Contents
- 1. ஆன்மீக உணர்வு விழிப்படைந்தவுடன் 61% ஆன்மீக நிலையை அடைய முடியும்
- 2. மாயையிலிருந்து பற்று விலகுவதற்கு க்ரியமாண் கர்மாவை (சுதந்திரமாக நாம் செய்யும் கர்மா) முழுவதுமாக உபயோகிக்க வேண்டும்
- 3. எச்சரிக்கையுடன் இருந்து ஆன்மீக பயிற்சிக்காக ஒதுக்கிய நேரம் வேறு அனாவசிய நடவடிக்கைகளில் போகாமல் பார்த்துக் கொள்ளுதல்
- 4. குரு எதிர்பார்ப்பின்படி காரியங்களை செய்யாமல், வேறு காரியங்களை ஆன்மீக உணர்வுடன் செய்தால் கூட அவை மானசீக நிலையில் செய்ததாகவே ஆகிறது
- 5. குருவின் எதிர்பார்ப்பின்படி காரியங்களை செய்யாமல் வேறு ஸாத்வீக காரியங்களை செய்தாலும் அது ஒருவர் தன் விருப்பப்படி நடந்ததாகவே கருதப்படுகிறது
- 6. குருவின் எதிர்பார்ப்பின்படி ஸாதனை செய்வதே காலத்திற்கேற்ற ஸாதனையாகிறது
- 7. ஸாதனைக்குத் தேவையான விஷயங்களை மட்டுமே நம் கடமையாகக் கொள்ள வேண்டும்
- 8. குரு காரியத்திற்கு பங்களிப்பு அளிக்காத எந்த காரியமும் ஆன்மீக உணர்வுடன் செய்தாலும் கூட அது மானசீக நிலையில் நடப்பதாகவே கருதப்படுகிறது
- 9. 61% ஆன்மீக நிலையை அடைந்த பின்பு இடத்திற்குரிய தத்துவம் அன்று, காலத்திற்குரிய தத்துவமே ஏற்புடையதாகிறது
- 10. இரண்டு ஸாத்வீக காரியங்களில் எது அதிக முக்கியமானது என்பதைத் தீர்மானிக்க தெரிந்திருக்க வேண்டும்
- 11. குரு காரியத்திற்கு உண்டான சேவைகளை துரிதமாக முடிக்கவில்லை என்றால் காலத்தின் ஆசீர்வாதத்தை நாம் பெறத் தவறி விடுவோம்
- 12. ஆன்மீக நிலைக்கேற்ற, ஆன்மீக முன்னேற்றத்திற்கு உகந்த குறிப்பிட்ட ஆன்மீக பயிற்சியை செய்வது முக்கியமாகிறது
- 13. சேவை செய்யும்போது தீய சக்திகளால் கஷ்டங்கள் ஏற்பட்டால் சேவையைக் காட்டிலும் ஆன்மீக உபாயத்தில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகிறது
- 14. ஒவ்வொரு செயலும் பரிபூரணமானதாக இருக்க வேண்டும்!
- 15. 61% ஆன்மீக நிலைக்கு மேல் முன்னேறும்போது ஒருவர் கவனித்தில் கொள்ள வேண்டிய சித்தாந்தம் ‘குரு காரியத்தை மேலே எடுத்துச் செல்வதே ஆன்மீக பயிற்சியின் நோக்கம்’ என்பதே
61% ஆன்மீக நிலை அடைந்த ஸாதகர்கள் மேலும் முன்னேற என்ன முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதலை இக்கட்டுரை வழங்குகிறது. அவரவர் கண்ணோட்டத்தில் முக்கியமான, சம்பந்தமுள்ள ஆன்மீக பயிற்சியின் தத்துவங்கள் இங்கு தரப்பட்டுள்ளன. தன் புத்திக்கு ஏற்றாற்போல் ஆன்மீக பயிற்சியை செய்வதைக் காட்டிலும் குருவின் எதிர்பார்ப்பின்படி ஆன்மீக பயிற்சி செய்வதே குருக்ருபாயோகப்படியான ஆன்மீக பயிற்சி ஆகும். இதுவே அதன் அடிப்படைத் தத்துவம் ஆகும். இந்த தத்துவம் வெறும் 61% ஆன்மீக நிலை அடைந்த ஸாதகர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லா ஆன்மீக நிலையிலும் இருக்கக் கூடிய ஸாதகர்களுக்கும் உரித்தாகும். இதிலுள்ள ஒரே வித்தியாசம் ஆற்றல் இருந்தும் 61% ஆன்மீக நிலை அடைந்த ஸாதகர் முயற்சி செய்யவில்லை என்றால் இந்த தத்துவப்படி அவருக்கு கூடுதல் பாவமும் ஏற்படும். சுருக்கமாக கீழே அளிக்கப்பட்டுள்ள குறிப்புகள் பெரும்பாலும், விரைவான ஆன்மீக முன்னேற்றம் அடைய விரும்பும் அனைவருக்குமே பொருந்தும். அனைவருமே அதன்படி முயற்சித்தல் நலம்.
