மஹாளய ச்ரார்த்தத்திற்கான முன்னேற்பாடுகளும் அதன் வழிமுறைகளும்

மஹாளய ச்ரார்த்தம்

1. ச்ரார்த்தத்திற்குரிய தெய்வங்கள்

இறந்த நம் மூதாதையர்கள், பல்வேறு வடிவங்களில் இருக்கலாம், அந்த வடிவங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு உணவு தேவை. பூமியைத் தவிர, வேறு எந்த சூட்சும உலகிலும் உணவு கிடைக்காது. மஹாளய ச்ரார்த்த சடங்கில், வசு, ருத்ர மற்றும் ஆதித்ய ஆகியோர் இறந்த முன்னோர்களின் பிரதான தெய்வங்கள். வசு என்றால் ஆசை, ருத்ர என்றால் கரைதல் மற்றும் ஆதித்ய என்றால் பரிபூரண நெருப்பு தத்துவம் மற்றும் அதன் செயல்பாடு. இம்மூவரின் சேர்க்கையால் தந்தை, தாத்தா, கொள்ளுத்தாத்தா ஆகியோர் முக்தி அடைகின்றனர்.

 

மறைந்த மூதாதையர்களின் அதிஷ்டான தெய்வங்களுடன் தொடர்புடைய பணி

மறைந்த மூதாதையர்களின் அதிஷ்டான தெய்வங்கள் தொடர்புடைய பணி
வசு ஆசை
ருத்ர கரைதல்
ஆதித்ய செயல்பாடு

ச்ரார்த்த சடங்கின்போது புரூரவ்-ஆர்த்ரவ் மற்றும் துரிலோச்சன் எனப்படும் விச்வேதேவர்களும் அழைக்கப்படுகிறார்கள். யாகத்தின் பிரதிநிதியாக விளங்கும் தெய்வங்களின் குழுவே விச்வேதேவர்கள் ஆவர்.

2. பித்ருபக்ஷத்தின்போது மஹாளய ச்ரார்த்தத்தை எப்போது செய்ய வேண்டும்?

பித்ருபக்ஷத்தின்போது ச்ரார்த்தம் செய்பவரின் தந்தை இறந்த திதியில் மஹாளய ச்ரார்த்தம் செய்யப்படுகிறது. திதி தெரியவில்லை என்றால், புரட்டாசி மாதத்தின் அமாவாசை நாளில் ச்ரார்த்தம் செய்யுங்கள்.

3. மஹாளய ச்ரார்த்த சடங்கிற்கான முன்னேற்பாடுகள்

ச்ரார்த்தம் செய்பவர் மற்றும் உணவு வழங்குவதற்காக அழைக்கப்பட்ட பிராம்மணர் ஆகிய இருவரும் ச்ரார்த்த நாளின் முந்தைய இரவில் உணவு உண்ணக் கூடாது, மற்றும் பெண்ணுடன் உடலுறவு கூடாது. முடிந்தளவு ச்ரார்த்தத்தை குடியிருப்பின் தரைத்தளத்தில் செய்ய வேண்டும். அந்த இடம் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும்

3.1 மஹாளய ச்ரார்த்தத்திற்குத் தேவையான பொருட்கள்

மஹாளய ச்ரார்த்தத்திற்குத் தேவையான பொருட்களின் பட்டியலை முதலில் சடங்குகள் பற்றிய சிறு புத்தகங்கள் மூலமாகவோ அல்லது சடங்குக்கு அழைக்கப்பட்ட பிராம்மணரிடமிருந்தோ கேட்டு அறியவும்.  அனைத்து பொருள்களையும் முடிந்தவரை ஒரு நாள் முன்னதாகவே சேகரிக்கவும். சடங்கு வழிபாட்டிற்குத் தேவையான சாதாரண பொருட்களைத் தவிர, பார்லி, கருப்பு எள், சோளம் மற்றும் துளசி இலைகள் போன்ற பொருட்களும் இந்த சடங்கிற்கு அவசியம். இப்போதெல்லாம், இரண்டு பிராம்மணர்கள் சடங்குக்கு அழைக்கப்படுகிறார்கள். ஒருவர் மூதாதையர்களின் ஸ்தானமான வடக்கு நோக்கி அமர்கிறார். மற்றவர் கடவுளின் ஸ்தானமான கிழக்கு நோக்கி அமர்கிறார். ச்ரார்த்தம் செய்பவர் தென்கிழக்கு நோக்கி அமர்கிறார். சடங்குகளை பற்றி விவரிக்கும் பிராம்மணருக்காக மேலும் ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது.

