சமூக விழாக்களில் குத்துவிளக்கேற்றுதல்

Contents

ஹிந்து தர்மத்தில் குத்துவிளக்கேற்றுதல் அதிக மஹத்துவம் வாய்ந்ததாகும். (தீபத்தின் மஹத்துவத்தைப்  பற்றி ஸனாதனின் ‘ பூஜா மண்டபமும் பூஜை உபகரணங்களும்’ என்ற கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.)

1. குத்துவிளக்கேற்றுவதன் உள்ளர்த்தம்

விளக்கேற்றுவது என்பது நமக்குள் இருக்கும் ஆத்ம சக்தியை வெளிப்படையச் செய்வதாகும்.

தீபத்தைச் சுற்றியுள்ள சாந்தமான ஒளிமண்டலம் நம்முடைய ஆத்மப்ரகாசத்தையும் தீபத்தின் ரஜோகுண ப்ரகாசம் நம் ஆத்ம தேஜஸையும் குறிக்கிறது. ஆத்ம தேஜஸ் என்பது ஈச்வரனின், நேரடியாக செயல்படும் ஸகுண சக்தியின் சின்னமாகும் மற்றும் ஆத்மப்ரகாசம் என்பது தேஜஸின் பின்னே செயல்படும் ஈச்வரனின் ஸங்கல்ப சக்தியாகும்.

2. குத்து விளக்கேற்றுவதன் மஹத்துவம்

2 அ. ஈச்வரனின் ஸங்கல்ப சக்தி செயல்பட ஆரம்பித்தல்

குத்துவிளக்கேற்றி நாம் ஒரு காரியத்தை ஆரம்பித்து வைக்கும்போது நம் ஆத்மஜோதியின் பலத்தினால் செய்யப்பட்ட பூஜையின் மூலம் ப்ரம்மாண்டத்திலுள்ள விசேஷ தெய்வங்களின் தத்துவங்களை ஆவாஹனம் செய்கிறோம். பின்பு அந்த தெய்வீக அதிர்வலைகளை அங்கு எழுந்தருளுமாறு பிரார்த்தனை செய்கிறோம்.  இதன் மூலம் நம் காரியத்திற்காக ஈச்வர ஸங்கல்பசக்தி செயல்பட ஆரம்பிக்கிறது. அந்த காரியமும் வெற்றி அடைகிறது.

2 ஆ. அந்த வாஸ்துவின் நான்கு புறமும் பாதுகாப்பு கவசம் ஏற்படுதல்

பிரம்மாண்டத்திலுள்ள ஈச்வரனின் க்ரியாசக்தி பலத்தில் வாஸ்துவின் நாலாபக்கமும் பாதுகாப்பு கவசம் உருவாகிறது.  தீபத்தை ஏற்றுவதன் மூலம் நாம் ஒரு விதத்தில் வாஸ்துசுத்தி செய்கிறோம். பாதுகாப்பு கவசத்தின் மூலம் வெளிப்படும் சுழலும் துரித கதி கொண்ட அதிர்வலைகளால், அதிக சக்தி வாய்ந்த தீய சக்திகளால் அந்த வாஸ்துவிற்குள் நுழைய முடிவதில்லை. தெய்வங்களின் ஆசீர்வாதத்தின் மூலம் அந்த காரியம் எந்தத் தடங்கலில்லாமல் நடைபெறுகிறது.

3. வியாஸபீடத்தில் நடைபெறும் விழாவில் தேங்காய் உடைத்து குத்து விளக்கேற்றுவதற்கு ஆதாரமான சாஸ்திரம்

 3 அ.  தேங்காய் உடைப்பது:

வியாஸபீடத்தை ஸ்தாபிக்கும் முன்னர் பூமிபூஜையின் போது தேங்காய் உடைக்கப்படுகிறது. எந்த இடத்தில் வியாஸபீடம் நிர்மாணிக்கப்படுகிறதோ அங்கு சுத்தி செய்வதால் அங்குள்ள கஷ்டம் தரும் அதிர்வலைகள் நஷ்டம் அடைகின்றன.

