Contents
- 1. ‘நிர்விசார்’ அல்லது ‘ஸ்ரீ நிர்விசாராய நமஹ’ என்று ஜபிப்பதன் முக்கியத்துவம்
- 2. தீய சக்திகளால் கஷ்டப்படுபவர்களுக்கு
- 3. பக்தி அல்லது ஞானமார்க்கத்தில் உள்ள ஸாதகர்கள்
- 4. ‘நிர்விசார்’ ஜபிக்கும் போது ஆன்மீக உணர்வு இருக்க வேண்டியது அவசியமில்லை
- 5. ஆளுமை குறைபாடுகளை அகற்றும் (PDR) செயல்பாட்டின் போது சொல்லப்படும் நாமஜபத்துடன் ‘நிர்விசார்’ நாமஜபத்தையும் சேர்த்து கூறுதல்
- 6. முத்ரா
- 7. ‘நிர்விசார்’ அல்லது ‘ஸ்ரீ நிர்விசாராய நமஹ’ என நாமஜபம் செய்யும் போது , ஸாதகர்கள் தங்கள் நினைவில் வைத்து கொள்ள வேண்டிய குறிப்புகள்
- 8. ‘நிர்விசார்’ என்ற சொல் ஏன் எல்லா நிலைகளிலும் உள்ள ஸாதகர்களுக்கு ஏற்ற ஜபமாக உள்ளது?
பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே
1. ‘நிர்விசார்’ அல்லது ‘ஸ்ரீ நிர்விசாராய நமஹ’ என்று ஜபிப்பதன் முக்கியத்துவம்
மனம் செயல்படும் வரை அது லயமாவது இல்லை. மனதை சிந்தனையற்றதாக மாற்ற நாம் எடுக்கும் முயற்சிகளான ஆளுமை குறைகளைக் களைதல், அகங்காரத்தை அழித்தல், மற்றும் நம்முள் ஆன்மீக உணர்வுகளை எழுப்புதல் போன்றவற்றின்போதும் மனம் செயல்பட்டுக் கொண்டே உள்ளது. அதேபோல, குறிப்பிட்ட தெய்வத்தின் பெயரை நாமஜபம் செய்தாலும் , மனம் செயல்பாட்டில் உள்ளது, கடவுளைப் பற்றிய நினைவுகளும், ஆன்மீக உணர்வுகளும் ஏற்படுகின்றன. மாறாக, ‘நிர்விசார்’ அல்லது ‘ஸ்ரீ நிர்விசாராய நமஹ’ என்ற நாமத்தை ஜபிப்பதால், மனதில் வேறு எந்த நினைவும் எழுவதில்லை ஏனென்றால், ஒரு ஆன்மீக கோட்பாட்டின்படி ‘சப்த, ஸ்பர்ஸ, ரூப, ரஸ, கந்த மற்றும் அதன் சக்தி ஒருங்கிணைந்தே உள்ளது. அதேபோல் மனம் ‘நிர்விசார்’ என்ற சொல்லுடன் ஒன்றுபடும்பொழுது சிந்தனையற்றதாக மாறுகிறது. அதாவது, முதலில் மனம் கரைந்து , புத்தி கரைந்து, ஆழ் மனதும் கரைந்து இறுதியாக அகங்காரமும் கரைகிறது. இது நிர்குண நிலையை முன்கூட்டியே அடைய உதவுகிறது.
1 அ . பின்வரும் பரிசோதனையை செய்யவும்
1. எந்த ஒரு பொருளையாவது பார்த்துகொண்டு , ‘நிர்விசார்’ அல்லது ‘ஸ்ரீ நிர்விசாராய நமஹ’ என்ற நாமத்தை ஜபிக்கும்போது எம்மாதிரியான உணர்வு ஏற்படுகிறது என்பதை சோதித்து கண்டறியவும் . விரும்பிய ஒன்று நமக்கு மகிழ்ச்சியை தருவதுமில்லை, விரும்பத்தகாத ஒன்று நம்மை வருத்தப்படுத்துவதுமில்லை என்பதை உணரலாம் .