3.2 ச்ரார்த்தம் செய்பவர் செய்யவேண்டிய முன்னேற்பாடுகள்

ச்ரார்த்தம் செய்வதற்கு முன் பூணுல் அணிதல், திருநீறு பூசுதல், பஞ்சகவ்யம் உட்கொள்ளுதல், ஆசமனம் செய்தல் போன்ற சம்பிரதாயங்களை செய்வதன் மூலம், அந்த சடங்கு செய்வதன் முழு பலனையும் பெறலாம்.

3.3 முக்கிய சடங்கிற்கு முன் செய்ய வேண்டிய தார்மீக செயல்பாடுகள்

ச்ரார்த்தம் செய்யும் நபர், ச்ராத்தம் செய்வதற்கு முன் சில முக்கியமான தார்மீக செயல்பாடுகள் செய்வது மிகவும் அவசியம்.

அ) ச்ரார்த்தம் செய்பவர் வெள்ளை வேஷ்டியும், உபவஸ்திரமும் அணிய வேண்டும்.

ஆ) அவர் ஆசமனம் செய்தி சடங்கை ஆரம்பிக்க வேண்டும்.

இ) இதற்குப் பிறகு, அவர் உடலின் பல்வேறு பாகங்களில் விபூதியை பூசிக் கொள்ள வேண்டும்.

ஈ) அதன்பிறகு தர்ப்பையை கையிலும் உடலின் பல்வேறு பகுதிகளிலும் பிடித்துக் கொள்ள வேண்டும்.

உ) பிறகு அவர் சம்ப்ரதாயப்படி சடங்கின் காலம் மற்றும் நேரத்தைப் பற்றி கடவுளுக்குத் தெரிவிக்க வேண்டும்.

ஊ) இதற்குப் பிறகு அவர் சடங்கு செய்வதற்கு சங்கல்பம் மேற்கொள்ள வேண்டும். மஹாளயத்தில் துரிலோச்சன் என்ற விச்வேதேவருக்கு பூஜை செய்ய வேண்டும்.

எ) இதற்குப் பிறகு அபசவ்யம் செய்யவேண்டும். அதாவது வலது தோளில் பூணுலை இட்டு முன்னோர்களுக்காக சங்கல்பம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இம்முறையில் “மேற்படி குலத்தில் பிறந்த, வசு, ருத்ர, ஆதித்ய ரூபத்தில் இருக்கும் என் தந்தை, தாத்தா, கொள்ளுத்தாத்தா ஆகியோருக்கு ச்ரார்த்தம் செய்கிறேன்” என ச்ரார்த்தம் செய்ய வேண்டும். மஹாளய ச்ரார்த்தத்தில் மூன்று தந்தைவழி மூதாதையர்களுடன், மூன்று தாய்வழி மூதாதையர்களான, தாய், அவரது தந்தை மற்றும் தாத்தா, பாட்டி, பெரிய பாட்டி ஆகியோருக்கும், மனைவி, பூணுல் சம்ஸ்காரம் செய்யப்பட்ட மகன், மகள், மேலும் தாய்-தந்தை வழி மாமன்கள் மற்றும் அத்தைகள், சகோதர-சகோதரிகள், மாமனார், மாமியார், குரு, அறிவைக் கொடுத்தவர், வழிகாட்டியவர், மற்றும் அதே வம்சாவளியில் பிறந்த, நெருங்கிய உறவினர்கள் இல்லாத இறந்தவர்கள் ஆகிய அனைவருக்காகவும்  ச்ரார்த்தத்தில் சங்கல்பம் செய்து கொள்ளப்படுகிறது.

