Contents
- 1. பெருக்கும் செயல் சம்பந்தமான ஆசாரம்
- 1 அ. எப்போது பெருக்கவேண்டும்?
- 1 ஆ. துடைப்பத்தால் பெருக்கும் சரியான உத்தி என்ன?
- 1 இ. கிழக்கு திசையை தவிர்த்து மற்ற திசைகளை நோக்கி பெருக்கலாம்
- 1 ஈ. வீட்டின் உள்ளிருந்து வெளி நோக்கி பெருக்கி குப்பையை வீட்டு வாசற்படிக்கருகே சேர்க்க வேண்டும்
- 1 உ. பெருக்கும் போது துடைப்பத்தை மாற்று திசையில் தரையில் தேய்க்க கூடாது. துடைப்பத்தை தூக்கி வைத்து பெருக்க வேண்டும்
- 1 ஊ. துடைப்பத்தால் பூமியை தட்டக்கூடாது மற்றும் இழுத்துக் கொண்டு செல்லக்கூடாது
- 1 எ. குப்பையை அப்புறப்படுத்துதல்
- 1 ஏ. ஏனைய விஷயங்கள்
- 2. தரையைத் துடைப்பது சம்பந்தமான ஆசாரம்
1. பெருக்கும் செயல் சம்பந்தமான ஆசாரம்
1 அ. எப்போது பெருக்கவேண்டும்?
1. வீடு அசுத்தமாக இருக்கும்போது எச்சமயமானாலும் க்ஷாத்ர பாவத்தோடு, பக்திபூர்வமாக நாமஜபம் செய்து கொண்டே பெருக்கவும். இவ்வாறு செய்வதனால் பெருக்கும் செயலால் ஏற்படும் கஷ்டம் தரும் அதிர்வலைகள் நம்மை பாதிக்காமல் இருக்கும்.
2. ஆசார நியமத்திற்கு நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொண்டு தினமும், ரஜ- தம அதிர்வலைகளை அழிப்பதற்கு ஏற்ற நேரமான காலை நேரத்திலேயே பெருக்கி விட வேண்டும்.
3. காலை ஒரு வேளை மட்டும் பெருக்கவும். மாலை நேரத்தில் ரஜ – தம பிரதானமான அதிர்வலைகள் அதிகமிருப்பதால், ரஜ – தம பிரதானமான பெருக்கும் செயலை பயன்படுத்திக்கொண்டு தீய சக்திகள் வீட்டிற்குள் நுழையும் வாய்ப்பு உள்ளது. அதனால் மாலை நேரத்தில் எப்போதும் பெருக்கக் கூடாது. காலை நேரம் அதிக ஸாத்வீகம் நிறைந்தது. அதனால் இந்த ரஜ – தம பிரதானமான பெருக்கும் செயலை கட்டுப்படுத்திதுகிறது. அதனால் அனைவருக்கும் ஏற்படும் கஷ்டம் தீர்க்கப்படுகிறது.
4. சந்தியாகாலத்திற்கு முன் பெருக்குதல்
கேள்வி (தொகுத்தவர்) : வீட்டை சாயங்காலம் பெருக்குவதால் அன்று சேர்ந்துள்ள புழுதி அனைத்தையும் நீக்க முடிகிறது. அதனால் ரஜ – தம அதிர்வலைகள் அதிகம் ஆகர்ஷிக்கப்படுவதில்லை. இருந்தாலும் ஏன் சாயங்காலத்தில் பெருக்க கூடாது என்று சொல்கிறீர்கள்?