எந்த இடத்தில் ஏற்கனவே வியாஸபீடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோ அங்கு அதற்கெதிரில் ஒரு கல்லை வைத்து,  ஸ்தான தேவதையிடம் பிரார்த்தனை செய்து தேங்காய் உடைக்க வேண்டும்.  வியாஸபீடத்தில் எந்த நிகழ்ச்சியும் ஆரம்பிக்கும் முன்பு அந்த இடத்தைத் தூய்மைப்படுத்துவது மிகவும் அவசியம். இல்லாவிட்டால், தீய சக்திகளின் தாக்குதலினால் நிகழ்ச்சி சரியான நேரத்திற்கு ஆரம்பிக்க முடியாமல் போவது, அவ்விடத்தில் அமைதியின்மை, சலசலப்பு, ஆகிய கஷ்டங்கள் ஏற்படுகின்றன. பிரார்த்தனையின் மூலம் ஸ்தானதேவதையை ஆவாஹனம் செய்வதால் அவரின் க்ருபா அதிர்வலைகள் தேங்காயின் இளநீர் வாயிலாக அந்த இடம் முழுவதும் பரவுகிறது. இதன் மூலம் அந்த இடத்தில் நுழையும் கஷ்டம் தரும் அதிர்வலைகளின் கதி கட்டுப்படுத்தப்படுகிறது. அந்த சுற்றுப்புற சூழ்நிலையில் ஸ்தான தேவதையின் சூட்சும அதிர்வலைகளின் மண்டலம் நிர்மாணமாகிறது. அந்த நிகழ்ச்சியும் எந்தத் தடங்களும் இல்லாமல் சிறப்பாக நடைபெறுகிறது.-   ஒரு வித்வான் (திருமதி அஞ்சலி காட்கில் மூலமாக, 20.01.2005)

மற்ற குறிப்புகள்

ஸத்வ, ரஜ, தம ஆகிய முக்குணங்களையும் ஆகர்ஷிக்கும் சக்தி தேங்காய்க்கு உண்டு  அதனால்தான்,  அது பூஜைக்கும்  மற்றும் திருஷ்டி கழிப்பதற்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

திறப்பு விழாவின் போது ஒரு கல்லின் மேல் தேங்காய் உடைக்கப்படுகிறது. அச்சமயத்தில் தேங்காயிலுள்ள சைதன்யம் மற்றும் சக்தி சூழலில் பரவி அந்த சூழலைத் தூய்மையாக்குகிறது. அதே சமயம் அங்குள்ள தீய சக்திகளும் தேங்காயால் ஆகர்ஷிக்கப்பட்டு நஷ்டமடைகின்றன.

தேங்காயை உடைக்கும் போது ஏற்படும் ‘ஃபட்’ என்ற சப்தத்தால் அங்குள்ள தீய சக்திகள் விரட்டியடிக்கப்படுகின்றன.

அந்த வாஸ்துவை சுற்றி ஒரு பாதுகாப்பு கவசம் ஏற்பட்டு தெய்வீக சைதன்யம் அங்கு ஆகர்ஷிக்கப்படுகின்றன.

ஒருவர் மிகுந்த பக்தி பாவத்தோடு தேங்காய் உடைக்கும் போது அவருக்கு சக்தி கிடைக்கிறது.’- திருமதி ப்ரியங்கா காட்கில், ஸனாதன் ஸன்ஸ்தா ( 22.07.2010)

3 ஆ.  குத்துவிளக்கேற்றுதல்

வியாஸபீடத்தை ‘ஞானபீடம்’ என்பர். வியாஸபீடத்தில் நேரடியாக ஈச்வர தத்துவம், சொற்பொழிவாளர் மூலமாக ஞானதானம் அளிக்கும் காரியத்தைச் செய்கிறது. தீபம், ஆத்மஜோதியைக் குறிப்பதாகும். ஆத்மஜோதி  எப்போதும் ஞானமயமாக உள்ளது.

ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஆத்மஜோதி மாயையைக் கடக்க உதவுவதோடு பிரம்மஞானத்தையும் வழங்குகிறது. ஒருவிதத்தில் குத்து விளக்கேற்றுவது என்பது வியாஸபீடத்தில் செயல்பாட்டிலுள்ள ஞான அதிர்வலைகளை ஆவாஹனம் செய்வதாகும். அதோடு வியாஸபீடத்தில் நிர்மாணிக்கப்படும் ஞானமயமான வாயு மண்டலத்தின் ஞான அதிர்வலைகளை தீபஜோதியின் மூலம் தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருப்பதாகும்.

 3 இ. தேங்காய் உடைத்த பின்னர் குத்து விளக்கு ஏற்றுதல்

தேங்காய் உடைப்பது என்பது தீய சக்திகளின் சஞ்சாரத்தை தடுத்து நிறுத்துவது. குத்துவிளக்கேற்றுவது என்பது ஞானபீடத்தில் செயல்பாட்டிலிருக்கும் தெய்வீக அதிர்வலைகளை வரவேற்பதாகும்.  அதனால் முதலில் தேங்காய் உடைத்து ஸ்தானதேவதையை ஆவாஹனம் செய்து அவ்விடத்திலுள்ள தீய சக்திகளை கட்டுக்குள் வைத்திருக்கும்படி பிரார்த்தனை செய்வது. அதன் பிறகு குத்துவிளக்கேற்றி தீபத்தின் மூலம் வெளிப்படும் அதிர்வலைகளால் அதிக சக்தி பொருந்திய தீய சக்திகளின் சஞ்சாரத்தை கட்டுப்படுத்தி வியாஸபீடத்தின் ஞானதான காரியத்தை செய்விப்பது.

