ஸாதகர்களின் மீது தீய சக்திகளால் ஏற்படும் ஆவரணம் நீங்க ஒரு பயன் தரும் வழிமுறை!

‘தீய சக்திகள் தரும் கஷ்டங்களால் ஸாதகர்கள் மீது கஷ்டம் மிகுந்த ஆவரணம் அதிக அளவில் ஏற்படுகின்றன. தினசரி தொடர்ந்து அதை நீக்குவது அவசியமாகிறது. ஆவரணத்தை நீக்கிய பின்னர் ஸாதகர்களின் ஆன்மீக கஷ்டங்கள் ஓரளவு குறைகின்றன. தொடர்ந்து ஆவரணத்தைக் களைய முயற்சிக்க வேண்டும். மீரஜ் ஆச்ரமத்தில் உள்ள திருமதி அஞ்ஜலி அஜய் ஜோஷி (வயது 59) கடந்த 2 வருடங்களாக ஸநாதனின் ஸாத்வீக ஊதுபத்தி மூலமாக தன் மீது ஏற்பட்டுள்ள கஷ்டம் தரும் சக்தியின் ஆவரணத்தைக் களைந்து வருகிறார். அவருக்கு அதனால் அதிக பயன் கிடைத்து வருகிறது. இந்த வழிமுறை பற்றி நான் ஸத்குரு டாக்டர் முகுல் காட்கில் அவர்களிடம் கேட்டேன். அதில் அவர் சில மாற்றங்களைக் கூறினார். அதன்படி ஸாதகர்களுக்கு ‘ஊதுபத்தி மூலம் ஆவரணம் களையும் வழிமுறை’ இங்கு தரப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவர்  திரு. அஜய் ஜோஷி

1.    ஊதுபத்தியை எவ்வாறு சுற்ற வேண்டும்?

ஆவரணத்தைக் களையும்போது ஏற்றப்படாத ஸநாதனின் ஸாத்வீக ஊதுபத்தியைப் பயன்படுத்தவும். எந்த சக்கரத்தில் ஆவரணத்தைக் களைய வேண்டுமோ அங்கு ஊதுபத்தியை மூன்று முறை கடிகார சுற்றாகவும் மூன்று முறை கடிகாரத்தின் எதிர்திசை சுற்றாகவும் சுற்ற வேண்டும். ஆவரணத்தைக் களையும் சமயம் ஊதுபத்தியை உடலின் சக்கர ஸ்தான பகுதிக்கு நேரே 3-4 செ.மீ. தொலைவில் பிடித்துக் கொள்ள வேண்டும். நம் சௌகரியத்திற்கேற்ப ஊதுபத்தியை நிமிர்த்தியோ அல்லது சாய்த்தோ பிடித்துக் கொள்ளலாம்.

2.    ஆவரணத்தைக் களைய வேண்டிய சக்கரம்
மற்றும் அந்த சமயத்தில் கூற வேண்டிய நாமஜபம்

சக்கரம்  ஊதுபத்தியை சுற்றும்போது சொல்ல வேண்டிய நாமஜபம் 
1. ஸஹஸ்ராரம் ‘ஓம்’
2. ஆக்ஞா சக்கரம் (குறிப்பு 1 ) ஸ்ரீ குரவே நம:
3. விசுத்தி சக்கரம் ஓம் நம: சிவாய
4. அநாஹத சக்கரம் (குறிப்பு 2 ) ஓம் நமோ பகவதே வாசுதேவாய
5. மணிபூரக சக்கரம் ஸ்ரீ பிரம்மதேவாய நம:
6. ஸ்வாதிஷ்டான் சக்கரம் ஸ்ரீ துர்கா தேவ்யை நம:
7. மூலாதார சக்கரம் ஓம் கங் கணபதயே நம:

குறிப்பு 1 – ஆக்ஞா சக்கரத்தின் ஆவரணத்தைக் களையும்போது இரு கண்களிலும் ஏற்பட்டுள்ள ஆவரணத்தையும் களைய இரு கண்களைத் திறந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பு 2 – அநாஹத சக்கரத்தில் ஊதுபத்தியை சுற்றிய பின்னர் வயிற்றின் மீது ‘ஸ்ரீ பஞ்சமகாபூதேப்யோ நம:’ என்ற நாமஜபத்தை செய்து கொண்டே ஊதுபத்தியை மேலே குறிப்பிட்டுள்ளபடி சுற்ற வேண்டும்.

