அவரின் விஸ்தீரணம் (பரப்பளவு)
அ. சந்திரனே தலை
ஆ. பிருத்வியே (பூமி) வயிறு
இ. ஸப்த பாதாளமே கால்கள்
விக்ன ஹர்தா
எந்த ஒரு விழாவையும் துவங்கும்முன், அது கிராம திருவிழாவாவோ, திருமண விழாவாவோ, புதுமனை புகுவிழாவாவோ, முதலில் கணேச பூஜை செய்யப்படுகிறது. ஏனென்றால் கணபதி என்பவர் தான் விக்னஹர்தா. இவர் எல்லாத் தடைகளையும் நிவர்த்தி செய்து கொடுப்பவர்.
ப்ராண சக்தியை அதிகரிப்பவர்
மனித சரீரத்தில் பல்வேறு நடவடிக்கைகள், பல்வேறு சக்திகளின் மூலம் நடைபெறுகின்றன. இந்த பல்வேறு சக்திகளின் மூல சக்தியை, ப்ராண சக்தி என்று வழங்குவர். கணபதியின் நாமஜபம் இந்த ப்ராணசக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.
நாதபாஷையையும் பிரகாசபாஷையையும்
ஒன்றோடொன்று மாற்றும் திறன் பெற்றவர்
நாம் பேசும் நாதபாஷையை (ஒலி மொழி) கணபதியால் புரிந்து கொள்ள முடியும். எனவே தான் எளிதில் ஆனந்தம் அடையும் தெய்வமாக விளங்குகிறார். கணபதியினால்தான் ஒலியை ஒளியாகவும், ஒளியை ஒலியாகவும் மாற்ற முடியும். மற்ற தெய்வங்களுக்கு பிரகாசபாஷை (ஒளி மொழி) மட்டுமே தெரியும்.
எல்லா ஸம்ப்ரதாயத்தினராலும் வணங்கப்படுபவர்
தங்களின் உபாஸனா தெய்வமே மிகச் சிறந்தது என்றும் அவரே உலகின் படைப்பு, காத்தல் மற்றும் அழித்தலைச் செய்பவர் என்றும் அவரைத் தவிர வேறு தெய்வங்கள் இல்லை என்றும் எண்ணுவதே ஸம்ப்ரதாயம் ஆகும். இதைப் போன்ற அநேக ஸம்ப்ரதாயத்தினரும் கூட கணபதி பூஜையைச் செய்கின்றனர், ஜைன மதம் உள்பட.
வாக்தேவதா
கணபதியை மகிழ்ச்சியுறச் செய்தால், வாக்ஸித்தியைத் (நல்ல வாக்கை) தந்தருளுவார்.