1. ஆன்மீக உணர்வு விழிப்படைந்தவுடன் 61% ஆன்மீக நிலையை அடைய முடியும்
ஆன்மீக பயிற்சியில் பல தடைகளை எதிர்கொள்ளும்போது ஆன்மீக உணர்வுடன் பயிற்சி செய்தால் 61% ஆன்மீக நிலையை எட்ட இயலும்.
2. மாயையிலிருந்து பற்று விலகுவதற்கு க்ரியமாண் கர்மாவை (சுதந்திரமாக நாம் செய்யும் கர்மா) முழுவதுமாக உபயோகிக்க வேண்டும்
இந்த ஆன்மீக நிலையில் மாயையிலிருந்து பற்று விலகுவதற்கு பகவானின் ஆசீர்வாதம் ஒருவருக்கு கிடைக்கிறது. ஆனாலும் இது கட்டாயம் கிடைப்பதற்கு ஒருவர் தன் க்ரியமாண் கர்மாவை முழுவதுமாக உபயோகிக்க வேண்டும். இல்லையேல் ஆன்மீக நிலை தாழ்ந்து போகும்.
3. எச்சரிக்கையுடன் இருந்து ஆன்மீக பயிற்சிக்காக ஒதுக்கிய நேரம் வேறு அனாவசிய நடவடிக்கைகளில் போகாமல் பார்த்துக் கொள்ளுதல்
50% ஆன்மீக நிலை வரை ஒருவர் பல்வேறு ஆன்மீக பயிற்சி வழிகளைக் கையாளுவது அவசியமாகிறது. 61% ஆன்மீக நிலை அடைந்த பிறகு மேலும் முன்னேற்றப் பாதையில் செல்லும்போது ஆன்மீக பயிற்சிக்காக ஒதுக்கிய நேரம் வேறு அனாவசிய நடவடிக்கைகளுக்காக கழியாமல் உள்ளதா என்று எச்சரிக்கையுடன் கவனித்துக் கொள்ள வேண்டும்.
4. குரு எதிர்பார்ப்பின்படி காரியங்களை செய்யாமல், வேறு காரியங்களை ஆன்மீக உணர்வுடன் செய்தால் கூட அவை மானசீக நிலையில் செய்ததாகவே ஆகிறது
குரு அளித்த சேவைக்கு முக்கியத்துவம் அளிக்காமல் பிறருடன் ஸத்சங்கத்தில் பேசிக் கொண்டிருந்தாலும் அது அனாவசியமாக கருதப்படுகிறது. ஏனென்றால் குரு அளித்த சேவையை செய்யாமல் வேறு காரியத்தை ஆன்மீக உணர்வுடன் செய்தால் கூட அது மானசீக நிலையில் செய்ததாகவே கருதப்படுகிறது.
5. குருவின் எதிர்பார்ப்பின்படி காரியங்களை செய்யாமல் வேறு ஸாத்வீக காரியங்களை செய்தாலும் அது ஒருவர் தன் விருப்பப்படி நடந்ததாகவே கருதப்படுகிறது
இது போன்று ஒருவர் குருவின் எதிர்பார்ப்பின்படி காரியங்களை செய்யாமல் ஆன்மீக பயிற்சிக்கான வேறு ஸாத்வீக காரியங்களை செய்தாலும் அது தன் விருப்பப்படி செய்ததாகவே கருதப்படுகிறது.