பதில் (ஒரு வித்வான்) : கலியுகத்தில் பெரும்பாலும் ஜீவன்கள் ரஜ-தம பிரதானமானவையாக இருப்பதால் மாலையில் இந்த அதிர்வலைகளின் அடர்த்தி அதிகமிருக்கும் போது ரஜ – தம பிரதானமான காரியங்களைச் செய்யக்கூடாது. பெருக்கும்போது துடைப்பத்தால் தரையில் ஏற்படும் உராய்வு பாதாளத்திலிருந்து வரும் கஷ்டம் தரும் அதிர்வலைகளின் கதியை துரிதப்படுத்துகிறது. பெருக்கும் செயலைக் காட்டிலும் அப்போது வாஸ்துவில் ரஜ – தம அதிர்வலைகளின் நடமாட்டத்தால் ஏற்படும் சூட்சும சத்தம் அதிகமாக உள்ளது. அதனால் மாலையில் பெருக்குவது கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்னால் பெருக்குவதால் ரஜ – தம அதிர்வலைகள் குறைவாகவே ஆகர்ஷிக்கப்படுகின்றன. சாயங்காலம் ஸ்ரீ லக்ஷ்மி வரும் நேரம். சாயங்கால நேரத்திற்கு முன்னதாகவே பெருக்கி, அச்சமயம் துளசி மாடத்தில் விளக்கு ஏற்றுவதால் சக்தி அதிர்வலைகள் ஆகர்ஷிக்கப்பட்டு வீட்டில் பரவுகின்றன. இந்த திவ்ய தேஜஸால் சாயங்காலத்திலுள்ள கஷ்டம் தரும் அதிர்வலைகள் சூழ்நிலையை மாசு படுத்தாமல் வாஸ்து காக்கப்படுகிறது. ( திருமதி அஞ்ஜலி காட்கில் மூலமாக 26.10.2007, மாலை 5.20)
1 ஆ. துடைப்பத்தால் பெருக்கும் சரியான உத்தி என்ன?
பெருக்கும் சமயம், இடுப்பளவில் வலது புறமாக குனிந்து வலது கையால் துடைப்பத்தை ஏந்தி பின்புறத்திலிருந்து முன் புறமாக பெருக்க வேண்டும். இடுப்பளவில் குனிவதால் நாபி பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு பஞ்சபிராணன் விழிப்படைந்த நிலையில் உள்ளது. ( இப்படி பெருக்குவதால் அதிக சக்தி அதிர்வலைகள் உடலில் ஏற்படுகின்றன – தொகுத்தவர்)
முட்டியை மடக்கி எப்பொழுதும் பெருக்கக் கூடாது இவ்வாறு பெருக்குவதால் முட்டியின் வெற்றிடத்தில் உள்ள ரஜ – தம பிரதானமான வாயுக்களுக்கு கதி ஏற்பட்டு பாதாளத்திலிருந்து கஷ்டம் தரும் அதிர்வலைகளை உடலுக்குள் க்ரஹிக்கிறது. அதனால் ரஜ – தம தன்மையை அதிகரிக்கும் எந்த செயலையும் செய்யக்கூடாது.
இடுப்பளவில் வலது பக்கம் குனிந்து பெருக்குவதால் நம் சூரியநாடி விழிப்படைகிறது. அதன் மூலம் கிடைக்கும் தேஜ தத்துவத்தால் பூமியிலிருந்து வரும் கஷ்டம் தரும் அதிர்வலைகளிலிருந்து நமக்கு பாதுகாப்பு ஏற்படுகிறது. – ஒரு வித்வான் (திருமதி அஞ்ஜலி காட்கில் மூலமாக, 26.10.2007, மாலை 5.20)
1 இ. கிழக்கு திசையை தவிர்த்து மற்ற திசைகளை நோக்கி பெருக்கலாம்
கிழக்கு திசை நோக்கி பெருக்குவதால் ஏற்படும் ரஜ – தம பிரதான துகள்களும் அதிர்வலைகளும் தெய்வீக அதிர்வலைகளை தடுக்கிறது: கிழக்கிலிருந்து தெய்வங்களின் ஸகுண அதிர்வலைகள் பூமியை நோக்கி வருகின்றன. மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பெருக்குவதால் ரஜ – தம பிரதான துகள்களும் அதிர்வலைகளும் கிழக்கு நோக்கி எழும்புகின்றன. அதனால் கிழக்கில் இருந்து வரும் தெய்வங்களின் ஸகுண அதிர்வலைகளின் போக்கைத் தடை செய்கின்றன. அதனால் கிழக்கு நோக்கி பெருக்கக் கூடாது. வேறு எந்த திசை நோக்கியும் பெருக்கலாம். – ஈச்வர் (குமாரி மதுரா போஸ்லே மூலமாக, 28.11.2007, இரவு 10.55)
1 ஈ. வீட்டின் உள்ளிருந்து வெளி நோக்கி பெருக்கி குப்பையை வீட்டு வாசற்படிக்கருகே சேர்க்க வேண்டும்
குப்பையை வெளிநோக்கி தள்ளுவதால் அறையில் உள்ள கஷ்டம் தரும் அதிர்வலைகள் வீட்டின் முக்கிய வாசற்படி வழியாக வெளியே தள்ளப்படுகின்றன. வாசற்படியை நோக்கி குப்பையைத் தள்ளுவதே சாதாரண வழக்கம். இது செயல் ரீதியாகவும் மனோரீதியாகவும் சௌகரியமானது. ஆன்மீக கண்ணோட்டப்படி பார்த்தாலும் அதன் மூலம் கஷ்டம் தரும் அதிர்வலைகள் வீட்டிற்கு வெளியே தள்ளப்படுகின்றன. இதற்கு மாறான திசையில் பெருக்கும் போது கஷ்டம் ஏற்படுகிறது.
