நோய்களை குணப்படுத்தும் தெய்வங்களின் நாமஜபங்கள் –  4

Article also available in :

பராத்பர குரு (டாக்டர்) ஜெயந்த் ஆடவலே,
ஸனாதன் ஸன்ஸ்தா

‘நவீன மருத்துவ நிபுணர்களும் அவர்களின் மருந்துகளும் வரவிருக்கும் பாதகமான காலங்களில் கிடைக்காது. அத்தகைய சூழ்நிலையில், ஒரு குறிப்பிட்ட நோய்க்குரிய தீர்வை கண்டறிவது கடினம். எனவே, அவற்றை அறிந்து கொள்வதற்காக; ஸாதகர்கள் இந்தக் கட்டுரையைப் பாதுகாத்து அதில் குறிப்பிட்டுள்ளபடி தெய்வத்தின் நாமங்களை பாராயணம்  செய்ய  வேண்டும். இது நோயைக் குறைக்க உதவும்’

–பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே (30.6.2022)


சில  குறிப்பிட்ட நோய்களை குணப்படுத்துவதற்கு, தியானத்தின் மூலம்  எந்த தெய்வத்தின் தத்துவம்  (7 முக்கிய தெய்வங்களில் – ஸ்ரீ துர்காதேவி, ஸ்ரீராம், ஸ்ரீகிருஷ்ண, ஸ்ரீ தத்த, ஸ்ரீ கணபதி, ஸ்ரீ மாருதி மற்றும் சிவபெருமான்) இன்றியமையாதது மற்றும் எந்த விகிதாச்சாரத்தில் தேவை என்பதை  முதலில் ஆராய்ந்தேன். நான்  முதலில் கொரோனா வைரஸை குணப்படுத்துவதற்கு உரிய  நாமஜபத்தை  ஆராய்ந்து கண்டறிந்து, அது பலன் அளிப்பதையும் அறிந்தேன். இது மற்ற நோய்களுக்கான நாமஜபத்தை கண்டறிய எனக்குள் ஆர்வத்தை எற்படுத்தியது. இவை பல்வேறு குணமளிக்கும் சக்தி கொண்ட தெய்வங்களின் கூட்டு நாமஜபங்களாகும். ஸாதகர்கள், தங்களின் நோய்களை குணப்படுத்திக் கொள்ள இந்த நாமஜபங்களை பரிந்துரை செய்து வருகிறேன். இதனால் அவர்கள் பயனடைந்தார்கள் என்பதையும் புரிந்துகொண்டேன். சில நோய்கள்,அவற்றை குணப்படுத்துவதற்குரிய கூட்டு நாமஜபங்கள் மற்றும் அவற்றைப் பாராயணம் செய்தபின் எற்பட்ட  ஆன்மீக அனுபவங்கள் பற்றிய தகவல்கள் சில மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்டன, அதை https://www.sanatan.org/mr/chanting-and-mantra  என்ற இணைப்பில் பதிவேற்றிய கட்டுரையில் படிக்கலாம். இன்று, மேலும் சில நோய்கள் மற்றும் அவற்றைக் குணப்படுத்துவதற்குரிய நாமஜபங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு ஸாதகர்களுக்கு கடந்த 3 மாதங்களில்  இந்த நாமஜபங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது .  ஸாதகர்கள் தங்களின் ஆன்மீக அனுபவங்களை மின்னஞ்சல் முகவரிக்கோ  அல்லது இந்தக் கட்டுரையின் கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கோ  விரைவாக எழுதி அனுப்பவும்.

குறிப்பு1 – ஒரு வியாதிக்காக கொடுக்கப்பட்டுள்ள கூட்டு நாமஜபமானது ஒரே நாமஜபமாக கருதப்படுகிறது. மேலும் அவை ஜபிக்கப்படும்பொழுது அதே வரிசைப்படி ஜபிக்கப்பட வேண்டும். இதை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மீண்டும் மீண்டும் தொடர்ந்து செய்ய வேண்டும்.

குறிப்பு 2 – மூளையின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள நியூரான்கள்( நரம்பணுக்கள்) செயலிழந்தால், மூளையின் அந்த பகுதியால் செய்ய வேண்டிய குறிப்பிட்ட செயல்கள் நடக்காது. உதாரணமாக, ‘ஒரு தனி நபர் பாட முடியும்; ஆனால் பேச முடியவில்லை’ என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அது பற்றிய விளக்கம் பின்வருமாறு.

  1. பாட முடியும் ஒரு நபரால் பேச முடியாது. இது சாத்தியமா?