6. குருவின் எதிர்பார்ப்பின்படி ஸாதனை செய்வதே காலத்திற்கேற்ற ஸாதனையாகிறது
குரு அளித்த அல்லது எதிர்ப்பார்க்கும் சேவை, காலத்திற்குகந்த சேவையாக உள்ளது. ஒருவர் இந்த சேவையை செய்ய அதிகபட்ச நேரத்தை செலவிட்டால் அது கடவுளின் விருப்பப்படியான ஸாதனை செய்த பலனைத் தருகிறது, விரைவான ஆன்மீக முன்னேற்றமும் ஏற்படுகிறது.
7. ஸாதனைக்குத் தேவையான விஷயங்களை மட்டுமே நம் கடமையாகக் கொள்ள வேண்டும்
61% ஆன்மீக நிலை அடையும் வரை, தான் எதிர்கொள்ளும் எந்த காரியத்தையும் தன் கடமையாக செய்வது சரியானதாகிறது. ஏனென்றால் அதுவே ஆன்மீக பயிற்சியின் முக்கிய சித்தாந்தமாகும். ஆனால் 61% ஆன்மீக நிலைக்குப் பின்பு அந்த ஸாதகர் ஸமஷ்டிக்கு உரியவர் என்பதால் ‘ஆன்மீக பயிற்சிக்கு எது தேவையோ அதுவே தன் கடமை’ என்ற சித்தாந்தத்தைப் பின்பற்ற வேண்டும்.
8. குரு காரியத்திற்கு பங்களிப்பு அளிக்காத எந்த காரியமும் ஆன்மீக உணர்வுடன் செய்தாலும் கூட அது மானசீக நிலையில் நடப்பதாகவே கருதப்படுகிறது
55% ஆன்மீக நிலை அடைந்த பிறகே ஒருவர் சிஷ்யன் என்ற நிலையை அடைகிறார். சிஷ்யன் என்பவன் தன் குரு எதிர்பார்க்கும்படியான காரியங்களை மட்டுமே முழு பக்தியுடன் செய்பவன் ஆவான். குரு ஆணையிடாத எந்த ஒரு சேவையையும் (குரு காரியத்திற்கு பங்களிப்பு அளிக்காத சேவை) ஒருவர் செய்தால் அதில் ஆன்மீக உணர்வு பொதிந்திருந்தாலும் கூட மானசீக நிலையிலேயே நடந்ததாகிறது.
9. 61% ஆன்மீக நிலையை அடைந்த பின்பு இடத்திற்குரிய தத்துவம் அன்று, காலத்திற்குரிய தத்துவமே ஏற்புடையதாகிறது
61% ஆன்மீக நிலையை அடைந்த பின்பு இடத்திற்குரிய விதிகளைக் காட்டிலும், மிகப் பரந்த அளவில் உள்ள காலத்திற்குரிய விதிகளே அவருக்கு உரியதாகிறது. அதாவது 61% ஆன்மீக நிலைக்கு மேல் ஒருவர் தன் தனிப்பட்ட வாழ்வைத் துறந்து காலத்துடன் ஒன்றி விடுகிறார். இக்கண்ணோட்டத்தில் பார்த்தால் ஒவ்வொரு கணமும் அதி முக்கியமானது, ஆகையால் அனாவசிய காரியங்களில் நேரம் செலவழியாமல் இருந்ததா என்பதை மிகுந்த எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும்.
10. இரண்டு ஸாத்வீக காரியங்களில் எது அதிக முக்கியமானது என்பதைத் தீர்மானிக்க தெரிந்திருக்க வேண்டும்
61% ஆன்மீக நிலை அடைந்த ஒருவரின் ஸாதனை சரிந்தால் அல்லது அதே நிலையில் மாட்டிக் கொண்டால் அவருக்கு குழப்பம் ஏற்படுகிறது, ஆன்மீக பயிற்சியைத் தவிர வேறு எந்த காரியத்தையும் செய்யவில்லையே அப்படியிருந்தும் ஏன் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதை புரியாத புதிராக உணரலாம். இதற்கு பதில் என்னவென்றால் அவர் இரு ஸாத்வீக காரியங்களில் எதற்கு முதன்மை அளிக்க வேண்டும் என்பது தெரியாமல் தவறான முடிவெடுத்தார் என்பதுதான்.