2. ஸாதகர்களுக்கு ‘நிர்விசார்’ என்ற வார்த்தையோ அல்லது ‘நிர்விசார்’ என்ற நாமத்தையோ ஜபிப்பது கடினமாக இருந்தால் , அவர்கள் சில மாதங்களுக்கு ஒவ்வொரு நாளும் ‘ஸ்ரீ நிர்விசாராய நமஹ’ என்ற நாமத்தை அதிகமாக ஜபித்து, அதன் மூலம் என்ன உணரப்படுகிறது என்பதை [email protected] என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது திருமதி பாக்யஸ்ரீ சாவந்த், ஸனாதன் ஆசிரமம், 24 / பி ராம்நாதி, பண்டோரா, போண்டா, கோவா. 403 401 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அனுப்பவும்.
இந்த நாமஜபம் காலப்போக்கில் சீராகத் தொடங்கினால், அதைத் தொடர வேண்டும். ‘நிர்விசார்’ அல்லது ‘ஸ்ரீ நிர்விசாராய நமஹ’ என்ற நாமஜபம் குருக்ருபயோகத்தில் ஆன்மீக பயிற்சியின் இறுதி நாமஜபம் ஆகும்.
ஆடியோ – நிர்விசார்
ஆடியோ – ஸ்ரீ நிர்விசாராய நமஹ
ஆடியோ – ஓம் நிர்விசார்
2. தீய சக்திகளால் கஷ்டப்படுபவர்களுக்கு
தீய சக்திகளால் ஏற்படுத்தப்படும் கடுமையான, மிதமான அல்லது லேசான கஷ்டங்களை அனுபவிக்கும் ஸாதகர்கள், அவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட நாமஜபத்தை ஆன்மீக உபாயமாக எடுத்துக் கொள்ள வேண்டும் . ஏனென்றால், அவர்கள் முதலில் தங்கள் கஷ்டங்களை நீக்க வேண்டியது மிகவும் அவசியம். கஷ்டங்களுக்குரிய ஆன்மீக உபாயங்கள் முடிந்த பிறகு, மற்ற நேரங்களில் ஆன்மீகப் பரிகாரங்களில் கண்டறிந்த நாமஜபங்களில் ஒன்றை ஜபிக்க வேண்டும்.
3. பக்தி அல்லது ஞானமார்க்கத்தில் உள்ள ஸாதகர்கள்
தெய்வ நாமஜபங்களில் பக்தி இருக்கலாம் ; அதே சமயம் ஞானயோகத்தால் ஏற்படும் எண்ணங்களற்ற மன நிலைக்கு பலன் உள்ளது. ஏனெனில் ஆன்மீகத்தில், ஒருவர் இறுதியாக நிர்குணத்திற்கு அதாவது எண்ணங்களற்ற நிலைக்குச் செல்ல வேண்டும். பக்தி மார்க்கத்தில் இருப்பவர்கள் கூட ஸகுண (உருவ) பக்தியிலிருந்து இறுதியில் நிர்குண பக்திக்கு செல்ல விரும்புகிறார்கள். எனவே, பக்தி மார்க்கத்திலோ, ஞான மார்க்கத்திலோ அல்லது வேறு எந்த வழியின் மூலமாகவோ ஆன்மீகப் பயிற்சியை மேற்கொள்பவர்கள் அனைவரும் ‘நிர்விசார்’ நாமஜபத்தின் மூலம் பயனடைவார்கள்.