1 உ. பெருக்கும் போது துடைப்பத்தை மாற்று திசையில் தரையில் தேய்க்க கூடாது. துடைப்பத்தை தூக்கி வைத்து பெருக்க வேண்டும்
சாஸ்திரம்: பெருக்கும் போது துடைப்பத்தை மாற்று திசையில் தேய்க்காமல் தூக்கி வைத்து பெருக்க வேண்டும். இதன் காரணம் துடைப்பத்தை மாற்று திசையில் தேய்க்கும் போது அபிரதக்ஷிணமான அதிர்வலைகள் எழும்புகின்றன. பாதாளத்தில் இருந்து வரும் கஷ்டம் தரும் அதிர்வலைகள் இதில் சேருகின்றன. இதனால் பெருக்கிய பின்னும் சூட்சுமமாக வாஸ்துவில் அமைதியின்மை நிலவுகிறது. அதனால் துடைப்பத்தை மாற்று திசையில் தரையில் தேய்த்துப் பெருக்க கூடாது. மாறாக தூக்கி எடுத்து வைத்து பெருக்க வேண்டும். – (ஒரு வித்வான், திருமதி அஞ்ஜலி காட்கில் மூலமாக, 26.10.2007, மாலை 5.20)
1 ஊ. துடைப்பத்தால் பூமியை தட்டக்கூடாது மற்றும் இழுத்துக் கொண்டு செல்லக்கூடாது
சாஸ்திரம்: ‘துடைப்பத்தை பூமியில் தட்டவோ வலுகட்டாயமாகவோ இழுத்துக் கொண்டோ செல்லக் கூடாது இதன் மூலம் கஷ்டம் தரும் நாதம் எழுவதால், வாஸ்துவிலும் பாதாளத்திலும் உள்ள கஷ்டம் தரும் அதிர்வலைகள் செயல்பட ஆரம்பிக்கின்றன. காலப்போக்கில் இவற்றின் வெளிப்பாடு அதிகமாகி வாஸ்துவில் தீய சக்திகளின் நடமாட்டமும் அதிகமாகிறது. அதனால் தமோகுண பிரதானமான இக்காரியங்களை செய்யக்கூடாது’. – (ஒரு வித்வான், திருமதி அஞ்ஜலி காட்கில் மூலமாக 28.01.2005, இரவு 8.20)
(‘பெருக்குவது சம்பந்தமான பல்வேறு பரிசோதனைகள் போண்டா, கோவாவில் உள்ள ஸனாதன் ஆச்ரமத்தில் 2004-ல் நடத்தப்பட்டன. மேற்கூறியபடி பெருக்குவதால் அதிக பயன் என்பது தெரிய வந்தது. பகவான் ஒவ்வொரு முறையும் ஆன்மீக அனுபவத்தை கொடுத்து பின் ஞானத்தையும் வழங்குகிறார். 26.10.2007 அன்று கிடைத்த ஞானம் இதற்கான ஒரு உதாரணமே.’ – டாக்டர் ஆடவலே, தொகுத்தவர்)
1 எ. குப்பையை அப்புறப்படுத்துதல்
குப்பையை அள்ளி வீட்டிற்கு வெளியே உள்ள குப்பைத்தொட்டியில் போட்டு அக்னிக்கிரையாக்குங்கள். குப்பையை உடனே வெளியே கொட்ட முடியாதவர் வீட்டின் மூலையில் உள்ள குப்பைத் தொட்டியில் போடலாம் அங்குள்ள இச்சா சக்தி பிரதானமான அதிர்வலைகள் அந்த கஷ்டம் தரும் அதிர்வலைகள் பரவாமல் தடுக்கின்றது. – ஒரு வித்வான் (திருமதி அஞ்ஜலி காட்கில் மூலமாக, 6.10.007 மாலை 5.20)
1 ஏ. ஏனைய விஷயங்கள்
