ஸ்ரீகிருஷ்ணர்
பக்தி மற்றும் ஆன்மீக உணர்வை விரைவாக உருவாக்கவும் தெய்வ தத்துவத்திலிருந்து அதிகபட்ச பலனைப் பெறவும், அந்த தெய்வத்தின் பெயரை சரியான முறையில் உச்சரிப்பது முற்றிலும் அவசியம். ஸ்ரீகிருஷ்ண நாமத்தை ஜபிக்கும் சரியான முறையைப் புரிந்துகொள்ள கிழே கொடுக்கப்பட்டுள்ள ஒலிநாடா பதிவைக் கேட்போம்.
‘வாசுதேவ’ என்ற நாமத்தின் பொருள்
முதலில் ‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய’ என்ற நாமஜபத்திலுள்ள ‘வாசுதேவ’ என்ற வார்த்தையின் பொருளைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம். வாசுதேவ என்பது பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பெயர்களில் ஒன்றாகும், மேலும் இது ‘வாசு’ மற்றும் ‘தேவ’ என்ற இரண்டு வார்த்தைகளிலிருந்து உருவாக்கப்பட்டது. சமஸ்க்ருதத்தில் வசஹ என்றால் நிலை என்று பொருள். எனவே, ஜீவாத்மாக்கள் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைவதற்குத் தேவையான அதிர்வலைகளை வழங்கும் தெய்வம் வாசுதேவ, அதாவது பகவான் ஸ்ரீகிருஷ்ணர் என்று பொருள்.
காக்கும் சக்தியின் ஆன்மீக உணர்வை பெற கடவுளின் நாமத்தை உச்சரித்தல்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் காக்கும் சக்தியின் ஆன்மீக உணர்வை பெறுவதற்கு ‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய’ என்று உச்சரிக்கும்போது, அதில் உள்ள ஒவ்வொரு எழுத்தையும் நீட்டவும். எந்த வார்த்தைக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல். ஒவ்வொரு வார்த்தையையும் மென்மையாக உச்சரிக்கவும். இந்தக் முறையைப் பின்பற்றி இப்போது ஜபிக்க முயற்சிப்போம்.
நாமஜபமானது, அது தொடர்புடைய காக்கும் அல்லது அழிக்கும் தெய்வத்தின் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டது. மேலும் விவரங்களுக்கு தொடர்ந்து படிக்கவும்.
ஸ்ரீகிருஷ்ண தத்துவத்திலிருந்து அதிகபட்ச பலனைப் பெறுங்கள்
ஸ்ரீகிருஷ்ண ஜன்மாஷ்டமியான ஆவணி மாத கிருஷ்ண பக்ஷ அஷ்டமி திதியன்று ஸ்ரீகிருஷ்ணரின் தத்துவம் மற்ற நாட்களை விட ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கிறது. எனவே இந்த நாளில் அதிக அளவு ‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய’ என்று உச்சரிப்பதன் மூலம் அதிகபட்ச பலனைப் பெறுங்கள்.
தகவல் : ஸனாதனத்தின் புனித கையேடு ‘ஸ்ரீகிருஷ்ண’.