பூஜ்ய (டாக்டர்) முகுல் காட்கில்
நமது ஆன்மா கடவுளின் ஒரு நுண்ணிய துகள். நமது ஜீவனை ஆன்மாவுடன் இணைக்க மனம் செயல்படுகிறது. மனம் ஒரு முக்கியமான காரணியாதலால், அது ஜீவனை சிவனுடன் இணைக்க உதவுகிறது. ஸ்ரீமத் பகவத்கீதையின்படி, மனம் ஒரு தனிமனிதனை மாயையில் (உலக விவகாரங்களில்) சிக்க வைக்கிறது அதுவே கடவுளை உணர்தலுக்கும் அழைத்துச் செல்கிறது. நாம் கடவுளை உணர்தலுக்கான முயற்சிகளை கீழ்க்கண்டவாறு மேற்கொள்ளலாம்.
1. ஸாதனை மூலம் ஆழ் மனதில்
‘ஸத்’ ஸன்ஸ்காரங்களைப் பதித்தல்
மனதை ஸாத்வீகமாக (தூய்மையாக) மாற்றுவது அவசியம். புத்தி மனதை இயக்குகிறது. ஞானம் புத்தியை ஸாத்வீகமாக்குகிறது, மேலும் ஞானம் ஸன்ஸ்காரங்களால் பெறப்படுகிறது. எனவே, ஸன்ஸ்காரங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஸாதனை மூலம், நாம் விரும்பத்தகாத ஸன்ஸ்காரங்களை அகற்றலாம் மற்றும் ஸத் ஸம்ஸ்காரங்களை பதிய வைக்கலாம். இதுவே ஸாதனையின் முக்கியத்துவம்.
2. எப்போதும் உள்முக சிந்தனை நிலையில் லயித்து இருப்பது
மனதின் மூலம் ஜீவனை எப்போதும் தெய்வீக் தத்துவத்துடன் ஒன்றிணைந்து வைத்திருக்க வேண்டும். அப்போது ஜீவனின் அகம்பாவம் குறையத் துவங்கும். இதுவே எப்போதும் உள்முக சிந்தனை நிலையில் லயித்து இருப்பதாகும். மறுபுறம், வெளிமுக பார்வை என்பது ஆளுமைக் குறைகளுடன் ‘நான்’ என்ற எண்ணத்தின்படி செயல்படுவதாகும். உள்முக சிந்தனை நிலையில் இருக்கும்போது தெய்வீக தத்துவத்திடம் தொடர்ந்த ஆழ்ந்த தாபம் ஏற்படுவதால் நமது ஆளுமை குறைகள் மற்றும் அகம்பாவம் குறையத் துவங்குகிறது.
– ஸனாதனின் ஸத்குரு (டாக்டர்) முகுல் காட்கில் (ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா.
உள்முக சிந்தனை நிலை இருப்பதன் மூலம் நமது ஆளுமை குறைகள் மற்றும் அகம்பாவம் குறையத் துவங்குகிறது; தெய்வீக தத்துவத்தின் மீது ஆழ்ந்த தாபம் உண்டாவதை உணர்வோம் !
ஆதாரம் : தினசரி ஸனாதன் பிரபாத்