Contents
- 1.கோவிலின் முக்கியத்துவம்
- 2. கோவிலில் தரிசனம் செய்வதன் மஹத்துவம்
- 3. ‘மந்திர்’ என்ற வார்த்தையைக் காட்டிலும் கோவில் அல்லது தேவாலயம் எனும் வார்த்தை சிறந்தது. (கோவில் என்பது தெய்வத்தின் உருவத்தோடும், தேவாலயம் என்பது தெய்வத்தின் அருவமற்ற தன்மையையும் குறிக்கின்றது)
- 4. கோவில் அமைப்பின் ஏழு நிலைகளும், அதன் தத்துவங்களும், முக்கியத்துவமும்
1.கோவிலின் முக்கியத்துவம்
1 அ. பக்தி மார்க்கத்தின்படி முக்கியத்துவம்
கோவிலுக்கு சென்று வழிபடும்போது அங்குள்ள ஸாத்வீக அதிர்வலைகளை நாமும் பெற முடியும். அங்குள்ள ஸாத்வீகத்தால் தெய்வத்தின் மீதுள்ள பக்தி உணர்வு அதிகமாகின்றது.
தெய்வங்களின் அபிஷேகம், பூஜை போன்ற தார்மீக விதிகளின்போது ‘பவித்ரக்’, என அழைக்கப்படும், அதிசூட்ம சைதன்ய துகள்கள், அந்த தெய்வ விக்ரகத்தில் வெகுவாகப் படிகின்றன. அங்கு வந்திருக்கும் பக்தர்களும், இந்த சைதன்ய துகள்களால் பெரும் பயன் அடைகிறார்கள்.
சுயம்பு மற்றும் அதிக சக்தி வாய்ந்த (ஜ்யோதிர் லிங்கங்கள் போன்றவை) கோவில்கள் மற்றும் மஹான்களால் நிறுவப்பட்டவை ஆகியவற்றில் சக்தி மற்றும் சைதன்யம் அதிகமாக உள்ளதால் அங்கு செல்லும் பக்தர்களுக்கு அதிக நன்மை ஏற்படுகிறது.
1 ஆ. ஞானமார்க்கத்தின்படி முக்கியத்துவம்
‘த்ரஷ்டா த்ருஷ்யவஷாத் பத்த: த்ருஷ்யபாவே விமுச்யதே”.
காண்பவன் காணும் காட்சியால் பந்தப்படுகிறான். காட்சி பற்றிய சிந்தனை ஏற்படாத போது முக்தியடைகிறான். (உதாரணமாக, ஒருவன் தனக்கு மிகவும் பிடித்தமான தின்பண்டத்தைப் பார்த்தவுடன் அதை சாப்பிடும் ஆசை தோன்றுகிறது. அப்பொருள் கண்முன் இல்லாவிட்டால் அவ்வாசை அடங்கி விடுகிறது). கண்முன்னே பலப்பல காட்சிகள், எப்போதும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. அப்படி என்றால் காட்சி பற்றி சிந்தனை செய்யாத மனநிலை எப்போது ஏற்படும்? எந்தக் காட்சியால் முக்தி அடைவானோ, அக்காட்சியைக் கண்முன் நிறுத்த வேண்டும், அதாவது, தமோ குணத்திலிருந்து ரஜோ குணத்திற்கும் ரஜோ குணத்திலிருந்து ஸத்வ குணத்திற்கும் முன்னேறுவான். எந்தக் காட்சியால் பந்தப்பட்ட ஒரு ஜீவன் முக்தி அடைகிறானோ அப்படிப்பட்ட ஒரு காட்சியே ‘கோவில்’ ஆகும். அங்கு நடக்கும், பகவானின் அவதார நோக்கங்களையும், லீலா விநோதங்களையும் விவரிக்கும் பிரசங்கங்களையும், பஜனைகளையும் கேட்கக் கேட்க, ஒருவித முனைப்பு ஏற்படும். தொடர்ந்து கடவுளின் பெருமைகளைக் கேட்கக் கேட்க இந்த சாதாரண முனைப்பு, அடக்க முடியாத ஆவலாக மாறி, இறைத்தன்மையை வெகுவாக உணர்ந்து இறைநிலையை அடைய முயற்சி எடுக்கிறான்.
– பரம பூஜ்ய, காணே மஹராஜ், நாராயண்காவ் மஹாராஷ்டிரா.