4. ‘நிர்விசார்’ ஜபிக்கும் போது ஆன்மீக உணர்வு இருக்க வேண்டியது அவசியமில்லை
‘நிர்விசார்’ என்ற சொல்லை ஆன்மீக உணர்வுடன் நாமஜபம் செய்து வந்தால், கடவுளின் அருளால் ஆன்மீக முன்னேற்றம் வேகமாக இருக்கும். ஞானயோகிகளுக்கு அவர்களின் புத்தியின் காரணமாக ஆன்மீக உணர்வுடன் நாமஜபம் செய்வது கடினம்; எனவே, அவர்கள் ‘நிர்விசார்’ அல்லது ‘ஸ்ரீ நிர்விசாராய நமஹ’ என்ற நாமத்தை ஜபிப்பது எளிது. சுருக்கமாகச் சொன்னால், ‘நிர்விசார்’ என்ற நாமத்தை ஜபிப்பது எல்லோருக்கும் எளிது
5. ஆளுமை குறைபாடுகளை அகற்றும் (PDR) செயல்பாட்டின் போது சொல்லப்படும் நாமஜபத்துடன் ‘நிர்விசார்’ நாமஜபத்தையும் சேர்த்து கூறுதல்
இதுவரை, ஸாதகர்கள் PDR (Personality Defect Removal) செயல்முறை மூலம் தவறான எண்ணங்களை சரி செய்ய முயற்சி செய்கின்றனர். ஆனால் . அதிக ஆளுமை குறைபாடுகள் இருந்தால், இவற்றை நீக்க பல ஆண்டுகள் ஆகும். பல பிறவிகள் கூட எடுக்கலாம். ‘நிர்விசார்’ நாம ஜபத்தை இந்த (PDR) முறையுடன் சேர்த்து செய்தால் ஒரு குறைபாட்டை நீக்க முயற்சிக்கும் அதே நேரத்தில் பல குறைபாடுகள் குறையலாம் . எனவே முன்னேற்றம் வேகமாக இருக்கும். கலியுகத்தின் இனி வரும் காலம்கட்டத்தில் ஆன்மீகப் பயிற்சிக்கான நேரம் மிகவும் குறைவு. இது எனக்கு ஒரு இந்தி பழமொழியை நினைவூட்டுகிறது – ‘நீங்கள் ஒரு அம்சத்தில் தேர்ச்சி பெற்றால், மற்றவற்றையும் அடையலாம். நீங்கள் அனைத்து அம்சங்களிலும் தேர்ச்சி பெற முயற்சித்தால், எதுவும் அடைய முடியாது. (பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்)
6. முத்ரா
இந்த நாமஜபத்திற்கு தனி முத்ரா தேவையில்லை; ஆனால் ஒருவர் விரும்பினால், அவருக்கு ஏற்ற ஒரு முத்ராவை பயன்படுத்திக் கொள்ளலாம் .
– பராத்பர குரு டாக்டர் ஆடவலே
7. ‘நிர்விசார்’ அல்லது ‘ஸ்ரீ நிர்விசாராய நமஹ’ என நாமஜபம் செய்யும் போது , ஸாதகர்கள் தங்கள் நினைவில் வைத்து கொள்ள வேண்டிய குறிப்புகள்
ஸ்ரீஸத்சக்தி (திருமதி) பிந்தா சிங்க்பால்
1. இதுவரை, ஸாதகர்கள் காலை அல்லது இரவு 9.30 முதல் 10 வரை தியானம் அல்லது நாமஜபம் செய்கின்றனர் . இதை அப்படி செய்ய வேண்டியதில்லை.
2. கொரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ஆன்மீக வலிமையைப் பெறவதற்கும் தினமும் ஒரே இடத்தில் அமர்ந்து 108 முறை ‘ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ (3 முறை) – ‘ஸ்ரீ குருதேவ தத்த – ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ (3 முறை) – ஓம் நம சிவாய என்று நாமஜபம் செய்வது உகந்ததாகும் . கொரோனா வைரஸின் அறிகுறிகள் இருந்தால், அவர்களுடைய பொறுப்பு ஸாதகர்களை கலந்து ஆலோசித்து, அவர்களின் பரிந்துரைப்படி நாமஜபம் செய்யும் கால அளவை அதிகப்படுத்தவும்.
3. குலதேவதையின் நாமத்தை ஜபிக்கும் ஸாதகர், விரும்பினால் அதையே தொடர்ந்து செய்யலாம் .இருப்பினும் அடுத்த கட்டத்திற்கு செல்ல விரும்பினால், ‘நிர்விசார்’ அல்லது ‘ஸ்ரீ நிர்விசாராய நமஹ’ என்ற நாமத்தை ஜபிக்க வேண்டும்.