அ) இதற்குப் பிறகு, கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற புனித நதிகளை ஆராதனை செய்து, சந்தனம், பூ, துளசி இலை, நாணயங்கள், வெற்றிலை பாக்கு மற்றும் தர்ப்பை கலந்த நீரை அதாவது யவோதகத்தை தயார் செய்யவும்.

ஆ) அதேபோல் திலோதகத்தை, அதாவது கருப்பு எள் மற்றும் சோளம் கலந்த நீரை தயார் செய்து மந்திரங்களைச் சொல்லி சக்தியூட்டவும்.

இ) இப்போது முதலில் சக்தியூட்டப்பட்ட நீரைத் தன் மீது தெளித்து தூய்மைப்படுத்திக்கொண்டு, பின்னர் சடங்கு நடைபெறும் இடத்தைத் தூய்மைப்படுத்தவும்.

கர்மகாண்டப்படி செய்யப்படும் ச்ரார்த்த சடங்கை வெற்றிகரமாகச் செய்ய, ச்ரார்த்தம் செய்பவர் மற்றும் நடைபெறும் இடம் ஆகியவை சக்தியூட்டப்பட்ட திலோதகத்தின் மூலம் சுத்தம் செய்யப்படுகிறது. ஹிந்து தர்மத்தில் உள்ள பல்வேறு தார்மீக சடங்குகள் ஒருவிதத்தில் ஆன்மீக பரிசோதனைகளாகும். மேலும் ஆன்மீக சாஸ்திரத்திலிருந்தே அறிவியல் உருவானது.

3.4 பிராம்மண வரவேற்பு மற்றும் அன்னப்ரோக்ஷணம்

ச்ரார்த்தம் செய்பவர் கையில் பஞ்ச பாத்திரம், உத்திரிணி, தர்ப்பை மற்றும் எள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பிராம்மணரை சுற்றி வலம் வந்து, தென்கிழக்கு திசையில் தரையில் விழுந்து வணங்கி, பின்னர் வலது தோளில் பூணுலை மாட்டி, “நாங்கள் கோபத்தை ஒதுக்கி வைத்து, மனதளவிலும்  பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து, ச்ரார்த்தம் செய்கிறோம்” என்று கூறுகிறார்.

‘இன்று மூதாதையர்களுக்கு ச்ரார்த்தம் செய்வதற்கு அனுமதி வேண்டுகிறேன்’. என்று பிராம்மணரிடம் தர்ப்பையை  சமர்ப்பிக்கிறார். பிறகு பித்ரு ப்ராம்மணரிடமும் இவ்வாறே சமர்ப்பிக்கிறார். இப்போது, விச்வேதேவரின்   முன், யவோதகத்தின் தர்ப்பை நகர்த்தப்பட்டு, பார்லியால் ஒரு கோடு வரையப்படுகிறது. பித்ரு ப்ராம்மணரின் முன், திலோதகம் முதலில் பயன்படுத்தப்பட்டு, பின்னர் கருப்பு எள் பயன்படுத்தப்படுகிறது. பின்பு அவரை சுற்றி வலமிருந்து இடமாக, எட்டுத் திசைகளிலும் எள் தெளிக்கப்படுகிறது. பின்னர் ஒருவர் சமையலறைக்குள் சென்று சக்தியூட்டப்பட்ட நீரை உணவின் மீது தெளிக்கிறார். ச்ரார்த்தம் செய்பவர் நான்கு திசைகளிலும் எள்ளைத் தெளிப்பதன் மூலம், இறந்த மூதாதையர்களின் அதிர்வலைகள் வட்ட வடிவமாக  வளாகத்தில் உருவாக்கப்படுகின்றன. பின்னர் வளாகத்தில் அமைந்துள்ள இறந்த மூதாதையர்களின் சூட்சும தேகங்கள் இந்த வட்டங்களால் ஈர்க்கப்படுகின்றன. இந்த சடங்கை செய்வதன் மூலம் அந்த வளாகம் பித்ரு லோகத்தின் வடிவைப் பெறுகிறது

