1. நம் மீது உள்ள கண் திருஷ்டியை விலக்க ஸ்ரீ ஹனுமானிடம் செய்ய வேண்டிய பிரார்த்தனை
ஸ்ரீ ஹனுமானே நம் மீது உள்ள கண் திருஷ்டியை விலக்குவார் என்ற ஆன்மிக உணர்வுடன் ‘ஹே ஹனுமந்தா, ஹே மாருதிராயா, என் மீதுள்ள கண் திருஷ்டியை தயைகூர்ந்து நீக்கி விடுங்கள்’ என்று அவரைப் பூரண சரணாகதியுடன் வேண்டிக் கொள்ளுங்கள்.
2. கண் திருஷ்டியை அகற்றுவதற்கான செயல்பாட்டு வழிமுறை
அ. மாருதிராயர் தேங்காயின் குடுமி என்னை நோக்கி இருக்குமாறு என் முன்னே நிற்கிறார்
ஆ. மாருதிராயரின் புனித பாதங்களில் தலையை வைத்து முழு சரணாகதியுடன் ‘ஹே ஹனுமந்தா, ஹே மாருதிராயா, என் ஸ்தூல தேஹம் மற்றும் சூட்சும தேஹத்தில் (பிராண தேஹம், மனோ தேஹம், காரண தேஹம், மஹாகாரண தேஹம்) கஷ்டப்படுத்தும் தீய சக்திகளினால் உருவாக்கப்பட்ட எலும்புகள், மண்டை ஓடுகள், ஸாதனங்கள், ஆபரணங்கள் மற்றும் அமைப்புகள் ஆகியவை இந்த தேங்காயில் முழுமையாக உறிஞ்சப்படட்டும்; என் ஸ்தூல தேஹம் மற்றும் சூட்சும தேஹத்தில் உள்ள ஸ்தானங்கள் முற்றிலும் அழிக்கப்படட்டும்’ என்று பிராத்தனை செய்யவும்.
இ. மாருதிராயரே நம் மீது உள்ள கண் திருஷ்டியை நீக்குவதற்காக தேங்காயை கால்களிலிருந்து தலை வரை வட்டமாக மூன்று முறை சுற்றுகிறார்; ஸ்தூலதேகம் மற்றும் சூட்சும தேஹத்திலுள்ள தீய சக்திகள் தேங்காயில் வேகமாக உறிஞ்சப்படுகின்றன என்ற ஆன்மீக உணர்வுடன் இருக்கவும் .
ஈ ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று நாமஜபம் செய்துகொண்டே மாருதிராயர் தேங்காயை மெதுவாக கடிகார திசையில் காலில் இருந்து தலை வரை மற்றும் திரும்பி கால்வரை மெதுவாக சுற்றுகிறார். என்னுடைய ஸ்தூல மற்றும் சூட்சும தேஹத்திலுள்ள தீய சக்திகள் தேங்காயில் வேகமாக உறிஞ்சப்படுகின்றன. இதே செயல் மூன்று முறை செய்யப்படுகின்றன.
உ. பகவான் மாருதியாரே என் மீது உள்ள திருஷ்டியை நீக்கியதால் அவை வேகமாகக் குறைந்து வருவதை உணர்ந்து, நான் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவனாக உணர்கிறேன்
ஊ. இப்போது பகவான் மாருதி கையில் தேங்காயுடன், அதன் குடுமி என்னை நோக்கி இருக்குமாறு வைத்து என்னை வட்டமாக சுற்றி வருகிறார். பகவான் ஸ்ரீமாருதியிடம், ‘ஹே ஹனுமந்தா, என் ஸ்தூல மற்றும் சூட்சும உடலில் எஞ்சியிருக்கும் கஷ்டப்படுத்தும் தீய சக்திகள், மற்றும் சக்தி வாய்ந்த தீய சக்திகளால், என் ஸ்தூல மற்றும் சூட்சும உடலில் உருவாக்கப்பட்ட எலும்புகள், மண்டை ஓடுகள், ஸாதனங்கள், ஆபரணங்கள், ஸ்தானங்கள் ஆகியவை முற்றிலும் அழிக்கப்பட்டு, என் குருவுக்கு சேவை செய்வதற்குரிய வலிமையை நான் பெற அருள் புரிய வேண்டும்’ என பிரார்த்திக்கிறேன்.