1 இ. கோவிலால் பத்து திசைகளும் சைதன்யமாகுதல்
‘கோவில்’ என்பது ப்ரத்யக்ஷமாக ஈச்வர சக்தியை ஆகர்ஷித்து, வெளியிட்டு ஸஞ்சாரம் செய்ய வைக்கும் மையமாக இருப்பதால், தெய்வீக சக்தியை ஆகர்ஷித்து எல்லா திசைகளிலும் பரவச் செய்கிறது. இதனால் சுற்றுப்புறமும் அங்கு செல்லும் ஒவ்வொரு ஜீவனும் தூய்மைப்படுகிறது. – ஒரு ஞானி (திரு நிஷாத் தேஷ்முக் மூலமாக, 4.1.2007, மாலை 6.53)
ஆகம விதிப்படி, பீடம், அதற்குரிய தெய்வீகச் சடங்குகளால் அமைக்கப்பட்டதால் கீழ் திசையும், கோவிலில் மூர்த்தியின் ப்ராணப்ரதிஷ்டை செய்யப்பட்டதால் எட்டு திசைகளும், கோபுரத்தில் உள்ள கும்பங்களிலிருந்து சைதன்யம், நீரூற்று போல் மேல்நோக்கி பரவுவதால், மேல்புறமும் சுற்றிலும் உள்ள இடங்களும் தூய்மையாகின்றன. இதனால் 10 திசைகளிலிருந்து கிராமத்திற்குள் நுழைய முயற்சிக்கும் தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு ஏற்படுகிறது’. – ஒரு வித்வான் (திருமதி அஞ்சலி காட்கில் மூலமாக, 14.01.2005)
2. கோவிலில் தரிசனம் செய்வதன் மஹத்துவம்
2 அ. கோவில் தரிசனம் என்பது ஸகுண உபாசனையின் மூலம் நிர்குண உபாசனை செய்வதற்கான முயற்சியே ஆகும்
கோவில் தரிசனம் என்பது ஸகுண உபாசனையில் மனதை லயிக்க வைப்பதன் மூலம் தெய்வங்களின் சூட்சும உலகை உணர்வதாகும். இதுவே நிர்குண ஸகுண உபாசனை ஆகும். இதை செயல்படுத்தி ஸாதனையாக செய்யும்போது சுய ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுகிறது.
கோவில் தரிசனம் என்பது ஈச்வர சக்தியை ஸகுண உபாசனை செய்வது; அதன் மூலம் ஈச்வரனை அடைவது; அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்வது; ஈச்வர கிருபையால் ஸகுண உபாசனை செய்ய ஆரம்பித்து நிர்குண உபாசனைக்கு முன்னேறும் படிப்படியான முயற்சிகள் ஆகும். – ஒரு வித்வான் (திரு நிஷாத் தேஷ்முக் மூலமாக, 4.1.2007, மாலை 6.50)
2 ஆ. கோவில் தரிசனத்தின் மூலம் நடக்கும் வ்யஷ்டி மற்றும் ஸமஷ்டி ஸாதனை
கோவில் வழிபாடு என்பது தனிமனித வழிபாடு ஆகும். பல தனி மனிதர்கள் அங்கு வழிபடுவதால் அது கூட்டு வழிபாடாகவும் ஆகிறது. ஒவ்வொருவருடைய ஆன்மீக ஸாதனையும் சேர்ந்து ஒரு புது ஆன்மீக முயற்சியாக மாறி, ஜீவனின் பொதுநல ஆர்வமாக மாறி, ஆன்மீக முன்னேற்றமும் ஏற்படுகிறது. கோவில் தரிசனத்தின் மூலம் ஒரு ஜீவனின் வ்யஷ்டி மற்றும் ஸமஷ்டி ஸாதனை ஆகிய இரண்டுமே நடக்கிறது.
வ்யஷ்டி ஸாதனை: ஒவ்வொரு ஜீவனும் தெய்வ தரிசனத்தின் போது உருவத்தை மறந்து அருவத்தை உணரும் மேல் நிலைக்குப் போகிறது.
ஸமஷ்டி ஸாதனை: கோவில் தரிசனம் என்ற ஜீவனின் வ்யஷ்டி ரூபமான வெளிப்பட்ட செயலால் ஸமஷ்டிக்கு தேவையான கர்மாரூபமான ஸாதனை வெளிப்படாது நடக்கிறது. அதனால் ஜீவன் தனக்காகவும் பிறருக்காகவும் (வ்யஷ்டி மற்றும் ஸமஷ்டி ) ஸாதனைகளின் பயனை கோவில் தரிசனத்தின் மூலம் அடைகிறது. – ஸ்ரீ குரு தத்துவம் ( திரு நிஷாத் தேஷ்முக் மூலமாக,12.02.2007, இரவு 8.42).
