ஸமூக கணேஷோத்ஸவம்

கணேஷோத்ஸவம் என்பது, மஹாராஷ்ட்ராவில் கொண்டாடப்படும் எல்லா உற்சவங்களைக் காட்டிலும் ஹிந்துக்கள் கொண்டாடும் மிகப் பெரிய சமூக தார்மீக உற்சவமாகும். ஹிந்துக்களிடம் தர்மப்பற்று, தேசப்பற்று ஏற்பட வேண்டும், ஹிந்துக்களிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்ற உன்னத லக்ஷியத்தோடு பால கங்காதர திலகர் இந்த சமூக கணேஷோத்ஸவங்களைத் துவங்கி வைத்தார். ஆனால் இன்று கொண்டாடப்படும் சமூக உற்சவங்களில் நடக்கும் அநாசாரங்கள் மற்றும் தவறுகள் இந்த மூல லக்ஷியத்தை மறைத்து விட்டன. உற்சவத்தின் பவித்ரமும் தொலைந்து விட்டது. சமூக உற்சவங்களில் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக் கூடாது என்பது பற்றி சுருக்கமாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

 

உற்சவங்களில் என்ன இருக்கக் கூடாது?

முக்கிய தவறுகள்

  • பலவந்த பண வசூல்
  • சாஸ்திரத்திற்கு விரோதமான மூர்த்திகள்
  • மண்ணினால் செய்யப்படாத மூர்த்திகள்
  • விசித்ர ரூபங்களில் மூர்த்திகள்
  • மிக பிரம்மாண்டமான மூர்த்திகள்

மண்டபம் மற்றும் உற்சவத்தில் நடக்கும் தவறுகள்

  • ஆடம்பர அலங்காரம்
  • மண்டபத்தைக் கட்ட தீப்பிடிக்கும் பொருட்களை உபயோகித்தல்
  • மண்டபத்தில் சீட்டாட்டம் மற்றும் மது அருந்துதல்
  • போதைப் பொருட்களின் விளம்பரம்
  • தேசம் மற்றும் தர்மத்திற்கு சம்பந்தமில்லாத நிகழ்ச்சிகள்
  • பக்திசுவையில்லாத சினிமா பாடல்கள்
  • பெருத்த சத்தம்

ஊர்வலத்தில் நடக்கும் தவறுகள்

  • மிகுந்த மந்த கதியில் செல்லும் ஊர்வலங்கள்
  • ஊர்வலத்தில் குலால் தெளிப்பது, பலவந்த பண வசூல் செய்வது
  • விசித்ர வேடங்களைப் புனைந்து நடனம்
  • பெண்களைக் கிண்டலடித்தல்
  • ஊர்வலத்தில் மதுபானம் அருந்துதல்
  • பட்டாசுகளை வெடித்தல்
  • இரவு 10 மணிக்கு மேல் ஊர்வலம் செல்லுதல்

ஏனைய வேண்டாத விஷயங்கள்

  • குற்றவாளிகளின் பங்கேற்பு
  • ஊழல் அரசியல்வாதிகளின் பங்கேற்பு

 

உற்சவத்தை நடத்தும் சரியான வழிமுறை

  • மூர்த்தி சாஸ்திரப்படி மூர்த்தி ஸ்தாபனம்
  • பூஜை இடம் மற்றும் உற்சவ மண்டபத்தில் ஒழுக்கம் மற்றும் தூய்மை
  • தார்மீக விதிகள் மற்றும் தெய்வ சாஸ்திரங்களை நன்குணர்ந்த, உற்சவத்தை ஸேவையாக செய்யும் காரியகர்த்தாக்கள்
  • சமூகநலன் மற்றும் தர்மவிழிப்புணர்வு, தேசவிழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள்
  • ஆன்மீகபிரசாரம், தார்மீக, சமூக மற்றும் தேச காரியங்களுக்கு எஞ்சியுள்ள அர்ப்பணத்தை உபயோகித்தல்
  • தர்மபிரசாரம் மற்றும் தார்மீக காரியங்களில் வருடம் முழுவதும் காரியகர்த்தாக்களின் பங்கேற்பு
தகவல் : ஸனாதனின் தமிழ் கையேடு ‘கணபதி’

Leave a Comment