முக்கியத்துவம்
அழிவைத் தரக்கூடிய, தமோகுணம் நிறைந்த யம அதிர்வலைகள், பூமியில் ஆடிப் பௌர்ணமி முதல் கார்த்திகை பௌர்ணமி வரை நூற்று இருபது நாட்கள் அதிக அளவில் வருகின்றன. இந்தக் காலத்தில் அந்த அதிர்வலைகள் அதிக தீவிரமாகவும் உள்ளன. இந்தக் கடுமையான காலத்தில் ஆவணி சுத்த சதுர்த்தியிலிருந்து, அனந்த சதுர்தசி வரை, கணேசனின் அதிர்வலைகள் பூமிக்கு அதிக அளவில் வரும் காரணத்தால் யம அதிர்வலைகளின் தீவிரம் குறைவதற்கு உதவி செய்கிறது.
கணேச சதுர்த்தி மற்றும் கணோஷோத்ஸவ தினத்தில் கணேச தத்துவம் மற்ற நாட்களைக் காட்டிலும் 1000 மடங்கு அதிக செயல்பாட்டில் உள்ளது. இக்காலத்தில் செய்யப்படும் கணேச உபாஸனையின் மூலம் அதிகபட்ச கணேச தத்துவத்தின் பலன் கிடைக்கிறது.
குடும்பத்தின் எந்த நபர் இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்?
கணேச சதுர்த்தி விரதம் ஸித்திவிநாயக விரதம் என்று அழைக்கப்படுகிறது. உண்மையில் இந்த விரதத்தை குடும்பத்திலுள்ள எல்லோரும் அனுஸரிக்க வேண்டும். எல்லா சகோதரர்களும் ஒரே வீட்டில் இருந்து கொண்டு, இரும்புப்பெட்டியும், சமையலும் ஒன்றாக இருக்கும்போது எல்லோரும் சேர்ந்து ஒரே வடிவத்திற்கு, உருவத்திற்கு பூஜை செய்யலாம். ஆனால் பணப்பெட்டியும், சமையலும் (அடுப்பும்) தனித்தனியே இருந்தால், தங்களுக்குரிய வீட்டில் சுதந்திரமாக, தனியாக கணேச விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.
கேள்வி
சாஸ்திரப்படி ஒவ்வொரு குடும்பத்தினரின் இரும்புப்பெட்டியும் சமையலறையும் தனித்தனியே இருக்குமானால் அவர்கள் சுதந்திரமாக தனித்தனியே கணேச மூர்த்தியின் பூஜையை செய்ய வேண்டும். ஆனால் சில குடும்பங்களில் குலவழக்கப்படியும் வழிவழியாக செய்யப்பட்ட பாரம்பரிய முறைப்படியும் ஒரே கணேசமூர்த்திக்கு பூஜை செய்யும் வழக்கம் உள்ளது. இத்தகைய வீடுகளில் ஒவ்வொரு வருடமும் கணேச மூர்த்தியின் பூஜை வெவ்வேறு சகோதரரின் வீட்டில் செய்யப்படுகிறது. இது சரியா அல்லது தவறா?
ப. பூ. டாக்டர் ஆடவலே
குலவழக்கப்படியும் பாரம்பரிய முறைப்படியும் ஒரே கணேச மூர்த்தியின் பூஜை செய்யப்படுமானால் அந்த பூஜையை, எந்த சகோதரருக்கு அதிக அளவு பக்திபாவம் உள்ளதோ அவர் வீட்டில் பூஜை செய்வது மிகவும் ஏற்றது.