3 ஈ. குத்துவிளக்கேற்றிய பிறகு தேங்காய் உடைக்கத் தேவையில்லை

தேங்காயின் மூலம் வெளிப்படும் தெய்வீக தத்துவம் பூமி மற்றும் நீர் தத்துவத்தோடு சம்பந்தப்பட்டது.  தீபத்திலிருந்து வெளிப்படும் அதிர்வலைகள் தேஜ தத்துவத்தோடு சம்பந்தப்பட்டது. அதனால் தேங்காயின் மூலம் கனிஷ்ட (கீழ்) நிலையிலுள்ள தீய சக்திகளையும் ( பூமி மற்றும் நீர் தத்துவத்துடன் சம்பந்தப்பட்டது)  தீபத்தின் மூலம் உயர்ந்த நிலையிலுள்ள தீய சக்திகளையும் (தேஜ தத்துவத்துடன் சம்பந்தப்பட்டது)  விரட்டி அடிக்க முடிகிறது. அதனால் குத்துவிளக்கேற்றிய பிறகு தேங்காய் உடைக்கும் அவசியம் இல்லாமல் போகிறது.

4. வியாஸபீடத்தில் குத்துவிளக்கேற்றும் காரியத்திற்கு ஆதாரமான சாஸ்திரம்

 4 அ. குத்துவிளக்கேற்றுவதற்கு முன்னால் குத்துவிளக்கிற்குக் கீழே ஏன் அக்ஷதை வைக்க வேண்டும்?

அக்ஷதையிலுள்ள பூமி மற்றும் நீர் தத்துவ துகள்களினால் தீபத்தின் மூலம் வெளிப்படும் அதிர்வலைகள் க்ரஹிக்கப்படுகிறது. நீர் தத்துவ துகள்களின் அதிகமான இருப்பால் அவசியத்திற்கேற்றபடி துரித கதி பெற்று சூழலில் பூமியின் பக்கமாக வெளியிடப்படுகிறது. இந்த அதிர்வலைகள் இயல்பாகவே கீழ்நோக்கி பாய்வதால் பூமியை நோக்கி ஆகர்ஷிக்கப்படுகிறது. குத்துவிளக்கிலிருந்து வெளிப்படும் அதிர்வலைகள் ஆகாயத்தை நோக்கி ஆகர்ஷிக்கப்படுகின்றன. அதனால் அவற்றின் வெளிப்பாடு மேல்நோக்கி உள்ளது. இது போன்ற அந்த இடத்தில் தீபத்தின் மூலமாக மேலே ஒரு சூட்சும கூரையும் அக்ஷதையின் மூலமாக பூமியில் ஒரு சூட்சும தரையும் உருவாக்குகிறது. பின்பு அதுவே சிறிது நேரத்திற்குப் பின் ஒரு கும்ப வடிவிலான பாதுகாப்பு கவசமாக மாறுகிறது.

4 ஆ. குத்துவிளக்கேற்றும் போது நெய்க்கு பதிலாக எண்ணெய்யை ஏன் உபயோகப்படுத்த வேண்டும்?

குத்துவிளக்கில் எண்ணெய்  உபயோகிப்பது நல்லது. எண்ணெய்  ரஜோகுண அதிர்வலைகளையும், நெய் ஸத்வ குண அதிர்வலைகளையும் வெளியிடும் சின்னமாக விளங்குகிறது. எந்த ஒரு காரியத்திற்கும் துரித கதி கிடைக்க ரஜோகுண க்ரியா அதிர்வலைகள் அவசியம். எண்ணெய் ஜோதி, ப்ரம்மாண்டத்திலுள்ள தெய்வங்களின் க்ரியா – அதிர்வலைகளை விழிப்படையச் செய்து அவற்றை செயல்பட வைக்கிறது. அதனால் குத்துவிளக்கேற்றுவதற்கு எண்ணெயே உபயோகப்படுத்தப்படுகிறது.

4 இ. குத்து விளக்கை மெழுகுவர்த்தி கொண்டு அல்ல, கைவிளக்கால் ஏன் ஏற்ற வேண்டும்?

ஆன்மீக கண்ணோட்டத்தில் மெழுகுவர்த்தியிலிருந்து தம-ரஜ அதிர்வலைகள் வெளிப்படுகின்றன. மெழுகுவர்த்தியை ஏற்றியவுடன் அதிலுள்ள மெழுகு கரைவதால் அதிலிருந்து அதிக அளவு தமோ குண அதிர்வலைகள் செயல்பட ஆரம்பிக்கின்றன. அதனால் ஹிந்து கலாச்சாரப்படியும் ஆன்மீக கண்ணோட்டப்படியும் மெழுகுவர்த்தி ‘தமோ குணம்’ உள்ளதாக கருதப்படுகிறது – ஒரு வித்வான் (திருமதி அஞ்ஜலி காட்கில் மூலமாக), 20.01.2005

 தகவல்: ஸனாதனின் தமிழ் நூல் ‘குடும்ப தார்மீக காரியங்கள் மற்றும் ஸமூக காரியங்களின் சாஸ்திரம்’

Leave a Comment