அதன் பிறகு தலையிலிருந்து கால்வரை முழு உடலிலிருந்து ஆவரணத்தைக் களைய வேண்டும். அந்த சமயத்தில் தலையிலிருந்து கால்வரை நேராக ஊதுபத்தியை மூன்று முறை காட்டி ‘சச்சிதானந்த பரபிரம்ம’ என்று கூறவும்.

3.    ஆவரணத்தைக் களைவதால் ஏற்படும் பயன்

இந்த வழிமுறைப்படி ஆவரணத்தைக் களைய 2 முதல் 3 நிமிடங்களே ஆகும். இந்த வழிமுறை மூலமாக ஸாதகர்களுக்கு பயன் ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மையான ஸாதகர்களின் ஆவரணம் விரைவில் நீங்குகிறது என்பதும் கவனத்திற்கு வருகிறது. ஸாதகர்களால் லேசான தன்மை மற்றும் உற்சாகம் ஆகியவற்றை உணர முடிகிறது. அதோடு ஆனந்தத்தையும் அனுபவிக்க முடிகிறது. தீவிர ஆன்மீக கஷ்டங்கள் உள்ள ஒரு ஸாதகருக்கும் இதன் மூலம் கஷ்டங்கள் குறைந்துள்ளன. அதனால் ஆவரணத்தைக் களைவதற்கு இது மிகுந்த உத்தமமான வழிமுறையாகும்.

4.    பிறர் மீது ஏற்பட்டுள்ள ஆவரணத்தைக் களைவதும் சுலபம்

எப்படி நாம் பிறருக்காக உபாயங்களை செய்கிறோமோ அதேபோல் மற்றொரு ஸாதகரின் மீது ஏற்பட்டுள்ள ஆவரணத்தையும் நாம் இம்முறையில் களையலாம். அந்த ஸாதகர் எதிரில் இல்லாவிட்டாலும் அவரை நினைத்துக் கொண்டு நம் உடல் மீதுள்ள சக்கரங்களின் மீது ஊதுபத்தி மூலம் அவரது ஆவரணத்தை களைய முடியும்.

5.    ஆவரணத்தைக் களையும் சமயம்
இவ்விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்

அ. ஆவரணத்தை ஆன்மீக உணர்வுபூர்வமாக களைய வேண்டும்.

ஆ. ஊதுபத்தியை உபயோகித்த பின் அதை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து மீண்டும் சார்ஜ் செய்வதற்கு ஸனாதன் நூலின் உள்ளே வைக்கலாம்.

இ. அவசியத்திற்கேற்றபடி ஊதுபத்தியை மாற்றிக் கொள்ளவும்.

ஈ. கஷ்டத்தின் தீவிரத்திற்கேற்ப ஒருமணிக்கு ஒருமுறை அல்லது அவசியத்திற்கேற்றபடி இந்த வழிமுறை மூலமாக ஆவரணத்தைக் களையவும்.