2. பேச்சின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் இடது மூளையின் முன் பகுதியில் அமைந்துள்ள மோட்டார் பேச்சுப் பகுதியில் (ப்ரோகாவின்பகுதி) நியூரான்கள் (நரம்பணுக்கள்)  செயலிழந்தால், அந்த நபரின் பேச்சு பாதிக்கப்படும். அவரால்  மற்றவர்களின் பேச்சைப் புரிந்து கொள்ள முடியும், ஆனால் சரியான இலக்கணத்தைப் பயன்படுத்தி சரியாகப் பேச முடியாது (வினைச்சொற்கள், வினையுரிச்சொற்கள், உரிச்சொற்கள், முதலியன). இருப்பினும், அவரால் சில அர்த்தமுள்ள வார்த்தைகளை உச்சரிக்க முடியும். அவரின் பேச்சு ‘தந்தி பேச்சு’ போல் தோன்றும். பாடுவது மூளையின் வலது பாகத்துடன் தொடர்புடையது. எனவே, ‘ப்ரோகா’ பகுதியின் நியூரான்கள் (நரம்பணுக்கள்) செயலிழந்தாலும், அவரின் பாடும் திறன் பாதிக்கப்படாமல் இருக்கும். இங்கு ‘பாடும் திறன்’ என்பது பாடலின் ‘மெல்லிசை’ (ரிதம், பாடலின் முக்கிய ட்யூன் போன்றவை) பாடுவதில் உள்ள புலமை என்று பொருள்படும்.

— டாக்டர் (நவீன மருத்துவம்) துர்கேஷ் ஸாமந்த் (2.7.2022)

ஸத்குரு டாக்டர். முகுல் காட்கில் அவர்கள்
நோய்களை தீர்க்கும் நாமஜபங்களை தியானத்தின்
மூலம் கண்டறிய முனைகிறார்.

 

வ.எண் நோய்  விவரம் தகுந்த , பரிந்துரைக்கப்பட்ட கூட்டு நாமஜபங்கள்   (குறிப்பு 1)
1 சின்னம்மை ( பயற்றம்மை) ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ |ஓம் நம:சிவாய | ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய|  ஓம் நம:சிவாய|
2 மூட்டு வலி ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய|
3 கருப்பையில் இரத்த உறைவு காரணமாக கருப்பை வீக்கம் ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஓம் நம:சிவாய|
4 குறைந்த பிராணசக்தி ஸ்ரீ கணேசாய நமஹ | ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஓம் நம:சிவாய|
5 மாதவிடாய் சுழற்சியின் போது அதிக இரத்தப்போக்கு ஓம் நமோ பகவதே வாசுதேவாய | ஸ்ரீ குருதேவ தத்த |ஸ்ரீ ஹனுமதே நமஹ| ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய|
6 காசநோய் ஸ்ரீ குருதேவ தத்த | ஸ்ரீ கணேசாய நமஹ | ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஓம் நம:சிவாய|
7 லிபோமா (தோலுக்கு கீழே அமைந்துள்ள கொழுப்பு கட்டி) ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய|
8 காயங்களில் தொற்று ஸ்ரீ குருதேவ தத்த | ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஓம் நம:சிவாய|  ஓம் நம:சிவாய|
9 கண்கட்டி ( கண்களில் ஏற்படும் தொற்று) ஸ்ரீ கணேசாய நமஹ | ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய|
10 மூலவியாதி ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ | ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஓம் நம:சிவாய|
11 தன்னுணர்வு நோய் /தன்னுடல் தாக்கு நோய் ( ஒருவரின் சொந்த நோயெதிர்ப்பு அமைப்பு தன்னைத்தானே தாக்கிக் கொள்வதால்  ஏற்படும் விளைவுகள்) ஸ்ரீ கணேசாய நமஹ | ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய|
12 பலவீனமான தசைகள் ஸ்ரீ கணேசாய நமஹ  | ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ | ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஸ்ரீ ஹனுமதே நமஹ |
13 சிறுநீர்ப்பையில் கட்டி (அது புற்றுநோயால் ஏற்பட்ட கட்டி என்று பின்னர் அறியப்பட்டது) ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய|
14 சுருள் சிரை நரம்புகள் (வீங்கி பெரிதான வலி ஏற்படுத்தக்கூடிய நரம்புகள்) (வெரிகோஸ் வெயின்ஸ்) ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ | ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஓம் நம:சிவாய | ஓம் நம:சிவாய|
15 புற்றுநோய் ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ | ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ | ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ  | ஓம் நமோ பகவதே வாசுதேவாய | ஸ்ரீ கணேசாய நமஹ |
16 ரத்த புற்றுநோய் ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ | ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ | ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ  | ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம | ஸ்ரீ குருதேவ தத்த |
17 தண்டுவட மரப்பு நோய் (மத்திய நரம்பு மண்டலம் பலவீனமடைதல்) ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ | ஓம் நமோ பகவதே வாசுதேவாய | ஸ்ரீ குருதேவ தத்த| ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய|
18 மலச்சிக்கல் ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய|
19 மூளையின் சில பகுதிகளில் உள்ள நியூரான்கள் ( நரம்பணுக்கள்) செயலிழத்தல்  (மூளையின் சில பகுதிகள் செயலிழந்து விடுவதால், மூளையின் அந்த பகுதி தொடர்பான செயல்களை தனிநபரால் செய்ய முடியவில்லை, எடுத்துக்காட்டாக, பாட முடியும் ஆனால் பேச முடியவில்லை) (குறிப்பு 2 ) ஸ்ரீ கணேசாய நமஹ | ஸ்ரீ கணேசாய நமஹ | ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஓம் நம:சிவாய|
20 தீய சக்திகளினால் மாதவிடாய் சுழற்சியில் ஒழுங்கற்ற தன்மை ஓம் நமோ பகவதே வாசுதேவாய | ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ | ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ |  ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஸ்ரீ கணேசாய நமஹ |