4. ஸமஷ்டிக்காக ( சமூகத்திற்காக ) ஜபிக்கும் மகான்கள் மற்றும் ஸாதகர்கள் : சில மகான்கள் ஸமஷ்டிக்காக (சமூகதிற்காக) சில மணிநேரங்கள் ஜபிக்கிறார்கள், மேலும் ஆன்மீக நிலையில் 60% மேல் உள்ள சில ஸாதகர்கள் ‘ஹிந்து ராஷ்டிர’த்தை நிறுவும் தர்மப் பிரச்சாரத்தில் உள்ள தீய சக்திகளின் தடைகளை நீக்க ஜபிக்கிறார்கள்.
‘.அவர்கள் உரிய பிரார்த்தனைகளுக்குப் பிறகு ‘நிர்விசார்’ அல்லது ‘ஸ்ரீ நிர்விசாராய நமஹ’ என்றும் ஜபிக்க வேண்டும்.
– ஸ்ரீஸத்சக்தி (திருமதி) பிந்தா சிங்க்பால், ஸனாதன் ஆசிரமம், ராம்நாதி, கோவா
8. ‘நிர்விசார்’ என்ற சொல் ஏன் எல்லா நிலைகளிலும் உள்ள ஸாதகர்களுக்கு ஏற்ற ஜபமாக உள்ளது?
ஒருவர் ஆன்மீகத்தில் முன்னேற, ஆன்மீகப் பயிற்சியில் பல்வேறு நிலைகளை கடக்க வேண்டும். உதாரணமாக, ஆளுமை குறைகளைக் களைதல், அகங்காரத்தை நீக்குதல், நாமஜபம் செய்தல், ஸத்சங்கங்களில் கலந்து கொள்ளுதல், ஸத்சேவை செய்தல், ஆன்மீக உணர்வை எழுப்புதல், தியாகம் செய்தல் மற்றும் எதிர்பார்ப்புகள் இல்லாத ஆன்மீக அன்பை வளர்த்தல் (ப்ரிதி) . ஒரு ஸாதகருக்கு புறத்தில் ஜபிக்கும் நிலையிலிருந்து அகத்தில் ஜபிக்கும் நிலையை அடைய 10-15 ஆண்டுகள் ஆகலாம். ஒரு ஸாதகர் 4-5 ஆண்டுகளில் 4-5% மட்டுமே ஆன்மீகத்தில் முன்னேற முடியும். பிறகு, ‘ஸத்சங்கங்களில் கலந்து கொள்ளும் நிலையை அடையலாம். இந்த வேகத்தில் நகர்ந்தால், ஒரு பிறவியில் தனது இலக்கை அடைய முடியாது. ஆன்மீகப் பயிற்சியின் அடுத்த கட்டத்தை அடைய ஸாதகர்கள் தொடர்ந்து சில முயற்சிகளை மேற்கொண்டால், அவர்களின் முன்னேற்றம் அதிகரிக்கும். உதாரணமாக, ‘நாமஜபம்’ நிலையில் இருக்கும் போதே ‘ஸத்சங்கம்’ நிலைக்குரிய முயற்சிகள் மேற்கொண்டால் ஆன்மீக முன்னேற்றத்தின் அளவு அதிகரிக்கும். அதேபோல், குருக்ருபாயோகத்தில், முதன்மை நிலையில் உள்ள ஸாதகர், எட்டு நிலைகளிலும் (முன்பே குறிப்பிட்டது போல) முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் ஆன்மீகப் பயிற்சியில் மற்ற பாதைகளை விட வேகமாக முன்னேறலாம். அதேபோலத்தான் ‘நிர்விசார்’ என்ற நாமத்தை ஜபிப்பதுவும். இந்த நாமத்தை ஜபிப்பதற்கு, ஸாதகரின் ஆன்மீக நிலை குறைந்தபட்சம் 60%, அதாவது, அவரது மனோலயத்தின் தொடக்கத்தில் இருக்க வேண்டும். அப்போது ஸாதகர் ‘நிர்விசார் (சிந்தனையற்ற)’ நிலையை அடையலாம். இருப்பினும், ஆரம்பத்திலிருந்தே ‘நிர்விசார்’ நாமத்தை ஜபிக்கத் தொடங்கினால், இந்த நாமஜபத்தின் ஸம்ஸ்காரத்தை ஓரளவிற்குப் புகுத்தி, ஆன்மீக பயிற்சிக்கான 8 நிலைகளையும் பயிற்சி செய்வதன் மூலம், மனோலயத்தை அடையத் தேவையான காலத்தை விட குறுகிய காலத்தில் இந்த நிலையை அடைய முடியும்.
