1. பித்ருக்களின் இலையில் அப்ரதக்ஷிணமாக (கடிகாரச் சுற்றுக்கு எதிர்திசையில்) பஸ்மத்தால் ஒரு கோடு இழுக்கவும்.
2. உணவை வாழை இலையில் பரிமாறவும்.
3. ச்ரார்த்த பிராமணர்களின் இலையில் உப்பு பரிமாறக் கூடாது.
4. லட்டு போன்ற பக்ஷணங்களை கையால் பரிமாறவும்; ஆனால் கறிகாய், கோசம்பரி, துவையல் போன்ற பதார்த்தங்களை கையால் ஒருபோதும் பரிமாறக் கூடாது. அதற்கு ஒரு கரண்டி அல்லது ஸ்பூனை உபயோகப்படுத்தலாம்.
5. இலையில் பதார்த்தங்களை வைக்கும் வரிசைமுறை, இடம் மற்றும் அதற்கான சாஸ்திரம் : இலையில் இடது, வலது, முன்பாகம் மற்றும் நடுபாகம் ஆகிய நான்கு இடங்களில் உணவுப் பதார்த்தங்கள் வைக்கும் முறை கூறப்பட்டுள்ளது.
அ. முதலில் இலையில் நெய் விடவும்.
ஆ. நடுபாகத்தில் சாதம் பரிமாறவும்.
இ. வலதுபாகத்தில் பாயசம், பழங்கள் ஆகியவற்றைப் பரிமாறவும்.
ஈ. இடதுபாகத்தில் எலுமிச்சை, துவையல், கோசம்பரி ஆகியவற்றைப் பரிமாறவும்.
உ. முன்பாகத்தில் சாம்பார், மோர்க்குழம்பு, அப்பளம், உளுந்து வடை, லட்டு ஆகியவற்றைப் பரிமாறவும்.
ஊ. இறுதியில் சாதத்தின் மீது நெய்யும் பருப்பும் பரிமாறவும்.
சாஸ்திரம் : ‘பித்ருக்களின் இலையில் சாதாரண வழக்கத்திற்கு மாறாக எதிர்திசையில் அன்னபதார்த்தங்களை பரிமாறுவதால் ரஜ-தம அதிர்வலைகள் உருவாகி இறந்தவரின் ஆத்மாவால் அன்னத்தை க்ரஹித்து கொள்ள முடிகிறது.’ (திரு. நீலேஷ சித்ளே அவர்களின் மூலமாக கிடைத்த தெய்வீக ஞானம், 5.7.2006) |
6. உணவு பரிமாறும்போது ஒருவருக்கு அதிகமாகவும் இன்னொருவருக்கு குறைவாகவும், அதேபோல் ஒருவருக்கு நல்ல உணவும் இன்னொருவருக்கு தவிர்க்க வேண்டிய உணவும் பரிமாறக் கூடாது. ச்ரார்த்த விதியில் எந்த வித பாரபட்சமும் கூடாது.
7. ச்ரார்த்த விதி முடியும்வரை சிறு குழந்தைகள், அதிதி போன்ற யாருக்கும் அவ்வுணவை தரக் கூடாது.
(தகவல் : ஸநாதனின் நூல் – ‘ச்ரார்த்தத்தின் மகத்துவம் மற்றும் சாஸ்த்ரீய விளக்கம்’ (ஹிந்தி))