11. குரு காரியத்திற்கு உண்டான சேவைகளை துரிதமாக முடிக்கவில்லை என்றால் காலத்தின் ஆசீர்வாதத்தை நாம் பெறத் தவறி விடுவோம்
ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட சேவையில் நல்ல தேர்ச்சி இருக்கிறது. ஆனால் அவரோ அதைச் செய்யாமல் வேறு சேவையை செய்தால் அவரின் ஆன்மீக பயிற்சியில் தொய்வு ஏற்படுகிறது. அவரின் சேவையை அதில் தேர்ச்சியில்லாத இன்னொருவர் செய்தால் அது குரு காரியத்தில் தாமதத்தை ஏற்படுத்தி அந்த சேவை முடிவடையும் வேகத்தைக் குறைக்கிறது. இக்காரணத்தால் நமக்கு காலத்தின் ஆசீர்வாதம் கிடைக்காமல் போகிறது. அதோடு கூட ஸமஷ்டி நிலையில் குரு காரியத்திற்கு நாம் தெரிந்தே இடைஞ்சல் ஏற்படுத்துவதால் ஸமஷ்டி பாவம் ஏற்படுகிறது. இது தொடர்ந்தால், ஆன்மீக பயிற்சி செய்தும் கூட நம் ஆன்மீக நிலை படிப்படியாக குறைகிறது.
12. ஆன்மீக நிலைக்கேற்ற, ஆன்மீக முன்னேற்றத்திற்கு உகந்த குறிப்பிட்ட ஆன்மீக பயிற்சியை செய்வது முக்கியமாகிறது
61% ஆன்மீக நிலைக்கு மேலே முன்னேறும்போது எந்த ஒரு சேவையையும் செய்வதற்கு முன்பு அது நம் ஆன்மீக நிலைக்கேற்ற, அடுத்த நிலை ஆன்மீக முன்னேற்றத்தை தரக்கூடிய சேவையா என்பதை கவனிக்க வேண்டும். இல்லையேல் அடுத்த நிலைக்கு முன்னேறுவதற்கு அது ஒரு தடைக்கல்லாக மாறும்.
13. சேவை செய்யும்போது தீய சக்திகளால் கஷ்டங்கள் ஏற்பட்டால் சேவையைக் காட்டிலும் ஆன்மீக உபாயத்தில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகிறது
சில சமயங்களில் ஒருவர் தனக்கு தரப்பட்ட சேவையை செய்யும்போது தீய சக்திகளால் நிறைய தடங்கல்களை, ஆன்மீக கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அப்போது அவர் அந்த சேவையை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் அது தாற்காலிகமானதாக இருக்க வேண்டும். கூடிய விரைவில் அதே சேவையைத் தொடர அவர் முயல வேண்டும். ஆன்மீக கஷ்டங்கள் அதிகம் இருக்கும் பட்சத்தில் அவர் சேவைக்கு பதில் ஆன்மீக உபாயத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
14. ஒவ்வொரு செயலும் பரிபூரணமானதாக இருக்க வேண்டும்!
61% ஆன்மீக நிலைக்கு மேல் முன்னேறும் ஒருவர் ஒவ்வொரு செயலையும் பரிபூரணமாக செய்ய வேண்டும். கல்லூரியில் நாம் படிக்கும்போது கூட அடுத்தடுத்த நிலைகளில் கல்வி மேலும் கடினமாகிக் கொண்டே போவதை நாம் உணர்ந்திருப்போம். ஆன்மீகத்தில் முன்னேறுவதும் அதைப் போலவேதான்.
15. 61% ஆன்மீக நிலைக்கு மேல் முன்னேறும்போது ஒருவர் கவனித்தில் கொள்ள வேண்டிய சித்தாந்தம் ‘குரு காரியத்தை மேலே எடுத்துச் செல்வதே ஆன்மீக பயிற்சியின் நோக்கம்’ என்பதே
ஆன்மீகத்தில் முன்னேறும்போது அந்தந்த நிலைகளுக்கு ஏற்ப ஆன்மீக பயிற்சியின் விதிகளும் மாறும். 61% ஆன்மீக நிலை அடையும் வரை தன்னிச்சை தன்மை கொண்ட சித்தாந்தமான ‘அவரவர் இயல்பிற்கு ஏற்ற ஆன்மீக பயிற்சி’ பயன்படுகிறது. 61% ஆன்மீக நிலைக்கு மேலே வழிகாட்டும் சித்தாந்தம் ‘‘குரு காரியத்தை மேலே எடுத்துச் செல்வதே ஆன்மீக பயிற்சியின் நோக்கம்’ என்பதாகும்.
– (ஸ்ரீசித்சக்தி) திருமதி அஞ்ஜலி காட்கில், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா. (18.2.2011)