1. மேற்கூறிய நோய்களில் சில நோய்களுக்கான நிவாரண நாமஜபங்களைப் பற்றிய ஸாதகர்களின்  தனிப்பட்ட அனுபவங்கள்

1 அ. அக்கி

ஆகஸ்ட் 2021ல், பெண் ஸாதகர்  ஒருவர் அக்கி நோயால் கழுத்தில் இருந்து பின்புறம் வரை பாதிக்கப்பட்டார். அந்த நோயை களைவதற்குரிய உரிய நாமஜபத்தை அவருக்கு பரிந்துரை செய்தேன். மருத்துவர்களின்  ஆலோசனைப்படி, அக்கியினால், எற்படும் கடுமையான வலி மற்றும் எரிச்சல்  குணமடைய ஒருமாத காலமாகும். ஆனால் அந்த ஸாதகர்  தினமும் ஒரு மணி நேரம் நான் அவருக்குக் கொடுத்த நிவாரண நாமஜபத்தை செய்ய ஆரம்பித்தவுடன், வலி மற்றும் எரிச்சல் குறைந்து, ஐந்தாவது நாளிலிருந்து அவரது நோயும் குணமடையத் தொடங்கியது. இதேபோன்ற அனுபவத்தை மேலும் 4 ஸாதகர்களும்  உணர்ந்தனர். அவர்களின் நோய் கூட  நாமஜப பாராயணம் செய்யத் துவங்கிய 5-வது நாளிலிருந்து  குணமடையத் தொடங்கியது.

1 ஆ . காசநோய் (T.B.)

பெண் ஸாதகர் ஒருவருக்கு (வயது 67) காசநோய் இருப்பது ஆகஸ்ட் 2021ல் கண்டறியப்பட்டது. மேலும் சமீபத்திய  கொரோனா வைரஸாலும் அவர் பாதிக்கப்பட்டார். வயதான காரணத்தால் காசநோய் கண்டறியப்பட்ட பிறகு சற்று பயந்தார். காசநோயைக் குணப்படுத்தும் நாமஜபத்தை அவருக்குக் கொடுத்தேன்.அவர் மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக் கொள்வதுடன் கூட, ஒரு நாளைக்கு 2 மணிநேரம் ஜபிக்க ஆரம்பித்தார் . இவ்வாறு 2 மாதங்கள் நிவாரண  நாமஜபத்தை பாராயணம் செய்தவுடன்,அவருடைய காசநோய் மிகவும் குறைந்து, அவரது மனநிலையும் மேம்பட்டு, முற்றிலும் குணமாகிவிடுவோம் என்ற தன்னம்பிக்கை அடைந்தார். தொடர்ந்து 4 மாதங்கள் ஜபித்து மருந்துகளையும் உட்கொண்டதால், 6 மாதங்களுக்குப் பிறகு காசநோயிலிருந்து முழுமையாக குணமடைந்தார்.பொதுவாக, காசநோயிலிருந்து முழுமையாக குணமடைய 6 முதல் 9 மாதங்கள் ஆகும்.அந்த ஸாதகரின் காசநோயானது நாமஜபம் செய்ததால் விரைவில் குணமானது.