3.5 விச்வேதேவரை வேண்டி வழிபடுதல்

இப்போது பூணூலை இடது தோளில் இட்டு, பிராம்மணர் முன் அமர்ந்து மிகவும் சக்திவாய்ந்த விச்வேதேவரிடம் தயவு செய்து இங்கு வந்து  இந்த சடங்கை நல்ல முறையில் செய்து முடிக்க வேண்டிக் கொண்டு, பின்னர் பூணூலை வலது தோளில் இட்டு, பித்ரு பிராம்மணரின் முன் அமர்ந்து பிரார்த்தனை செய்யப்படுகிறது. பின்னர் பார்லி மற்றும் தர்ப்பை முதலானவற்றை கடவுள் ஸ்தானத்திலிருக்கும் பிராம்மணருக்கு கீழே வைத்து விச்வேதேவருக்கு ஒரு இருக்கை வழங்கப்படுகிறது. ‘அர்க்கியம்’ கொடுப்பதற்கான இரண்டு பாத்திரங்கள் முன்பக்கத்தில் வைக்கப்பட்டு அதில் யவோதகம் மற்றும் பார்லி போடப்படுகிறது. இந்த பாத்திரங்கள் மந்திரத்தால் சக்தியூட்ட படுகின்றன. இப்போது பார்லியை இடது கையிலிருந்து வலது கைக்கு மாற்றி, பிராம்மணரின் உடலில், பாதங்களிலிருந்து தலை வரை வைக்கிறார். மீதமுள்ள பார்லியை தரையில் வைத்து வலது கையால் ‘அர்க்கியம்’ அளிக்கிறார். சந்தனம், மலர்கள், தூபம் மற்றும் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறார்.

3.6 மூதாதையர்களை வேண்டி வழிபடுதல்

அ) ச்ரார்த்தம் செய்பவர்  பூணூலை வலது தோளில் அணிந்து சந்தனம், சோளம் மற்றும் பூவை எடுத்து பித்ரு – பிராம்மணரிடம் கொடுக்கிறார். அவர் அபிரதட்சிணமாக ஊதுபத்தி, விளக்கை ஏற்றி ஆரத்தி செய்கிறார்.

ஆ) வெற்றிலை பாக்கு, தர்ப்பை மற்றும் எள் ஆகியவற்றை பித்ரு பிராம்மணரின் கைகளில் வைக்கப்பட்டவுடன், இந்த வழிபாட்டு சடங்குகள் நிறைவடைகின்றன.

இ) “எனது இந்த வழிபாட்டில் ஏதேனும் தவறு இருந்தால், தயவு செய்து என்னை மன்னியுங்கள்.” என்று ச்ரார்த்தம் செய்பவர்  கூறுகிறார்.

ஈ) பித்ரு பிராம்மணரின் முன் வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தில் தண்ணீர், பூ மற்றும் எள் ஆகியவை போடப்படுகின்றன.

உ) மந்திரத்தால் சக்தியூட்டப்பட்ட பாத்திரத்தின் மீது ஒரு கையை வைக்க வேண்டும்.

ஊ) இப்போது பித்ரு பிராம்மணரின் உடலில் பாதம் முதல் தலை வரை எள் வைக்கப்படுகிறது.

எ) இப்போது மூதாதையர்களுக்கு அர்க்கியம் வழங்கப்படுகிறது. இதற்குப் பிறகு ச்ரார்த்தம் செய்பவர் ஒரு இடத்தில் நின்று தன்னைத் தானே சுற்றி வலம் வருகிறார்.

குறிப்பு: ஸனாதனின் நூல் ‘ச்ரார்த்தம் ‘

 

 

Leave a Comment