சிவபெருமான் அசுரனான த்ரிபுராசுரனை கார்த்திகை பௌர்ணமி அன்று வதம் செய்ததால் அன்று இந்த விழா கொண்டாடப்படுகிறது. இது தெய்வங்களின் பண்டிகை ஆகும். பாரதத்தில் உள்ள பல கோவில்களின் இந்த பண்டிகை, அதர்மத்தை அழித்த தர்மத்தின் வெற்றியாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் சரித்திரத்தையும் முக்கியத்துவத்தையும் இந்த கட்டுரை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
1. திதி (ஹிந்து பஞ்சாங்கப்படி)
த்ரிபுராரி பௌர்ணமி கார்த்திகை பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது.
2. சரித்திரம்
த்ரிபுர் என்ற அசுரன் பிரம்மாவை வழிபட்டு அவரின் அருளைப் பெற்றான். அவன் தவம் செய்யும்போது மற்ற தெய்வங்கள் அவன் தவத்தைக் கலைக்க முயற்சித்தனர்; ஆனாலும் அவை எல்லாம் வீணாயின. பிரம்மா அவனுக்கு வரத்தை அருள வேண்டியதாயிற்று. அழியாமல் என்றும் நிலைத்திருக்கும் வரத்தை வேண்டினான் அவன். வரத்தை வாங்கிய பின் அனைத்து தேவதைகளையும் துன்புறுத்தினான். பகவான் விஷ்ணுவாலும் அவனை எதிர்க்க முடியவில்லை. இறுதியாக சிவபெருமான் மூன்று தினங்கள் போரிட்டு கார்த்திகை சுக்ல பக்ஷ பௌர்ணமி அன்று த்ரிபுர் அசுரனை வதம் செய்தார். தெய்வங்களின் இழந்த பொலிவை மீட்டுத் தந்தார். எல்லா தெய்வங்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி. தீபோத்சவம் கொண்டாடி அனைவரும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அன்றிலிருந்து கார்த்திகை சுக்ல பக்ஷ பௌர்ணமி ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. – குருதேவ் டாக்டர் காடேசுவாமிஜி (‘கனகர்ஜித்’ பத்திரிக்கை, நவம்பர் 2006)
த்ரிபுராரி – > த்ரிபுர் + அரி. த்ரிபுர் என்பது அசுரனின் பெயர். அரி என்றால் சம்ஸ்க்ருதத்தில் கொல்வது, அழிப்பது என்று பொருள். அதனால் கார்த்திகை சுக்ல பக்ஷ பௌர்ணமியை ‘த்ரிபுராரி பௌர்ணமி’ என்று அழைக்கின்றனர்.
3. கொண்டாடப்படும் விதம்
த்ரிபுராரி பௌர்ணமி அன்று பெரிய உயரமான கல் தூண்களை சுற்றிலும் தீபங்களை ஏற்றி வைப்பார்கள். இந்த கல் தூண்கள் திரிபுரி என்று அழைக்கப்படுகின்றன.
த்ரிபுராரி பௌர்ணமி அன்று பெரிய உயரமான கல் தூண்களை
சுற்றிலும் ஏற்றி வைக்கப்பட்டுள்ள தீபங்கள்
தகவல் : ஸநாதனின் நூல் ‘புனித பண்டிகைகள், தார்மீக உற்சவங்கள் மற்றும் விரதங்கள்’