1 இ. காயத்தில் தொற்று

செப்டம்பர் 2021ல்,ஒரு ஸாதகர் கீழே விழுந்ததால், கண்ணுக்கு அருகில் காயம் ஏற்பட்டு , அதில் சீழ் உருவாக  ஆரம்பித்தது. காயத்தில் சீழ் உருவாகாமல் இருக்க நிவாரண நாமஜபத்தை பரிந்துரை செய்தேன். தினமும் 2 மணிநேரம் ஜபிக்க ஆரம்பித்த பிறகு, 2-வது நாளிலிருந்து காயத்திலிருந்து சீழ் வருவது  குறைந்து, 4 நாட்களுக்குள் காயம் குணமானது. இதனால் அவரது கண் பாதிப்பிலிருந்து  (காயத்தில் உள்ள சீழின்  காரணமாக) தவிர்க்கப்பட்டது.

1 ஈ.தன்னுணர்வு நோய் /தன்னுடல் தாக்கு நோய் ( ஒருவரின் சொந்த நோய் எதிர்ப்பு சக்தி தன்னைத்தானே தாக்கிக் கொள்வதால்  ஏற்படும் விளைவுகள்)

1. செப்டம்பர் 2021-ல், ஸாதகர் ஒருவர் இந்த நோயால் அவதிப்பட்டார். இதனால் அவரது குடலில் புண்  உருவாகி, மலம் கழிக்கும் போது ரத்தம் வரும். அவரால் இனிப்பு அல்லது காரமான உணவுகளை சாப்பிட முடியாது. புழுங்கல் அரிசி கஞ்சியை மட்டுமே அவரால் சாப்பிட முடிந்தது. இதனால் மிகவும் உடல் நலிவுற்றார். அவர் எடுத்துக் கொண்டிருந்த ஆயுர்வேத மருந்துகளும் பலனளிக்கவில்லை. இந்த நோயைப் போக்க நான் அவருக்கு கொடுத்த நிவாரண நாமஜபத்தை,ஒவ்வொரு நாளும் 1 மணிநேரம் பாராயணம் செய்ததன் பலனாக, ஒரு மாத காலத்திற்குள் அவர் தனது நிலையில் மாற்றத்தை உணர்ந்தார். மலம் வழியாக  ரத்தம் வெளியேறுவது முற்றிலும் நின்று, மற்ற உணவுப் பொருட்களையும் அவரால் சிறிய அளவில் சாப்பிட முடிந்தது. மேலும் 3 மாதங்களில் நோய் முற்றிலும் குணமானது.

2. இந்த நோயின் காரணமாக பெண் ஸாதகர் ஒருவரது உடல் முழுவதும் நிறைய புண்கள் ஏற்பட்டன. புண்கள் அதிகமாக இருந்ததால், ஆடை அணிவது கூட அவருக்கு கடினமாகிவிட்டது. மருத்துவ சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காததால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். நான் அவருக்கு இந்த வியாதியை குணப்படுத்தும் நாமஜபத்தை கொடுத்தேன், ஒரு மாதத்தில் அவரது  உடலில் உள்ள புண்கள் அனைத்தும் குணமாகி, அதன் பிறகு அந்த புண்கள் அவருக்கு வரவேயில்லை.

1 உ. புற்றுநோய்

நலம் விரும்பி ஒருவரின் இளம் மகனுக்கு ‘எலும்பு மஜ்ஜை புற்றுநோய்’ இருப்பது கண்டறியப்பட்டது. அவரது உடல், 55 % வரை புற்றுநோயால் பாதிக்கபட்டிருந்தது. நான் அவருக்கு புற்று நோயை குணப்படுத்தும் நாமஜபத்தை பரிந்துரைத்தேன். ஒரு மாத காலம் தன் மகனுக்காக தினமும் 2 மணி நேரம் ஜபித்தார். அதன்பிறகு அவரது மகனுக்கு பரிசோதனைகள் செய்தபோது, ​அவரது உடலில் பரவியிருந்த புற்றுநோயானது 55%-ல் இருந்து 0.5% ஆக குறைந்தது கண்டறியப்பட்டது. பரிசோதனை முடிவுகளைப் பார்த்து ஆச்சரியமடைந்த மருத்துவர், “புற்றுநோய் பரவியுள்ள சதவீதம் 0.05 %ஆகக் குறைந்தால், நீங்கள் ‘எலும்பு மஜ்ஜை மாற்று’ சிகிச்சை செய்ய வேண்டியதில்லை. அதற்காகும் 12 முதல் 13 லட்சம் ரூபாய்க்கான செலவும்  மிச்சம் என்றார். அதை அறிந்த பிறகு புற்று நோயை குணப்படுத்தும் நிவாரண நாமஜபத்தை  தினமும் 2 மணி நேரத்துக்குப் பதில் 3 மணி நேரம் செய்யச் சொன்னேன்.