அ . ஆன்மீக நிலையில் 60% நிலைக்கு குறைவாக இருக்கும் ஸாதகர்களுக்கு ஏற்ற நாமஜபம் எது?
‘‘நிர்விசார்’ நாமஜபமானது ‘நிர்குண’ நிலைக்கு இட்டுச் செல்கிறது. எனவே, குலதேவதையின் நாமத்தை ஜபிப்பவர்களுக்கோ அல்லது ஆன்மீக நிலை 60% குறைவாக உள்ள ஸாதகர்களுக்கு இது கடினமாக இருக்கும் . இருப்பினும், அவர்கள் தங்கள் வழக்கமான நாமஜபத்துடன் ‘நிர்விசார்’ நாமத்தையும் ஜபிக்க முயற்சிக்க வேண்டும். அப்படி ஜபிக்க முடியும் பட்சத்தில் அதைத் தொடர வேண்டும். ஏனென்றால் இறுதியில், நீங்கள் ஆன்மீக பயிற்சியின் அடுத்த கட்டத்தை அடைந்து, எப்போதும் ‘நிர்விசார்’ என்ற நாமத்தையே ஜபிக்கவேண்டும் . – பராத்பர் குரு (டாக்டர்) ஆடவலே
ஆ . உங்களால் ‘நிர்விசார்’ என்று நாமஜபம் செய்ய இயலாவிட்டால், ‘ஓம் நிர்விசார்’ அல்லது ‘ஸ்ரீ நிர்விசாராய நமஹ’ என்று சொல்லவும்
சில ஸாதகர்களுக்கு ‘நிர்விசார்’ என்ற நாமத்தை ஜபிப்பது கடினமாக இருக்கலாம். அவர்கள் ‘ஓம் நிர்விசார்’ என்று ஜபிக்க முயற்சிக்க வேண்டும். ‘ஓம்’ என்பதற்கு வலிமையும் ஆற்றலும் உண்டு. எனவே, ‘நிர்விசார்’ என்ற நாமஜபத்தின் தொடக்கத்தில் ‘ஓம்’ என்பதைச் சேர்ப்பது, ‘நிர்விசார்’ நாமஜபத்தின் ஆற்றலை விரைவுபடுத்த உதவும். ‘ஸ்ரீ நிர்விசாராய நமஹ’ என்று எளிதில் நாம ஜபம் செய்பவர்கள் அதையே தொடர வேண்டும்.
– பராத்பர் குரு (டாக்டர்) ஆடவலே
இங்கு பிரசுரிக்கப்படும் ஸாதகர்களின் தனிப்பட்ட ஆன்மீக அனுபவங்கள் இந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது – ‘எங்கே பக்தி (ஆன்மீக உணர்ச்சி) இருக்கிறதோ, அங்கே கடவுள் இருக்கிறார்’. எல்லா மனிதர்களுக்கும் ஒரே மாதிரியான அனுபவங்கள் ஏற்படாது.
ஸாத்வீக ஸ்தோத்திரம், ஆரத்தி, ஸ்லோகம் மற்றும் நாமஜபங்களின் தொகுப்பைக் கேட்பதற்கு, ‘கூகுள் ப்ளே ஸ்டோரின்’ பின்வரும் இணைப்பில் ‘Sanatan Chaitanyavani App’-ஐ பதிவிறக்கவும். https://www.sanatan.org/Chaitanyavani