வால்மீகி ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்ட அத்தியாயத்தில், சர்க்கம் 66-ல், பகவான் ஸ்ரீ ஹனுமான் பிறந்த கதை பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
ஒரு நல்ல நாளான பர்வ திதியில் அஞ்ஜனா தேவிக்கு பகவான் ஸ்ரீ ஹனுமான் பிறந்தார். அவர் பிறந்த உடனேயே, உதித்த சூரியனை பார்த்து ஏதோ பழுத்த பழம் என்று நினைத்தபடி அதை நோக்கி முன்னேறினார். அன்று ராகு என்ற அசுரன் சூரியனை விழுங்குவதற்காக வானில் பிரசன்னமாகியிருந்தான். பகவான் ஸ்ரீ ஹனுமானை சூரியனை நோக்கி முன்னேறும் மற்றொரு ராகு என்று நினைத்து, இந்திரன் தனது வஜ்ராயுதத்தை அவர் மீது வீசினார். அந்த ஆயுதம் பகவான் ஸ்ரீ ஹனுமானின் கன்னத்தில் தாக்கி அதை துளைத்தது. இதனால் அவருக்கு ஹனுமான் என்ற பெயர் ஏற்பட்டது. (ஹனு என்றால் கன்னம்). மன்னன் தசரதனின் ராணிகளைப் போலவே, அஞ்ஜனையும் கடும் விரதமிருந்து, புனித பிரசாதத்தை (பாயசத்தை) பெற்றார். இவ்வாறுதான், ஹிந்து பஞ்சாங்கப்படி சித்திரை பௌர்ணமி நாளில் ஹனுமான் அவருக்கு பிறந்தார். இந்த நாள் ‘ஹனுமான் ஜெயந்தி’ என கொண்டாடப்படுகிறது. அவர் ஹனுமந்த் என்றும் அழைக்கப்படுகிறார். மகாபாரதத்தில், அவர் மருதாத்மஜ என்று குறிப்பிடப்படுகிறார். மாருதி என்ற பெயர் ‘மருத்’ என்ற சொல்லில் இருந்து வந்ததாகும்.