ஒவ்வொரு மகனும் ஏன் ச்ரார்த்த சடங்கு செய்ய வேண்டும்?

ச்ரார்த்தம் : மூதாதையர்களின் கடனை அடைத்தல்

1. ச்ரார்த்தம் செய்வதன் நோக்கங்கள்

அ) ச்ரார்த்தம் செய்வதால், பித்ரு லோகத்தில் இருக்கும் இறந்த மூதாதையர்களின் பயணத்திற்கு உத்வேகம் கிடைத்து அவர்கள் மேலும்  உயர்ந்த லோகங்களுக்கு முன்னேற முடிகிறது.

ஆ) நிறைவேறாத ஆசைகளால் தீய லோகங்களில் சிக்கித் தவிக்கும்   இறந்த மூதாதையர்களின் ஆன்மாக்களின் விருப்பங்களை திருப்திப்படுத்துதல் மற்றும் அவர்கள் மேலும் உயர்ந்த  நிலையை அடைவதற்கான வேகத்தை வழங்குதல்.

2. ச்ரார்த்தம் செய்வதன் முக்கியத்துவம் மற்றும் தேவைகள்

அ) தெய்வங்கள், ரிஷிகள் மற்றும் சமூகத்திற்கு செலுத்தவேண்டிய  கடனைத் திருப்பிச் செலுத்துவதைப் போலவே, மூதாதையர்களின் கடனையும் திருப்பிச் செலுத்துவது முக்கியமாகும். மூதாதையர்களை மதிப்பதும், அவர்களின் பெயரில் நன்கொடைகள் வழங்குவதும், அவர்களை மகிழ்விக்கும் செயல்களை மேற்கொள்வதும் சந்ததியினரின் கடமைகளாகும். தர்ம சாஸ்திரப்படி  ச்ரார்த்தம் செய்வது தர்மத்தை கடைப்பிடிப்பதன் ஒரு பகுதியாகும்.

ஆ) மூதாதையர்களின் ஆன்மா தங்கள் மகனிடமிருந்து பிண்டம் மற்றும் நீரைப் பெற்ற பிறகுதான் திருப்தி அடைகிறது.  பின்வரும் மஹாபாரத சுலோகம்  ‘எவர் மகன் என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியானவர்’ என்பதை விவரிக்கிறது.

     पुन्नाम्नो नरकाद्यस्मात्पितरं त्रायते सुत: ।
     तस्मात्पुत्र इति प्रोक्त: स्वयमेव स्वयंभुवा ।। 

     புன்னாம்னோ நரகாத்யஸ்மாத்பிதரம் த்ராயதே ஸுத:
     தஸ்மாத்புத்ர இதி ப்ரோக்த: ஸ்வயமேவ ஸ்வயம்புவா ||

     – மகாபாரதம் 1.74.39

பொருள்: புத்திரன் தன் மூதாதையர்களின் ஆன்மாக்களை ‘புத்’ என்ற நரகத்திலிருந்து காக்கிறான். எனவே, பிரம்மதேவரே அவனுக்கு ‘புத்திரன்’ என்று பெயரிட்டுள்ளார். மேற்கண்ட ஸ்லோகத்தின்படி, இறந்த மூதாதையர்கள் உயர்வான நிலைக்கு முன்னேற, ஒவ்வொரு மகனும் ச்ரார்த்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் மகன் என்று நம்பப்படுபவன் இந்தக் கடமைகளைச் செய்ய வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இ) देवपितृकार्याभ्यां न प्रमदितव्यम ।

      தேவபித்ருகார்யாப்யாம் ந ப்ரமதிதவ்யம் | – தைத்திரீய உபநிஷத் 1.11

பொருள்: கடவுள் அல்லது மூதாதையர்களின் ஆன்மாக்களுக்காக  செய்யும் எந்தப் பணியிலும் தவறு செய்யக் கூடாது. இந்த சடங்குகளை ஒருவர் தவிர்க்கவும் கூடாது.