துடைப்பத்தின் மூலம் பெருக்குவதால் ஜீவனுக்கு ஆன்மீக நிலையில் பலன் கிட்டுகிறது. வாஸ்து சுத்தியும் ஏற்படுகிறது. இதிலிருந்து, நம் முன்னோர்கள் ஆன்மீக கண்ணோட்டப்படி ஒவ்வொரு செயலையும் எவ்வளவு யோசித்துச் செய்தார்கள் என்பது தெரிய வருகிறது. இதன் மூலம் ஹிந்து தர்மத்தின் மஹத்துவம் தெரிய வருகிறது. – திருமதி பிரியங்கா காட்கில், ஆன்மீக பல்கலைக்கழகம் (11.03.2012)
2. தரையைத் துடைப்பது சம்பந்தமான ஆசாரம்
தரையைப் பெருக்கியவுடன் துடைக்க வேண்டும்
2 அ. தரையை எவ்வாறு துடைக்க வேண்டும்?
ஒரு சிட்டிகை விபூதியை துடைக்கும் தண்ணீரில் இடவும்.
சாஸ்திரம் : விபூதியில் ஸாத்வீக சக்தி உள்ளது. அதனால் விபூதி தண்ணீரில் துடைக்கும் போது பூமியில் தீய சக்திகளால் ஏற்பட்ட கருப்பு ஆவரணம் விலகுகிறது.
2 ஆ. ஜல தேவதையிடம் பிரார்த்தனை
துடைக்க ஆரம்பிக்கும் முன் ஜலதேவதையிடம் பிரார்த்தனை செய்யவும், ‘தீய சக்திகளால் பூமியில் ஏற்பட்டுள்ள கருப்பு ஆவரணம் இந்த ஜலத்தின் சைதன்யத்தால் அழிக்கப்படட்டும்’.
2 இ. குனிந்து வலது கையால் ஈரத் துணியால் துடைக்கவும்
குனிந்து வலது கையால் பூமியை துடைக்கும் போது ஏற்படும் முத்திரையால் மணிபூரகச் சக்கரத்தில் உள்ள பஞ்சபிராணன் செயல்பட ஆரம்பிக்கிறது. தேஹத்தில் உள்ள தேஜ ரூபமான சேதனா சக்தி குறைந்த காலத்திற்குள் செயல்பட ஆரம்பிக்கிறது. சூரிய நாடி விழிப்புற்று சக்தி பிரவாஹம் வலது கையிலிருந்து துடைக்கும் துணிக்கு செல்கிறது. இது தண்ணீரிலுள்ள ஆப தத்துவத்தின் உதவியோடு தரையின் மேல் ஒரு தேஜ தத்துவ கவசத்தை உருவாக்குகிறது. அதனால் தரையை துடைக்கும் செயலால் பாதாளத்திலிருந்து எழும் கஷ்ட அதிர்வலைகள் தடுக்கப்பட்டு வாஸ்து தூய்மையாகிறது.’ – ஒரு வித்வான் (திருமதி அஞ்ஜலி காட்கில் மூலமாக, 25.12.2007, இரவு 7.32)
2 ஈ. ஏனைய விஷயங்கள்
1. பெருக்கும் போது தூசியை உள்ளிருந்து வெளிநோக்கி பெருக்குவது போல் துடைப்பதும் உள்ளிருந்து வெளிவாசல் படியை நோக்கி துடைக்க வேண்டும்.
2. துடைக்கும் துணியை அடிக்கடி நல்ல தண்ணீரில் தோய்க்க வேண்டும்
3. தரையை துடைத்த பின் ஊதுபத்தி ஏற்றி வீட்டில் நிர்மாணமான ஸாத்வீகத் தன்மையை நிரந்தரமாக இருக்க வாஸ்துதேவதையிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
தகவல்: ஸனாதனின் தமிழ் நூல் ‘தினஸரி காரியங்களும் அதற்கு ஆதாரமான சாஸ்திரமும்.’