதேஹம் காரண தேஹம் மற்றும் மகா காரணதேஹம் ஆகியவற்றிடம் அதிகபட்சம் ஆகர்ஷிக்கப்படுகின்றன. அதன் மூலம் அந்த தேஹங்கள் தூய்மை அடைகின்றன. அவை ஸாத்வீகமானதாக மாறுகின்றன. ‘ – ஈச்வர் ( குமாரி மதுரா போஸ்லே மூலமாக,12.11.2007   இரவு 8.15)

3 ஐ .ஆடைகளால் தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு ஏற்படுதல்

அபவித்ரமாகவும், நிர்வாணமாகவும் இருப்பதால் தீய சக்திகளின் கஷ்டம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

சக்திவிஷயே   ந முஹூர்த்தமப்யப்ரயத: ஸ்யாத் | நக்னோ வா ||

– ஆபஸ்தம்பஸூத்ரம்   1.5.15.8 – 9

அர்த்தம் :  முடிந்தவரை ஒரு க்ஷணம் கூட அபவித்ரமாகவோ நிர்வாணமாகவோ இருக்கக் கூடாது.

தீய சக்திகளிடமிருந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்க பிறந்த குழந்தைகளை துணியால் சுற்றி வைக்கின்றனர்.’- ஈச்வர் (குமாரி மதுரா போஸ்லே மூலமாக, 28.11.2007, இரவு 7.05)

4. ஹிந்து தர்மப்படி ஆடைகள் அணிவதால் தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது

1. புடவை கொசுவங்களிலிருந்து சக்தி பிரவாஹம் பூமியை நோக்கிப் பாய்வதால், பாதாளத்திலிருந்து வரும் தீய சக்திகளிடமிருந்து `பெண்களுக்கு பாதுகாப்பு ஏற்படுதல்’:  ‘புடவையிலிருந்து வெளிப்படும் சக்தி தத்துவம், வாயு மண்டலத்தில் உள்ள தீய சக்திகளோடு அனாயாசமாக யுத்தம் செய்கிறது. அதனால் ஜீவனின் மனம் மற்றும் புத்தி மீது தீய சக்திகளின் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. புடவையின் ஒவ்வொரு கொசுவத்திலிருந்தும் வெளிப்படும் வெண்மையான ஒளிவெள்ளம் வாளைப் போன்று இயங்குகின்றது.  கொசுவத்திலிருந்து சக்தி பிரவாஹம் பூமியை நோக்கிப் பாய்வதால் பாதாளத்தில் இருந்து வரும் தீய சக்திகளிடமிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது.’ – ஒரு தெரியப்படாத சக்தி (திருமதி ரஞ்ஜனா கடேகர் மூலமாக 9.6.2007,  காலை 11)

2. பண்டிகை சுபதினம் மற்றும் தார்மீக விதியன்று புதிய பட்டாடை மற்றும் ஆபரணங்கள் அணிவதால் தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிடைத்தல் : ‘பண்டிகை, யக்ஞம், உபநயனம், விவாஹம், வாஸ்துசாந்தி போன்ற தார்மீக விதிகளின் போது, தெய்வங்கள் மற்றும் அசுர சக்திகளின் சூட்சும யுத்தம் முறையே ப்ரம்மாண்டம், வாயு மண்டலம் மற்றும் வாஸ்து ஆகிய ஸ்தானங்களில் நடக்கின்றன. அதனால் கொண்டாடுபவர் மற்றும் தார்மீக விதிகளுக்காக கூடியிருப்பவர் ஆகியோரின் மீது இந்த சூட்சும யுத்தத்தின் பரிணாமம் ஏற்படுகிறது. அதனால், தீய சக்திகளால் கஷ்டம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பலவித தங்க ஆபரணங்கள் மற்றும் புது பட்டாடை அணிந்தவரைச் சுற்றி ஈச்வரனின் ஸகுண – நிர்குண நிலையிலான சைதன்யத்தின் பாதுகாப்பு கவசம் நிர்மாணமாகிறது. அதனால் ஜீவனின் ஸாத்வீகத்தன்மை அதிகரிக்கிறது.  தீய சக்திகளின் தாக்குதலிலிருந்து பாதுகாப்பு ஏற்படுகிறது.’ – ஈச்வர் (குமாரி மதுரா போஸ்லே மூலமாக 12.11.2007, இரவு 8.15)

தகவல்: ஸனாதனின் தமிழ் நூல் ‘ஆன்மீக கண்ணோட்டப்படி ஆடைகள் எவ்வாறு இருக்கவேண்டும் ?

 

 

 

Leave a Comment