எ . இப்போது பகவான் ஸ்ரீ மாருதி என்னை வலமிருந்து இடமாகவும், பின்பக்கத்திலிருந்து முன்புறமாகவும் கடிகார திசையில் சுற்றி வரத் தொடங்கியுள்ளதால் எனது கஷ்டங்கள் குறைவதை என்னால் உணர முடிகிறது. படிப்படியாக இரண்டாவது சுற்றையும் முடித்து விடுகிறார்
இது அவரது மூன்றாவது சுற்றாகும் . என் உடலில் உள்ள கஷ்டம் தரும் சக்தி மிக வேகமாக அழிக்கப்படுகிறது. அவர் எனக்குப் பின்னால் இருக்கிறார், இப்போது முன்னால் வருகிறார். தேங்காயின் குடுமி சில நேரங்கள் என்னை நோக்கி இருக்கும்போது என்னுள் உள்ள அனைத்து தீயசக்திகளும் உறிஞ்சப்படுகிறது. இப்போது உடலில் எந்த தீய சக்திகளும் இல்லாததால் அவற்றை நீக்கும் செயல்பாடும் குறைந்து வருகிறது
ஏ. பகவான் ஸ்ரீ மாருதியே கண் திருஷ்டியை நீக்கியதால் , நான் லேசாகவும் , உற்சாகமாகவும் உணர்கிறேன்.
ஐ. பகவான் ஸ்ரீ மாருதியே மூன்று வீதி சந்திப்பிற்கு சென்று ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று ஜபித்து முழுபலத்துடன் அதை உடைத்தார். தேங்காயில் உள்ள அனைத்து தீயசக்திகளும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன.
ஒ. பகவான் ஸ்ரீ மாருதி தற்போது என் முன் நிற்கிறார். பூரண சரணாகதி உணர்வுடன் நான் அவருடைய புனித பாதங்களில் என் தலையை வைத்து நன்றியை தெரிவிக்கிறேன். ‘ஹே பகவான் ஸ்ரீ மாருதியே, உங்கள் அருளால் என் ஸ்தூல மற்றும் சூட்சும தேஹத்திலுள்ள தீய சக்திகள் மற்றும் அவற்றின் இருப்பிடமும் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன. உங்களது அருள் என் மீது எப்போதும் பொழிய வேண்டி உமது திருவடிகலைப் பணிந்து பிரார்த்திக்கிறேன்.
3. எத்தனை முறை இதை செய்ய வேண்டும்?
கண் திருஷ்டியை மனோரீதியாக வெளியேற்றுவதற்கான இந்த முழு செயல்முறைக்கு சுமார் 5 நிமிடங்கள் ஆகும். எனவே பிரச்சனையின் தீவிரத்தைப் பொறுத்து ஒரு நாளைக்கு 1 முதல் 4 முறை, சில சமயங்களில் 2 முதல் 3 முறை தொடர்ந்தும் செய்யவும்
4. நாம ஜபம் போன்ற ஆன்மீக பரிகாரங்களைச் செய்வதற்கு முன் கண் திருஷ்டியை அகற்றவும்
ஸாதகர்கள் மனதளவில் கண் திருஷ்டியை அகற்றும் சடங்குகளை தினமும் செய்யலாம். நாமஜபம் போன்ற ஆன்மீகப் பரிகாரங்களைத் தொடங்குவதற்கு முன் செய்தால் தீய சக்திகளால் எற்படும் தடங்கல்கள் விரைவாக குறைந்து மன ஒருமைப்பாடு அதிகரிக்கும்.
தகவல் : ஸனாதனின் புனித நூல் ‘கண் திருஷ்டியை நீக்கும் வழிமுறைகள்’