ஈ) பின்வரும் பகவத் கீதை ஸ்லோகத்தில் ச்ரார்த்தம் செய்யாதவர்களைக் குறித்து விளக்கப்பட்டுள்ளது

     पतन्ति पितरो ह्येषां लुप्तपिन्डोदकक्रिया 

     பதந்தி பிதரோ ஹ்யோஷாம் லுப்தபிண்டோதகக்ரியா

     – ஸ்ரீமத்பகவத்கீதை 1.42

பொருள் : பிண்ட ச்ரார்த்தம் மற்றும் இறந்த மூதாதையர்களுக்கு நீர் வழங்குதல் போன்ற சடங்குகள் செய்யாதவர்களின் மூதாதையர்கள் நரகத்திலேயே உழல்கின்றனர். இதனால் அவர்களின் சந்ததியினரிடம் முன்னேற்றம் இல்லாமல் தேக்க நிலை ஏற்படுகிறது.

உ) श्राद्धात् परतरं नान्यत् श्रेयस्करम् उदाहृतम् । 

       ச்ரார்த்தாத் பரதரம் ச்ரேயஸ்கரம் உதாஹ்ருதம் | – சுமந்து முனிவர்

பொருள்: ச்ரார்த்த சடங்கை போல உயர்ந்தது எதுவுமில்லை. எனவே, எது சரி, எது தவறு என பாகுபடுத்தும் தூய புத்தியைக் கொண்ட ஒருவர் ச்ரார்த்தம் செய்யாமல் இருக்கக் கூடாது.

ஊ) கடவுள் தொடர்பான செயல்களை விட இறந்த மூதாதையர்கள் தொடர்பான செயல்பாடுகள் மிக முக்கியமானவை – பிரம்மவைவர்த்த புராணம். எனவே ஒவ்வொரு புனித சடங்கும் நாந்தி ச்ரார்த்தத்துடன் தொடங்குகிறது.

எ) ச்ரார்த்த சடங்கை விடாமுயற்சியுடன் மற்றும் நிதி நிலைமைக்கு ஏற்பச் செய்பவர், பிரம்மதேவர் முதல் சிறிய புல், பூண்டுவரை அனைவரையும் திருப்திப்படுத்துகிறார். ச்ரார்த்தம் செய்பவரின் குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். – பிரம்ம புராணம்

ஏ) ஒருவர் மரணத்தின்போது, ‘ச்ரார்த்தம் அர்த்தமற்றது, என் மரணத்திற்குப் பிறகு யாரும் எனக்காக ச்ரார்த்தம் செய்ய வேண்டாம்’ என்று நினைத்தால், பின்னர் ச்ரார்த்தம் செய்யாததால், அவர் இறந்த பிறகு, ‘நான் சிக்கிக்கொண்டேன்’ என்ற நிலையை அனுபவிக்கிறார். மேலும் அந்த நிலையை யாருக்கும் தெரிவிக்கும் நிலையிலும் அவர் இருக்க மாட்டார். அவரது ஆசை நிறைவேறாததால், மகிழ்ச்சியற்றவராகவும்  இருப்பார். இதைக் கருத்தில் கொண்டு, இறந்த ஒவ்வொருவருக்கும் ச்ரார்த்தம் செய்வது முற்றிலும் அவசியம்.

ஐ ) இறந்த நபருக்கு ச்ரார்த்த சடங்கு செய்வதன் மூலம், அந்த நபரோடு இருக்கும் கொடுக்கல்-வாங்கல் கணக்கு நிறைவுறுகிறது.

3. ச்ரார்த்தம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்

அ) ச்ரார்த்த சடங்கு என்பது இறந்த மூதாதையர்களுக்காக செய்யப்படும் ஒரு யாகம் மற்றும் அது புனிதமானது. ச்ரார்த்த சடங்கு செய்த பின் பெறப்பட்ட பலன்கள் ஸ்ம்ருதிசந்திரிகா மற்றும் பிற புனித நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆ) கிரகண நாளில் ச்ரார்த்த சடங்கு செய்தால், ஒருவருக்கு நிலத்தை தானம் செய்வதால் கிடைக்கும் பலனை கிடைக்கிறது.

குறிப்பு: ஸனாதனின் புனித நூல் ‘ச்ரார்த்தம் (முக்கியத்துவம் மற்றும் அறிவியல் விளக்கம்)’

 

Leave a Comment