1 ஊ. தண்டுவட மரப்பு நோய் (மத்திய நரம்பு மண்டலம் பலவீனமடைதல்)

ஒரு ஸாதகர் தனது 28 வயதிலிருந்து, கடந்த 14 ஆண்டுகளாக இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் கால்களில் கூச்ச உணர்வு, குத்தல் உணர்வு, எரிச்சல் அல்லது உணர்வின்மை ஆகியவற்றை அனுபவித்தார், மேலும் படிப்படியாக இவை  உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவத் தொடங்கின. இது நோயின் தீவிர வடிவமாகும். பகலில் உணரும் இந்த அறிகுறிகள், இரவில் மிகவும்  மோசமடைகின்றன. அக்டோபர் 2021ல், இந்த நோயை குணப்படுத்த  அவருக்கு ஒரு நிவாரண நாமஜபத்தை பரிந்துரை செய்தேன். அவர் 30 நிமிடங்களுக்கு பல அமர்வுகளில் இந்த நாமஜபத்தை பாராயணம் செய்ய திட்டமிட்டார். இந்த நோயின் அறிகுறிகளை உணரும் போதெல்லாம், அவர் 30 நிமிடங்கள் ஜபித்தார். இதன் மூலம், இந்த நோயின் அறிகுறிகள் குறைந்து, அடுத்த 1 முதல் 2 மணி நேரத்திற்கு அவர் நன்றாக உணர்ந்தார். இவ்வாறு அறிகுறிகள் தோன்றும் போதெல்லாம், அவர் 30 நிமிடங்கள் ஜபித்தார். அவர் பெரும்பாலும் மாலையிலோ அல்லது இரவிலோ இந்த நாமஜபத்தை பாராயணம் செய்ய வேண்டியிருந்தது. இவ்வழியில் இந்த நோயிலிருந்து  விடுபட விடாமுயற்சி எடுத்தார். அதன்பிறகு, அந்நோய்  ஆரம்பமாவதற்குரிய அறிகுறிகள் நாளுக்கு நாள் குறைந்து, 2 மாதங்களுக்குப் பிறகு அதன் தீவிரமும் வெகுவாகக் குறைந்ததை உணர்ந்தார்.

2. நாமஜபத்தின்  முக்கியத்துவம்

மருந்துகள் மற்றும் மருத்துவர்களின் பற்றாக்குறை உணரப்படும் மோசமான காலகட்டங்களில், இந்த நாமஜபங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

3. நன்றியுணர்வு

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் அருளால், இந்த குணமளிக்கும் நாமஜபங்களை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது, மேலும் இவை மிகவும் பயனுள்ளதாக இருப்பதைக் கவனிக்க முடிந்தது. இதற்காக நான் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின்  திவ்ய திருவடிகளில் எனது அளவிட முடியாத நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

– (ஸத்குரு) டாக்டர் முகுல் காட்கில், Ph.D., கோவா.

மேற்கூறிய நோய்களில் ஏதேனும் ஒன்றை ஸாதகர்கள் அனுபவித்து, அதை  குறைக்க ( நிவர்த்தி செய்ய),  அது தொடர்பான நிவாரண நாமஜபத்தை  ஜபிக்க வேண்டும் என்று நினைத்தால், ஒரு மாதத்திற்கு தினமும் ஒரு  மணிநேரம் ஒரு பரிசோதனையாக இதை செய்ய வேண்டும். மேலும் தங்கள் ஆன்மீக அனுபவங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected] அல்லது கீழ்  கொடுக்கப்பட்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். ஸாதகர்களின்  இத்தகைய அனுபவங்கள் புனித நூல்களில் சேர்க்கப்படுவதுடன், இந்த நாமஜபங்களின்  பயனை உறுதிப்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கும்.

அஞ்சல் முகவரி : ஸனாதன் ஆச்ரமம், 24/பி ராம்நாதி, பந்தோடா, போண்டா, கோவா. பின்கோடு – 403401.

Leave a Comment