6. ஏற்றப்பட்ட ஊதுபத்தி மூலம் ஆவரணம் களைவதைக் காட்டிலும் ஏற்றப்படாத ஊதுபத்தி மூலம் ஆவரணம் களைவது அதிக பயனைத் தருவது கவனத்திற்கு வருதல்

திருமதி அஞ்ஜலி ஜோஷி (மனைவி) இரு வருடங்களாக, ஏற்றப்பட ஊதுபத்தி கொண்டு ஆவரணத்தைக் களைந்து வந்தாள். தீவிர ஆன்மீக கஷ்டம் கொண்ட சில ஸாதகர்களுக்கு இந்த வழிமுறையைக் கூறி அவர்கள் அதைப் பின்பற்றியபோது அவர்களின் 20-30% ஆவரணம் குறைந்தது. ஸத்குரு டாக்டர் முகுல் காட்கில் அவர்களிடம் இந்த வழிமுறையைக் கூறியபோது அவர் ஏற்றப்படாத ஊதுபத்தி கொண்டு ஆவரணத்தைக் களைய சொன்னார். தீவிர ஆன்மீக கஷ்டம் கொண்ட ஒரு ஸாதகருக்கு ஏற்றப்பட்ட ஊதுபத்தி மூலம் ஆவரணத்தைக்  களைந்தபோது அவரின் 30% ஆவரணம் குறைந்தது. ஆனால் ஏற்றப்படாத ஊதுபத்தி மூலம் ஆவரணம் களைந்தபோது 35% ஆவரணம் குறைந்தது கவனத்திற்கு வந்தது. அதோடு ஏற்றப்படாத ஊதுபத்தி மூலம் ஆவரணம் களைந்தபோது ஆக்ஞா சக்கரத்தில் சிலருக்கு நல்ல அதிர்வலைகளை உணர முடிந்தது. இதிலிருந்து ஏற்றப்படாத ஊதுபத்தி நிர்குண நிலையில் செயல்படுகிறது என்பது என் கவனத்திற்கு வந்தது. அதனால்தான் அதன் மூலம் ஆவரணம் களைந்தபோது 5% அதிக அளவு ஆவரணம் தூர விலகியது. அதோடு யாராவது ஒரு ஸாதகர், ஸாதனைக்கான ஒரு புது வழிமுறையை கண்டுபிடிக்கும்போது ஒருமுறை உன்னத மகான்களிடம் அதைப் பற்றி கூறி வழிகாட்டுதல் கேட்பதால் அதிக நன்மை ஏற்படுகிறது என்பதும் கவனத்திற்கு வருகிறது.

ஸ்ரீ குருதேவரே நம் மூலமாக ஆவரணத்தை களைய வைக்கிறார். சமஷ்டிக்கு அதன் மூலமாக நன்மை ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அவரே எப்படி பயிற்சி செய்ய வேண்டும் என்பதையும் கற்றுத் தருகிறார். அவரின் அபார கருணையால் தான் என்னால் இவ்விஷயங்களை எழுத முடிந்தது. இதற்காக சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஆடவலே அவர்களின் சரணங்களில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

–            கால்நடை மருத்துவர்  திரு. அஜய் ஜோஷி  (68% ஆன்மீக நிலை, வயது 66), போண்டா, கோவா. (19.6.2022)

தீய சக்தி : சூழலில் நல்ல மற்றும் தீய சக்திகள் செயல்பாட்டில் உள்ளன. நல்ல சக்திகள் மனிதர்களுக்கு உதவுகின்றன, தீய சக்திகள் கஷ்டங்களைக் கொடுக்கின்றன. முன்பெல்லாம் ரிஷி முனிவர்களின் யாகங்களில் அசுரர்கள் எவ்வாறெல்லாம் தடங்கல்களை ஏற்படுத்துவர் என்ற கதைகளை வேத புராணங்களில் காண முடியும். அதர்வண வேதத்தில் பல இடங்களில் பல்வகை தீய சக்திகளான அசுரர், ராக்ஷசர், பிசாசுகள் அதோடு கரணி, பானாமதி போன்றவற்றை எதிர்க்கக் கூடிய மந்திரங்கள் உள்ளன. தீய சக்திகளால் ஏற்படும் கஷ்டங்களின் நிவாரணத்திற்காக வேதாதி தர்ம நூல்களில் துல்லியமான ஆன்மீக உபாயங்கள் கூறப்பட்டுள்ளன.

 

 

Leave a Comment