3. ‘மந்திர்’ என்ற வார்த்தையைக் காட்டிலும் கோவில் அல்லது தேவாலயம் எனும் வார்த்தை சிறந்தது. (கோவில் என்பது தெய்வத்தின் உருவத்தோடும், தேவாலயம் என்பது தெய்வத்தின் அருவமற்ற தன்மையையும் குறிக்கின்றது)
‘மந்திர்’ என்ற வார்த்தையைக் காட்டிலும் கோவில் என்ற வார்த்தையில் அதிக சைதன்யம் உள்ளது. கோவில் என்ற வார்த்தை தெய்வத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதால் அதில் தெய்வீக சக்தி அதிகமாக உள்ளது. ‘கோவில் என்பது தெய்வத்தின் இருப்பிடம்’ என்ற பொருளில் வருகிறது. தேவாலயம் என்பது ‘தெய்வத்தை உணரும் இடம்’ என்ற பொருளில் வருகிறது. அதனால் கோவில், தெய்வத்தின் ஸகுண ரூபத்தோடும், தேவாலயம், தெய்வத்தின் நிர்குண தத்துவத்தோடும் சம்பந்தப்பட்டுள்ளது. அதனால் ‘மந்திர் என்ற வார்த்தையைக் காட்டிலும் ‘கோவில்’ அல்லது ‘தேவாலயம்’ என்ற வார்த்தையை உபயோகிப்பது சிறந்தது.- ஒரு வித்வான் (திருமதி. அஞ்சலி காட்கில் மூலமாக,14.01.2005, பிற்பகல் 2.40)
4. கோவில் அமைப்பின் ஏழு நிலைகளும், அதன் தத்துவங்களும், முக்கியத்துவமும்
கோவில் கட்டமைப்பில் உள்ள ஏழு நிலைகளின் பகுதிகள் ப்ரபஞ்சத்தின் ஐந்து தத்துவங்களிலிருந்து, அந்த இடத்திற்கு ஒத்திசைவான தத்துவத்தை ஈர்க்கும் சக்தி படைத்தவை. மற்றும் மனித ஜீவனில் உள்ள ஒத்திசைவான சக்கர சக்தியையும் சுத்தப்படுத்துகிறது, இவ்வேழு நிலைகளும், வழிபாடு மூலம் மேம்பாடு அடைய முற்படும் ஜீவனது ஏழு நிலைகளையும் அதாவது மூலாதாரத்தில் இருந்து ஸஹஸ்ராரம் வரை உள்ள பாதையை தூய்மையாக்கும் உத்தியாக மாறுகிறது. இந்த தனித்தன்மை வாய்ந்த கோவில் கட்டமைப்பில் ஏழாவது நிலையைச் சார்ந்த ஆகாயதத்துவம் நிர்குண நிலையை குறிக்கிறது. முதல் நிலை – ப்ருத்வீ தத்துவம் – ஸகுண நிலையைக் குறிக்கிறது. இவ்வாறாக கோபுரக் கலசத்திலிருந்து, பிரவேசிக்கும் நுழைவாயில் வரை, தெய்வ ஸாந்நித்யத்துடன் கூடிய தெய்வீக நிர்குண அதிர்வலைகள், ஸகுண அதிர்வலைகளாக மாறுகின்றன. அதன் மூலம், கோவிலுக்குள் நுழையும் ஜீவனுக்கு தெய்வீக ஸகுண தத்துவத்தின் அதிகபட்ச நன்மை கிடைக்கிறது.
நிலை | ஆலயத்தின் பகுதி | பஞ்ச தத்துவத்தோடு தொடர்புடைய தத்துவம் | பக்தனின் எந்த தேஹம் மற்றும் கோசம் |
முதல் | வாசல் மற்றும் புலிமுகம் | நிலம் | ஸ்தூல தேஹம் |
இரண்டாம் | சுற்றியுள்ள மதில் மற்றும் துளசி பிருந்தாவனம் | நிலம் மற்றும் நீர் | ப்ராணதேஹம் மற்றும் ப்ராணமய கோசம் |
மூன்றாம் | நீர்த்தேக்கம் மற்றும் விளக்குகளின் வரிசை | நீர் மற்றும் நெருப்பு | மனோமய கோசம் |
நான்காம் | ஸ்தான தேவதையின் மேடை மற்றும் ப்ரதான வாசல் | நெருப்பு | ப்ராணமய கோசம் மற்றும் மனோமய கோசம் |
ஐந்தாம் | ப்ரதக்ஷண பாதை, படிகள் மற்றும் சபாமண்டபம் (கண்ணாடி, மணி மற்றும் மேல் தளம்) | காற்று | சூட்சும தேஹம் |
ஆறாம் | கர்ப்பக்ருஹம், யக்ஞகுண்டம், சூரிய நாராயணனின் மூர்த்தி | காற்று மற்றும் ஆகாயம் | சூட்சும தேஹம் மற்றும் ப்ராண தேஹம் |
ஏழாம் | கர்ப்பக்ருஹம், நந்தா தீபம், சின்ன தேவாலயம், கோமுக், கலசம் மற்றும் அதன் மேல் உள்ள கொடி | ஆகாயம் | ஸ்தூல தேஹம் மற்றும் சூட்சும தேஹம் |
தரிசிப்பவன் இறைவனை அடைய வேண்டும் என்ற உன்னத கண்ணோட்டத்தில் கோவிலின் கட்டமைப்பு எவ்வளவு சூட்சுமமாக திட்டமிடப்பட்டுள்ளது என்பதை இது காட்டுகிறது. மற்ற மதத்தினரின் பிரார்த்தனை ஸ்தலத்தில் இது போன்ற கட்டமைப்பு காணப்படுவது இல்லை. ஹிந்து தர்மம், மற்ற மதங்களை காட்டிலும் எவ்வளவு உயர்ந்தது, பரிபூரணமானது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.’ – ஒரு வித்வான் (திருமதி அஞ்சலி காட்கில் மூலமாக16.01.2005, இரவு 10.19)
தகவல்: ஸனாதனின் தமிழ் நூல் ‘கோவில் தரிசனம் (வழிமுறை மற்றும் சாஸ்திரம்).’